ஜூன் 6-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூன் 6-ல் துவங்கும் வாரம்
பாட்டு 3; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 3 பாரா. 10-19 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 34-37 (10 நிமி.)
எண் 1: சங்கீதம் 35:1-18 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: இன்று இஸ்ரவேலில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமா?—rs பக். 223 பாரா 2-பக். 224 பாரா 2 (5 நிமி.)
எண் 3: லூக்கா 12:13-15, 21 ஆகிய வசனங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: கேள்விகளைத் திறம்பட பயன்படுத்துதல்—பகுதி 2. ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 237, பாரா 3 முதல் பக்கம் 238, பாரா 5 வரை உள்ள தகவல்களின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. இந்தத் தகவலிலுள்ள வெவ்வேறு குறிப்புகளைக் காட்டுகிற ஓரிரு சுருக்கமான நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: நாம் என்ன சாதித்தோம்? ஊழியக் கண்காணி கலந்தாலோசிப்பார். நினைவு ஆசரிப்பு சமயத்தில் சபையார் செய்த ஊழியத்தைப் பாராட்டுங்கள்; அவர்கள் என்ன சாதித்தார்கள் என்பதைச் சுருக்கமாகக் குறிப்பிடுங்கள். மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் துணைப் பயனியர் செய்தபோது கிடைத்த அனுபவங்களைச் சொல்லும்படி கேளுங்கள்.
பாட்டு 52; ஜெபம்