உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g88 1/8 பக். 11-14
  • பயங்கரவாதம்—பதில் என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பயங்கரவாதம்—பதில் என்ன?
  • விழித்தெழு!—1988
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பதில் மதத்திடம் உண்டா?
  • ஓர் அரசியல் பரிகாரம் உண்டா?
  • ஐ.நா. இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த முடியுமா?
  • பயங்கரவாதம் இல்லாத ஓர் சகோதரத்துவம்.
  • பயங்கரவாதம்—பாதிக்கப்படுகிறவர்கள் யார்?
    விழித்தெழு!—1988
  • பயங்கரவாதம்—அதன் பின்னால் இருப்பது என்ன? ஏன்?
    விழித்தெழு!—1988
  • பயங்கரவாதம் முடிவு அருகில்!
    விழித்தெழு!—2001
  • தீவிரவாதம் என்றாவது ஒழியுமா?
    வேறுசில தலைப்புகள்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1988
g88 1/8 பக். 11-14

பயங்கரவாதம்—பதில் என்ன?

நீங்கள் விமானம் மூலம் பயணம் செய்கிறவர்களாயிருந்தால், பயங்கரவாதத்தின் பாதிப்புகளை நேரடியாகக் காண்கிறவர்களாயிருப்பீர்கள். அநேகமாய் எல்லா சர்வதேச விமான நிலையங்களிலும் பாதுகாப்புசோதனைகள் செய்யப்படுகின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான இக்காரியம் அரசாங்கத்திற்கும் விமான நிறுவனங்களுக்கும் ஏராளமான செலவை உட்படுத்துகின்றன. 1984-ல் லாஸ் ஆன்ஜலிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டின்போது மட்டும் ஐக்கிய மாகாண அரசுக்கு ஏறக்குறைய 61/2 கோடி டாலர் (ரூ. 90 கோடி) செலவை உட்படுத்தியது. இந்தப்பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்தளவுக்கு பலன் தருவதாயிருக்கிறது?

சில காரியங்களில் நல்ல பலனைக் கொண்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் ஐக்கிய மாகாணங்களில் மட்டும் ஏறக்குறைய 35,000 துப்பாக்கிகள் அல்லது வெடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டன, மற்றும் 13,000 பேர் கைது கைது செய்யப்பட்டிருக்கின்றனர். (மாகாணச் செய்திப் பிரிவு அறிக்கை) எல் ஆல் என்ற இஸ்ரேலியவிமான நிறுவனம்தான் கடுமையான சோதனை நடவடிக்கையைக் கொண்டதாயிருக்கிறது, இது ஆகாயபயங்கரவாதத்தை வெகுவாகக் குறைந்திருக்கிறது.

என்றபோதிலும், அரசாங்கங்களும் மற்ற நிறுவனங்களும் காரணங்களைக் கையாளுவதற்குப் பதிலாக நோய்க் குறிகளைத்தான் கையாண்டு வருகிறார்கள். அவர்களுடைய பரிகாரங்கள் இன்றைய நவீன சமுதாயத்தில் ஆழமாகச் சென்றுவிட்ட ஒரு நோயின் அடிப்படைக் காரணத்தைச் சென்றெட்டுவதில்லை. விரோதம் மற்றும் தன்னலத்தில் வேர்கொண்ட ஒரு நோயாக இது இருக்கிறது. இன்றைய கருத்துக்கள் என்னவாயிருந்தாலும், அநீதிச் செயல்களுக்குச் ஏற்றத்தாழ்வும் அதிகரித்துக்கொண்டும் பெருகிக்கொண்டுமிருக்கின்றன. எனவே பதிலை எங்கே காணலாம்? மதம் விரோதத்தை அன்பாக மாற்ற முடியும்? அரசியல் ஒற்றுமையிலிருந்து ஒற்றுமை நிலைநாட்டப்படமுடியுமா? ஐக்கிய நாடுகள் சங்கம் நாடுகளை உண்மையிலேயே ஐக்கியப்படுத்த முடியுமா? அல்லது வேறு ஏதாவது ஒரு பதில் இருக்கிறதா?

பதில் மதத்திடம் உண்டா?

