பொது ஊழியம் செய்ய புது வழி
1. மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கிற இடம், உங்கள் சபை பிராந்தியத்தில் இருந்தால் நீங்கள் என்ன செய்யலாம்?
1 சில சபையின் பிராந்தியங்களில், மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கிற இடம் இருக்கும். அதுபோன்ற இடங்களில் மேஜை அல்லது வீல்-ஸ்டாண்டு (Wheel-stand) ஊழியம் செய்கிறார்கள். வீல்-ஸ்டாண்டு ஊழியத்திற்கு ஒரு பிரஸ்தாபி இருந்தால் போதும்; மேஜை ஊழியத்திற்கு கண்டிப்பாக இரண்டு பிரஸ்தாபி இருக்க வேண்டும். மேஜை அல்லது வீல்-ஸ்டாண்டு ஊழியம் செய்கிறவர்கள் கூச்சப்படாமல், சகஜமாக, அன்பாக பேசுகிறவர்களாக இருக்க வேண்டும். யாராவது பத்திரிகைகளை வந்து பார்த்தால், ஒரு பிரஸ்தாபி அவர்களிடம் பேச ஆரம்பிக்கலாம். அவர்களிடம் இப்படி கேட்கலாம்: “இதில இருக்கிற விஷயத்தை பத்தி கடவுள் என்ன நினைக்கிறார்னு என்னைக்காவது யோசிச்சு பார்த்திருக்கீங்களா?” தேவைப்பட்டால், இந்த ஊழியம் செய்கிற இடத்திற்கு கொஞ்சம் பக்கத்தில், இரண்டு பிரஸ்தாபிகள் சந்தர்ப்ப சாட்சி கொடுத்துக்கொண்டு இவர்களையும் கவனித்துக்கொள்ளலாம்.
2. பொது ஊழியம் செய்வது நல்லது என்று புரிந்துகொள்ள ஒரு உதாரணம் சொல்லுங்கள்.
2 இப்படி செய்வதால் நிறைய பைபிள் படிப்பு கிடைக்கிறது. உதாரணமாக, காலேஜில் படிக்கிற ஒரு பெண் யெகோவாவின் சாட்சிகளை பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்தார். ஆனால், யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்கள் எங்கே நடக்கிறது என்று அந்த பெண்ணுக்கு தெரியவில்லை. அடுத்த வாரம் அவருடைய காலேஜிலேயே யெகோவாவின் சாட்சிகள், மேஜை ஊழியம் செய்வதை பார்த்தார். யெகோவாவின் சாட்சிகள் அந்த பெண்ணுக்கு பைபிள் படிப்பு எடுக்க ஆரம்பித்தார்கள். இப்போது, அந்த பெண் ஞானஸ்நானம் எடுத்து, இதே மாதிரி பொது ஊழியம் செய்கிறார்.
3. பொது ஊழியத்தை பற்றி சிலர் என்ன சொல்கிறார்கள்?
3 “சிலர் புது பத்திரிகைகளை எடுத்துட்டு போறாங்க. இந்த மாதிரி பொது ஊழியம் செய்றதுனால நிறைய பேர் யெகோவாவின் சாட்சிகளை பத்தி தெரிஞ்சுப்பாங்க. ஏன்னா, சிலருக்கு யெகோவாவின் சாட்சிகள்னா யாருன்னே தெரியாது”னு ஒரு சகோதரி சொன்னார். இன்னொரு சகோதரி இப்படி சொன்னார்: “இந்த மாதிரி பொது ஊழியம் செய்றது ரொம்ப நல்லா இருக்கு. ஏன்னா, நம்ம செய்தியை கேட்கலனாலும், ஆர்வமா வந்து பத்திரிகைகளை பார்க்கிறாங்க.”
4. இடத்தையும் நேரத்தையும் நாளையும் மாற்றாமல் இருப்பது ஏன் நல்லது?
4 நீங்கள் எந்த இடத்தில், மேஜை அல்லது வீல்-ஸ்டாண்டு ஊழியம் செய்கிறீர்களோ, ஒவ்வொரு வாரமும் அதே இடத்தில் செய்யுங்கள்; அதே நாளில் அதே நேரத்தில் செய்யுங்கள். இப்படி செய்தால், அங்கே வரும் மக்கள் அடிக்கடி நம்மை பார்ப்பார்கள்; அதனால் ஒருநாள் அவர்கள் வந்து பிரசுரங்களை எடுப்பார்கள், அவர்கள் மனதில் இருக்கிற கேள்விகளைக் கேட்பார்கள். நீங்களும் சபையாக இதுபோல் பொது ஊழியம் செய்கிறீர்களா? ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி எங்கும் அறிவிக்க’ பொது ஊழியம் ஒரு புது வழி!—லூக். 9:60.