சீடர்களாக்குவது ரொம்ப முக்கியமான வேலை
1. மக்களுக்கு சாவே இல்லாத வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
1 2014-ம் வருடத்தின் ஊழிய அறிக்கையை பார்த்தீர்களா? நாம் எவ்வளவு சுறுசுறுப்பாகவும் ஆர்வமாகவும் ஊழியம் செய்திருக்கிறோம் என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது. (மத். 24:14) வீட்டுக்கு வீடு ஊழியம் செய்திருக்கிறோம்; துண்டுப்பிரதிகளையும் அழைப்பிதழ்களையும் கொடுக்க விசேஷ ஊழியம் செய்திருக்கிறோம்; பொது ஊழியமும் செய்திருக்கிறோம்; இப்படி, இதுவரை இல்லாத அளவு நிறைய பேரிடம் பைபிளை பற்றி சொல்லியிருக்கிறோம். இருந்தாலும், நாம் பைபிள் படிப்பு எடுத்தால்தான் அவர்கள் இயேசுவின் சீடர்களாக ஆவார்கள்; சாவே இல்லாத வாழ்க்கையையும் பெறுவார்கள்.—1 தீ. 2:4.
2. எந்த மாதிரி சந்தர்ப்பங்களில் நாம் பைபிள் படிப்பு ஆரம்பிக்க தயாராக இருக்க வேண்டும்?
2 பைபிள் படிப்பு எடுக்க தயாராக இருங்கள்: யாராவது ஆர்வமாக கேட்டால் அவருடைய பெயர், முகவரியை எழுதி வையுங்கள். அவர்களை மறுபடியும் போய் பார்த்து பைபிள் படிப்பு ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். ஆர்வம் காட்டின நபரை முதல் தடவை பார்த்தபோதே பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயற்சி செய்திருக்கிறீர்களா? நீங்கள் தொடர்ந்து பத்திரிகைகளை கொடுத்து வரும் ஒருவரிடம் பைபிள் படிப்பை பற்றி சொல்லியிருக்கிறீர்களா? கூட வேலை செய்பவர்கள், கூட படிப்பவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், சொந்தக்காரர்களிடம் பைபிளை ஏன் படிக்க வேண்டும்?, பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? போன்ற வீடியோக்களை போட்டு காட்டியிருக்கிறீர்களா? வீல்-ஸ்டாண்டு ஊழியம் செய்யும்போது பைபிள் படிப்பிற்கு பயன்படுத்தும் புத்தகங்களை யாராவது எடுத்தால் அவர்களிடம் பைபிள் படிப்பை பற்றி சொல்லியிருக்கிறீர்களா?
3. பைபிளை பற்றி மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்க நமக்கு என்ன உதவிகள் இருக்கிறது?
3 யெகோவாவும் இயேசுவும் உதவி செய்கிறார்கள்: ‘புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்குங்கள்’ என்று இயேசு சொன்னார். அப்படியென்றால், மக்களை சீடர்களாக்குவதற்கு நாம்தான் முதல்படி எடுக்க வேண்டும். அதற்காக நாம் நிறைய முயற்சி எடுக்க வேண்டும். அதேசமயத்தில், கடைசி வரைக்கும் நம் கூடவே இருந்து நமக்கு உதவி செய்வதாகவும் இயேசு சொன்னார். (மத். 28:19, 20) அதோடு, இந்த வேலையை செய்வதற்கு யெகோவா அவருடைய சக்தியை கொடுத்து நமக்கு உதவி செய்கிறார். இந்த வேலையை நன்றாக செய்ய நிறைய புத்தகங்களைக் கொடுத்திருக்கிறார்; தேவையான பயிற்சியையும் கொடுத்திருக்கிறார். (சக. 4:6; 2 கொ. 4:7) நாம் அவரிடம் ஜெபம் செய்தால், இந்த முக்கியமான வேலையை செய்ய நம்மை ‘மனமுவந்து செயல்பட வைப்பார்.’—பிலி. 2:13.
4. சீடர்களாக்குவது ஏன் முக்கியம்?
4 நாம் ஊழியம் செய்யும்போது நிறைய சந்தோஷம் கிடைக்கிறது. அதுவும் பைபிள் படிப்பு எடுக்கும்போது நமக்கு அளவில்லாத சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கிறது. ஏனென்றால், ‘வாழ்வுக்கு வழிநடத்தும் வாசல்’ வழியாக போக நாம் அவர்களுக்கு உதவி செய்கிறோம். (மத். 7:14; 1 தெ. 2:19, 20) அதனால், பைபிள் படிப்பு எடுத்து, சீடர்களாக்குவது ரொம்ப ரொம்ப முக்கியம். அப்படி செய்தால் யெகோவா ரொம்ப சந்தோஷப்படுவார். ஏனென்றால், “ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டும் என்றே” யெகோவா ஆசைப்படுகிறார்.—2 பே. 3:9.