1969 முதல் வடக்கு அயர்லாந்தில் நிலவிவந்திருக்கும் பயங்கரவாதம். 15 லட்சம் மக்கள் தொகைக்கொண்ட இந்த நாட்டில் 2,000-ற்கும் அதிகமான ஆட்களின் உயிரைப் பலிவாங்கியிருப்பதுடன் 20,000-ற்கும் அதிகமான ஆட்களைக் காயப்படுத்தியிருக்கிறது. கடவுள் அன்பாகவே இருக்கிறார்.” என்ற அடிப்படைக் கருத்தின் பேரில் சார்ந்த அதே கிறிஸ்தவ பாரம்பரியத்தைப் பின்பற்றுவதாக அந்த மூர்க்கர் உரிமைப்பாரட்டுகின்றனர். என்றாலும் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டான்ட் பயங்கரவாதம் தொடருகிறது. மதம் மற்றும் வடக்கு அயர்லாந்து பிரச்சனை என்ற புத்தகத்தில் ஜான் ஹிக்கி பின்வருமாறு எழுதுகிறார். “ஒரு ரோமன் கத்தோலிக்கராக அல்லது புராட்டஸ்டான்டினராக இருப்பதன் விளைவாக ஆபத்தை அல்லது மரணத்தை ஏற்றுக்கொள்வது கூடிய காரியமாகிவிட்டிருக்கிறது; ‘பயங்ரவாத சமநிலை” என்ற வடக்கு அயர்லாந்தின் விளக்கத்தைக் காத்துக்கொள்ளும் வழியாக மிருகத்தனமான தாக்குதலை-மதத் கொலைகளை ஏற்றுக்கொள்வது கூடியகாரியமாகிவிட்டிருக்கிறது.”

அநேக எழுத்தாளர் மேலும் குறிப்பிடுவதாவது; “[வடக்கு அயர்லாந்து] அரசியல் மதத்தை தனது தனது நலத்திற்கு பயன்படுத்துவதாயில்லை . . .மதம் அரசியலை ஏவுவதாக இருக்கிறது” அப்படியென்றால், அது பரஸ்பர கொலை மற்றும் பழிவாங்குதலின் அரசியலாக இருக்கிறது.

அநேக மதங்கள் அன்பை அடிப்படைக் கொள்கையாக போதிக்கின்றனர். பயங்கரவாதிகளில் பெரும்பான்மையினர் மதப் பற்றுதல் உடையவர்கள்-கிறிஸ்தவம், யூத மதம், முகமதிய மதம், புத்த மதம், இந்து மதம், சீக்கிய மதம் போன்ற மதங்களைத் தழுவியவர்கள். ஆனால் அவர்களுடைய செயல்களில் அவர்களுடைய மதம் எந்தளவுக்குச் செல்வாக்கு செலுத்துகிறது? கடைசி ஆயுதம்-பயங்கரவாதிகளும் உலகத்தில் ஒழுங்கும் என்ற தன்னுடைய புத்தகத்தில் ஜன் ஷ்ரிபர், ஐரிஷ் குடியரசு சேனைத் தலைவர் ருவாய்ரி ஒப்ராடேக் கூறியதை மேற்கோள்காட்டுகிறார்: “நான் ஒரு சமயம் மிகவும் கடின நெஞ்சமுடைய ஒருவனோடு இருந்தேன். ஒரு பிரிட்டீஷ் வீரர் தொகுதியின் கீழ் நாங்கள் ஒரு சுரங்கத்தை வெடித்திட வேண்டியதாயிருந்தது . . .அவர்கள் அங்கு இருந்தார்கள். இந்தக் கடின நெஞ்சன் என்ன செய்வான்? சுரங்கத்தை வெடித்தழிக்கவும் அவர்களைச் சின்னாபின்னமாக்குவதற்கும் வெடி சாதனத்துக்கு இணைப்பைக் கொடுப்பதற்கும் முன்பு அவன் தன் கண்களை மூடினான். பின்பு அவன் ஒரு சிலுவையின் அடையாளத்தைப்போட்டு தனக்குள்ளே பக்தியோடு பின்வரும் வார்த்தைகளை மொழிந்தான்: ‘ஆண்டவர் இப்பொழுது அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு இரங்குவாராக!”

ஸ்பேனிலுள்ள வலது சாரி கத்தோலிக்கர் கொரில்லராஸ் டேல் ரே அல்லது கிறிஸ்து ராஜாவின் கொரில்லாக்கள் என்ற தங்களுடைய சொந்த பயங்கரவாத தொகுதி உருவாகுவதை மதம் தடுக்கவில்லை. பயங்கரவாதிகள் என்ற புத்தகத்தின் எழுத்தாளர்கள் கருத்துப்படி இந்தக் கொரில்லராஸ் “தங்கள் இயக்கத்திற்குத் தாங்கள் அரசியலுக்குக் கடமைப்பட்டிருப்பதுபோல் மதத்திற்கும் கடமைப்பட்டிருக்கின்றனர்.”

