வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்கு தயாரிக்க தேவையான தகவல்கள்
நவம்பர் 7-13
பைபிளில் இருக்கும் புதையல்கள் | நீதிமொழிகள் 27-31
“திறமைசாலியான மனைவியைப் பற்றி பைபிள் சொல்கிறது”
it-2-E 1183
மனைவி
ஒரு நல்ல மனைவி எப்படி இருக்க வேண்டும். விசுவாசமுள்ள மனைவிக்கு இருக்கும் சந்தோஷத்தைப் பற்றியும் அவள் செய்யும் வேலைகளைப் பற்றியும் நீதிமொழிகள் 31-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தன்னுடைய கணவனின் பார்வையில் அவள் பவளங்களவிட அதிக மதிப்புள்ளவளாக இருக்கிறாள். அவளுடைய கணவன் அவளை நம்புகிறார். அவள் சுறுசுறுப்பாக வேளை செய்கிறாள். துணி நெய்வது, குடும்பத்தில் இருப்பவர்களுக்கு உடைகளை தைப்பது, குடும்பத்துக்கு தேவையான பொருள்களை வாங்குவது, திராட்சை தோட்டத்தில் வேலை செய்வது, வேலைக்காரர்களின் உதவியோடு வீட்டைப் பராமரிப்பது, உதவி தேவைப்படுகிறவர்களுக்கு உதவி செய்வது, குடும்பத்தில் இருப்பவர்களுக்கு அழகான துணிமணிகளைக் தைப்பது, தன்னுடைய கைத் தொழிலால் குடும்பத்துக்கு கொஞ்சம் சம்பாதித்து கொடுப்பது, எதிர்பாராத சம்பவங்களை சமாளிக்க முன்னதாகவே குடும்பத்தைத் தயார்ப்படுத்துவது போன்ற நிறைய விஷயங்களை அவள் செய்கிறாள். அவள் ஞானமாகவும் அன்பாகவும் பேசுகிறாள். யெகோவாவுக்கு பயந்து நல்ல விஷயங்களைச் செய்து தன்னுடைய கணவனிடம் இருந்தும் மகன்களிடம் இருந்தும் பாராட்டைப் பெறுகிறாள். அதனால், தேசத்தில் அவளுடைய கணவனுக்கும் குடும்பத்துக்கும் மதிப்புமரியாதை கிடைக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நல்ல மனைவியைக் கண்டுபிடித்தவன் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறான்.—நீதி 18:22.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w11-E 8/1 29 ¶2
ரொம்ப நம்பிக்கையோடு எதிர்பார்த்த சந்தோஷமான நாள்.
அடுத்ததாக சகோதரர் மாரிஸ் நீதிமொழிகள் 27:21-ஐ வாசித்தார். அந்த வசனம் இப்படிச் சொல்கிறது: “வெள்ளியைப் புடமிடுவது பானை, தங்கத்தைப் புடமிடுவது உலை, அதுபோல் ஒருவனைச் சோதிப்பது புகழ்ச்சி.” தங்கமும் வெள்ளியும் எப்படிப் புடமிடப்படுகிறதோ அப்படியே மற்றவர்கள் நம்மை புகழும்போது நாம் புடமிடப்படுகிறோம் என்று அவர் சொன்னார். எப்படி? யாராவது நம்மை புகழ்ந்தாலோ பாராட்டினாலோ நம் மனதில் பெருமை வந்துவிடலாம், யெகோவாவோடு இருக்கும் பந்தம் பாதிக்கப்படலாம். அல்லது, நமக்கு கிடைத்த பாராட்டுக்கு யெகோவாதான் காரணம் என்று தாழ்மையோடு ஒத்துக்கொண்டு அவருடைய சட்டதிட்டங்களுக்கு இன்னும் நன்றாக கீழ்ப்படிய தீர்மானமாக இருக்கலாம். அதனால், நம்மை யாராவது பாராட்டும்போது அந்தப் பாராட்டு யெகோவாவின் உதவியோடுதான் கிடைத்தது என்று தாழ்மையோடு ஒத்துக்கொள்ள வேண்டும் என்று மாணாக்கரிடம் அவர் சொன்னார்.
