உலகத்தை கவனித்தல்
அணு ஆயுத அலர்ஜி
அணு ஆயுதங்களின் உற்பத்திப் பெருக்கம் “அணு ஆயுத அலர்ஜி” பெருகுவதற்கு வழிநடத்தியிருக்கிறது—அதாவது, அநேக தேசங்கள் அணு ஆயுதங்கள் தங்களுடைய எல்லையைக் கடந்து உள்ளே நுழைவதை மறுக்கிறவர்களாக, அல்லது அணு ஆயுத குறைப்புக்கு அல்லது கட்டுப்பாட்டிற்கான மறுமுயற்சிகளை ஆதரிப்பவர்களாக அணு ஆயுதங்களுக்கு எதிராக பிரதிபலித்து வருகின்றனர். “இந்தச் சொற்றடர் ஒரு கருத்தில் மிகப் பொருத்தமாக இருக்கிறது,” என்று புலட்டின் ஆப் தி அட்டாமிக் சயன்டிஸ்ட் கூறுகிறது. அலர்ஜியை ஏற்படுத்தும் பொருளுக்கு—அணு ஆயுதக் கருவிகளுக்கும் அது சம்பந்தப்பட்ட தொழில் நுட்பத்துக்கும்—காரியங்கள் எவ்வளவுக்கெவ்வளவு வெளிப்படுத்தப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு எதிர் பாதிப்புக்கு உட்படுத்தப்படுகிறது.” ஏற்கனவே ஐக்கிய மாகாணங்களுக்காக அணு ஆயுதங்களை வைத்துக்கொண்டிருந்த பத்து நாடுகள் இனிமேலும் வைப்பதற்கு மறுத்துவிட்டிருக்கின்றன. சோவியத் ரஷ்யாவின் நட்புறவு நாடுகளில் சிலவை அவ்விதமாகவே சோவியத்தின் அணு ஆயுதங்களைத் தாங்கள் வைத்திருப்பதையோ அல்லது அவற்றை இனிமேலும் ஏற்றுக்கொள்வதையோ மறுத்துவிட்டிருக்கின்றனர். அறிக்கை சொல்கிறது: “ஆயுதங்களின் உற்பத்தியைப் பெருக்குவதன் மீதுள்ள தடையும் ‘அணு ஆயுதங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகள்’ என்று சில பிராந்தியங்களை முத்திரையிட்டிருப்பதும் அணு ஆயுத முறையை தாக்குதலுக்குள்ளாக்கியிருக்கிறது.”
நிலைத்திருக்கும் விவாகங்கள்
அநேக விவாகங்களை நிலைக்கச் செய்திருப்பது என்ன? தன்னுடைய துணைவரை மிகச் சிறந்த நண்பராகக் கருதி அவரை அல்லது அவளை ஒரு ஆளாக நேசிப்பதாகும். 15 ஆண்டுகளுக்கும் அதிகமான ஆண்டுகள் விவாக வாழ்க்கையிலிருந்து வந்த 300-க்கும் அதிகமான மகிழ்ச்சியுள்ள மணத் தம்பதிகள் கொடுத்த பொதுவான காரணம் இது. சைக்காலஜி டுடே என்ற பத்திரிகையின்படி, “நிலைத்திருக்கும் உறவுக்கு அடிப்படையாக இருக்கும் காரியங்களின் பேரில் [இந்தத் தம்பதிகள்] நேர்த்தியான மதிப்பைக் காண்பித்து ஒத்த கருத்துடையவர்களாயிருந்து வந்திருக்கின்றனர்.’ அவர்கள் தங்கள் கோபத்தைத் தாராளமாக பகிர்ந்துகொள்வதற்கு மாறாக, பொறுமையையும் கட்டுப்பாட்டையும் காண்பித்து வந்திருப்பது சிறந்த அம்சமாகும். ஒவ்வொரு துணைவரும் தான் பெற்றதற்கும் அதிகமாகக் கொடுக்க ஆயத்தமாயிருந்தனர். வித்தியாசமான அக்கறைகளைக் காத்துவருவதற்கு மாறாக, அதிகமான நேரத்தை ஒன்றாக இருப்பதற்கும், ஒன்றாக சேர்ந்து நிறைய காரியங்களை செய்வதற்கும் செலவழித்தனர்.
