பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 25-26
ரோம அரசனிடம் பவுல் மேல்முறையீடு செய்கிறார்; பிறகு, ஏரோது அகிரிப்பாவுக்குச் சாட்சி கொடுக்கிறார்
‘ஆளுநர்களுக்கும் ராஜாக்களுக்கும் முன்னால் நிறுத்தப்படும்போது’ எப்படிப் பேசுவது என்றோ என்ன பேசுவது என்றோ கவலைப்பட வேண்டியதில்லை. இருந்தாலும், நம்முடைய ‘நம்பிக்கையைப் பற்றிக் கேள்வி கேட்கிறவர்களுக்குப் பதில் சொல்ல எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.’ (மத் 10:18-20; 1பே 3:15) ‘சட்டத்தின் பெயரில் பிரச்சினை உண்டாக்க’ எதிரிகள் முயற்சி செய்யும்போது நாம் எப்படி பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்?—சங் 94:20.
நல்ல செய்தியை அறிவிக்க சட்டப்பூர்வ உரிமைகளை நன்றாகப் பயன்படுத்துகிறோம்.—அப் 25:11
அதிகாரிகளிடம் மரியாதையோடு பேசுகிறோம்.—அப் 26:2, 3
பொருத்தமாக இருந்தால், நமக்கும் மற்றவர்களுக்கும் நல்ல செய்தி எப்படிப் பிரயோஜனமாக இருக்கிறது என்பதை விளக்குகிறோம்.—அப் 26:11-20