நவம்பர் 14-20
பைபிளில் இருக்கும் புதையல்கள் | பிரசங்கி 1-6
“கடின உழைப்பால் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவியுங்கள்”
w15-E 2/1 4-6
நம்முடைய வேலையை எப்படி சந்தோஷமாக செய்வது
“சாப்பிட்டு, குடித்து, தங்கள் கடின உழைப்பால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும். இதைவிட மேலானது வேறு எதுவுமே இல்லை என்று புரிந்துகொண்டேன். இது கடவுள் தரும் பரிசு” என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 3:13) நாம் சந்தோஷமாக வேலை செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். அந்தச் சந்தோஷத்தை நாம் எப்படி பெறலாம் என்பதையும் அவர் சொல்லியிருக்கிறார். (ஏசாயா 48:17) பைபிளில் நமக்காக அதைப் பதிவு செய்திருக்கிறார். சந்தோஷமாக வேலை செய்வதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று இப்போது பார்க்கலாம்.
சலிப்புடன் வேலை செய்யாதீர்கள்
நீங்கள் எப்படிப்பட்ட வேலை செய்தாலும், “எல்லா விதமான கடின உழைப்பும் நல்ல பலனைத் தரும்” என்பதை புரிந்துகொள்ளுங்கள். (நீதிமொழிகள் 14:23) என்ன பலன் கிடைக்கும்? கடினமாக உழைத்தால் நம் தேவைகளை நம்மால் கவனித்துக்கொள்ள முடியும். தன்னை உண்மையாக வணங்குபவர்களின் தேவைகளைக் கவனித்துக்கொள்வதாக கடவுள் வாக்குக்கொடுத்து இருக்கிறார். (மத்தேயு 6:31, 32) இருந்தாலும், நாம் அதற்கு நேர்மையாக உழைக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.—2 தெசலோனிக்கேயர் 3:10.
வேலை செய்வதால் நமக்கு நிறைய நன்மைகள் இருக்கிறது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய கடமைகளை நிறைவேற்றுவதற்கு வேலை செய்வது ரொம்ப முக்கியம். “வேல செஞ்சு நம்மளோட தேவைகள கவனிச்சிக்கிறதே ஒரு பெரிய சாதன. உங்களுக்கு தேவையான பொருள்கள வாங்க முடிஞ்சாலே நீங்க செய்ற வேலைக்கு பலன் கிடச்சிடுச்சுனு அர்த்தம்” என்று 25-வயதுள்ள ஜாஷ்வா சொல்கிறார்.
அதோடு, கடினமாக உழைப்பது நம் சுய மரியாதையை அதிகரிக்கும். கடினமாக வேலை செய்வது சுலபம் கிடையாது. நாம் செய்யும் வேலை கஷ்டமாக அல்லது சலிப்பாக இருந்தாலும் அதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற மன உறுதி நமக்கு இருக்கு வேண்டும். அப்படிச் செய்யும்போது நமக்கு ரொம்ப திருப்தியாக இருக்கும். குறுக்கு வழி எதுவும் தேடாமல் நம் கடின உழைப்பால் அந்த வேலையை செய்து முடித்தோம் என்ற சந்தோஷம் கிடைக்கும். (நீதிமொழிகள் 26:14) “நாள் முழுசோம் வேல செஞ்சதுக்கு அப்புறம் கிடைக்குற சந்தோஷமே தனி! எனக்கு உடம்புல தெம்பே இருக்காது, நான் செஞ்ச வேலைய யாரோம் பாத்திருக்கக்கூட மாட்டாங்க. இருந்தாலும் எதையோ சாதிச்ச மாதிரி இருக்கும்” என்று ஆரோன் சொல்கிறார்.
வேலையைச் சந்தோஷமாக செய்யுங்கள்
‘திறமையாக வேலை செய்கிற’ ஆண்ணையும், ‘தன் கைகளால் உற்சாகமாக வேலை செய்கிற’ பெண்ணையும் பைபிள் உயர்வாக பேசுகிறது. (நீதிமொழிகள் 22:29; 31:13) யாருமே பிறக்கும்போதே திறமைசாலியாக பிறப்பது கிடையாது. அதோடு, தெரியாத வேலையைச் செய்ய யாருக்கும் பிடிக்காது. அதனால்தான், நிறைய பேரால் தங்களுடைய வேலையைச் சந்தோஷமாக செய்ய முடிவதில்லை. அதைச் சிறப்பாக செய்வதற்கு அவர்கள் எந்த முயற்சி எடுப்பதும் கிடையாது.
