ஐ.நா.—சமாதானத்துக்கான கடவுளுடைய வழியா?
“இந்தக் கோளத்தில் நம்முடைய சொந்த விதியை அமைத்திடும் நமது திறமையில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு ஐக்கிய நாடுகள் எதிர்காலத்துக்கான மிகச்சிறந்த பாதையை வகுத்துக் கொடுக்கிறது என்பதை நான் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறேன்.”
இப்படியாக தன் நம்பிக்கையை சமாதானத்தின் சவால் (The Challenge of Peace) என்ற தனது புத்தகத்தில் முன்னாள் தலைமைக் காரியதரிசி கர்ட் வால்டீம் தெரியப்படுத்தியுள்ளார். ஐ.நா.-வின் குறைபாடுகளை ஒப்புக்கொண்டவராய் அவர் விவரித்ததாவது: “ஐக்கிய நாடுகள் அகிலாண்டத்தில் ஒரு நுண்ணுலகம். அதன் பலவீனங்கள் அடிப்படையாக முரண்பாடுகள் நிரம்பிய உலக சமுதாயத்தைச் சார்ந்தது.” அவர் தொடர்ந்து கூறுகிறார்: “[ஐ.நா.] தான் சேவிக்கும் உலகத்தின் முகம் பார்க்கும் கண்ணாடியாக இருக்கிறது. அந்த உலகம் அதிக வித்தியாசமான, புரிந்துகொள்ள முடியாத, இச்சிக்கும் மூர்க்கமான தேசங்களின் ஒரு கதம்பம்.” ஆனால் எல்லா குறிப்புறையாளர்களும் ஐ.நா.-வின் அவ்விதமாக சாதகமான நிலையில் வைத்து பார்ப்பதில்லை.
ஆபத்தான ஓர் இடம்—உலக அரசியலில் ஐக்கிய நாடுகள் ஓர் ஆயுதம் என்ற தங்களுடைய ஆங்கில புத்தகத்தில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபிக்கப்பட்ட ஆரம்ப நாள் முதல் அது செற்போருக்கான பொதுக்கூடமாக இருந்து வந்திருக்கிறது, மற்றும் சர்வதேச போர்த் தீயை கொழுந்து விட்டெரியும்படிச் செய்யும் பகையுணர்ச்சிகள் மற்றும் அரசியல் தந்திரங்களாகிய தீப்பொட்டியாக இருந்து வந்திருக்கிறது. அது செயல்படும் உலகத்தைப் பற்றியதென்ன? “முறையற்றது என்றாலும் எளியதொரு உண்மை என்னவெனில் உலக அரசியல் ஒரு காடு போல இருக்கிறது. தேசீய நடத்தை தன்னலத்திலும் தப்பிபிழைத்தலிலுமே ஊன்றியிருக்கிறது. பின் குறிப்பிடப்பட்ட கருத்து குடிகொண்டிருக்கும்போது, தேசிய-மாநில ஆட்சி மற்றும் செயல் முறைகளில் அந்தக் காட்டு விதிமுறை மட்டுமின்றி அதன் ஒழுக்க நெறிமுறையும் இடம்பெற்றுவிடுகிறது.” இதன் பலனாக, “சர்வதேச உறவுகளில் போர் ஒரு நிரந்தர அம்சமாகிவிட்டிருக்கிறது.”
ஐக்கிய நாடுகளின் சாசனம் (உரிமைப் பத்திரம்) 1945-ல் கையொப்பமிடப்பட்டபோது இருந்த உயர்ந்த நம்பிக்கைகளுக்கு என்னே ஒரு முரண்பாடு! அதன் முன்னுரை குறிப்பிட்டதாவது: “நமது வாழ்நாளில் மனிதவர்க்கத்துக்கு செல்லெண்ணா துயரத்தைக் கொண்டு வந்திருக்கும் போரின் வாதனைகளிலிருந்து எதிர்கால தலைமுறையைக் காத்திட ஐக்கிய நாடுகளின் மக்களாகிய நாங்கள் உறுதிப் பூண்டவர்களாய் . . . இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு எமது முயற்சிகளை ஒன்றுதிரட்ட தீர்மானித்துள்ளோம்.”
நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பு இந்த வார்த்தைகள் வெறுமையாக ஒலிக்கின்றன. ஒன்று திரட்டுவதற்கு அல்லது ஒன்று சேர்ப்பதற்கு மாறாக தேசங்கள் பிரிந்து செல்கின்றன. இப்பொழுதுங்கூட, போர் பூமியின் ஏதாவது ஒரு பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் அனுதினமும் அனுபவித்து அவதியுறும் ஒன்றாக இருந்துவருகிறது! ஐ.நா. இருந்துங்கூட ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.
