உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp22 எண் 1 பக். 12-13
  • 4 | கடவுளின் உதவியோடு வெறுப்பை வெல்லுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 4 | கடவுளின் உதவியோடு வெறுப்பை வெல்லுங்கள்
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2022
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் போதனை:
  • போதனையின் அர்த்தம்:
  • நீங்கள் இப்படிச் செய்யலாம்:
  • பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • வெறுப்பு சங்கிலியை உடைப்பது எப்படி?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2022
  • வெறுப்பை வெல்ல முடியும்!
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2022
  • உலகம் ஏன் வெறுப்பால் நிறைந்திருக்கிறது?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2022
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2022
wp22 எண் 1 பக். 12-13
ஒரு பெரிய பைபிள் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது; அதிலிருந்து வெளிச்சம் வருகிறது. அதை நோக்கி மக்கள் நடந்துவருகிறார்கள். முன்பு அவர்களுக்குள் இருந்த வெறுப்பு அவர்களுடைய நிழலில் தெரிகிறது.

வெறுப்பு சங்கிலியை உடைப்பது எப்படி?

4 | கடவுளின் உதவியோடு வெறுப்பை வெல்லுங்கள்

பைபிள் போதனை:

“கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்கள் அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, கருணை, நல்மனம், விசுவாசம், சாந்தம், சுயக்கட்டுப்பாடு ஆகியவையே.”—கலாத்தியர் 5:22, 23.

போதனையின் அர்த்தம்:

கடவுளின் உதவி இருந்தால்தான் வெறுப்பின் சங்கிலியை உடைக்க முடியும். சொந்த சக்தியால் வளர்த்துக்கொள்ள முடியாத குணங்களை வளர்த்துக்கொள்ள கடவுளுடைய சக்தி உதவும். வெறுப்பை வெல்ல தனியாகப் போராடாதீர்கள். கடவுளின் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போஸ்தலன் பவுலும் அப்படிச் செய்தார். அவர் சொல்கிறார்: “என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது.” (பிலிப்பியர் 4:13) அவரைப் போலவே நாமும் செய்தால், “யெகோவாவிடமிருந்தே எனக்கு உதவி வரும்” என்று சொல்லலாம்.—சங்கீதம் 121:2.

நீங்கள் இப்படிச் செய்யலாம்:

“சண்டக்காரனா இருந்த என்னை யெகோவா சாதுவா மாத்தியிருக்காரு!”—வால்டோ

யெகோவாவிடம் அவருடைய சக்தியை தரச் சொல்லி மனதார வேண்டுங்கள். (லூக்கா 11:13) நல்ல குணங்களைக் காட்ட உதவ சொல்லி அவரிடம் கேளுங்கள். வெறுப்பை வெல்ல உதவி செய்யும் அன்பு, சமாதானம், பொறுமை, சுயக்கட்டுப்பாடு போன்ற குணங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைப் படியுங்கள். இந்தக் குணங்களைக் காட்டுவதற்கான வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருங்கள். இதுபோன்ற குணங்களைக் காட்ட விரும்புகிற ஆட்களோடு பழகுங்கள். ‘அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் [அவர்கள் உங்களை] உற்சாகப்படுத்துவர்கள்.’—எபிரெயர் 10:24.

எப்படி மாறினார்...—வால்டோ

வெறுப்பை வென்றார்

வால்டோ.

வால்டோ ரொம்ப மோசமான சூழ்நிலையில் வளர்ந்தார். அதனால், அவருடைய மனதெல்லாம் வெறுப்பால் நிறைந்திருந்தது. அவர் சொல்கிறார்: “எனக்கும் போதை பொருள் கடத்தறவங்களுக்கும் அடிக்கடி சண்டை வரும். . . . ஒரு தடவ என்னோட எதிரி கும்பல்ல இருந்தவங்க என்னை போட்டுத்தள்றதுக்காக ஒரு அடியாள அனுப்புனாங்க. ஆனா, கத்தி குத்தோட அவன்கிட்ட இருந்து தப்பிச்சிட்டேன்.”

வால்டோவின் மனைவி யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். ஆனால், அது வால்டோவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. “எனக்கு யெகோவாவின் சாட்சிகள கண்டாலே பிடிக்காது! நிறைய தடவ அவங்கள கெட்ட கெட்ட வார்த்தையால திட்டிருக்கேன். ஆனா, எப்பவுமே அவங்க என்கிட்ட அமைதியா சமாதானமா நடந்துக்குவாங்க” என்கிறார் அவர்.

பிறகு, வால்டோவும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். அதைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்: “நான் கத்துக்கிட்ட விஷயங்கள்படி செய்றது கஷ்டமாதான் இருந்துச்சு. என்னோட கோபத்தையும் வெறியையும் கட்டுப்படுத்துறது நடக்காத காரியம்னு நினைச்சேன்.” ஆனால், பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட ஒரு விஷயம் தன்னையே மாற்றிக்கொள்ள வால்டோவுக்கு உதவியாக இருந்தது.

“எனக்கு பைபிள் படிப்பு நடத்துன சகோதரர் அலெஹான்ட்ரோ ஒருநாள் என்னை, கலாத்தியர் 5:22, 23-ஐ வாசிக்க சொன்னாரு. . . . ‘இந்த குணங்களயெல்லாம் உங்க சொந்த பலத்துனால இல்ல, கடவுளோட சக்தியோட உதவினாலதான் வளர்த்துக்க முடியும்’னு சொன்னாரு. இந்த உண்மைய புரிஞ்சுகிட்டது நான் யோசிக்குற விதத்தையே மாத்திடுச்சு!” என்று வால்டோ சொல்கிறார்.

கடவுளுடைய உதவியை எடுத்துக்கொண்டதால் வால்டோவினால் வெறுப்புச் சங்கிலியை உடைக்க முடிந்தது. “என்னோட சொந்தகாரங்களும் பழைய நண்பர்களும் என்னை பார்க்கும்போது ‘இவனா இப்படி மாறிட்டான்’னு யோசிக்கிறாங்க. சண்டக்காரனா இருந்த என்னை யெகோவா சாதுவா மாத்தியிருக்காரு!” என்கிறார் வால்டோ.

வால்டோவின் வாழ்க்கையைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள, காவற்கோபுரம், ஜனவரி 1, 2014, பக்கங்கள் 12-13-ஐப் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்