தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஏப்ரல் 30, 2012-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். கீழேயுள்ள கேள்விகள் எந்த வாரத்தில் சிந்திக்கப்படும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக தேதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஊழியப் பள்ளிக்காக ஒவ்வொரு வாரமும் தயாரிக்கையில் அவற்றை ஆராய்ச்சி செய்வதற்கு இது உதவியாய் இருக்கும்.
1. எரேமியா புத்தகம் நமக்கு ஏன் பயனுள்ளது? [மார். 5, வேதாகமம் முழுவதும் பக். 129 பாரா 36]
2. துன்புறுத்துதலிலிருந்து யெகோவா நம்மை எப்படி விடுவிக்கிறார்? (எரே. 1:8) [மார். 5, காவற்கோபுரம் 05 12/15 பக். 23 பாரா 18]
3. பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் ‘பூர்வ பாதைகளுக்கு’ எப்போது, எப்படித் திரும்பியிருக்கிறார்கள்? (எரே. 6:16) [மார். 12, காவற்கோபுரம் 05 11/1 பக். 24 பாரா 12]
4. “கீலேயாத்திலே பிசின் தைலம்” இன்று இருப்பதாக எப்படிச் சொல்ல முடியும்? (எரே. 8:22) [மார். 19, காவற்கோபுரம் 10 10/1 பக். 26 பாரா 1-பக். 27 பாரா 3]
5. யெகோவா, ‘மீன் பிடிக்கிற அநேகரையும்’ ‘வேட்டைக்காரராகிய அநேகரையும் அழைத்தனுப்புவது’ எதைக் குறிக்கிறது? (எரே. 16:16) [ஏப். 2, காவற்கோபுரம் 07 3/15 பக். 9 பாரா 5]
6. யெகோவா எவ்விதத்தில் எரேமியாவைவிட ‘பலத்தவராய் இருந்து’ அவரை இணங்கச் செய்தார்? (எரே. 20:7) [ஏப். 2, காவற்கோபுரம் 07 3/15 பக். 9 பாரா 6]
7. ‘யெகோவாவால் சுமரும் பாரம்’ என்பதன் அர்த்தம் என்ன? (எரே. 23:33) [ஏப். 9, காவற்கோபுரம் 07 3/15 பக். 11 பாரா 1]
8. கடவுளுடைய நியாயப்பிரமாணம் எவ்வாறு இருதயங்களில் எழுதப்படுகிறது? (எரே. 31:33) [ஏப். 23, காவற்கோபுரம் 07 3/15 பக். 11 பாரா 2]
9. ஒரே காரியத்திற்காக எழுதப்பட்ட இரண்டு பத்திரங்களின் நோக்கம் என்ன? (எரே. 32:10-15) [ஏப். 23, காவற்கோபுரம் 07 3/15 பக். 11 பாரா 3]
10. எரேமியா 33:23, 24-ல் பேசப்படும் ‘இரண்டு வம்சங்கள்’ அதாவது குடும்பங்கள் எவை? [ஏப். 30, காவற்கோபுரம் 07 3/15 பக். 11 பாரா 4]