உண்மையில் ஐ.நா.-வுக்குப் பின்னால் இருப்பது யார்?
கருத்து வித்தியாசங்கள் இருந்தபோதிலும் ஏற்கனவே மேற்கோள் காட்டப்பட்ட இரு புத்தகங்களும் அசாதாரணமான ஒரு விவரத்தைக் கொடுக்கிறது. ஐ.நா. ‘தான் சேவிக்கும் உலகத்தின் முகம் பார்க்கும் கண்ணாடி,’ என்று வால்டீம் கூறுகிறார். எசல்சனும் காக்லியோனும் அந்த அரசியல் உலகத்தை ஒரு காட்டுக்கு ஒப்பிடுகின்றனர். எனவே அரசியல் உறுப்பினர்கள் வியாபித்திருக்கும் அரசியல் காட்டு விதையைத்தான் ஐ.நா. பிரதிபலிப்பதாயிருக்கும்.
இதை மனதில் வைத்தவர்களாய் பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அடையாள சின்னங்களைக் கவனிப்பது மிகுந்த அக்கறைக்குரியதாயிருக்கிறது. பைபிள் ஒரு “மூர்க்க மிருகத்தைக்” குறித்தும் “ஒரு சிவப்பு நிறமுள்ள மிருகமாக” விளக்கப்பட்டிருக்கும் அதன் “சொரூபத்தைப்” பற்றியும் பேசுகிறது. (வெளிப்படுத்துதல் 13:1, 2, 14; 17:3, 8, 11) முதலில் குறிப்பிடப்பட்ட அந்த மூர்க்க மிருகம் முழுமையாக அகில உலக அரசியல் அமைப்பை பிரதிநிதித்துவம் செய்கிறது. கடந்த 4000 ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றி இன்று உலகில் காணப்படும் வித்தியாசமான அரசியல் முறைகள் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.a அப்படியென்றால் அந்த மிருகத்தின் “சொரூபம்” எதற்கு அடையாளமாய் இருக்கிறது?
மேற்குறிப்பிடப்பட்ட காரியங்களின்படி, இன்றைய அரசியல் முறையை எந்த அமைப்பு பிரதிபலிப்பதாய் இருக்கிறது? தெளிவாகவே 159 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. தானே; இவை அநேகமாய் சர்வலோக பிரதிநிதிகளாக இருக்கின்றன. (பக்கம் 11-ஜ பார்க்கவும்.) பைபிள் மிருகங்களை அடையாளமாக பயன்படுத்தும் காரியம் ‘அரசியல் காட்டின்’ சொரூபத்திற்கு நன்கு பொருந்துகிறது. அநேக அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் தத்துவங்களை மூர்க்க மிருகங்களைப் போல அமல்படுத்தினர்—போர்களிலும் அரசியல் புரட்சிகளிலும் லட்சக்கணக்கானோரை மிருகத்தனமாகக் கொல்லுவதன் மூலம் அமல்படுத்தினர், இன்றும் அப்படி செய்து வருகின்றனர் என்பது கவலைக்குரிய காரியம் என்றாலும் அது உண்மை. உயிருடன் வதைத்துக் கொல்லும் தியாகக் குழுக்களும் படைகளும் உரிமைத் தடை ஆட்சிகளின் கருவிகளாக இருந்து வந்திருக்கிறது, இன்றும் அப்படித்தான் இருக்கிறது. இந்த அரசாங்கங்களும் தத்துவங்களும் ஐ.நா.-வில் மதிப்புள்ள இடத்தை வகிக்கின்றன.
இந்தக் காரியங்களைக் கவனிக்குமிடத்து “கடவுள் அன்பாகவே இருக்கிறார்,” என்ற மிகத் தெளிவான வார்த்தைகளின் வெளிச்சத்தில், ஐ.நா. சமாதானத்துக்கான கடவுளுடைய வழியாக இருக்கக்கூடும் என்று நம்புவது நியாயமா? (1 யோவான் 4:8) ஆனால் பிரச்னைக்கு கடவுள் அளிக்கும் விடை ஐ.நா. அல்ல என்றால், உண்மையில் ஐ.நா.-வுக்குப் பின்னால் இருப்பது யார்?