பாடும் இயந்திரங்கள்
குளிர் பானங்களின் காலி டின்களை, கண்ட இடங்களிலும் போட்டுவிடுவதைத் தவிர்க்க ஜப்பானில் ஒரு சுற்றலா பயணியர் நகர் ஒரு புது முறையைக் கையாள ஆரம்பித்தது. முதலாவதாக, டின்களில் விற்கப்படும் பானங்களை விற்பனை செய்யும் கடைகள் அந்த நகராட்சியிலிருந்து விசேஷமான மூடிகளை வாங்குகின்றனர். இந்த மூடிகளால் அந்த டின்கள் மூடப்பட்டு 40 பைசா கூடுதலாக விற்கப்படுகிறது. நகரத்தின் முக்கியமான பல இடங்களில் காலி டின்களை சேர்க்கும் பாடும் இயந்திரங்கள் பொருத்தப்படுகிறது. அந்த விசேஷ மூடிகள் பொருத்தப்பட்ட காலி டின்களை அந்த இயந்திரத்தில் போட்டால் “காட்டு ஒலிகள்” பதிவு செய்யப்பட்ட ஒரு பாட்டு ஒலிப்பதோடு 40 பைசா திருப்பி கொடுக்கப்படுகிறது. காலி டின்கள் இவ்விதமாக சேகரிக்கப்பட்டு அந்த டின்களை உற்பத்தி செய்யும் நிலையங்களிடம் 12 பைசாக்கு விற்கப்படுகிறது. பிறகு இவர்கள் கூடுதலான மூடிகளையும் வாங்கிகொள்கின்றனர். இப்படியாக இந்தச் சுற்றுமுறை தொடருகிறது.
குறைந்த மாரடைப்புகள்
“கடந்த 20 ஆண்டுகளில் தேசத்தில் மரணத்திற்கு முக்கியமான காரணமாயிருந்த இருதய நோயால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை குறைந்து வந்திருக்கிறது,” என்று கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்ளி வெல்னஸ் கடிதம் அறிக்கை செய்கிறது. “பல பத்தாண்டுகளாக உயர்ந்து கொண்டிருந்த இந்த எண்ணிக்கை 1963-ல் சரிய ஆரம்பித்தது, மற்றும் 1982-க்குள் 37%-க்குக் குறைந்துவிட்டது. இதற்குரிய காரணத்தை அறிய பாஸ்டனைச் சேர்ந்த இரண்டு ஆய்வாளர்கள், இருதய நோய்க்கு அளிக்கப்பட்டு வரும் ஐந்து வித்தியாசமான சிகிச்சை முறைகளையும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் உணவு முறையையும் புகைபிடித்தல் குறைக்கப்பட்டிருப்பதையும் அவற்றின் பலன்களையும் ஆய்வு செய்தனர். என்ன கண்டுபிடிக்கப்பட்டது? கொடுக்கப்பட்ட அந்த ஐந்து சிகிச்கை முறைகளும் மரண எண்ணிக்கையை 40 சதவிகிதம் குறைத்திருக்கிறது. ஆனால் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் உணவு முறை 30 சதவிகித மரணத்தைக் குறைத்திருக்கிறது. புகைபிடித்தலைக் குறைத்தது இன்னொரு 24 சதவிகித மரணம் குறைவதற்குக் காரணமாயிருந்தது. அந்த அறிக்கை பின்வருமாறு முடித்தது: “இருதய நோயாலான மரண எண்ணிக்கையை வாழ்க்கை முறையில் சாதாரண மாற்றங்கள் செய்வதன் மூலம் அமையும் தற்காப்பு முறைதான் உயர்ந்த செலவை உட்படுத்தும் சிகிச்சை முறைகளைக் காட்டிலும் வெகுவாக குறைத்திருக்கிறது.”
