உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 பிப்ரவரி பக். 5
  • சிலரைக்கொண்டு பலருக்கு உணவளித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சிலரைக்கொண்டு பலருக்கு உணவளித்தல்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இதே தகவல்
  • சிலரைக்கொண்டு பலருக்கு உணவளித்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கிறார்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • “உங்களை வழிநடத்துகிறவர்களை நினைத்துப் பாருங்கள்”
    யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 பிப்ரவரி பக். 5
இயேசுவின் சீஷர்கள் ஒரு பெரிய கூட்டத்துக்கு உணவளிக்கிறார்கள்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | மத்தேயு 14-15

சிலரைக்கொண்டு பலருக்கு உணவளித்தல்

கி.பி. 32 பஸ்காவுக்குக் கொஞ்சம் முன்பு, இயேசு ஒரு அற்புதத்தைச் செய்தார். நான்கு சுவிசேஷ எழுத்தாளர்களுமே பதிவு செய்த ஒரே அற்புதம் இதுதான்.

இயேசு அப்போது பயன்படுத்திய அதே முறையைத்தான் இன்றுவரை பயன்படுத்திவருகிறார்.

14:16-21

  • சீஷர்களிடம் ஐந்து ரொட்டிகளும் இரண்டு மீன்களும் மட்டும்தான் இருந்தன; ஆனாலும், ஒரு பெரிய கூட்டத்துக்கு உணவளிக்கும்படி இயேசு அவர்களிடம் சொன்னார்

  • இயேசு அந்த ரொட்டிகளையும் மீன்களையும் எடுத்து, ஜெபம் செய்துவிட்டு, அவற்றைப் பிட்டு, சீஷர்களிடம் கொடுத்தார். அவர்கள் அதை அந்தக் கூட்டத்தாருக்குக் கொடுக்க ஆரம்பித்தார்கள்

  • அங்கிருந்த எல்லாருமே திருப்தியாகச் சாப்பிடும் அளவுக்கு நிறைய உணவு இருந்தது. இது ஒரு பெரிய அற்புதம்! சிலரை மட்டும், அதாவது தன் சீஷர்களை மட்டும், பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு இயேசு உணவளித்தார்

    சீஷர்கள் மூலமாக இயேசு ரொட்டியைக் கொடுக்கிறார்; காவற்கோபுர பத்திரிகை
  • கடைசி நாட்களில், “ஏற்ற வேளையில்” ஆன்மீக உணவு கொடுக்க ஒரு தொகுதியினரை நியமிக்கப்போவதாக இயேசு முன்கூட்டியே சொன்னார்.—மத் 24:45

  • 1919-ல், தன்னுடைய “வீட்டாருக்கு” உணவளிப்பதற்காக ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ அவர் நியமித்தார். இவர்கள், பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்களின் ஒரு சிறிய தொகுதியினர்

  • பரலோக நம்பிக்கையுள்ள இந்தச் சிறிய தொகுதியினரின் மூலம், முதல் நூற்றாண்டில் பயன்படுத்திய அதே முறையில் இன்று இயேசு உணவளித்துவருகிறார்

ஆன்மீக உணவளிப்பதற்காக இயேசு யாரைப் பயன்படுத்துகிறார் என்று புரிந்து வைத்திருப்பதையும், இந்த ஏற்பாட்டை மதிப்பதையும் நான் எப்படிக் காட்டலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்