“மூர்க்க மிருக” அரசியல் அமைப்பு மற்றும் அதன் “செரூபம்” குறித்து பைபிள் எந்தவித சந்தேகத்திற்கும் இடமளிக்கவில்லை. வெளிப்படுத்துதல் 13:2-ல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.” வலுசர்ப்பம் யாரை பிரதிநிதித்துவம் செய்கிறது, அதே பைபிள் எழுத்தாளர், அந்த “வலுசர்ப்பம்,” “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட . . . பெரிய வலுசர்ப்பம்,” என்று தெளிவுபடுத்துகிறார். ஆனால் எந்த விதத்தில் சாத்தான் உலகமனைத்தையும் மோசம்போக்கிக் கொண்டிருக்கிறான்?—வெளிப்படுத்துதல் 12:9.
ஐ.நா. உட்பட எல்லாவிதமான அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் தத்துவங்கள் மூலமாக, சாத்தான், அந்த ஆதி பொய்யன், சமாதானத்துக்கும் பாதுகாப்புக்குமான ஒரே உண்மையான பாதையிலிருந்து—இந்தப் பூமியின் மீது கடவுளுடைய ராஜ்யத்தின் ஆட்சியிலிருந்து—மனிதவர்க்கத்தின் கவனத்தை திருப்பிக் கொண்டிருக்கிறான். (யோவான் 8:44) ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கிறிஸ்தவர்கள் என்னப்பட்டவர்கள், “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” என்று ஜெபித்து வந்திருக்கிறார்கள். என்றபோதிலும், கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன என்பதைக் குறித்து தெளிவான அறிவு அவர்களில் அநேகருக்கு இல்லை. அது உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? அந்த ராஜ்யம் மிக அருகாமையிலிருக்கும் இந்த சமயத்தில் அதைக் குறித்த சரியான அறிவைப் பெறுவது அவசியம்.—மத்தேயு 6:9, 10.
விழித்தெழு! நிருபர்கள் தனிப்பட்ட தொடர்புகளிலிருந்து, ஐ.நா.-வின் நோக்கங்களை பரப்புவதற்கும் செயல்படுத்துவதற்கும் அநேகர் உண்மையோடு கடினமாக உழைக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கின்றனர். இந்த உண்மை மனதோடு உழைக்கும் ஆட்கள் அந்த அமைப்பின் பலவீனங்களையும் பார்க்கின்றனர், ஆனால் கர்ட் வால்டீம் போன்றவர்கள் நம்புவதைப் போன்று, நிரந்தர சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் இதுவே மனிதனின் ஒரே நம்பிக்கை என்று கருதுகின்றனர். அதிலும் மேன்மையான பரிகாரம் அவர்களுக்குத் தென்படவில்லை. என்றபோதிலும் அவர்கள் ஒருவேளை பார்க்க தவறின ஒன்று உண்டு—கடவுளுடைய ராஜ்ய ஆட்சி.—வெளிப்படுத்துல் 11:15.
சமாதானத்துக்கான ஒரே உண்மையான வழி
கடவுளுடைய ராஜ்யம் என்பது பரலோக ஆட்சியை அல்லது ஆவிக்குரிய பகுதியிலிருந்து பூமியை ஆளும் ஆரசாங்கம் என்று பைபிள் காண்பிக்கிறது. (தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 21:1-4) கிறிஸ்துவின் மூலம் செயல்படும் இந்த ராஜ்ய அரசாங்கம் ஏற்கனவே உலகெங்கிலும் செயல்பட்டு வருகிறது. மற்றும் அதன் ஆட்சியின்கீழ் நித்திய ஜீவனுக்காக தேசீய எல்லை கடந்த ஒரு ஜனத்தை தயார்செய்து கொண்டிருக்கிறது. சகல தேசங்களிலிருந்தும் மொழியிலிருந்தும் வந்த இந்த ஐக்கியப்பட்ட ஜனம் யெகோவாவின் சாட்சிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள்தான் உண்மையில் “ஐக்கிய நாடுகளாக,” ஏற்கனவே தங்களுடைய ‘பட்டயத்தை மண்வெட்டிகளாக அடித்தவர்களாக’ இருக்கியர்கள். “சர்வதேச அரசியலில் அதிக வல்லமைவாய்ந்த பேரழிவை ஏற்படுத்தக்கூடிய சக்தி,” என்று அழைக்கப்பட்டிருக்கும் இன வேற்றுமை என்ற விலங்குகளையும் தேசியம் என்ற குறுகிய நோக்கையும் முறித்துவிட்டிருக்கின்றனர். அந்த விலங்குகள்தானே இன்னும் ஐ.நா.-வின் கரங்களைக் கட்டிவைத்திருக்கிறது.—ஏசாயா 2:2-4.
