ஜூலை 8-14
1 தெசலோனிக்கேயர் 1-5
பாட்டு 121; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“எப்போதும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள், ஒருவரை ஒருவர் பலப்படுத்துங்கள்”: (10 நிமி.)
[1 தெசலோனிக்கேயர் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
1தெ 5:11-13—உங்களை வழிநடத்துகிறவர்களை ‘மிக உயர்வாகக் கருதுங்கள்’ (w11 6/15 பக். 26 பாரா 12; பக். 28 பாரா 19)
1தெ 5:14—மனச்சோர்வால் வாடுகிறவர்களிடம் ஆறுதலாகப் பேசுங்கள், பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆதரவு கொடுங்கள் (w17.10 பக். 10 பாரா 13; w15 2/15 பக். 9 பாரா 16)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
1தெ 4:3-6—பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர் எப்படி ‘தன்னுடைய சகோதரனுக்குக் கெடுதல் செய்கிறார்’? (it-1-E பக். 863-864)
1தெ 4:15-17—யார் ‘வானத்தில் நம் எஜமானைச் சந்திப்பதற்காக மேகங்களில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்,’ இது எப்படி நடக்கும்? (w15 7/15 பக். 18-19 பாரா. 14-15)
1 தெசலோனிக்கேயர் 1 முதல் 5 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) 1தெ 3:1-13 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு கலந்துபேசுங்கள்.
முதல் சந்திப்பு: (2 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 1)
முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 3)
முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 4)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
மற்றவர்களை உற்சாகப்படுத்தும் பயனியர்கள்: (9 நிமி.) சபையைப் பலப்படுத்தும் பயனியர்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: சபையில் இருப்பவர்களை பயனியர்கள் எப்படி உற்சாகப்படுத்தலாம்? சபையில் இருக்கும் பயனியர்கள் உங்களை எப்படி உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள்?
நம்மை உற்சாகப்படுத்தும் நல்ல முன்மாதிரிகள்: (6 நிமி.) “சகிப்புத்தன்மையோடு ஓடுவோமாக”—நல்ல முன்மாதிரிகளைப் பின்பற்றுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: அந்தச் சகோதரி என்ன சவாலைச் சந்தித்தார்? உற்சாகம் பெறுவதற்கு அவர் என்ன செய்தார்?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 21 பாரா. 15-20, பெட்டிகள் “சீக்கிரத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்கள்”, “கடவுளுடைய அரசாங்கம் உங்களுக்கு எந்தளவு நிஜமானதாக இருக்கிறது?”
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 132; ஜெபம்