உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 3/12 பக். 5
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2012
நம் ராஜ்ய ஊழியம்—2012
km 3/12 பக். 5

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்பு மார்ச்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே இந்தப் புத்தகம் இருந்தால் அல்லது பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்தால் அவருடைய ஆர்வத்தைத் தூண்டுகிற பழைய பத்திரிகையையோ சிற்றேட்டையோ அளிக்கலாம். ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளியுங்கள். ஆர்வம் காட்டுகிறவர்களுக்கு உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதியைக் கொடுத்து பைபிள் படிப்பைத் தொடங்க முயலுங்கள். சபையுடன் முழுமையாகக் கூட்டுறவு கொள்ளாமல் நினைவுநாள் அனுசரிப்புக்கோ வேறு ஏதாவது தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கோ மட்டுமே வந்து போகும் நபர்களை மீண்டும் சந்திக்கும்போது, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அளித்து ஒரு பைபிள் படிப்பைத் தொடங்க முயற்சி செய்யுங்கள். ஜூன்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். ஒருவேளை வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே இந்தப் புத்தகம் இருந்தால், அதோடு அவர் பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவருடைய ஆர்வத்தைத் தூண்டுகிற வேறு ஏதாவது பழைய பத்திரிகையையோ சிற்றேட்டையோ கொடுக்கலாம்.

◼ நினைவு நாள் அனுசரிப்பு ஏப்ரல் 5, 2012, வியாழக்கிழமை நடைபெறும். உங்கள் சபையில் பொதுவாக வியாழக்கிழமை கூட்டங்கள் நடைபெற்றால், ராஜ்ய மன்றம் கிடைப்பதைப் பொறுத்து வேறொரு நாளுக்கு அக்கூட்டங்களை மாற்றி வைக்கலாம். இது சாத்தியமில்லை என்றால், அந்த ஊழியக் கூட்ட நிகழ்ச்சிகளில் உங்கள் சபைக்கு பொருத்தமான நிகழ்ச்சிகளை மாத்திரம் வேறொரு ஊழியக் கூட்ட நிகழ்ச்சியோடு சேர்த்துக்கொள்ளலாம்.

◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:

கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் –ஒரியா, மணிப்புரி

கடவுள் சொல்வதைக் கேளுங்கள் –ஒரியா, மணிப்புரி

◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:

‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ –கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி

சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி –கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்