வெளி ஊழிய சிறப்பம்சங்கள்
டிசம்பர் 2014
டிசம்பரில் 41,560 பேர் ஊழிய அறிக்கை செய்தார்கள். இந்தியாவில் முதல்முறையாக பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை இந்தளவு அதிகரித்திருக்கிறது. ஒழுங்கான பயனியர்களின் எண்ணிக்கையும் 5,706 என்று உயர்ந்துள்ளது. அந்த மாதத்தில் மட்டும் 54,430 பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டன. நம் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.