எல்லாருக்கும் அழைப்பிதழைக் கொடுங்கள்
1. மாநாட்டிற்கான அழைப்பிதழை எப்போது கொடுக்க ஆரம்பிப்போம்?
1 “நிறைய செலவு செஞ்சு, ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்றீங்க. ரொம்ப கஷ்டப்பட்டு ஒவ்வொரு ஏற்பாட்டையும் செய்றீங்க. அப்படினா, அந்த விருந்தில கலந்துக்க, உறவினர்களையும் நண்பர்களையும் எவ்ளோ ஆர்வமா கூப்பிடுவீங்க!” அதேபோல், யெகோவாவும் ஒரு ‘பெரிய விருந்தை’ ஏற்பாடு செய்திருக்கிறார். அதுதான் மூன்றுநாள் மாநாடு. இந்த மாநாட்டையும் நிறைய முயற்சி எடுத்து தயாரித்திருக்கிறார்கள். மாநாட்டிற்கு மூன்று வாரம் முன்பிருந்தே எல்லாருக்கும் அழைப்பிதழை கொடுக்க ஆரம்பிப்போம். அழைப்பிதழை எப்படி ஆர்வமாகக் கொடுக்கலாம்?
2. நாம் ஏன் நிறைய பேரை மாநாட்டிற்கு அழைக்க வேண்டும்?
2 நம் வாழ்க்கைக்குத் தேவையான நிறைய நல்ல விஷயங்களை மாநாட்டில் யெகோவா நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். (ஏசா. 65:13, 14) இதையெல்லாம் மற்றவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டால் முடிந்தவரை எல்லாரையும் மாநாட்டிற்கு அழைப்போம். ஒவ்வொரு வருடமும் அழைப்பிதழைக் கொடுப்பதற்காக நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கின்றன. (“நிச்சயம் பலன் கிடைக்கும்!” என்ற பெட்டியைப் பாருங்கள்.) நாம் கூப்பிடுகிற எல்லாரும் மாநாட்டிற்கு வராமல் போகலாம். ஆனால், சிலராவது நிச்சயம் வருவார்கள். அப்படியே யாரும் வரவில்லை என்றாலும் நாம் எடுக்கும் முயற்சி யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும். ஏனென்றால், எல்லாரும் யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார்.—சங். 145:3, 7; வெளி. 22:17.
3. அழைப்பிதழை எப்படியெல்லாம் கொடுக்கலாம்?
3 சபை ஊழியம் செய்ய வேண்டிய இடங்களில் அழைப்பிதழைக் கொடுத்து முடிக்க மூப்பர் குழு ஏற்பாடு செய்ய வேண்டும். பூட்டியிருக்கும் வீடுகளில் அழைப்பிதழை வைக்கலாமா பொது ஊழியத்தில் கொடுக்கலாமா என்பதையும் அவர்கள் முடிவு செய்வார்கள். சனி-ஞாயிறுகளில் பத்திரிகையோடு சேர்த்து அழைப்பிதழைக் கொடுக்கலாம். அப்படிச் செய்தால், அழைப்பிதழை ஆர்வமாகக் கொடுக்க நாம் எடுத்த எல்லா முயற்சியையும் நினைத்து ரொம்ப சந்தோஷப்படுவோம். யெகோவா ஏற்பாடு செய்த விருந்திற்கு நிறைய பேரை அழைத்ததை நினைத்தும் சந்தோஷப்படுவோம்.