உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 9/10 பக். 4
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2010
நம் ராஜ்ய ஊழியம்—2010
km 9/10 பக். 4

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்பு செப்டம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளியுங்கள். வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால், உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதியைக் கொடுத்து பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். நவம்பர்: பைபிள்—ஒரு கண்ணோட்டம். இந்தப் புதிய சிற்றேட்டுடன் கீழ்க்காணும் சிற்றேடுகளையும் சேர்த்துக் கொடுப்பது பொருத்தமாக இருக்கும்: எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், திருப்தியான வாழ்க்கைக்கு வழி, நம்முடைய பிரச்சினைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவிசெய்வார்? டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர். நீங்கள் போகும் வீட்டில் பிள்ளைகள் இருந்தால், பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளியுங்கள்.

◼ 2011-ஆம் ஆண்டின் நினைவுநாள் அனுசரிப்புக் காலத்திற்கான விசேஷப் பொதுப் பேச்சு 2011, ஏப்ரல் 25-ல் துவங்கும் வாரத்தில் கொடுக்கப்படும். அதன் தலைப்பு பிற்பாடு அறிவிக்கப்படும். அந்த வாரத்தில் வட்டாரக் கண்காணியின் சந்திப்போ அந்த வார இறுதியில் மாநாடோ இருந்தால் அதற்கு அடுத்த வாரத்தில் அந்தப் பேச்சு கொடுக்கப்படும். எந்தச் சபையிலும் ஏப்ரல் 25-க்கு முன்பு இந்தப் பேச்சு கொடுக்கப்படக் கூடாது.

◼ 2011, ஜனவரி 10-ல் துவங்கும் வாரத்திலிருந்து சபை பைபிள் படிப்பின்போது 2007, 2008-ஆம் ஆண்டின் காவற்கோபுர இதழ்களிலிருந்து கட்டுரைகள் கலந்தாலோசிக்கப்படும். சபையாரிடம் பத்திரிகை இல்லாவிட்டால், சபையின் நூலகத்தில் உள்ள பத்திரிகைகளிலிருந்து தேவையான கட்டுரைகளை நகல் எடுத்துக் கொடுக்க மூப்பர்கள் ஏற்பாடு செய்வார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்