அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு ஜூன்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே இந்தப் புத்தகம் இருந்தால், பழுப்பேறிய அல்லது 1992-க்கு முன்பு பிரசுரிக்கப்பட்ட ஏதாவதொரு 192-பக்க புத்தகத்தை அளியுங்கள். ஜூலை, ஆகஸ்ட்: சபையின் கையிருப்பிலுள்ள பின்வரும் 32-பக்க சிற்றேடுகளில் ஒன்றை அளிக்கலாம்: எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், திருப்தியான வாழ்க்கைக்கு வழி, கடவுள் உண்மையில் நம்மைப் பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா?, விழிப்புடன் இருங்கள்!, “இதோ! சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நம்முடைய பிரச்சினைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, நீங்கள் திரித்துவத்தை நம்ப வேண்டுமா?, பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படி கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில். செப்டம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். முடிந்தவரை முதல் சந்திப்பில் இந்தப் புத்தகத்தை அளிக்கையிலேயே பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு பிரஸ்தாபிகள் முயல வேண்டும். பைபிள் படிப்பு நடத்தும் முறையை வீட்டுக்காரருக்குச் சுருக்கமாக நடித்துக்காட்டி அதிலிருந்து அவர் எப்படிப் பயனடையலாம் என்பதை விளக்குங்கள்.
◼ நம்முடைய பிரசுரங்களில் இதுவரை பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வந்த சில வார்த்தைகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றங்களால் நம்முடைய மொழிபெயர்ப்புகள் இன்னும் திருத்தமானவையாக இருக்கும். உதாரணமாக, சில இந்திய மொழிகளில், “பரிசுத்த ஆவி” என்ற சொற்றொடர் “கடவுளுடைய சக்தி” என்று இனிமேல் மொழிபெயர்க்கப்படும். நாம் பயன்படுத்தி வந்த சில வார்த்தைகளில் செய்யப்பட்டுள்ள இதுபோன்ற மாற்றங்கள் ஆளும் குழுவின் ஒப்புதலோடுதான் செய்யப்பட்டுள்ளன என்பதில் நிச்சயமாய் இருங்கள்.
◼ 2009 மாவட்ட மாநாட்டு மன்றங்கள் மற்றும் மாநாட்டு தலைமை அலுவலகங்களின் விலாசங்கள் நம் ராஜ்ய ஊழியத்தில் பிற்பாடு அறிவிக்கப்படும்.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம்—புதிய உலக மொழிபெயர்ப்பு —கன்னடா, தமிழ், மலையாளம், ஹிந்தி
◼ கிடைக்கும் புதிய டிவிடி
மரித்தோரின் ஆவிகள்—உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா?—டிவிடியில் —அமெரிக்க சைகை மொழி
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரம்
விழிப்புடன் இருங்கள்! —உருது