புகை பிடிக்கும் பழக்கத்துக்கு உலகம் எவ்விதமாக அடிமையானது
அமெரிக்காவின் சட்ட மாமன்ற மேலவை உறுப்பினர் தினந்தோறும் இரண்டு பாக்கெட்டு சிகரெட்டுகளை புகைக்கிறார். “அது என்னுடைய வாழ்நாளை குறைத்துவிடப் போகிறது என்பது எனக்குத் தெரியும் . . . ஒருவேளை அது என்னுடைய உயிரைப் போக்கிவிடக்கூடும்” என்பதாக அவர், புகையிலை உழவர்களுக்கு விலையை நிர்ணயிப்பதன் சம்பந்தமாக ஏற்பட்ட சர்ச்சையில் தன் உடன் உறுப்பினர்களிடம் சொன்னார். “பயங்கரமான இந்த பழக்கத்துக்கு அடிமையான அந்த நாளை நான் வெறுக்கிறேன்.”
இவ்விதமாக மனஸ்தாபப்படுவது இந்த சட்ட மாமன்ற மேலவை உறுப்பினர் மட்டுமில்லை. ஒருசில மதிப்பீடுகளின்படி, அவருடைய தேசத்தில் புகைப்பிடிப்பவர்களில் 90 சதவிகிதத்தினர் பிகைப்பிடிப்பதை நிறுத்த முயற்சித்திருக்கிறார்கள் அல்லது நிறுத்திவிட விரும்புகிறார்கள். 1983-ல் மட்டுமே ஜப்பானில் புகைப்பிடிக்கும் 20 லட்சம் பேர் அதை நிறுத்திவிட்டிருக்கிறார்கள். அதிகாரக் குழு ஒன்று இவ்விதமாகச் சொல்லுகிறது: “பெரும்பாலும் வழக்கமாக புகைப்பிடிக்கும் அனைவருமே புகை பிடிக்க தொடங்கினதற்காக வருந்துவதாக தெரிகிறது. அவர்களுடைய மாதிரியை பின்பற்றாதபடி அவர்களுடைய பிள்ளைகளை அவர்கள் எச்சரிக்கிறார்கள்.”
ஆனால் தவறான பழக்கத்துக்காக வருந்தும் இவர்கள் அனைவரும் எவ்விதமாக இத்தனை ஆழமாக இதில் ஈடுபாடு கொண்டவர்களானார்கள்? எப்படியோ, இந்த உலகத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர் ராபர்ட் சேபல் குறிப்பிடுகிற விதமாக, “நன்மையையோ அல்லது தீமையையோ, அது எதைக் கொண்டு வருவதானாலும், ஒரு நாகரீகமாக நாம் சிறுமணிகள் போன்ற புகையிலையை சிறிதளவு கொண்ட அந்த காகித குழலை மணந்துகொண்டு விட்டோம்.” 6 மாபெரும் சிகரெட் தொழிற்சாலைகளில் ஒன்றில், 2 1/2 லட்சம் ஆட்கள் வேலை செய்கிறார்கள். ஒவ்வொரு வருடமும், ஆறு கண்டங்களிலுள்ள 78 தேசங்களில், அதன் விற்பனையின் மொத்த மதிப்பு 1200 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த பழக்கத்துக்கு தேவைப்படும் புகையிலையை ஒரு மாபெரும் தொழிற்சாலை சப்ளை செய்வதற்கு இத்தனை பொதுப்படையாக வேண்டப்படாத ஒரு பழக்கம், எவ்விதமாக தேவையை உருவாக்கக்கூடும்?
உண்மையில் சிகரெட்டின் கதை, கடந்த நூறு ஆண்டுகளின் மிகப் பெரிய எதிர்பாரா நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்கக்கூடும். சிகரெட் நூற்றாண்டு என்பதாக அழைக்கப்பட இந்த நூற்றாண்டின் வியக்கத்தக்க தேவையை தூண்டியது இரண்டு 19-வது நூற்றாண்டு யுத்தங்களே ஆகும். புதியதாக தோன்றிய தொழிலும், விளம்பரங்களும் எரிந்து கொண்டிருந்த தழலுக்கு எண்ணெய் ஊற்றுவது போல இருந்தது. பளிச்சென்று மஞ்சள் நிறத்திலும், இலேசான காரத்தோடும், வேதியியலில் வித்தியாசமாகவும் இருந்த இந்த புதிய புகையிலை, புகைப்பிடிப்பவர்களை அதன் புகையை உள் இழுப்பதற்கு ஊக்குவித்தது. புகைப்பிடிக்கும் பழக்கத்தில் வாய் வழியாக உள்ளிழுக்கும் அந்த குறிப்பிடத்தக்க மாற்றம், புகை பிடிக்கும் பெரும்பாலானோர் வாழ்நாள் முழுவதும் இந்த பழக்கத்துக்கு அடிமையாயிருப்பதை உறுதிபடுத்தியது.
