ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
மார்ச் 10-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பக்கம் 8-ல் உள்ள ஆலோசனைகளையோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளையோ பயன்படுத்தி ஜனவரி-மார்ச் காவற்கோபுரத்தையும் ஜனவரி-மார்ச் விழித்தெழு!வையும் நினைவுநாள் ஆசரிப்பு அழைப்பிதழுடன் சேர்த்து அளிப்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: கூடிவருவது ஏன் அவசியம்? மே 15, 2007, காவற்கோபுரத்தில், பக். 11-13-ன் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். சபைக் கூட்டங்கள் தங்களுக்கு எவ்வாறு உதவியிருக்கின்றன, கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வதற்குத் தடையாக இருந்த பிரச்சினைகளை எவ்வாறு மேற்கொண்டார்கள் என்று கூறும்படி சபையாரிடம் கேளுங்கள்.
15 நிமி: “நாமும் யெகோவாவுக்குக் கொடுக்கலாம்.”a நேரம் அனுமதிப்பதைப் பொறுத்து, முடிந்தவரை அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களைப்பற்றிக் குறிப்பு சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
மார்ச் 17-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
15 நிமி: கேள்விப் பெட்டி. மூப்பர் கையாள வேண்டும். முழு கட்டுரையையும் படித்து, கலந்தாலோசியுங்கள்.
20 நிமி: “நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொண்டவர்களுக்கு எப்படி உதவலாம்?”b பாரா 5-ஐ சிந்திக்கையில், நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொண்ட புதியவருக்கு எப்படி பைபிள் படிப்பு ஆரம்பிக்கலாம் என்பதை சுருக்கமாக நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
மார்ச் 24-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். பக்கம் 8-ல் உள்ள ஆலோசனைகளையோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளையோ பயன்படுத்தி ஏப்ரல்-ஜூன் காவற்கோபுரத்தையும் ஏப்ரல்-ஜூன் விழித்தெழு!வையும் அளிப்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: “ஊழியம் செய்யும்போது விவேகத்தோடு செயல்படுங்கள்.” சபையாருடன் இந்தக் கட்டுரையை ஒரு மூப்பர் கலந்தாலோசிக்கிறார். கட்டுரையில் உள்ள குறிப்புகளை உங்கள் பிராந்தியத்தில் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைக் காட்டுங்கள். ஊழியத்தில் ஈடுபடுகையில் விவேகத்தோடு செயல்பட சகோதரர்களை ஊக்கப்படுத்துங்கள்.
15 நிமி: மேலான ஒன்றைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தல். ஒரு நிமிடத்திற்கும் குறைவான முகவுரை. ஜூலை 1, 2005, காவற்கோபுரம் பக். 18-19, பாரா. 10-14-ன் அடிப்படையில் மூப்பர் கொடுக்கும் பேச்சு. முதன்முதல் ராஜ்ய செய்தியைக் கேட்டபோது அது தங்களுக்கு எவ்வாறு ஆறுதலையும், நம்பிக்கையையும் அளித்தது என்பதைப்பற்றிக் கூறும்படி சபையாரிடம் கேளுங்கள்.
மார்ச் 31-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். மார்ச் மாத ஊழிய அறிக்கைகளைக் கொடுக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள்.
20 நிமி: 2008 இயர்புக்கை நன்றாகப் பயன்படுத்துங்கள். பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். பக். 3-5-ல் உள்ள “ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்” என்ற பகுதியைக் கலந்தாலோசியுங்கள். இயர்புக்கிலிருந்து தனிப்பட்ட விதமாகத் தங்களுக்கு ஊக்கமளித்த ஓர் அனுபவத்தைச் சொல்லும்படி இரண்டு அல்லது மூன்று பேரிடம் கேளுங்கள். இயர்புக்கை வாசிப்பதற்கு தாங்கள் எப்படி நேரத்தை ஒதுக்கியிருக்கிறார்கள் என்பதைச் சொல்லும்படி ஓரிரண்டு பிரஸ்தாபிகளிடம் முன்னதாகவே சொல்லி வையுங்கள். இறுதியாக, முழு புத்தகத்தையும் படிக்கும்படி எல்லாரையும் ஊக்கப்படுத்துங்கள்.