மதம் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த தவறியகாரியம் நமக்கு ஆச்சரியமாயிருக்க வேண்டுமா? கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையின் பேராசிரியர் C.E. ஸோப்போ பின்வருமாறு எழுதுகிறார். “மேற்கத்திய மதங்கள், அரசியல் நோக்கங்களுக்காக வன்முறை பயன்படுத்தப்படுவதை எதிர்படும்போது, தங்களுடைய விரோதிகளுக்குத் தங்கள் மதத்தாரிடையே ஊக்குவித்த நீதி சம்பந்தப்பட்ட உரிமைகளை வழங்க மறுத்தனர் . . .அந்த ‘அவிசுவாசிகளுக்கு” எதிராக பயங்கரவாதத்தையுங்கூட அனுமதித்தனர்.” போப் அர்பன் 2 இருந்த காலத்தில் நடைபெற்ற சிலுவை புனித போர்களை மேற்கோள் காட்டுகிறார். அவர் குறிப்பிடுவதாவது: “இஸ்லாம் மதத்தை நிரந்தரமாய் அடக்கி வைப்பதற்காக சிலுவைப் போர் தொடுக்கப்பட்டது, மற்றும் அது போர்களுக்கு முடிவைக் கொண்டுவரும் போர் என்பதாகக் கருதப்பட்டது. இஸ்லாம் மதம் எல்லா தீய சக்திகளின் அவதாரமாகக் கருதப்பட்டது, எனவே எதிரியாக இருக்கும் ஒரு கிறிஸ்தவ வீரனைக்கொல்லுவது ஒரு கிறிஸ்தவ வீரனுக்கு நாற்பது நாட்களுக்கான பிராயச்சித்தத்தை பெற்றுத்தரும். முகமதியரைக் கொல்லுவது ‘அனைத்து பிரயாச்சித்தமும் அடங்கியிருந்தது.”-பயங்கரவாதத்திற்குப் பகுத்தறிவுடன்கூடிய விளக்கம்.

அவிசுவாசியைக் கொல்லும் காரியத்தை மற்ற மதங்களும் சிறப்பிக்கின்றன. பரம பரதீஸூக்குச் செல்ல அது அனுமதி வழங்குகிறது என்று நம்புகின்றனர். எனவே, ஒரு பயங்கரவாதியின் மத விசுவாசம் கொலை செய்வதற்கான அவனுடைய உள்நோக்கத்தை பலப்படுத்துவதற்கும் தன்னுடைய உயிரைமாய்துக் கொள்ளக்கூடிய குண்டு வீச்சை நிறைவேற்றுவதற்கும் அவனுக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கக்கூடும்.

ஓர் அரசியல் பரிகாரம் உண்டா?

மேற்கத்திய நாடுகளில் அரசியல் மற்றும் இராணுவ நிபுணர்கள் பயங்கரவாதத்திற்கு பதில்களைக் கொண்டிருக்கின்றனர், என்றபோதிலும் அவற்றைப் பொருத்துவதில் அவர்கள் எப்பொழுதும் ஒற்றுமையாயிருப்பதில்லை. பாதிக்கப்படும் தேசங்களின் தற்போதைய கொள்கை, முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பது, மத்திய புலனாய்வு துறையின் இயக்குநர் வில்லியம் கேஸி கூறுகிறார்: “பயங்கரவாதிகளின் செயல்களைத் தடுக்கவும் எதிர்த்துப் போராடவும் அல்லது அதற்குப் பதிலடி கொடுக்கவும் படைபலம் தேவைப்பட்டால் அந்தச் சூழ்நிலைகளில் பலமான நடவடிக்கை எடுப்பதிலிருந்து நாங்கள் பின்வாங்கவோ அல்லது செயல்படாமலிருக்கவோ மாட்டோம். ஐக்கிய மாகாணங்கள் உட்பட அநேக நாடுகள் பயங்கரவாத தொகுதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கும் செயல்படுவதற்கும் தேவையான குறிப்பிட்ட விதமான படைபலத்தையும் திறமையையும் கொண்டிருக்கின்றன.”—ஹைட்ரா ஆப் கார்னேஜ் (Hydra of Carnage)