நெதர்லாந்தின் மதுபானப் பிரச்னை
நெதர்லாந்து பால் பருகுவதற்கும் பாலாடை அருந்துவதற்கும் சின்னமாக விளங்கி வந்தது. இந்த நிலை இன்று மாறிவருகிறது. மதுபானம் அருந்துதல் 1960-ல் மும்மடங்காக அதிகரித்துவிட்டது. இந்த அதிகரிப்புக்குக் காரணம் என்ன? “மதுபானம் வெற்றிகரமான இன்ப வாழ்க்கைக்குக் காரணமாயிருக்கிறது என்ற தவறான, மோசம்போக்குகிற விளம்பரங்கள்“ இந்நிலைக்கு ஒரு காரணம் என்று அரசு செய்த ஒரு ஆய்வு காண்பிக்கிறது. மதுபானம் மிதமிஞ்சிய விதத்தில் பயன்படுத்தப்படுவது கூடுதலான வாகன விபத்துக்களையும், வேலைக்கு போகாதிருப்பவர்களின் எண்ணிக்கை கூடுவதையும், கூடுதலான வன்முறைச் செயல்களையும், பிள்ளைகளையும் மனைவிமார்களையும் கொடூரமாக அடிப்பதையும் கலவரங்களையும் கூட்டியிருக்கிறது என்று மக்கள் நலம், ஆரோக்கியம் மற்றும் கலாச்சராப் பிரிவு சுட்டிக்காட்டுகிறது.
மிகச் சிறந்த மார்க்குகளைப் பெறுவது யார்?
“தங்களுடைய பாடங்களில் உயர்ந்த மார்க்குகளை அல்லது மதிப்பெண்களைப் பெற்றுவரும் மாணவர்களில் பெரும்பான்மையினர், தங்களுடைய பெற்றோரின் மிக நல்ல கவனிப்பு இருந்துவந்ததே அதற்கு காரணம் என்று தெரிவிக்கிறார்கள்,” என்று டெட்ராய்ட் ஃப்ரீ பிரஸ் அறிக்கை செய்கிறது. உயர்நிலைப்பள்ளியில் இரண்டாம் நிலை படித்துவந்த 30,000 மாணவர்களைப் பேட்டிக்கண்டு இந்த முடிவைத் தெரிவித்தது. அந்த மாணவர்கள் தங்களுடைய பெற்றோரிடம் தினந்தோறும் பேச்சுத்தொடர்பு கொண்டவர்கள் என்பதும், தாங்கள் பள்ளியில் எப்படி படிக்கிறார்கள் என்பதை மிக நெருங்க கவனித்து வந்தார்கள் என்பதும்” தெரியவந்தது. வீட்டில் எவ்வளவு புத்தகங்கள் இருந்தது என்பதும் ஒரு மாணவன் பள்ளியில் எவ்வளவு நன்றாகப் படிக்கிறான் என்பதைக் காண்பித்தது.
முதுகு வலிக்கு அந்திக்கால சிகிச்சை
முதுகு வலிக்கு கொடுக்கப்படும் சில பழமையான நாட்டு வைத்திய முறைகள் நவீன சிகிச்சை முறைகளைப் போன்றே நல்ல பலனுள்ளதாய் இருக்கிறது என்று லண்டன் கை மருத்துவமனையின் மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர். மருத்துவர்கள் 109 இடுப்பு வலி நோயாளிகளை மூன்று பிரிவுகளாக பிரித்தனர். முதல் பிரிவினருக்கு எலும்பு சிகிச்சை மருத்துவரால் கைத்திறன் சிகிச்சையளிக்கப்பட்டது. இரண்டாவது பிரிவினர் நவீன கால முறையாகிய மின் அலைகளால் வெப்பமூட்டப்படும் சிகிச்சையைப் பெற்றனர். மூன்றாவது பிரிவினர் மின் ஒலிகளைப் பிறப்பிக்கும் இயங்காத ஒரு வெப்பமூட்டும் இயந்திரம் கொண்டு சிகிச்சையளிக்கப்பட்டனர். ஆச்சரியத்துக்குரிய காரியம், முதுகு வலி குறைந்திருக்கிறது என்று அறிக்கையிட்ட மிக அதிகமான ஆட்கள்—67 சதவிகிதத்தினர்—மூன்றாவது வகை சிகிச்சை பெற்றவர்கள். மின் அலைகளால் வெப்பமூட்டும் சிகிச்சையைப் பெற்றவர்களில் 59 சதவிகிதத்தினரும் எலும்பு சிகிச்சை மருந்துவரால் கொடுக்கப்பட்ட சிகிச்சையைப் பெற்றவர்களில் 62 சதவிகிதத்தினரும் கண்ட நல்ல பலன்களோடு ஒப்பிடும்போது மூன்றாவதாக அளிக்கப்பட்ட சிகிச்சை முறையின் பலன் அதிகமாக இருந்தது. ஆக, தான் பெறும் சிகிச்சை முறையினிடமாக நோயாளியின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதிலேயே தான் பெறும் குணம் சார்ந்திருக்கிறது என்பது தெளிவாக இருக்கிறது.
