கேள்விப் பெட்டி
◼ தவறாமல் குடும்பப் படிப்பு நடத்துகையில் அந்த நேரத்தை பெற்றோர் இருவரும் அறிக்கை செய்யலாமா?
“கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” பிள்ளைகளை வளர்க்கிற முக்கியப் பொறுப்பு அப்பாவுக்கு இருக்கிற போதிலும் அப்பா, அம்மா இருவருமே பிள்ளைகளைப் பயிற்றுவிக்கிறார்கள். (எபே. 6:4) “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே” என்று பிள்ளைகளை பைபிள் ஊக்கப்படுத்துகிறது. (நீதி. 1:8) பிள்ளைகளைப் பயிற்றுவிக்க பெற்றோர் பயன்படுத்துகிற முக்கியமான ஒரு வழி, குடும்ப பைபிள் படிப்பாகும்.
முன்பெல்லாம், முழுக்காட்டப்படாத பிள்ளைகளுடன் குடும்பப் படிப்பு நடத்திய சமயத்தில் அப்பா, அம்மா இருவரும் இருந்தாலும் அவர்களில் படிப்பை நடத்தினவரே மணிநேரத்தை அறிக்கை செய்தார். ஆனால், இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. குடும்பப் படிப்பில் பிள்ளைகளுக்கு பெற்றோர் இருவருமே கற்பித்தால் வாரத்திற்கு ஒரு மணி நேரத்தையே இருவரும் ஊழிய அறிக்கையில் சேர்த்துக்கொள்ளலாம். பொதுவாகப் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வாரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக செலவிடுகிறார்கள். பிள்ளைகளைப் பயிற்றுவிக்க பெற்றோர் இருவருமே தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. (உபா. 6:6–9) எனினும், மாதாந்தர வெளி ஊழிய அறிக்கையில் முக்கியமாய் ஊழியத்தில் செலவிட்ட மணிநேரங்களையே குறிப்பிட வேண்டும். எனவே, குடும்பப் படிப்புக்காக ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக செலவிட்டாலும் வாரத்தில் பல தடவை படிப்பு நடத்தினாலும் குழந்தைகளுக்குத் தனித்தனியாக படிப்பு நடத்தினாலும், வாரத்திற்கு ஒரு மணி நேரம் மட்டுமே அறிக்கை செய்ய வேண்டும். பெற்றோரில் ஒருவரே குடும்ப பைபிள் படிப்பை அறிக்கை செய்ய வேண்டும்; அதோடு, அந்தப் படிப்பை வாரத்திற்கு ஒரு மறுசந்திப்பு என கணக்கிட்டு அறிக்கை செய்ய வேண்டும்.