பைபிளில் இருக்கும் புதையல்கள் | மத்தேயு 20-21
“உங்களில் உயர்ந்தவனாக இருக்க விரும்புகிறவன் உங்களுக்குச் சேவை செய்கிறவனாக இருக்க வேண்டும்”
சந்தையில் இருப்பவர்கள், தங்களைக் கவனிக்க வேண்டும்... வணக்கம் சொல்ல வேண்டும்... என்று பெருமைபிடித்த வேத அறிஞர்களும் பரிசேயர்களும் ஆசைப்பட்டார்கள்
பெருமைபிடித்த வேத அறிஞர்களும் பரிசேயர்களும் மற்றவர்களுடைய மனதைக் கவர நினைத்தார்கள். தங்களுக்குப் பேரும் புகழும் கிடைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்கள். (மத் 23:5-7) ஆனால், இயேசு அவர்களைப் போல் இருக்கவில்லை. ‘மனிதகுமாரன் மற்றவர்களுடைய சேவையைப் பெறுவதற்கு வராமல், மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கு வந்தார்.’ (மத் 20:28) யெகோவாவின் சேவையில், நமக்குப் பாராட்டைத் தேடித்தரும் வேலைகளை மட்டுமே செய்ய ஆசைப்படுகிறோமா? நாம் கிறிஸ்துவைப் போல மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும். அப்படிப்பட்ட சேவையைப் பெரும்பாலும் மற்றவர்கள் கவனிக்க மாட்டார்கள்; ஆனால், யெகோவா கவனிப்பார்! அப்போது, அவருடைய பார்வையில் உயர்ந்தவர்களாக இருப்போம். (மத் 6:1-4) மனத்தாழ்மையான ஒருவர் . . .
ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்யும் வேலையையும் பராமரிக்கும் வேலையையும் செய்வார்
வயதானவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவ முன்வருவார்
கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக நன்கொடைகள் தருவார்