தேவையை தூண்டிஎழுப்பிய போர்கள்
1856 வரையாக புகையிலை என்பது ஊதாரித்தனமான ஆடம்பர வாழ்க்கைக்குரிய ஒரு பொருளாகவே இருந்தது. 1856-ல் தானே முதல் முறையாக சிகரெட்டுகள் பொது மக்களின் அங்காடியில் இடம் பெற்றது. பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு போர் வீரர்கள், கைகளில், “தாள் புகைச் சுருளோடு” கிரிமியன் யுத்தம் முடிந்து திரும்பிய சமயமாக அது இருந்தது. இந்த பழக்கத்தை அவர்கள் அங்கிருந்து கற்று வந்திருந்தார்கள். ஒரு சிகரெட் அலை ஐரோப்பா முழுவதும் வீசி, துருக்கிய நாட்டு சிகரெட்டுகளுக்கு அல்லது இங்கிலாந்து நாட்டு ஏமாற்று சரக்குகளுக்கு எதிர்பாராத தேவையை உருவாக்கியது.
“கிரிமியா அலை,” குழாய் அல்லது சுருட்டுக்கு மலிவான போர் கால மாற்றீடாக சிகரெட்டுகளை அறிமுகப்படுத்தியது. ஆனால் அது ஓய்ந்துவிட்டது. மேலுமாக, ராபர்ட் சோபல் சுட்டிக் காட்டும் விதமாகவே, “1860 ஆண்டுகளில் ஆரம்பப் பகுதியில், புகைச் சுருட்டுக்கு சந்தையில் முக்கிய வாடிக்கையாளர்களாக இருந்த நடுத்தர அமெரிக்க வகுப்பினர் சிகரெட்டுகளை விரும்பி ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை.” முற்காலத்திய சிகரெட்டுகளிலிருந்து வந்த புகை நவீன நாளைய சிகரெட்டுகளிலிருந்து வருபவைப் போல அத்தனை ஆற்றலுள்ளதாக இருக்கவில்லை. சுருட்டுப் புகையைப் போன்று அது சிறிதளவு காரமாக இருந்தது. புகைப்பிடிப்பவர்கள், அதை தங்களுடைய வாய்களில் பிடித்துக் கொண்டார்கள். இன்று பொதுவாக சிகரெட் புகைப்பவர்கள் செய்வது போல, அதை உள்ளிழுப்பதற்கு வசதியான வழி இருக்கவில்லை. ஆச்சரியம் தந்த அடுத்த வளர்ச்சிக்கு அது சமயமாக இருந்தது.
அமெரிக்க உள்நாட்டுப் போர் (1861 -65) அதிக மயக்கமூட்டும் புகையை அறிமுகப்படுத்தியது. புகையிலை நிபுணர் ஜெரோம் E. புரூக்ஸ் இவை “வெடிக்கும் ஆற்றலு”டையவையாக இருந்தது என்பதாக குறிப்பிடுகிறார். மறுபடியுமாக போர் மலிவான சிகரெட்டுகளை இருபக்கத்தைச் சேர்ந்த போர் வீரர்களுக்கும் கொண்டு வந்தது. ஆனால் இந்த சமயம் அது மறைந்துவிடும் ஒரு பழக்கமாக இருக்கவில்லை.
இந்த சிகரெட்டுகளில் அமெரிக்க தேசத்து புகையிலை பயன்படுத்தப்பட்டு, அது சற்றே வித்தியாசமாக இருந்தது. அமெரிக்காவில் இதை பயிர் செய்தவர்கள், நைட்ரஜன் குறைவாயுள்ள அவர்களுடைய மண்ணில் புதிய புகையிலை வகைகளை முயற்சித்திருந்தார்கள். வட கரோலீனா பண்ணையில், ஒரு அசாதாரணமான எதிர்பாரா நிகழ்ச்சியில், குறிப்பிட்ட ஒரு செயல் முறைக்குள்ளாக்கியபோது, அவர்களுடைய இலை பளிச்சென்று மஞ்சள் நிறமாகவும், உறைப்பாக இல்லாமலும் இனிப்பாகவும் மாறியதை அவர்கள் கண்டுபிடித்தார்கள். 1860-ல் ஐக்கிய மாகாணங்களின், ஆள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் அதை “வேளாண்மைத் துறையில் உலகம் இதுவரை அறிந்திராத மிகவும் அசாதாரணமான சம்பவங்களில் ஒன்று” என்பதாக அழைத்தது. இந்த புதிய புகையிலையுள்ள சில சிரெட்டுகளைப் பிடித்தப் பிறகு, புதிதாக இதை பிடிப்பவர்கள், மறுபடியுமாக பற்ற வைக்க ஒரு விலக்கமுடியாத தூண்டுதலை உணர்ந்தார்கள்.
அடிமையாகிவிடுதல்!
