ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களால் ஊழியத்தில் ஈடுபட முடியுமா?
1. பவுலும் அவருடைய தோழர்களும் பிலிப்பியில் ஊழியம் செய்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
1 அன்று ஓய்வுநாள்; பிலிப்பியில் இருந்த யூதர்கள் பெரும்பாலும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். மிஷனரி பயணம் செய்துவந்த பவுலும் அவருடைய தோழர்களும் அன்று அந்த நகரத்திற்கு வந்தார்கள். ஊழியத்தில் ஈடுபடாமல் அவர்கள் நன்றாக ஓய்வெடுத்திருந்தாலும்கூட யாரும் எதுவும் சொல்லியிருக்க மாட்டார்கள். ஆனால், யூதர்கள் நகரத்திற்கு வெளியே ஜெபம் செய்யக் கூடியிருப்பார்கள் என அறிந்திருந்ததால், அந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரசங்கித்தார்கள். அவர்கள் அறிவித்த செய்தியை லீதியாள் காதுகொடுத்துக் கேட்டார்; பிற்பாடு, அவரும் அவருடைய வீட்டார் எல்லாரும் ஞானஸ்நானம் பெற்றார்கள். அப்போது, பவுலும் அவருடைய தோழர்களும் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்! (அப். 16:13-15) ஞாயிற்றுக்கிழமைகளில் இன்று அநேகர் ஓய்வாக இருப்பதால், நீங்கள் காலையிலோ மாலையிலோ ஊழியத்தில் ஈடுபடலாம், அல்லவா?
2. ஞாயிற்றுக்கிழமைகளில் ஊழியம் செய்வதற்காக யெகோவாவின் மக்கள் என்னென்ன சவால்களைச் சமாளித்தார்கள்?
2 ஞாயிற்றுக்கிழமைகளில் ஊழியம் செய்வதற்காக பட்ட பாடுகள்: ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஊழியத்திற்காக நேரம் ஒதுக்கும்படி 1927-ஆம் ஆண்டில் யெகோவாவின் மக்கள் ஊக்குவிக்கப்பட்டார்கள். இப்படி அவர்கள் செய்யத் தொடங்கியவுடனே பலத்த எதிர்ப்புகளைச் சந்தித்தார்கள். முக்கியமாக அமெரிக்காவில், ஞாயிற்றுக்கிழமைகளில் ஓய்வுநாள் சட்டத்தை மீறியதாகவும், பொது அமைதியைக் குலைத்ததாகவும், ‘லைசன்ஸ்’ இல்லாமல் விற்பனை செய்ததாகவும் புகார் சுமத்தப்பட்டு அவர்களில் அநேகர் கைதுசெய்யப்பட்டார்கள். ஆனாலும், அவர்கள் பயந்துபோய் பிரசங்க வேலையை நிறுத்திவிடவில்லை. 1930-களில், “டிவிஷனல் கேம்பைன்ஸ்” என்றழைக்கப்பட்ட விசேஷ பிரசங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன; அருகிலுள்ள சபைகளைச் சேர்ந்த பிரஸ்தாபிகள் ஒன்றுசேர்ந்து ஒரு பிராந்தியத்தை செய்துமுடிப்பார்கள். சில சமயங்களில், இவ்வாறு ஊழியத்திற்குப் போன பிரஸ்தாபிகளை அதிகாரிகள் கைது செய்தார்கள்; ஆனால், பிரஸ்தாபிகள் அதிகளவில் இருந்ததால் என்ன செய்வது எனத் தெரியாமல் அவர்கள் திணறிப்போனார்கள். நம்முடைய சகோதரர்கள் செய்த தியாகத்தை நீங்கள் உண்மையிலேயே மதிக்கிறீர்களா? அவர்களுடைய பக்திவைராக்கியத்தைப் பின்பற்றுவீர்களா?
3. ஊழியத்தில் கலந்துகொள்ள ஞாயிற்றுக்கிழமை ஏன் அருமையான நாளாக இருக்கிறது?
3 பிரசங்கிக்க அருமையான நாள்: ஞாயிற்றுக்கிழமைகளில் அநேகருக்கு விடுப்பு இருப்பதால், அவர்கள் வீடுகளில் இருக்கிறார்கள். பொதுவாக அவர்கள் ஓய்வாகவும் இருக்கிறார்கள். சர்ச்சுகளுக்குச் செல்பவர்கள் அன்று கடவுளைப் பற்றிப் பேசுவதற்கு அதிக விருப்பம் காட்டலாம். பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நமக்கு கூட்டங்கள் இருப்பதால், அதற்காக நன்கு உடை அணிந்து வந்திருப்போம்; எனவே, கூட்டத்திற்கு முன்போ பின்போ ஊழியத்தில் கலந்துகொள்ளலாம், அல்லவா? முடிந்தால், கையோடு ஓர் எளிய உணவை எடுத்துச் செல்லுங்கள்.
4. ஞாயிற்றுக்கிழமைகளில் ஊழியத்தில் ஈடுபட நாம் நேரம் ஒதுக்கினால் என்னென்ன நன்மைகளைப் பெறுவோம்?
4 ஞாயிற்றுக்கிழமைகளில் நமக்கும் ஓய்வு தேவைப்படும்; என்றாலும், ஊழியத்தில் ஈடுபட்ட பிறகு மீதமிருக்கிற நேரத்தில் நாம் ஓய்வெடுத்துக்கொள்ளலாம். அப்படி ஓய்வெடுக்கும்போது, பரிசுத்த சேவையில் ஈடுபட்ட மனநிறைவும் நமக்கு இருக்கும். (நீதி. 19:23) லீதியாளைப் போன்ற ஒருவரைக் கண்டுபிடிப்பதால் கிடைக்கிற ஆனந்தத்தையும் நாம் அனுபவிக்கலாம்.