அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு ஜூலை, ஆகஸ்ட்: கையிருப்பிலுள்ள பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் எதையாவது கொடுங்கள்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, விழிப்புடன் இருங்கள்! “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், திருப்தியான வாழ்க்கைக்கு வழி, நம்முடைய பிரச்சினைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? செப்டம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளியுங்கள். வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால், உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதியைக் கொடுத்து பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள்.
◼ வருடம் 2011 முதற்கொண்டு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் இயர்புக் கிடைக்காது.