அந்த சமயத்தில் புரிந்துகொள்ளப்படாவிட்டாலும் இந்த புதிய ஆனால் தணியாது வளர்ந்துவந்த சந்தை, மயக்கமூட்டின வஸ்துவின் மீது உண்மையில் சார்ந்ததாக, அதற்கு அடிமையாகிவிட்டது. “வளரிளமைப் பருவத்தின்போது தற்செயலாக இரண்டு அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட சிகரெட்டுகளை புகைப்பது, வழக்கமாக புகைப்பிடிப்பதற்கும், அதை சார்ந்து வாழும் நிலைக்கும், பெரும்பாலும் வழிநடத்துகிறது” என்பதாக இது பற்றி ஆராய்ச்சி செய்யும் டாக்டர் மைக்கல் A.H. ரஸல் குறிப்பிடுகிறார். ஆரம்பத்தில் வாரத்துக்கு ஓரிரு முறைகள் ஹீராயீனை உட்செலுத்திக் கொள்ளும் வளரிளமைப் பருவத்திலுள்ள ஒருவனைப் போலில்லாமல் இந்த பருவத்தில் புகைப்பிடிப்பவன் ஒரு பாக்கட் சிரெட்டை முடிப்பதற்குள் அவன் தொடர்ச்சியாக இருநூறு நிக்கோடீன் “கிளர்ச்சி”களை அனுபவித்து விடுகிறான்.
ஆம், உள்ளிழுப்பதே அதன் இரகசியமாக இருந்தது. நிக்கோடீன் சத்து, காரத்தன்மையுள்ள நிலைமைகளின் கீழ் மாத்திரமே, சளிச் சவ்வின் வழியாக உட்சென்று அதை உறுத்துகிறது. சிகரெட் புகை சற்றே அமிலத் தன்மையுள்ளதாக இருப்பதால் புகையிலைப் புகை மாத்திரமே, வழக்கமாக உள்ளிழுப்பதற்கு வாயிலும் தொண்டையிலும் போதிய அளவு மிருதுவாக இருக்கிறது. ஆனால் நுரையீரலில் அமிலம் சமனப்படுத்தப்பட்டு விடுகிறது. நிக்கோடீன் தாராளமாக இரத்த ஓட்டத்துக்குள் போய் சேர்ந்துவிடுகிறது. ஏழே நொடிக்குள் நிக்கோடீன் சத்து நிறைந்த இரத்தம் மூளைக்கு வந்து சேருகிறது. ஆகவே ஒவ்வொரு முறை வெளியேற்றப்படும் புகைக் கற்றையிலும் உடனடியாக நிக்கோடீனின் விளைவு தெரிகிறது. ஒன்றுக்கும் மேல் சிகரெட்டுகளை புகைக்கும் வாலிபர்கள், புகைப்பிடிப்பதை விட்டுவிடுவதற்கான சாத்தியம் 15 சதவிகிதமாக மாத்திரமே இருப்பதாக பிரிட்டிஷ் நாட்டு அரசாங்க ஆராய்ச்சி ஒன்று குறிப்பிடுகிறது.
கிரிமியன் போர் நடைபெற்ற அதே பத்தாண்டில்தானே, சிகரெட் தொழில் சக்தி வாய்ந்த ஒரு புதிய பழக்கத்தைப் பிறப்பித்தது. 20 ஆண்டுகளுக்குள், புதிய வாடிக்கையாளர்களை கவர, கவர்ச்சியான செய்தித்தாள் விளம்பரங்களையும் சான்று பத்திரங்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் புகையிலை வியாபாரிகளுக்கு ஏற்பட்டது. 1880-ல் தனிக்காப்புரிமைப் பெற்ற ஒரு இயந்திரம் சிகரெட்டை பெரும் அளவில் உற்பத்தி செய்து, விலையை குறைவாக வைக்க உதவியது. விளையாட்டு வீரர்களின் மற்றும் புன்னகைப் பூத்த வண்ணம் தோற்றமளித்த பாவையரின் படங்கள், ஆண்களுக்கு சிகரெட்டை விற்க உதவியாக இருந்தது. ஆனால் அதிகத்தைப் பெற்றுக்கொள்ள அவர்களை திரும்ப வரச் செய்தது என்ன? நிக்கோடீனை சார்ந்து வாழும் ஒரு நிலை! உடல் நல எழுத்தாளரான வில்லியம் பென்னட் M.D. சொல்லும் விதமாகவே: “இயந்திரமயம், புத்திசாலித்தனமாக செய்யப்பட்ட விளம்பரங்கள், வியாபார உத்திகள் ஆகியவை இதற்கு காரணமாக இருந்தன. ஆனால் (நிக்கோடீன் இல்லாமல்) அவர்களால் அவ்வளவு காய்ந்த கோசுக்கீரையை ஒருபோதும் விற்பனை செய்திருக்க முடியாது.”
1900-க்குள் நவீன சிகரெட் ஏற்கெனவே அனைத்து நாடுகளிலும் பரவி விட்டிருந்ததால் உலக சமுதாயத்தின் மீது தன்னுடைய பிடிப்பை உறுதியாக்கிக்கொள்ள அது தயாராக இருந்தது. (w86 4/8)
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
புதிதாக புகைப்பிடிப்பவர், அவருடைய முதல் பாக்கட் சிகரெட்டுகளிலிருந்து மட்டுமே 200 நிக்கோடீன் “கிளர்ச்சி”களை அனுபவிக்கிறார்