உயிரின வாழ்க்கைச் சூழலின்மீது போர்கள் இழைந்திருக்கும் கேடுகள்
வியட்னாமில் முப்பது ஆண்டுகளாக நடந்துவந்திருக்கும் போர் மனித உயிர்களையும் சமூகத்தையும் பாதித்திருப்பதோடுகூட உயிரின வாழ்க்கைச் சூழலுக்குப் பயங்கர கேடு விளைவித்திருக்கிறது என்று இயற்கை மற்றும் இயற்கை வளம் காக்கும் சர்வதேச இயக்கம் [IUCN] செய்த ஆய்வு காண்பித்திருக்கிறது. அணுகுண்டு வீச்சு, மரங்களை வெட்டி வீழ்த்துதல் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துதல் ஆகியவை 2.6 கோடி கண அடி தச்சு வேலைக்குரிய மரங்களையும் 3,65,000 ஏக்கர் (1,48,000 ஹெக்டேர்) ரப்பர் மரங்களையும் இழக்கச் செய்திருக்கிறது. இத்துடன் போர்க் காலங்களில் 3.7 கோடி ஏக்கர் (1.5 கோடி ஹெக்டேர்) காடுகள் கவனிப்பின்றி சீரழிந்தன. 1943-ல் இந்தப் பிரதேசத்தில் 44 சதவிகித நிலப்பரப்பு காடுகளாக இருந்தன. இன்றோ அது 23 சதவிகிதத்திற்குக் குறைந்துவிட்டது. ஆம், “வேளாண்மைக்கும் தொழில் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தப்பட வேண்டிய பணம் யுத்த இயந்திரத்திற்கே பயன்படுத்தப்படுகிறது,” என்று இயற்கை வளம் காக்கும் சர்வதேச இயக்கத்தின் ஆய்வுக்குழு நிபுணர் டாக்டர் ஜான் மெக்கின்னோன் கூறுகிறார்.
கேடு விளைவிக்கும் உணர்ச்சிப் பாடல்கள்
“இழிவானது என்று சொல்லப்பட வேண்டிய பிரபல இராகங்களைக் குறித்தும் சுவையற்ற, பொருத்தமற்ற பாலுணர்வுகளைத் தூண்டிடும் பாடல்கள் காற்றலைகளால் தாங்கப்பட்டு நம்முடைய வீடுகளை வந்தடைகின்றது என்பதைக் குறித்தே நான் அதிக கவலைப்படுகிறேன்,” என்று நியூஸ்வீக் பத்திரிகையில் கேண்டி ஸ்ட்ரெளடு எழுதுகிறார். ஸ்ட்ரெளடு சில கீழ்த்தரமான நிர்வாணத்தைப் போற்றிடும் பாடல்களை உதாரணம் காட்டுகிறார். ஸ்ட்ரெளடு கூறுகிறார்: “நான் பேசின பெற்றோர்களில் பெரும்பான்மையினர், தங்களுடைய பிள்ளைகள் நடனமாடும்போதும், வீட்டுப் பாடங்களைப் படிக்கும்போதும், தூங்கும்போதும் எப்படிப்பட்ட இசைகளைக் கேட்கிறார்கள் என்பதை அறியாதவர்களாக அல்லது அறைகுறையாக அறிந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாயிருக்கிறது.”
