பைபிளில் இருக்கும் புதையல்கள் | எசேக்கியேல் 46-48
திரும்பிவரும் இஸ்ரவேலர்களுக்குக் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்கள்
எசேக்கியேல் பார்த்த தரிசனம், சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரவேலர்களுக்கு நம்பிக்கை தந்தது; அதோடு, அவர்கள் தாய்நாட்டுக்குத் திரும்புவார்கள் என்று முன்கூட்டியே சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களை உறுதிப்படுத்தியது. யெகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரை, உண்மை வணக்கம் உயர்ந்த இடத்தில் இருக்கும்.
ஒழுங்கமைப்பும் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் இருக்கும் என்ற வாக்குறுதியை அந்தத் தரிசனம் தந்தது
செழிப்பான, வளமான தேசம்
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு சொத்து
தேசம் மக்களுக்குப் பங்குபோட்டுக் கொடுக்கப்படுவதற்கு முன்பு, ஒரு விசேஷ நிலப்பகுதி ‘யெகோவாவுக்குக் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்டது’
என் வாழ்க்கையில் யெகோவாவின் வணக்கத்துக்கு முதலிடம் கொடுக்கிறேன் என்பதை நான் எப்படிக் காட்டலாம்? (w06 4/15 பக். 27-28 பாரா. 13-14)