பைபிளில் இருக்கும் புதையல்கள் | கொலோசெயர் 1-4
பழையதைக் களைந்துபோட்டு, புதியதை அணிந்துகொள்ளுங்கள்
நீங்கள் யெகோவாவின் சாட்சியாக ஆன புதிதில் உங்கள் சுபாவத்தில் பெரிய பெரிய மாற்றங்களைச் செய்தீர்களா? அப்படியென்றால், நீங்கள் செய்த மாற்றங்களைப் பார்த்து யெகோவா சந்தோஷப்பட்டிருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. (எசே 33:11) ஆனாலும், பழைய சுபாவம் மறுபடியும் தலைதூக்காமல் இருக்கவும், புதிய சுபாவத்தைத் தொடர்ந்து வெளிக்காட்டவும் நீங்கள் முயற்சி செய்துகொண்டே இருப்பது அவசியம். நீங்கள் எந்தெந்த அம்சங்களில் முன்னேற வேண்டுமென்று தெரிந்துகொள்ள, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
என் மனதைக் காயப்படுத்தியவர்மேல் நான் வன்மம் வைத்திருக்கிறேனா?
அவசரத்தில் இருக்கும்போது அல்லது களைப்பாக இருக்கும்போதுகூட நான் பொறுமையைக் காட்டுகிறேனா?
என் மனதில் ஒழுக்கங்கெட்ட யோசனை வந்தால், அதை உடனடியாக விரட்டியடிக்கிறேனா?
வேறொரு இனத்தை அல்லது நாட்டைச் சேர்ந்தவர்களை நான் வெறுக்கிறேனா?
சமீபத்தில் நான் யாருடைய மனதையாவது புண்படுத்தும் விதத்தில் பேசிவிட்டேனா அல்லது யாரிடமாவது கோபமாக நடந்துகொண்டேனா?