பெர்லின் இரவு விடுதி ஒன்றில் பயங்கரவாதிகள் வைத்த அணுகுண்டு வெடிக்கு பதில் செயலாக ஏப்ரல் 1986-ல் ஐக்கிய மாகாணங்கள் லிபியாவைத் தாக்கிய சம்பவம் இந்தத் தத்துவத்தை தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் அதற்கு உடனடியான விலை கொடுக்கப்பட வேண்டியதாயிருக்கிறது-லிபியாவின் பொதுமக்களின் உயிரிழப்பும் ஐக்கிய மாகாணங்களின் விமானமும் அதன் ஓட்டுநர்களும் காணாமற்போனதும்-இது தவிற்கமுடியாதது என்று ஐக்கிய மாகாண அதிகாரிகள் கருதுகின்றனர். பயங்கரவாதமும் அதற்கு எதிரான நடவடிக்கைகளுங்கூட மறைவான கிரயத்தைக் கொண்டிருக்கின்றன-கௌரவமும் நம்பிக்கைக்குரிய தன்மையும்.

அரசியல்வாதிகளும் இராணுவத்தினரும் இவற்றை மறைந்திருந்து செய்யப்படும் போர்வகையில் தியாகங்களாக கருதுகின்றனர். பென்ஜமின் நேட்டன்யாஹூ பின்வருமாறு எழுதுகிறார்: “பயங்கரவாதத்தால் அச்சுறுத்தப்படும் குடியரசுப் பிரஜைகள் அனைவரும் ஒரு பொதுப் போரில் தங்களை ஒரு விதத்தில் வீரர்களாகக் காணவேண்டும். பயங்கரவாதத்துக்கு அவர்கள் சரணடைந்துவிடும்படியாக தங்கள் அரசாங்கத்தை வற்புறுத்தக்கூடாது . . . .பயங்கரவாதத்துக்கு எதிரான நம்முடைய போரில் வெற்றி பெற வேண்டுமானால், மக்கள் தியாகத்தைத் தாங்கிக்கொள்ளவேண்டும், மற்றும் அன்பானவர்களை இழக்க வேண்டியதாக இருந்தால், அதையும் அளவுகடந்த வேதனையையும் சகித்துக்கொள்ள தயாராக இருக்கவேண்டும்”-பயங்கரவாதம்-அதை எப்படி வெற்றிகரமாக மேற்கொள்ளலாம்.

அப்படியென்றால், பயங்கரவாதத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் காரணங்கள் அரசியலால் நீக்கப்படமுடியுமா? அநியாயங்கள் சரிசெய்யப்பட்டு நிலைமை மாற்றப்படமுடியுமா? அரசியல் கருத்துரையாளர்களின்படி முடியாது. ஏன் முடியாது? ஏனென்றால் இதற்கு முந்திய கட்டுரையில் நாம் பார்த்தபடி, பேரளவான பயங்கரவாதம், இரு பெரிய அரசியல் முறைகளுக்கிடையே இருந்துவரும் மோதலில் இன்னொரு கருவியாக இருந்துவருகிறது. எனவே அரசியல் பயங்கரவாதத்தைப் பேணி வளர்க்கிறது.

உதாரணமாக, பிரெஞ்சு எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜீன் ஃபிரான்காய்ஸ் ரெவல் பின்வருமாறு எழுதுகிறார்: “ ஜனநாயகத்தின் போரில் தாங்கள் செய்யும் தாக்குதலை ‘அழுத்த நிலைக்கு மறைமுக வழி‘ என்று தங்களுடைய கொள்கைகளிலும் நூல்களிலும் விளக்குகின்றனர்.ஃபாஸிசத்திலிருந்து கம்யூனிஸத்திற்குப் போவதைக் காட்டிலும் அதிக எளிது என்பதுதான் அதன் நோக்கம். எனவே இந்தப் ‘புரட்சியாளர்கள்’ முதலாவதாக ஜனநாயக அரசுகளை ஃபாஸிச செயல்முறைக்குத் தள்ளுவதாகும்; தொடர்ந்து, ஃபாஸிச சாம்பலில் சோஷியலிஷத்தை வளர்ப்பது இரண்டாம் கட்டமாக இருக்கிறது.” இவ்வாறு, சில நாடுகளில், பயங்கரவாதிகள் ஒரு வலது சாரி இராணுவ புரட்சித் தொகுதியை உருவாக்க அல்லது இராணுவ அதிகாரிகளைத் தூண்டிவிட வேண்டுமென்றே கொலைகளைச் செய்வார்கள்.

ஐ.நா. இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த முடியுமா?

