வித்தியாசப்படுத்திப் பார்த்த ஒரு திருடன்
கள்ளர்கள் அல்லது திருடர்களுக்கு எவரும் இரையாகக்கூடும். அவர்கள் எந்த ஒரு பாகுபாடும் காண்பிப்பதில்லை. எனவேதான் தன்னுடைய பணப்பை, கார், ரேடியோ, சைக்கிள் அல்லது எந்தவொரு விலையுயர்ந்த பொருளும் காணாமற்போகும் ஒரு அனுபவம் நம்மில் எவருக்கும் ஏற்படக்கூடும். இது, யெகோவாவின் சாட்சிகளுக்கும் நேரிடுகிறது. ஆனால் ஏதோ சில சமயங்களில் மனசாட்சியுள்ள ஒரு திருடன் தோன்றுகிறான். இது டோமனிக்கன் குடியரசிலிருக்கும் சான்டோ டோமனிக்கோவிலிருந்து வரும் இந்த அனுபவத்தால் விளக்கப்படுகிறது:
“இலையுதிர் காலத்தில் ஓரு நாள், என்னுடைய மனைவி அவளுடைய வழக்கம்போல் அதிகாலையில் எழுந்து, பின்னால் கதவைத் திறக்க சென்றபோது, பின் அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. விலையுயர்ந்த பொருட்கள் இருந்தபோதிலும், ஒன்றும் காணாமற்போகவில்லை. ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில், கதவில் யாரோ ஒருவன் ஒரு குறிப்பை விட்டுச் சென்றிருந்தான்: ‘இந்த அழகிய வீட்டின் வீட்டுக்காரர்களே, பூட்டை உடைத்ததற்காக என்னை மன்னித்துவிடுங்கள். நான் ஒரு திருடன், இங்கே வந்து இங்குள்ள பொருட்களையெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் இங்கே யெகோவாவின் கிறிஸ்தவ சாட்சிகள் இருக்கிறார்கள் என்று உணர்ந்தேன். அந்தக் காரணத்தால் தானே, நான் நினைத்ததை செய்யவில்லை. மற்றவர்களிடம் நான் திருடுகிறேன், ஆனால் உங்களை நான் மதிக்கிறேன்.’”
இவர்கள் சாட்சிகள் என்று திருடனுக்கு எப்படித் தெரியும்? ஏனென்றால், பின் அறையில் பைபிள் பிரசுரங்களும் பத்திரிகைகளும் (காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!) இருந்தன. அந்த இரவு அயலகத்தார் வீடுகள் திருடப்பட்ட போதிலும், சாட்சிகளுக்கு இது நேரிடவில்லை.
மற்றவர்களுக்கு நேரிடுவது போல யெகோவாவின் சாட்சிகளும் ‘சமயமும் எதிர்பாராத சம்பவத்திற்கும்’ ஆளாகிறார்கள். என்றபோதிலும், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக அடையாளங் காட்டுவது அநேக சமயங்களில் நல்ல பலன்களைக் கொண்டிருக்கிறது.—பிரசங்கி 9:11, NW. (g86 6/8)