தனிப்பட்ட விதத்தில் பைபிளைப் படிப்பதன் மூலம், யெகோவாவின் சாட்சிகள் இந்த ஒரு காரியத்தை அறிந்திருக்கின்றனர், அதாவது கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே இந்தப் பூமிக்கு நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரும் என்பதையும் கடவுளுடைய ராஜ்யம் நடவடிக்கை எடுப்பதற்குரிய காலம் மிக அண்மையிலிருக்கிறது என்பதையும் அறிந்திருக்கின்றனர். (லூக்கா 21:31-33; வெளிப்படுத்துல் 16:14, 16) ‘என்ன நடவடிக்கை?’ என்று நீங்கள் ஒருவேளை கேட்பீர்கள். இந்தப் பூமியை வேண்டுமென்றே கெடுக்கிறவர்களை அழிக்கும் நடவடிக்கை. (வெளிப்படுத்துதல் 11:18) பிரிவினையை ஏற்படுத்தும் எல்லா அரசியல் கூறுகளையும் நொறுக்கி நிர்மூலமாக்குவதை இது உட்படுத்தும். (தானியேல் 2:44) எனவே சாத்தானின் போலி பரிகாரமாகிய ஐ.நா.-வை யெகோவாவின் சாட்சிகள் குறைபட்ட பரிகாரமாக நிராகரித்துவிடுகின்றனர். ஆனால் குறைபட்டதாகக் கருதப்படுவதற்குக் காரணம் என்ன?
பதினேழாம் நூற்றாண்டு டச் தத்துவஞானி ஸ்பினோஸா, சமாதானம் என்பது “போர் இல்லாமை அல்ல,” ஆனால் இன்னும் அதிகத்தை உட்படுத்தும் ஒன்று என்று அதற்கு விளக்கம் அளிக்கிறார். அவர் சொன்னார்: “அது சிறந்ததோர் பண்பு, ஒரு மனநிலை, அன்பு, இரக்கம், நம்பிக்கை, நீதி, ஆகியவற்றைக் காண்பிக்க அல்லது பிரதிபலிக்க இருக்கும் ஒரு மனவிருப்பம்.” மக்களை பகையிலும் பிரிவிலும் அல்ல, ஆனால் அன்பிலும் ஐக்கியத்திலும் கற்பித்து பயிற்றுவிப்பதன் மூலம் மட்டுமே அதை சாதிக்க முடியும். பைபிள் எழுத்தாளன் யாக்கோபு பின்வருமாறு பதிவு செய்தான்: “நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.” (யாக்கோபு 3:18) உலக முழுவதும் தாங்கள் செய்துவரும் கற்பிக்கும் வேலைமூலமாக யெகோவாவின் சாட்சிகள் சமாதானத்துக்கான கடவுளுடைய வழிகளைக் கற்பித்து வருகின்றனர். ஏனென்றால் அவருடைய வார்த்தை பின்வருமாறு சொல்லுகிறது: “உன் பிள்ளைகளெல்லாரும் யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பார்கள். உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.”—ஏசாயா 54:13.
கடவுளுடைய ராஜ்ய அரசாங்கத்தைக் குறித்து அதிகமாக அறிந்துகொள்ள விரும்புவீர்களானால், உங்களுடைய நிராந்தியத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளை சந்திக்க தயங்காதீர்கள். சமாதானத்துக்கான கடவுளுடைய வழியை நீங்கள் அறிந்துகொள்ள அவர்கள் உங்களுக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருப்பார்கள். (g85 10/22)
[அடிக்குறிப்புகள்]
a பைபிள் பயன்படுத்தும் இந்த அடையாள அர்த்தமுள்ள காரியங்களின் பேரில் கூடுதலான விளக்கத்திற்கு “Then Is Finished the Mystery of God” என்ற ஆங்கில புத்தகத்தில் அதிகாரங்கள் 22 மற்றும் 23 பாருங்கள். இந்தப் புத்தகம் காவற்கோபுரம் பைபிள் மற்றும் துண்டுப்பிரதி சங்கத்தின் பிரசுரிப்பு.