வீட்டுக்குள்ளே நச்சுத்தன்மை
காற்றை நச்சுப்படுத்தும் 11 வஸ்துக்கள் இவற்றை வெளியிடும் தொழிற்சாலைகளை சுற்றி காணப்படுவதைவிட சராசரி வீடுகளுக்குள்ளேயே அதிகமாகியிருக்கிறது என்று ஐக்கிய மாகாணங்களின் சுற்றுப்புறச்சூழல் காக்கும் அமைப்பு அறிக்கை செய்கிறது. ரசாயண வஸ்துக்கள் —பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்படும் சுத்திகரிப்பு ஏதுக்கள், கட்டிட பொருட்கள், எரிபொருட்கள் அல்லது புகைபிடித்தலின் புகை—பென்ஸீன், கார்பன் டெட்ரக்ளோரைட், மற்றும் க்ளோரோஃபார்ம் ஆகியவற்றை உட்படுத்தின. இந்த ஆய்வின் முடிவு: “நச்சுத்தன்மை பொருந்திய இந்த ரசாயண வஸ்துக்களின் அளவு வீட்டிற்கு வெளியே இருப்பதைவிட வீட்டுக்குள்ளேயே உயர்ந்து காணப்படுகிறது”—சில சமயங்களில் 70 மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது. இந்த விளைவைக் கண்டு அரசாங்க அதிகாரிகள் வெளியே காணப்படும் நச்சுத்தன்மையைக் குறித்து கவலைப்பபடாதவர்களாகி விடக்கூடும் என்று சுற்றுப்புறச்சூழல் ஆய்வு நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.
ஓடும் துடிப்பு தணிகிறது
“ஓடும் துடிப்பு அல்லது ஓடுவதில் பங்குகொள்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டிருந்தக் காரியம் முற்றுபெற்றுவிட்டது,” என்று சொல்லுகிறார், அரிஸோனாவில் டக்சன் தேசிய ஓட்டப் பதிவுக் கழகத்தைச் சேர்ந்த ஜெனிபர் யங். மாரத்தான் நெடுந்தூர ஓட்டத்தில் பங்குபெறுபோரின் எண்ணிக்கை ஐந்தில் ஒன்றாகக் குறைந்துவிட்டது. இவர்கள் 20,000-ஆக குறைந்துவிட்டார்கள். “இவர்களில் அநேகர் குறுகிய தூரம் ஓடுவதைத் தெரிந்து கொள்கிறார்கள்,” என்று ஓட்டம் என்ற பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் ஹர்ஷ் கூறுகிறார். மற்றும் ஓட்டக்காரர்கள் வேறு வகை உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். யங் முடிவாகக் குறிப்பிடுவதாவது: “நல்ல ஆரோக்கியமான உடலைக் கொண்டிருப்பதற்கு நீங்கள் வாரத்திற்கு 50 முதல் 60 மைல்கள் ஓட வேண்டிய அவசியம் இல்லை என்று அநேகர் உணருகின்றனர்.”
காற்றை சுத்தப்படுத்துதல்
உடல் நலம் பதிவுகளைச் செய்யும் தேசிய நிறுவனம் தெரிவித்தபடி, 20 ஆண்டுகளுக்கு முன் 52 சதவிகித அமெரிக்க மக்கள் புகைபிடித்துக் கொண்டிருந்தனர், ஆனால் தற்போது அது சுமார் 35 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. புகைபிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 34 சதவிகித உச்சநிலையிலிருந்து 29 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. புகைபிடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. 1984-ல் 16,000 உயர்நிலைப்பள்ளி மாணவர்களை பேட்டிகண்டபோது, 18.7 சதவிகிதத்தினர்தானே புகைபிடிப்பவர்களாக இருந்தனர். ஏழு வருடங்களுக்கு முன்பு இது 28.8 சதவிகிதமாக இருந்தது. தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றொரு ஆய்வின் பலனைக் குறிப்பிட்டது: “பொதுவாக இன்றுள்ள புகைபிடிக்கும் சராசரி மனிதரை புகைபிடிக்காதவரோடு ஒப்பிடும்போது புகைபிடிப்போர் குறைந்த பணத்தையும் குறைந்த கல்வியையும் குறைந்த மதிப்புடைய வேலையையுமே கொண்டிருக்கும் சாத்தியம் அதிகமாக இருக்கிறது.”
