தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஜூன் 25, 2012-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். கீழேயுள்ள கேள்விகள் எந்த வாரத்தில் சிந்திக்கப்படும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக தேதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஊழியப் பள்ளிக்காக ஒவ்வொரு வாரமும் தயாரிக்கையில் அவற்றை ஆராய்ச்சி செய்வதற்கு இது உதவியாய் இருக்கும்.
1. பஞ்ச காலத்தில் எரேமியாவை யெகோவா காப்பாற்றியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (எரே. 37:21) [மே 7, w97 9/15 பக். 3 பாரா 4-பக். 4 பாரா 1]
2. பாருக் என்ன “பெரிய காரியங்களை” தேடினார், யெகோவா கொடுத்த அறிவுரைக்கு அவர் கீழ்ப்படிந்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (எரே. 45:2-5) [மே 21, w08 10/15 பக். 8 பாரா 7; w08 4/15 பக். 15 பாரா 16]
3. எகிப்து பாம்பைப் போல் சீறி வரும் என ஏன் சொல்லப்படுகிறது? (எரே. 46:22) [மே 21, w07 3/15 பக். 11 பாரா 5]
4. பாபிலோனில் கைதிகளாக இருந்த யூதர்களுக்கு எரேமியா அறிவித்த தீர்க்கதரிசன செய்தியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (எரே. 51:6, 45, 50) [ஜூன் 4, w08 6/15 பக். 8, 9 பாரா. 9, 10]
5. யெகோவா எவ்வாறு ‘திராட்சப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல, யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார்’? (புல. 1:15) [ஜூன் 11, w07 6/01 பக். 8 பாரா 6]
6. ‘இஸ்ரவேலின் மகிமை வானத்திலிருந்து தரையிலே விழத்தள்ளப்பட்டது’ எப்படி? (புல. 2:1) [ஜூன் 11, w07 6/01 பக். 9 பாரா 1]
7. யெகோவாவின் ‘பாதபீடம்’ மற்றும் “வேலி” என்பது என்ன? (புல. 2:1, 6) [ஜூன் 11, w07 6/1 பக். 9 பாரா 2]
8. யெகோவா எரேமியாவை ‘நினைத்துப் பார்க்கிறார்,’ அவருக்குமுன் தம்மைத் ‘தாழ்த்துகிறார்’ என்று சொன்னபோது எரேமியா எதை அர்த்தப்படுத்தினார், அது நமக்கு ஏன் முக்கியம்? (புல. 3:20, NW) [ஜூன் 18, w07 6/1 பக். 11 பாரா 2]
9. இளவயதிலேயே கஷ்டத்தைச் சுமக்கக் கற்றுக்கொள்ளும்போது ஒருவர் எவ்வாறு பயனடைகிறார்? (புல. 3:27) [ஜூன் 18, w07 6/1 பக். 11 பாரா 4]
10. நற்செய்தியை கேட்க மனமில்லாத மக்களிடம் தைரியமாகப் பேச எசேக்கியேலின் உதாரணம் எப்படி நமக்கு உதவும்? (எசே. 3:8, 9) [ஜூன் 25, w08 7/15 பக். 8 பாரா. 6-7]