ஒரு வேலையை எப்படி நன்றாக செய்வது என்று கற்றுக்கொண்டால் எந்த வேலையாக இருந்தாலும் சரி அதைச் சந்தோஷமாக செய்ய முடியும். “முழு மனசோடு செஞ்சு முடிச்ச ஒரு வேலையில கிடைக்குற நல்ல பலன்கள பாக்கும்போது, ரொம்ப திருப்தியா இருக்கும். ஆனா, ஒரு வேலைய பாதி மனசோட இல்லனா குறுக்கு வழில செஞ்சா இந்த திருப்தி கிடைக்காது” என்று 24-வயதுள்ள விலியம் சொல்கிறார்.
நீங்கள் செய்யும் வேலை மற்றவர்களுக்கு எப்படி பிரயோஜனமாக இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்
நீங்கள் செய்யும் வேலையில் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் என்று மட்டுமே யோசிக்காதீர்கள். அதற்குப் பதிலாக, ‘இந்த வேலை ஏன் முக்கியம்? இந்த வேலைய செய்லனா இல்ல சரியா செய்லனா என்ன ஆகும்? இந்த வேலைய செய்றதுனால மத்தவங்களுக்கு என்ன பிரயோஜனம் இருக்கு?’ என்றெல்லாம் யோசித்துப் பாருங்கள்.
மற்றவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் விதத்தில் வேலை செய்யும்போது அது உண்மையிலேயே நமக்கு ரொம்ப திருப்தியாக இருக்கும். “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது” என்று இயேசுவே சொல்லியிருக்கிறார். (அப்போஸ்தலர் 20:35) நாம் செய்யும் வேலையினால் நம்முடைய முதலாளியும் வாடிக்கையாளர்களும் நேரடியாக பயனடைகிறார்கள். அதோடு, நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் உதவி தேவைப்படுகிற மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கிறது.
நம் குடும்பத்தில் இருப்பவர்கள். குடும்ப தலைவர் கடினமாக உழைக்கும்போது அவர் இரண்டு விதத்தில் குடும்பத்துக்கு பிரயோஜனமாக இருக்க முடியும். முதலாவதாக, தன்னுடைய சொந்த குடும்பத்துக்கு தேவையான உணவு, உடை, இருக்க இடம் போன்றவற்றை கொடுக்க முடியும். இதனால், “தன்னுடைய குடும்பத்தில் இருக்கிறவர்களை, கவனித்துக்கொள்ள” வேண்டும் என்று கடவுள் கொடுத்த பொறுப்பைச் சரியாக செய்ய முடியும். (1 தீமோத்தேயு 5:8) இரண்டாவதாக, கடினமாக உழைப்பதால் தன்னுடைய குடும்பத்துக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்க முடியும். “என் அப்பா தொழில் தர்மத்தை மதித்து நடப்பார். நேர்மையாவும் கடினமாவும் வேலை செய்வார். அவர் வாழ்க்கைல பெரும்பாலும் ஒரு தச்சனா வேலை செஞ்சார். நம்மளோட சொந்த கைகளால கடினமா உழைச்சு மத்தவங்களுக்கு பிரயோஜனமா எதையாவது செய்றதோட முக்கியத்துவத்த என் அப்பாகிட்ட இருந்து கத்துக்கிட்டேன்” என்று ஷேன் சொல்கிறார்.
உதவி தேவைப்படுகிறவர்கள். “இல்லாதவர்களுக்குக் கொடுப்பதற்காக, தானே தன் கையால் பாடுபட்டு நேர்மையாக உழைக்க வேண்டும்” என்று அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களிடம் சொன்னார். (எபேசியர் 4:28) நாம் கடினமாக உழைக்கும்போது, நம்முடைய குடும்பத்தையும் கவனித்துக்கொள்ள முடியும் மற்றவர்களுக்கும் உதவி செய்ய முடியும். (நீதிமொழிகள் 3:27) நாம் கடினமாக உழைத்தால் மற்றவர்களுக்கு கொடுப்பதில் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்.
