பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 கொரிந்தியர் 10-13
யெகோவா நம்பகமானவர்
யெகோவா நினைத்தால் நம்முடைய சோதனைகளை முடிவுக்குக் கொண்டுவர முடியும். ஆனால், பெரும்பாலான சமயங்களில், சோதனையைச் சகித்துக்கொள்வதற்குத் தேவையான உதவியைச் செய்வதன் மூலம் சோதனையிலிருந்து “விடுபடுவதற்கு” அவர் வழி செய்கிறார்.
நாம் தெளிவாக யோசிப்பதற்கு யெகோவா உதவுகிறார், நம்மை உற்சாகப்படுத்துகிறார், ஆறுதல்படுத்துகிறார். அதற்காக, தன்னுடைய வார்த்தையையும் சக்தியையும் பயன்படுத்துகிறார். அதோடு, ஆன்மீக உணவையும் கொடுக்கிறார்.—மத் 24:45; யோவா 14:16, அடிக்குறிப்பு; ரோ 15:4
தன்னுடைய சக்தியின் மூலம் அவர் நம்மை வழிநடத்தலாம். பைபிள் சம்பவங்கள் மற்றும் நியமங்களை ஞாபகத்துக்குக் கொண்டுவரவும், ஞானமான முடிவுகளை எடுக்கவும் இது உதவும்.—யோவா 14:26
நமக்காகத் தேவதூதர்களை அவரால் பயன்படுத்த முடியும்.—எபி 1:14
மற்ற சகோதர சகோதரிகள் மூலமும் அவரால் உதவ முடியும்.—கொலோ 4:11