தொலைப்பேசிமூலம் உலகத் தொடர்பு
தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள தொலைப்பேசிக்காக அறை நாள் நடந்து செல்வது கடுமையான வசதிக்குறைவாகத் தோன்றலாம், என்றபோதிலும் ஐக்கிய நாடுகளின் ஒரு உட்பிரிவாகிய சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் [ITU] மூன்றாம் உலக நாடுகளில் வாழம் சராசரி மனிதனுக்குக் கடந்த இருபது ஆண்டுகளில் அதைத்தான் சாதித்தளித்திருக்கிறது. இன்று அது ஒருவார பயணத்துக்கு ஒப்பாக இருக்கிறது. சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் துணைக்கோள்களைப் பயன்படுத்தும் முறையை ஆதரிக்கிறது. அக்கறைக்குரிய காரியம் என்னவெனில், உலகமுழுவதுமாக இன்று ஏறக்குறைய 60 கோடி தொலைப்பேசிகள் இருக்கின்றன, செயல்படுகின்றன, ஆனால் 75 சதவிகித தொலைப்பேசிகள் அதி முன்னேற்றமடைந்த நாடுகளில் ஒன்பது நாடுகளில் மட்டுமே இருக்கிறது. உலக மக்கள் தொகையில் முக்கால் பகுதி மக்கள், 100 பேருக்கு 10 தொலைப்பேசிகள் என்ற கணக்கில் தொலைப்பேசிகள் இருக்கும் நாடுகளில் வாழ்கின்றனர்.
பூச்சிகள் தடுப்பு—மலிவு
ஜிம்பாப்வேயில் ஒரு விஞ்ஞானக் குழுவில் ஜீத்சே என்ற கொடிய ஈ வகையைக் கட்டுப்படுத்த ஒரு மலிவான முறையைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அவற்றை கவர்ச்சிக்கும் ரசாயண வஸ்துக்களைக் கொண்ட திறந்த ஜாடிகள் மீது பயரத்ரின் என்ற பூச்சிக் கொல்லியையுடைய ஒரு கருப்பு நிற துணியை இரும்புச் சட்டங்களில் பொருத்தி பாதிக்கப்பட்ட இடங்களில் வைத்தனர். ஒவ்வொரு சதுர கிலோ மீட்டருக்கு (.4 சதுர மைல்) ஒன்று என்ற கணக்கில் இவை வைக்கப்பட்டது. “ஒரு சில வாரங்களுக்குள் இந்தக் கொடிய ஈக்கள் வகை, அதிகமாகக் காணப்பட்ட இடங்களில் 0.3 சதவிகிதமாக குறைந்துவிட்டது . . . கட்டுப்படுத்தப்பட்டிருந்த இடங்களில் 0.1 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது” என்று நியூ சயன்டிஸ்ட் அறிக்கை செய்கிறது. மற்றும் பர்மாவில் டிங்கூட என்ற விஷக் காய்ச்சல் பரவுவதற்குக் காரணமாயிருந்த கொசுக்களைக் கட்டுப்படுத்த அந்தக் கிராமவாசிகள் மலிவான ஒரு முறையைக் கையாண்டனர். அவர்கள் கொசுப் புழுக்களால் நிரம்பிய 400 தண்ணீர் தொட்டிகளில் ஒவ்வொரு ஜோடு தும்பி முட்டைப் புழுக்களை வைத்தனர். இரண்டு வாரங்களுக்குள் கொசுக்களின் முட்டைப் புழுக்களைக் காணோம். ஆறு வாரங்களுக்குப் பின் அந்தப் பிராந்தியத்திலே ஒரு கொசுவும் காணப்படவில்லை. (g85 9/22)