அரசியல் அறிஞர் C.E. ஸோப்போ ஐ.நா.வின் சிக்கலான நிலைகுறித்து பின்வருமாறு விளக்குகிறார்: “சர்வதேச பயங்கரவாதமாக இருக்கும் காரியத்தின் பேரில் அல்லது உறுப்பு நாடுகள் பொருத்தமாக பிரதிபலிக்கவேண்டிய காரியங்களிலும் ஐக்கிய நாடுகள் எந்த ஒரு ஒப்பந்தத்திற்கும் வரமுடியவில்லை என்பது ஆச்சரியத்திற்குரியதன்று.” ஐக்கிய நாடுகள் ஒரு சர்வதேச அரசாங்கங்களாகவும் அதில் பெரிய வல்லரசுகள் சண்டையிடும் வரை மான்கள் போன்று போரில் தங்கள் கொம்புகளை பூட்டி சொற்பொருள் ஆய்வால் செய்யப்பட முடியாத நிலைக்குள்ளிருக்கின்றன என்பதை உணரும்போது, அது நமக்கு ஆச்சரியத்தைத் கொடுப்பதாயில்லை.

மற்றொரு அம்சம், ஐ.நா.-வின் உறுப்பு நாடுகள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும்போது அவை தங்களை சிறுபான்மையினராக காண்கின்றனர். ஸோப்போ விளக்கியவாறு இது இருக்கிறது: “சர்வதேச பயங்கரவாதத்தின்பேரில் ஐ.நா.-வின் பொது கூட்டத்தில் நிறைவேற்றப்படும் ஒரு தீர்மானம் . . .சர்வதேச பயங்கரவாதச் செயல்களைக்குறித்து அதிக ஆழ்ந்த கவலை’ தெரிவிப்பதாயிருந்தாலும் குடியேற்ற நாட்டினர், பழங்குடி ஆட்சியின் கீழிருப்போர் மற்றும் அந்நிய அரசின் ஆதிக்கத்திலிருப்போரின் சுயதீர்மானத்திற்கும் சுதந்திரத்திற்குமான உரிமையை உறுதிபடுத்தின” இதே தீர்மானமானது சுயதீர்மானத்திற்கும் மக்களின் நியாயமான உரிமைகளை மறுக்கும் வகையில் செயல்படும் குடியேற்ற, பழங்குடி மற்றும் அந்நிய ஆதிக்க அரசுகளின் ஒடுக்குதலையும் பயங்கரவாதச் செயல்களையும் கண்டனம் செய்கிறது.

இப்படியாக ஸோப்போவின் கருத்துபடி, பயங்கரவாதத்தின் பேரில் ஐ.நா. இரட்டை தராதரத்தை அங்கீகரித்திருக்கிறது. அவர் தொடர்ந்து கூறுகிறார்: “எனவே பயங்கரவாதம் தேசிய சுயதீர்மானத்திற்கு வழியாக இருக்கும்போது அது ஆச்சரியப்படுகிறது, மற்றும் சுதந்திரத்தை தடை செய்யும் விதத்தில் தேசத்தை அச்சுறுத்தும்போது அது கண்டனம் செய்யப்படுகிறது. புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தேசங்கள் விடுதலைக்காக தாங்களே பயங்கரவாதத்தைப் பயன்படுத்தியிருப்பதால் அதை மற்றவர்களின் காரியத்தில் கண்டனம் செய்வதைக் கடினமாகக் காண்கிறது.” (பயங்கரவாதத்திற்குப் பகுத்தறிவுடன்கூடிய விளக்கம்) எனவே பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு திறம்பட்ட கருவியாக இருப்பதில்லை. நீதியுணர்வு வெற்றிகொள்வதற்கில்லை, ஏனென்றால், ஸோப்போ முடிவாகக் கூறுவதுபோல்,” நீதியுணர்வு என்பதற்கு விளக்கத்தை நிர்ணயிப்பது அரசியல்.” இதற்கிடையில் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் துன்புற்று மறித்துவிடுகின்றனர்.

பயங்கரவாதம் இல்லாத ஓர் சகோதரத்துவம்.