15 நிமி: “ஊழியம் செய்கையில் ஒருவரையொருவர் பலப்படுத்துங்கள்”c
ஏப்ரல் 7-ல் துவங்கும் வாரம்
குறிப்பு: மாவட்ட மாநாட்டைப் பற்றிய தகவலை ஏப்ரல் 7-க்கு முன்பாக கலந்தாலோசிக்கக்கூடாது. வட்டாரக் கண்காணியின் சந்திப்பு இருந்தால் தவிர, மற்றபடி ஏப்ரல் 7-க்கான ஊழிய கூட்டத்தின் பகுதிகளை அதற்கு முன்னதாக நடத்தக்கூடாது. பரிந்துரைக்கப்படும் ஹோட்டல்களின் பட்டியல் கிடைத்ததுமே அதை தகவல் பலகையில் போட வேண்டும். வட்டார மாநாட்டின் காரணமாக, ஊழியக் கூட்டம் ரத்து செய்யப்பட்டால், அந்த வாரத்திற்கான புத்தக படிப்பின்போது, மாநாடு நடக்கும் தேதிகளையும் இடத்தையும் புத்தக படிப்பு கண்காணிகள் அறிவிக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் ஹோட்டல்களின் பட்டியலின் நகல் இருந்தால், ஒவ்வொரு புத்தக படிப்பு கண்காணியிடமும் ஒன்று கொடுக்கப்பட வேண்டும். அந்தத் தொகுதியில் உள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்வதற்காக ஹோட்டல்களின் தொலைபேசி எண்களை குறித்துக்கொள்ளலாம். ஆனால், அவர்களிடம் அந்தப் பட்டியலை நகலெடுத்துக் கொடுக்கக்கூடாது.
5 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: முழுக்காட்டுதல் எடுப்பதை ஏன் தள்ளிப்போடுகிறீர்கள்? ஜூலை 1, 2006, காவற்கோபுரம் பக். 29, 30, பாரா. 14-17-ன் அடிப்படையில் மூப்பர் கொடுக்கும் பேச்சு. டீனேஜ் பருவத்தில் முழுக்காட்டுதல் எடுத்த ஓரிரண்டு பிரஸ்தாபிகளைச் சுருக்கமாக பேட்டி காணுங்கள். இளம் பருவத்திலேயே இந்த முக்கிய படியை எடுக்க எது அவர்களைத் தூண்டியது? பாதுகாப்பு அளிக்கும் கிறிஸ்தவ முதிர்ச்சியை வளர்த்துக்கொள்ள முழுக்காட்டுதல் அவர்களுக்கு எவ்வாறு உதவியது?
25 நிமி: “2008 ஆண்டிற்கான யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு.”d சபையின் செயலர் இதைக் கையாள வேண்டும். உட்சேர்க்கையை கலந்தாலோசிப்பதற்கு முன்பு, பிப்ரவரி 15, 2007 தேதியிடப்பட்ட மாநாட்டு நியமனக் கடிதத்தை வாசியுங்கள். உட்சேர்க்கையில் பாரா 7-ஐ சிந்திக்கும்போது, பக்கம் 4-ல் காணப்படும் பெட்டியில் உள்ள “அறைவசதிகளுக்கான குறிப்புகள்,” “ஹோட்டலில் முன்பதிவு செய்வதற்கான படிகள்” ஆகிய தலைப்புகளின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் ஒவ்வொன்றையும் வாசியுங்கள். மாநாடு உள்ளூரிலேயே நடந்தால் இதை வாசிக்கத் தேவையில்லை. மாநாட்டில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை முடிந்தவரை சீக்கிரத்திலேயே செய்வதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவியுங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு..
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு..
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு..
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு..