உலகத்தைக் கவனித்தல்
கொலைக்கார எரிமலை
கடந்த நவம்பர் 1985-ல் நடந்த நெவோடொல்ரூய்ஸ். எரிமலை வெடிப்பு பகோட்டாவுக்கு மேற்கே சுமார் 85 மையல்கள் (140 கி.மீ.) தொலைவில் உள்ள காபி விவசாயம் செய்யும் கொலம்யியா நாட்டின் பகுதிகள் முழுவதிலும் மரித்த சடலங்களையும் சேதங்களையும் விட்டு சென்றது இந்த எரிமலை வெடிப்பு மலையின் முகட்டிலுள்ள பணிக்கட்டியை கறைத்துவிட்டது. மற்றும் மண்ணும் தண்ணீரும் சேர்ந்த சாவுக்கேதுவான, அதிவேகமாக பாய்ந்தோடும் நீரோட்டத்தை ஏற்படுத்திவிட்டது, இது 22,000-ற்கும் அதிகமான ஆட்களை கொன்றது. 8,0000 பேரை வீடு இல்லா நிலையில் விட்டு சென்றுவிட்டது. 25,000 மக்கட் கொகையினர்கொண்டபட்டணமான ஆர்மரோ, அது முதற்கொண்டு திரள் திரளாய்பிதைக்கும் உலகத்தின் மிகப்பெரிய பிரேதக்குழிகளில் ஒன்றாக ஆகிவிட்டது. 30 அடி (9 மீ) வரையான சாம்பல்மணலில் 21,000 ஆட்களை புகைத்துவிட்டது. இந்த எரிமலைக்கு அருகாமையிலிருக்கும் ஒரு பட்டணம் சின் சினா (70,000 மக்கட்தொகையினரை கொண்டது) 1,000 பேர் மாண்டுபோனார்கள் இந்த எரிமலை வெடிப்பில் யெகோவாவின் சாட்சிகளும், மற்றும் அவர்களுடைய கூட்டாளிகளில் சிலரும் மாண்டுபோனார்கள். இதை எழுதும் சமயத்தில் ஆர்மரோ சபை 16 பேர் உயிர்பிழைத்திருப்பதையும் ஒருவர் மரித்திருப்பதையும் மற்றும் 42 பேர் காணாமற்போயிருப்பதை அறிக்கை செய்துள்ளது; சின் சினா சபையை 38 பேர் உயிர்பிழைத்திருப்பதையும் 3 பேர் மாண்டுவிட்டதையும் அறிக்கைசெய்கிறது 1902 முதற்கொண்டு எங்கும் நிகழ்ந்திராத அதிக சாவுக்கேதுவான எரிமலை வெடிப்பு என்று விஞ்ஞானி சொல்லுகிறார்கள்.
முதியோருக்கு எதிரான குற்றச்செயல்
பிரிஸ்பேன் ஆஸ்திரேலியாவில் முதியோரை மிரட்டிச்சம்மதிக்க செய்வதே தீவிரமாக வளர்ந்துவரும் குற்றச்செயலாக இருக்கிறது என்று தி கூரியர் மெய்ல் என்ற நகர செய்திதாள் கூறுகிறது. இந்த குற்றங்கள் திருடுதல், சரீர தாக்குதல்கள், நாசவேலைகள் மற்றும் வீட்டுக்கு வீடு செல்லும் வியாபாரிகள் போன்று நடித்து தனிமையில் இருக்கும் மனிதரை பார்த்து நம்பிக்கை துரோக மோசடிசெய்வதும் உட்பட்டிருக்கிறது. வயதான அநேகர் கொள்ளையடிக்கப்படும் இக்காரியத்தை சமாளிப்பதை கடினமானதாக உணருகின்றனர். “தாங்கள் 60 ஆண்டுகளாக வாழ்ந்துவந்த வீடுகளில் மக்கள் கதவுகளையும் சன்னல்களையும் திறந்தவண்ணம் விட்டுவைப்பவர்களாக இருந்திருப்பார்களேயானால் அவர்கள் இனிமேலும் அதை செய்ய முடியாது என்பதை அவர்களிடம் சொல்வது கடினமானதாக இருக்கிறது.” என்று சொல்லுகிறார் பிரிஸ்பேன் போலீஸ்காரர்.
