செப்டம்பர் 17-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 17-ல் துவங்கும் வாரம்
பாட்டு 31; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 7 பாரா. 9-13, பெட்டி பக். 56 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 46-48 (10 நிமி.)
எண் 1: எசேக்கியேல் 48:1-14 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: எல்லாக் காரியங்களிலும் நாம் ஏன் நேர்மையாக இருக்க வேண்டும்?—எபே. 4:25, 28; 5:1 (5 நிமி.)
எண் 3: ‘உங்களுக்கென ஒரு தனி பைபிளை வைத்திருக்கிறீர்கள்’ என்று யாராவது சொல்லும்போது பதிலளித்தல்—நியாயங்காட்டி பக். 279 பாரா. 1-4 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
20 நிமி: “தோள்கொடுக்க நீங்கள் தயாரா?” செப்டம்பர் 2003 நம் ராஜ்ய ஊழியம் பக்கங்கள் 3-6-ன் அடிப்படையில் மூப்பர் அளிக்கும் உற்சாகமான பேச்சு. பிள்ளைகள் பெத்தேல் சேவையை இலக்கு வைக்க உதவும்படி பெற்றோரை உற்சாகப்படுத்துங்கள். குடும்ப வழிபாட்டின்போது இந்த உட்சேர்க்கையைக் கலந்தாலோசிக்கும்படிச் சொல்லுங்கள்.
10 நிமி: “பலன்தரும் தெரு ஊழியம்.” கேள்வி-பதில். ஊழியக் கண்காணி நடத்துவார். உங்கள் பிராந்தியத்திற்கு ஏற்றபடி நடத்துங்கள். கட்டுரையில் உள்ள ஓரிரு குறிப்புகளை நடித்து காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 107; ஜெபம்