உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g87 7/8 பக். 19
  • பரிகாரம் என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பரிகாரம் என்ன?
  • விழித்தெழு!—1987
  • இதே தகவல்
  • பயங்கரவாதம் முடிவு அருகில்!
    விழித்தெழு!—2001
  • பயங்கரவாதம்—பாதிக்கப்படுகிறவர்கள் யார்?
    விழித்தெழு!—1988
  • பயங்கரவாதம்—பதில் என்ன?
    விழித்தெழு!—1988
  • தீவிரவாதம் என்றாவது ஒழியுமா?
    வேறுசில தலைப்புகள்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1987
g87 7/8 பக். 19

பரிகாரம் என்ன?

“அது ஒன்றுதான் பரிகாரம்.” கடத்தப்பட்ட எகிப்திய விமான ஓட்டி வெளியிலிருந்து செய்யப்பட்ட தாக்குதலைக் குறித்து அப்படியாகச் சொன்னார். என்றபோதிலும், குற்றமற்ற பயணிகளுங்கூட கொல்லப்படுவதும் கடுமையாகக் காயப்படுவதுமாக இருக்கையில் அது உண்மையிலேயே பரிகாரமாக இருக்க முடியுமா?

உண்மை என்னவெனில் பயங்கரவாதத்திற்கு அதில் உட்பட்ட எவருமே பரிகாரத்தை அறிந்தவர்களாக இல்லை. அது வித்தியாசமான விதங்களில் வித்தியாசமான இடங்களில் ஏற்படக்கூடும். “பயங்கரவாதம் ஹைட்ரா என்ற பயங்கரமான கற்பனை மிருகத்தைப்போன்றது,” என்று பயங்கரவாதத்தின்பேரில் ஆராய்ச்சி நிபுணர் பிரயன் ஜென்கின்ஸ் குறிப்பிடுகிறார். “அதன் தலையை வெட்டும்போதெல்லாம் அதன் இடத்தில் இரண்டு தலைகள் வளருகின்றன.”

ஒருசிலர், ஏன், ஒருவர்கூட பல இலட்சம் பேரை பயமுறுத்தக்கூடும். அன்மையில் ஐக்கிய மாகாணங்களில் டைவினார் தலைவலி மாத்திரைகளில் விஷம் கலந்த செயல், “சுத்தமான, சாதாரணமான பயங்கரவாதச் செயல்,” என்று விவரிக்கப்பட்டது. ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் சமுதாயத்திற்கு எதிரான ஒரு புரட்சியாக ஆகிவிட்டிருக்கும் இந்தப் பயங்கரவாதத்தைக் கையாளுவதற்கு அதிகாரிகள் வழியறியாதவர்களாக இருக்கின்றனர்.

ஆனால் ஏன் இந்தப் புரட்சி? பயங்கரவாதத்திற்குக் காரணம் என்ன? அநீதிகளைக் கண்டு வெறுப்படைந்த மக்கள், அவற்றால் ஒதுக்கப்பட்ட மக்கள் பயங்கரவாத செயல்தான் ஒரே வழி என்று உணருகின்றனர். கடந்த வசந்த காலத்தில் TWA விமானம் 847-ஐக் கடத்திய விமானக் கடத்திகள் “பூமியில் ஒடுக்கப்பட்டவர்கள்,” என்று எழுதி கையொப்பமிட்டார்கள். TWA விமான ஓட்டி தொலைக்காட்சி நிருபரிடம் பின்வருமாறு சொன்னார்: “இந்த மக்களுக்கு ஒரு நீதியான காரணம் இருக்கிறது.”

ரோம் விமான நிலையத்தில் கடந்த குளிர்காலத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு பயங்கரவாதியின் உடலில் “சீயோனியருக்கு” என்று ஒரு கடிதம் இருந்தது. அது பின்வருமாறு வாசித்தது; “எங்களுடைய தேசத்தையும், மதிப்பையும், மக்களையும் கெடுத்தீர்கள், அதற்குக் கைமாறாக நாங்கள் எல்லாவற்றையும் கெடுப்போம். உங்களுடைய பிள்ளைகளையுங்கூட; எங்கள் பிள்ளைகளின் கவலையை நீங்கள் உணருவதற்காக அப்படிச் செய்வோம். நாங்கள் சிந்திய கண்ணீருக்கு ஈடாக இரத்தத்தைச் சிந்துவோம்.” அந்தக் குறிப்பு, “பலஸ்தீனா தியாகிகள்” என்று கையொப்பமிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்தப் பலஸ்தீனா மனிதர் தியாகிகளா அல்லது பயங்கரவாதிகளா? நிக்கராகுவாவிலுள்ள ஜக்கிய மாகாணங்களின் ஆதரவு பெற்ற கொரில்லாப் போராளிகளைப் பற்றியதென்ன—அவர்கள் விடுதலை வீரர்களா அல்லது பயங்கரவாதிகளா? ஆம், ஒரு மனிதனுக்குப் பயங்கரவாதியாயிருப்பவன் இன்னொருவனுக்கு விடுதலை வீரன்.

என்றபோதிலும், பெயர் என்னவாக இருந்தாலும், பயங்கரவாதிகளின் செயல்களால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருப்பதாய் ஒருவரும் எண்ணமுடியாது. பாதுகாப்புக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள்—அயல்நாடுகளிலுள்ள தனது அலுவலகக் கட்டடங்களுக்கு ஐக்கிய மாகாணங்கள் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 500 கோடி டாலர் செலவழிக்கப்பட்டு வருவதுங்கூட—உண்மையான பரிகாரமாக இல்லை. பயங்கரவாதத்தின் காரணங்களை வேரோடுப் பிடுங்கிப் போடுவதற்கு இந்த வழிமுறைகள் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆனால் ஒரு பரிகாரம் உண்டு. பரிகாரத்தை வழங்குவது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்றாலும், கடவுளுடைய வல்லமைக்கு அப்பாற்பட்டதல்ல.

பூமியிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பரிகாரம், பயங்கரவாதம் அல்ல, ஆனால் கடவுளுடைய உறுதியான வாக்குத்தத்தங்களின் நிறைவேற்றமே பரிகாரம்: “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.”—நீதிமொழிகள் 2:21, 22.

கடவுளுடைய இந்த வாக்குத்தத்தம் வெகு விரைவில் நிறைவேறும். அவருடைய அரசராகிய உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்து அதைக் கவனித்துக்கொள்வார். இவரைக் குறித்துப் பைபிள் தீர்க்கதரிசனம் ஒன்று பின்வருமாறு சொல்லுகிறது: “நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.”—ஏசாயா 11:4.

ஆம், கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து வெகு சீக்கிரத்தில் எல்லா அநியாயங்களையும் அவற்றிற்குக் காரணமாக இருப்பவர்களையும் நிர்மூலமாக்குவார். கடவுளுடைய நீதியான புதிய ஒழுங்குமுறையில் எல்லா வகையான வன்முறையும் பயங்கரவாதமும் கடந்த காலக் காரியங்களாகிவிட்டிருக்கும். அப்பொழுது பூமியிலுள்ள எல்லோருமே பாதுகாப்பில், தீங்கிழைக்கப்படும் பயமின்றி வாழ்வார்கள்.—வெளிப்படுத்துதல் 21:3, 4. (g86 6/22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்