கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
உங்கள் நம்பிக்கையைப் பற்றி உங்களால் விளக்க முடியுமா?
‘கடவுள்தான் எல்லாத்தயும் படைச்சாருனு ஏன் நம்புறீங்க?’ என்று யாராவது கேட்டால் என்ன சொல்வீர்கள்? கொஞ்சம்கூடத் தயங்காமல் பதில் சொல்ல, நீங்கள் இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும். முதலில், கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்பதை உங்களுக்கு நீங்களே நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். (ரோ 12:1, 2, அடிக்குறிப்பு) அடுத்ததாக, உங்கள் நம்பிக்கையைப் பற்றி மற்றவர்களிடம் எப்படி விளக்கலாம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.—நீதி 15:28.
கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று மற்றவர்கள் ஏன் நம்புகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் தன்னுடைய கடவுள் நம்பிக்கை பற்றி சொல்கிறார் என்ற வீடியோவையும், விலங்குகளை ஆராய்ச்சி செய்பவர் தன்னுடைய கடவுள் நம்பிக்கை பற்றி சொல்கிறார் என்ற வீடியோவையும் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
ஐரின் ஹாஃப் லாரான்சோ என்பவர் ஏன் பரிணாமத்தை நம்புவதற்குப் பதிலாகப் படைப்பை நம்புகிறார்?
யரோஸ்லாவ் டோவனிச் என்பவர் ஏன் பரிணாமத்தை நம்புவதற்குப் பதிலாகப் படைப்பை நம்புகிறார்?
நீங்கள் ஏன் படைப்பை நம்புகிறீர்கள் என்று எப்படி ஒருவருக்கு விளக்குவீர்கள்?
கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்பதை உங்களுக்கு நீங்களே நிச்சயப்படுத்திக்கொள்ளவும் மற்றவர்களுக்கு நிரூபித்துக் காட்டவும் உங்கள் மொழியில் என்னென்ன பிரசுரங்களை யெகோவாவின் அமைப்பு தந்திருக்கிறது?