[பக்கம் 11-ன் பெட்டி]
ஐ.நா.-வை பாதிக்கும் பெரும் பிரச்னைகள்
ஐ.நா.-வின் உறுப்பு நாடுகளில் பலருக்குக் கவலை தருகிற இன்றைய பெரும் உலகப் பிரச்னைகளின் பகுதி பட்டியல்.
1. அணு ஆயுதப் போட்டி மற்றும் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே இருந்துவரும் மோதல் நிலை
2. வடதிசை-தென்திசை உலகத்தின் சமநிலையற்ற பொருளாதார நிலை
3. ஆப்ரிக்காவில் இருந்துவரும் பசி பட்டினி நிலை, ஆப்ரிக்கா கண்டத்தை விட்டு மக்கள் வெளியேறுதல்
4. போதை மருந்துகள், சர்வதேச பழக்கம்
5. சர்வதேச பயங்கரவாதம்
6. தென் ஆப்ரிக்காவின் இன ஒதுக்கீட்டு கொள்கையும் பிற மாகாணங்களோடு அதன் உறவு
7. தென் ஆப்ரிக்காவிலிருந்து நமிபியாவின் சுதந்திரம்
8. இஸ்ரவேலும் பலஸ்தீனா பிரச்னையும்
9. லெபனனில் கலவரம்
10. ஈரான், ஈராக் போர்
11. தென்கிழக்கு ஆசியா, கம்பூச்சியாவில் வியட்னாமியர்களின் குடியேற்றம்
12. மத்திய அமெரிக்கா, எல் சால்வடார் மற்றும் நிக்கராகுவாவில் கொரில்லா போர்
13. அப்கானிஷ்தான், சோவியத் யூனியனின் தலையீடு
14. உலக அகதிகள் பிரச்னை, ஒருகோடி மக்களுக்குமேல் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்
15. மனித உரிமைகளின் துர்ப்பிரயோகம்
இந்தப் பட்டியல் 1984-ல் நடந்த 39-வது ஐ.நா. பொதுப் பேரவை கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரைகளின் அடிப்படையிலானது. இதில் 16 நாடுகளின் அல்லது அரசுகளின் தலைவர்கள் உட்பட 150 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். (ஐ.நா. செய்தில் பட்டியல், புத்தகம் XXI, எண் 8/1984-ஐ பார்க்கவும்.)
[பக்கம் 11-ன் பெட்டி]
ஐ.நா.-வின் உறுப்பினர் எண்ணிக்கை எப்படி வளர்ந்திருக்கிறது
1945 51 நாடுகள்: மத்திய மற்றும் தென் அமெரிக்கா 19; ஐரோப்பா 14; ஆசியா 2; மத்திய கிழக்கு 9; ஆப்ரிக்கா 3; பசிபிக் 3; வட அமெரிக்கா 3
195060 நாடுகள்: மத்திய மற்றும் தென் அமெரிக்கா 19; ஐரோப்பா 16; ஆசியா 7; மத்திய கிழக்கு 9; ஆப்ரிக்கா 3; பசிபிக் 3; வட அமெரிக்கா 3.
1960 100 நாடுகள்: மத்திய மற்றும் தென் அமெரிக்கா 19; ஐரோப்பா 27; ஆசியா 13; மத்திய கிழக்கு 10; ஆப்ரிக்கா 25; பசிபிக் 3; வட அமெரிக்கா 3.
1970 127 நாடுகள்: மத்திய மற்றும் தென் அமெரிக்கா 23; ஐரோப்பா 28; ஆசியா 16; மத்திய கிழக்கு 12; ஆப்ரிக்கா 41; பசிபிக் 4; வட அமெரிக்கா 3.
1980154 நாடுகள்: மத்திய மற்றும் தென் அமெரிக்கா 29; ஐரோப்பா 30; ஆசியா 19; மத்திய கிழக்கு 16; ஆப்ரிக்கா 50; பசிபிக் 7; வட அமெரிக்கா 3
1985 159 நாடுகள்: மத்திய மற்றும் தென் அமெரிக்கா 32; ஐரோப்பா 30; ஆசியா 20; மத்திய கிழக்கு 16; ஆப்ரிக்கா 50; பசிபிக் 8; வட அமெரிக்கா 3.
[பக்கம் 9-ன் படம்]
ஐ.நா.கட்டடத்திற்கு முன் 159 உறுப்பு நாடுகளின் கொடிகள்
[பக்கம் 10-ன் படம்]
ஏற்கனவே ‘பட்டயங்களைக் கலப்பைக் கொழுக்களாக அடித்திருப்பவர்கள்’ யார்?