கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
கியுபெக்கில் நம்முடைய வேலை சட்டப்பூர்வமாக்கப்படுதல்
விசாரணையின்போது ரோம அரசனிடம் பவுல் மேல்முறையீடு செய்தார். தன்னுடைய ரோம குடியுரிமையைப் பயன்படுத்தியதன் மூலம் நமக்கு ஒரு முன்மாதிரி வைத்திருக்கிறார். கியுபெக்கில் இருக்கிற சகோதரர்கள், நல்ல செய்தியை அறிவிப்பதற்குச் சட்டப்பூர்வ உரிமைகளை எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பதை கியுபெக்கில் நம்முடைய வேலை சட்டப்பூர்வமாக்கப்படுதல் என்ற வீடியோவைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
கியுபெக்கில் இருக்கிற சகோதரர்கள் என்ன சவால்களைச் சந்தித்தார்கள்?
எந்த விசேஷ துண்டுப்பிரதியை விநியோகித்தார்கள், அதன் பலன் என்ன?
ஏமி பூஷே என்ற சகோதரருக்கு என்ன நடந்தது?
அவருடைய வழக்கை விசாரித்த கனடா நாட்டின் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு கொடுத்தது?
சகோதரர்கள் பயன்படுத்திய ஓர் அரிய சட்டப்பூர்வ வாய்ப்பு என்ன, அதனால் என்ன பலன் கிடைத்தது?
பாதிரிமார்களின் தூண்டுதலால், கிறிஸ்தவ கூட்டம் நடக்காதபடி போலீஸார் இடைஞ்சல் செய்தபோது என்ன ஆனது?