விழுங்குவதற்கு எழுந்து நிற்கவும்
எழுந்து நின்று அல்லது குறைந்தபட்சம் எழுந்து உட்கார்ந்து ஒரு மாத்திரையை விழுங்குவதும் மற்றும் அதை குறைந்தபட்சம் வாய் முழுவதுமான தண்ணீருடன் விழுங்குவதும் உங்கள் குடலில் பத்து வினாடிகளில் கரைவதற்கு உதவும். அது நீங்கள் மல்லாக்க படுத்திருக்கையில் கரைவதை காட்டிலும் மிக குறைந்த நேரம் என்று பிரிட்டனின் திட்ரக்ஸ் அண்டு தொரப் பிட்டிக் புல்லட்டின் சொல்கிறது. வேறுவிதமாய் விழுங்குவதன் அபாயம் என்னவெனில் சில மருந்துகள் உங்கள் வயிற்றை எட்டுவதற்கு முன்பே கரைந்துவிடக்கூடும். அதனால் உணவுகுழலின் உட்புற இழைகள் அழற்சியாகிவிட்டது வீக்கமுறக்கூடும். கடும் தொண்டைவீக்கத்திற்கு ஒத்ததான வேதனையை உண்டுபண்ணக்கூடும். மருந்தினுடைய நன்மைதரும் விளைவுகளின் ஆரம்பமும்கூட குடலின் மெதுவான உறிஞ்சிக்கொள்ளும் சக்தியால் அரை மணிநேரம் தாமதமாகும். படுமோசமான உறுத்தலுண்டாக்கும் மருந்துகளின் இரும்புசத்துள்ளதும் மற்றும் சாம்பரம் (Potassium) மாத்திரைகளும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கக்கூடும் மருந்துகளும் உட்பட்டிருக்கின்றன.
எதிர்கால மருந்து அலைகள்
கிராக், நியுயார்க் நகரத்தின் வீதிகளில் நடமாடும் ஒரு புதியவகையான கொக்கேய்ன். மருந்தை துர்பிரயோகம் செய்பவர்களுக்கு இது “எதிர்கால அலையாக” இருக்கிறது என்று பொருட்களை துர்ப்பிரயோகம் செய்வதை கவனிக்கும் நியுயார்க் அரசு துறை நிர்வாகியான வில்லியம் ஹாப்கின்ஸ் எச்சரிக்கிறார். கிராக் என்பது துப்பரவான வடிவில் முறைபடுத்தப்பட்ட கொக்கேய்ன் எனவே அது உட்சுவாசிக்கப்படும்போது அல்லது ஊசியினால் ஏற்றுக்கொள்ளப்படும்போது அதனுடைய உபயோகத்தின் பாதிப்பு தாம் மற்றும் அளவு ஆகிய இரண்டிலும் கொக்கேய்னைக் காட்டிலும் அதிக சக்கிவாய்ந்ததாக இருக்கக்கூடும். கிராக்கை கட்டுப்பாடின்றி பயன்படுத்துவது அல்லது புகைப்பது மிகஅதிகமான உடனடி போதையை அளிக்கிறது. கொக்கேய்னை இயல்பாக (பயன்படுத்துவதை) போன்றில்லாமல் அதை கட்டுப்பாடின்றி பயன்படுத்துகிற ஆட்கள் அதை நிறுத்திவிடமுடியாது” என்று தி நியுயார்க் டைமஸ்-ல் ஹாப்கின்ஸ் குறிப்பிடுகிறார். “தங்கள் பணம் அனைத்தும் கரைந்துபோகும் வரையில் அவர்கள் அதை கட்டுப்பாடின்றி பயன்படுத்தப்படுகின்றனர்.”
“வன்முறைக்கு அடிமை”
“சிறுவர்களின் வன்முறை செயலுக்கு பாலுறவைப்பற்றிய தவறான கருத்துக்களுக்கும் வீடியோ ஆபாசங்களே பழிசுமத்தப்படுகிறது,” என்று தி டைம்ஸ் ஆப் லண்டன்-ல் உள்ள ஒரு கட்டுரை தலையங்கம் கூறியது. இளைஞர்மீது வீடியோ படங்கள் கொண்டிருந்த பாதிப்புகள் பற்றிய மூன்று ஆண்டுகால ஆராய்ச்சிவிசாரனை அக்கிராசினரான லார்ட் நியூஜன் பின்வருமாறு குறிப்பிடுவதற்கு வழிநடத்தியது: “நமது படுமோசமான பயங்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டது” விசாரணையின் நிர்வாகியான டாக்டர் க்ளிப்பர்ட்ஹில், கூடுதலாக குறிப்பிட்டதாவது: சில பிள்ளைகளும் மற்றும் இளைஞரும் போதைமருந்துகளில் சிக்கிக்கிடப்பதைபோன்றே வன்முறை செயல்களுக்கு அடிமையாகிவிட்டிருக்கின்றனர். இது அதை காட்டிலும் படுமோசமாய் இருக்கிறது. திரையில் எதை காண்கிறார்களோ அதை பிள்ளைகள் செய்கின்றனர் என்பதற்கு பலமான சான்று இருக்கிறது, என்று அவர் சொன்னார். இதுவரையாக, சில வீடியோ படங்களை தடைசெய்ததானது, பிரச்னையை தீர்த்துவிடவில்லை. ஒரு பள்ளியில் அங்குமிங்குமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 73 பருவபிள்ளைகளில் (13 முதல் 19 வயதினரில் (நடத்தப்பட்ட சுற்றாய்வானது 63 பிள்ளைகள் குறைந்தபட்சம் தடைசெய்யப்பட்டிருந்த ஒரு வீடியோபடத்தையாவது பார்த்துவிட்டிருந்தனர்.