உங்களால் செய்ய முடிந்ததைவிட அதிகத்தை செய்ய முயற்சி எடுங்கள்
“அதிகாரத்தில் இருக்கிற ஒருவர் ஏதோவொரு வேலைக்காக ஒரு மைல் தூரம் வரச் சொல்லி உங்களைக் கட்டாயப்படுத்தினால், அவருடன் இரண்டு மைல் தூரம் போங்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 5:41) இந்த வசனத்தில் இருக்கும் நியமத்தை உங்கள் வேலையில் எப்படிக் கடைப்பிடிக்கலாம்? ஏதோ முடிந்ததைச் செய்வதற்கு பதிலாக இன்னும் அதிகமாக செய்ய வாய்ப்பு இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு நீங்களே சில குறிக்கோள்களை வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு முன்பு நீங்கள் செய்த வேலையை இன்னும் சிறப்பாக இன்னும் வேகமாக செய்ய முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் செய்யும் சின்ன விஷயங்களைக்கூட கவனமாக செய்யுங்கள்.
நீங்கள் அதிகத்தை செய்ய முயற்சி எடுக்கும்போது அந்த வேலையை இன்னும் சந்தோஷமாக செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஏனென்றால், நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. உங்களை யாரும் கட்டாயப்படுத்தியதால் நீங்கள் அதிகத்தை செய்யவில்லை நீங்களாகவே விருப்பப்பட்ட அதைச் செய்கிறீர்கள். (பிலேமோன் 14) நீதிமொழிகள் 12:24 சொல்வதைக் கவனியுங்கள்: “கடினமாக உழைக்கும் கைகள் ஆட்சி செய்யும். ஆனால், சோம்பலான கைகள் அடிமை வேலைதான் செய்யும்.” நம்மில் சிலர் அடிமையாக வேலை செய்ய வேண்டியிருக்கலாம். ஏதோ கடமைக்காக வேலை செய்யும் ஒருவர் எப்போதுமே மற்றவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார். ஆனால், அதிகத்தை செய்கிறவர் தன்னுடைய சொந்த விருப்பத்தினால் வேலை செய்கிறார் கட்டாயத்தினால் அல்ல. அவர் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை.
வேலையே கதி என்று இருக்காதீர்கள்
கடினமாக உழைப்பது நல்லதுதான். ஆனால், வேலைதான் நம் உலகம் என்று இருக்கக்கூடாது. கடினமாக உழைக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 13:4) அதற்கென்று வேலையே கதியாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. “ரொம்பவும் கஷ்டப்பட்டு வேலை செய்து காற்றைப் பிடிக்க ஓடுவதைவிட கொஞ்சம் ஓய்வெடுப்பது மேல்” என்று பிரசங்கி 4:6 சொல்கிறது. இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம். வேலையே கதியாக இருக்கும் ஒருவரால் அவருடைய கடின உழைப்பால் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது. ஏனென்றால் அவருடைய நேரத்தையும் சக்தியையும் அவருடைய வேலையே உறிஞ்சிவிடும். அதனால், அவருடைய உழைப்பு ‘காற்றைப் பிடிக்க ஓடுவது’ போல் இருக்கும்.
வேலையைப் பற்றிய சரியான கண்ணோட்டத்தை வளர்க்க பைபிள் நமக்கு உதவும். நம்முடைய வேலையைச் சந்தோஷமாக செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. அதே சமயத்தில், “மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும்” சொல்கிறது. (பிலிப்பியர் 1:10) என்ன முக்கியமான வேலைகளைச் செய்யலாம்? குடும்பத்தோடும் நண்பர்களோடும் நேரம் செலவிடலாம். முக்கியமாக பைபிளை படித்து, அதிலிருக்கும் விஷயங்களை யோசித்துப் பார்க்கலாம்.
w15-E 2/1 6 ¶3-5
நம்முடைய வேலையை எப்படி சந்தோஷமாக செய்வது
வேலையே கதி என்று இருக்காதீர்கள்
கடினமாக உழைப்பது நல்லதுதான். ஆனால், வேலைதான் நம் உலகம் என்று இருக்கக்கூடாது. கடினமாக உழைக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 13:4) அதற்கென்று வேலையே கதியாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. “ரொம்பவும் கஷ்டப்பட்டு வேலை செய்து காற்றைப் பிடிக்க ஓடுவதைவிட கொஞ்சம் ஓய்வெடுப்பது மேல்” என்று பிரசங்கி 4:6 சொல்கிறது. இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம். வேலையே கதியாக இருக்கும் ஒருவரால் அவருடைய கடின உழைப்பால் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது. ஏனென்றால் அவருடைய நேரத்தையும் சக்தியையும் அவருடைய வேலையே உறிஞ்சிவிடும். அதனால், அவருடைய உழைப்பு ‘காற்றைப் பிடிக்க ஓடுவது’ போல் இருக்கும்.
