பிப்ரவரி 16-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 16-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 29-31
எண் 1: ஆதியாகமம் 29:1-20
எண் 2: நாம் ஏன் ‘கவலைப்படாதிருக்க’ வேண்டும்? (மத். 6:25)
எண் 3: சொன்ன பேச்சைக் கேட்பது உனக்கு பாதுகாப்பு (lr-TL அதி. 7)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: ‘எல்லாவற்றையும் நற்செய்திக்காகவே செய்யுங்கள்.’ கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
15 நிமி: இந்த வருட நினைவுநாள் அனுசரிப்புக் காலத்தில் உங்களால் துணைப் பயனியர் ஊழியம் செய்ய முடியுமா? ஊழியக் கண்காணி கொடுக்கும் உற்சாகமான பேச்சு. துணைப் பயனியர் சேவை செய்வதற்கான தகுதிகள் என்னென்னவென்று சொல்லுங்கள். துணைப் பயனியர் ஊழியத்தினால் கிடைக்கும் சந்தோஷங்களையும் ஆசீர்வாதங்களையும் சிறப்பித்துக் காட்டுங்கள். மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெளி ஊழியக் கூட்டங்கள் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது எனச் சபையாருக்குத் தெரிவியுங்கள். கடந்த வருடம் துணைப் பயனியர் ஊழியம் செய்த இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள். துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்காகத் தங்களுடைய வழக்கமான வேலைகளில் அவர்கள் என்ன மாற்றங்களைச் செய்தார்கள்? என்ன ஆசீர்வாதங்களை அவர்கள் பெற்றார்கள்? வருகிற நினைவு அனுசரிப்புக் காலத்தின்போது குடும்பத்தில் ஒருவரோ அதற்கும் மேற்பட்டவர்களோ துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்கான வழிவகைகளைத் தங்களுடைய குடும்பத்தாரோடு கலந்தாலோசிக்கும்படி சபையிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் ஊக்கப்படுத்துங்கள்.