ஜூலை 20-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
ஜூலை 20-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 11; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 60 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 12-14 (8 நிமி.)
எண் 1: 1 இராஜாக்கள் 12:21-30 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: தானியேல்—தலைப்பு: முழு மனதோடு தன்னை வணங்குபவர்களை யெகோவா ஆசீர்வதிப்பார்—தானி. 1:3-6, 17, 19, 20; 4:20-22; 7:11-14; 9:1, 2, 17; 12:13 (5 நிமி.)
எண் 3: நல்ல கணவனாக, நல்ல அப்பாவாக இருக்க பைபிள் எப்படி உதவுகிறது?—அறிமுகம் பக். 26 பாரா. 1-2 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: ‘புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்குங்கள்.’—மத். 28:19, 20.
8 நிமி: “எல்லாருக்கும் அழைப்பிதழைக் கொடுங்கள்.” கேள்வி-பதில். பாரா 3-ஐ கலந்தாலோசிக்கும்போது அழைப்பிதழை கொடுப்பது போன்ற சுருக்கமான நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
12 நிமி: “மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்.” சபையின் செயலர் கலந்தாலோசிப்பார். இதில் இருக்கும் சில ஆலோசனைகள் பைபிளில் இருந்து எடுக்கபட்டிருக்கின்றன. அதற்கு கவனம் செலுத்துங்கள். 2015-ல் நடக்கும் மூன்று நாள் மாநாட்டில் அதை எப்படி கடைப்பிடிக்கலாம் என்று கேளுங்கள். ஆகஸ்ட் 3, 2013-ல் “ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஆஜராகும்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்” என்ற பொருளில் வந்த கடிதத்தில் இருக்கும் முக்கியமான விஷயங்களை கலந்துபேசுங்கள்.
10 நிமி: கேள்விப் பெட்டி. கலந்து பேசுங்கள்.
பாட்டு 66; ஜெபம்