வேலையைப் பற்றிய சரியான கண்ணோட்டத்தை வளர்க்க பைபிள் நமக்கு உதவும். நம்முடைய வேலையை சந்தோஷமாக செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. அதே சமயத்தில், “மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும்” சொல்கிறது. (பிலிப்பியர் 1:10) என்ன முக்கியமான வேலைகளைச் செய்யலாம்? குடும்பத்தோடும் நண்பர்களோடும் நேரம் செலவிடலாம். முக்கியமாக பைபிளை படித்து, அதிலிருக்கும் விஷயங்களை யோசித்துப் பார்க்கலாம்.
நவம்பர் 21-27
பைபிளில் இருக்கும் புதையல்கள் | பிரசங்கி 7-12
“உன்னுடைய மகத்தான படைப்பாளரை இளமைப் பருவத்திலேயே நினை”
w11-E 11/1 21 ¶1-6
கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
மனிதர்களின் முக்கியமான கடமை
“உண்மைக் கடவுளுக்குப் பயந்து நட.” கடவுளுக்கு பயந்து நடக்க வேண்டும் என்பது ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், கடவுள் பயத்தோடு இருப்பது ரொம்ப நல்லது. இது கொடூரமான ஒரு எஜமானுக்கு அடிமை பயப்படும் பயம் கிடையாது, ஒரு அன்பான அப்பாமீது பிள்ளை கொண்டிருக்கும் பயம். கடவுள்மீது நமக்கு அன்பு இருக்கிறது, கடவுளுக்கும் நம்மீது அன்பு இருக்கிறது. அதனால்தான், அவருக்கு பயந்து அவருடைய விருப்பத்தின்படி நடக்க நாம் விரும்புகிறோம். கடவுள் பயம் என்பது நம் மனதில் இருக்கும் ஒரு உணர்வு மட்டும் கிடையாது, அதை நாம் செயலிலும் காட்டுகிறோம். எப்படி?
“அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடி.” கடவுள் பயம் இருந்தால் நாம் கடவுளுக்கு கீழ்ப்படிந்து நடக்க தூண்டப்படுவோம். ஒரு பொருளை தயாரித்தவருக்குதான் அதை எப்படிச் சரியாக பயன்படுத்துவது என்று தெரியும். அதேபோல் நம்மை படைத்த யெகோவாவுக்குதான் நாம் சிறப்பாக வாழ என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். அதோடு, யெகோவா நமக்கு எப்போதும் நல்லதைதான் செய்வார். நாம் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவர் கொடுத்திருக்கும் சட்டங்களும் நம் நல்லதுக்குதான். (ஏசாயா 48:17) அதனால், நாம் அவருக்கு கீழ்ப்படிய வேண்டும். அப்போஸ்தலன் யோவான் இப்படி எழுதினார்: “நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுதான் அவர்மீது அன்பு காட்டுவதாகும். அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல.” (1 யோவான் 5:3) கடவுளுக்கு கீழ்ப்படிவதன் மூலம் நமக்கு அவர்மீது அன்பு இருக்கிறது என்று காட்டுகிறோம். கடவுள் நம்முடைய நல்லதுக்காக சட்டங்களைக் கொடுத்து நம்மீது அன்பு இருப்பதைக் காட்டியிருக்கிறார்.
“இதைவிட முக்கியமான கடமை மனுஷனுக்கு வேறு இல்லை.” நாம் கடவுளுக்கு பயந்து அவருக்கு கீழ்ப்படிவதற்கான முக்கிய காரணத்தை இந்த வார்த்தைகள் காட்டுகிறது. யெகோவா நம் படைப்பாளர், நம் உயிர் அவருக்கே சொந்தம். (1 யோவான் 5:3) அதனால், அவருக்கு கீழ்ப்படிய நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அவர் விரும்பும் விதத்தில் வாழ்வதன் மூலம் நம் கடமையை நிறைவேற்றுகிறோம்.