டிரினிடாட் நான்கு நாட்களில் கட்டி முடிக்கிறது!
“அந்தச் சர்ச்சை நீங்கள் நாலு நாட்களில் மட்டுமே கட்ட முடிந்தால், உங்களுக்கு தேவையான ஐஸ் எல்லாவற்றையும் நான் இலவசமாகவே கொடுத்துவிடுகிறேன்.!“ இப்படியாக ஐஸ் வியாபாரி அருகாமையில் யெகோவாவின் சாட்சிகளின் சபை ஒரு ராஜ்யமன்றத்தை நான்கு நாட்களில் மட்டுமே கட்டபோகிறார்கள் என்று கேள்விப்பட்டபோது சவாலாகச் சொன்னார். அவர்கள் அப்படி செய்யமுடியாது என்று அவன் பந்தயம் கட்ட தயாராக இருந்தான். இது டிரினிடாட், இங்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு முடிக்கப்படுவதற்குத் தாமதம் ஏற்படுவது சர்வசாதாரணம். அத்துடன் ஸிபாரியா சபையில் 72 அங்கத்தினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகள். சூதாடுவதில்லை, ஆதலால் வேலை செய்யும் அதிக களைப்படைந்த அவர்களுடைய 300 வாலண்டியர்களுக்கும் அங்கு வேலைக்குச் சென்றவர்களுக்கும் குளிர்ந்த பானங்கள் பரிமாறுவதற்கு தேவையான ஐஸ்ஸை அந்த வியாபாரியிடமிருந்து வாங்கிக்கொண்டார்கள்.—ஏசாயா 65:11.
அவர்களால் அதை செய்ய முடியுமா? செய்ய முடியும் என்று உணர்ந்தார்கள். பார்க்கப்போனால் இந்தத் திட்டத்தை கடந்த ஆறு மாதங்களாக அவர்கள் கொண்டிருந்தார்கள். அஸ்திபாரம் ஒரு மாதத்திற்கு முன்புபோடப்பட்டது, சில குழாய் சம்பந்தப்பட்ட வேலைகளும் மின்சார இணைப்புகளும் முடிக்கப்பட்டது, தேவையான சில பொருட்களும் கட்டும் இடத்தில் வைக்கப்பட்டது.
மே 17, 1985 வெள்ளிக்கிழமை சாயங்காலம் வேலை ஆரம்பித்ததை ஆர்வமுடன் அயலகத்தார் பார்த்துக்கொண்டிருக்கையில் நூறு வாலண்டியர்கள் கட்டும் இடத்திற்கு வந்து குவிந்தனர். மே, 18 சனிக்கிழமை விடிந்தது. கட்டிடத்தின் வரைச்சட்டம் முடிக்கப்பட்டது. கூரை போடுவதும் ஆரம்பிக்கப்பட்டது. கொல்லத்துக்காரர்கள் செங்கற்களை வைக்க ஆரம்பித்தனர். பிற்பகலுக்குள்ளாக கூரை முடிக்கப்பட்டது. ஒலிபெருக்கி இணைப்புகள் முடிக்கப்பட்டது. கவனத்திற்கும் நம்பிக்கைக்குமான ஒரு அடையாளம் தோன்றியது:
ராஜ்ய மன்ற கட்டிட வேலை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கும் காலம்—4 நாட்கள் மே 18, 19, 25, 26
ஆனால் யார் இந்த வேலையாட்கள்? வேலைசெய்தவர்கள் வித்தியாசமான பின்னிணிகளைக் கொண்ட ஆட்கள் இங்கே ஒரு இளம் மருத்துவர்ரண சிகிச்சையை எவ்வளவு கவனமாக செய்வாரோ அந்தளவுக்கு கவனத்துடன் வண்ணம் பூசிக்கொண்டிருந்தார். ஒரு பெண் மேடையை கட்டுவதைப் பற்றியது என்ன? ஒரு டாக்ஸி ஓட்டி வாழ்க்கையை நடத்தும் ஒரு ஒற்றை பெற்றோராக இருந்தாள். 40 வருடங்களாக கொல்லத்துதொழில் செய்யும் ஒருவர், கொல்லருக்கான படிப்பை முடித்த ஒரு தொழில்துறை பள்ளி மாணவரோடு சேர்ந்து தோளோடு தோள் வேலை செய்தார். அனேக பெண்கள் சமயல் வேலையில் உதவி செய்தது மட்டுமல்லாமல், சாக்கடைகளுக்காக தோண்டுவது, வண்ணம் பேசுவது, புல்வெளியை அமைப்பது, செங்கற்களை தூக்கி செல்வது, கலவை போடும் வேலை போன்றவற்றையுங்கூட குறிப்பிடவேண்டும்.
பொதுமக்கள் எவ்வாறு பிரதிபலித்தார்கள்? தண்ணீர் மற்றும் கலவை தட்டுப்பாடு ஏற்பட்டபோது, பக்கத்திலுள்ள தீயணைப்பு அதிகாரி, அவர்கள் செய்ததைப் பார்த்து அதிக ஆச்சரியப்பட்டு, ஒரு தீயணைப்பு லாரியை அனுப்பி இரவில் மூன்றுமுறை தண்ணீர் அனுப்பினார் அங்கு என்ன செய்யப்பட்டது என்பதை காண்பிக்க நண்பர்களையும்கூட அழைத்து வந்தார். ராஜ்யமன்றத்தின் அதே தெருவிலிருந்த ஒரு பெண்மணி தன்னுடைய வீட்டிலுள்ள இடத்தில் கட்டிட பொருட்களை வைக்க தயவாய் அனுமதித்தாள். அந்த மன்றத்தில் நடந்த முதல் கூட்டத்திற்கு அவள் ஆஜராயிருந்தாள்.
முன்பு நாம் பேசின அந்த ஐஸ் வியாபாரியைப் பற்றியதென்ன? இரண்டாவது நாள் ஐஸ் முழுவதும் உபயோகமாகிவிட்டது. இதுவரையாக என்ன நடந்தது என்பதை அவன் பார்த்ததினால், அதிகமாக ஐஸ் வாங்குவதற்கு பணம் அளிக்க முன்வந்தான். ஆம், யெகோவாவின் சாட்சிகள் அதை செய்ய முடியும் என்று நம்பினாள்!