ஜான் ஷ்ரீபர் தேசங்கள் எதிர்ப்படும் இரண்டக நிலைகுறித்து பின்வருமாறு: “கவலைக்கிடமான உண்மை என்னவென்றால், உலகத்திலிருந்து பயங்கரவாதத்தை நீக்கிப்போட விரும்பும் நாடுகள் -இவை பெரும்பான்மையினர் அல்ல-பகுதிப் பரிகாரங்களோடு தங்களை திருப்தி செய்துகொள்ளும் நிலைக்கு வற்புறுத்தப்படுகின்றனர். தீர்மானிக்கப்படும் தண்டனைகளை அர்ப்பணித்திருக்கும் பயங்கரவாதங்களை அச்சுறுத்துவதாயில்லை, அல்லது தொடர்ந்து போராட முடிந்தவர்கள் வன்முறை உணர்வோடு பிரதிபலிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.” கடைசி ஆயுதம்-பயங்கரவாதமும் உலகத்தில் ஒழுங்கும்.

இந்தப் பிரச்னையை ஆராய்வதில் பேராசிரியர் ஸோப்போ எட்டிய முடிவு: “பயங்கரவாதமின்றி எந்த நவீன நாடும் பிறந்திடவில்லை.” அப்படியென்றால், அரசியல் உருவாகுவதில் பயங்கரவாதம் தவிர்க்கமுடியாத ஓர் இழையாக இருக்கிறது என்பதை அது குறிப்பிடுவதாயிருக்கிறது. என்றபோதிலும், பயங்கரவாதம் அல்லது வன்முறை அல்லது அரசியல் தலையிடுதல் இல்லாத “தேசம்” ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதில் நாம் நிச்சயமாயிருக்கலாம். அது முப்பது லட்சத்திற்கும் அதிகமான ஆட்களாலானதும், உலகமெங்குமுள்ள ஆட்களாலானதும் வித்தியாசமான கலாச்சாரம், மொழி மற்றும் மதங்களிலிருந்த வந்தவர்களாலானதுமான ஒரு தேசம். அவர்கள் யார்? இந்தப் பத்திரிகையுடன் உங்களை சந்திக்க வருகிறவர்கள்—யெகோவாவின் சாட்சிகள்.

அவர்கள் ஒரு சர்வதேச மக்கள் கூட்டமாக இருப்பதைவிட அதிகம் உட்பட்டிருக்கிறது. அவர்கள் தேசிய வரம்பு நீங்கிய ஒரு சகோதரத்துவம். அவர்கள் ஒரே நம்பிக்கையை—கடவுள் கொடுத்திருக்கும் நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். தங்களுடைய செல்வாக்கை உலகமுழுவதும் பரப்பிக்கொண்டிருக்கின்றனர். பயங்கரவாதத்தினால் அல்ல, ஆனால் சமாதானமான பைபிள் கல்வியினால் அப்படிச் செய்துவருகின்றனர். அநேகமாய் பூமியின் ஒவ்வொரு தேசத்திலும் மனிதவர்க்கத்தின் பிரச்னைகளுக்கு ஒரே பரிகாரம் கிறிஸ்துவின் மூலமான கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே என்று சிபாரிசு செய்து வருகின்றனர்.-மத்தேயு 6:9,11.

ஆம் யெகோவாவின் சாட்சிகள் போரையும் பயங்கரவாதத்தையும் ஏற்படுத்தும் பிளவுண்டாக்கும் அரசியல் மற்றும் தேசபக்தியையும் கடந்து உயர்ந்துவிட்டனர். உண்மையான சமாதானத்தின் வாழும் மக்களாக சீக்கிரத்தில் இந்தப் பூமி கடவுளுடைய ராஜ்யத்தினால் மட்டுமே ஆளப்படும் ஒரு காலத்திற்காகத் தங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். அது உலகத்தை மதம் மாற்றுவதால் கொண்டுவரப்படாது, ஆனால் அர்மகெதோன் என்ற கடவுளுடைய யுத்தத்தில் உலகம் சுத்திகரிக்கப்படுவதால் கொண்டுவரப்படும்..—மத்தேயு 24:37-39; வெளிப்படுத்துதல் 16:14,16.

அப்பொழுது உண்மையான சமாதானமும் நித்திய ஜீவனும் பூமியிலுள்ள சாந்தகுணமுள்ள மக்களுடைய பங்காக இருக்கும். (தீத்து 1:2; வெளிப்படுத்துதல் 21:3,4) பயங்கரவாதம் இனிமேலும் இராமல் போகும் அந்த ராஜ்யத்தைப் பற்றி நீங்கள் இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்பினால், உங்கள் சமுதாயத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளை சந்திக்க தயங்காதீர்கள் அல்லது உங்கள் தேசத்திலுள்ள இந்தப் பத்திரிக்கையின் பிரசுரிப்பாளருக்கு எழுதுங்கள்.

[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]

கடந்த 20 ஆண்டுகளில் ஐக்கிய மாகாணங்களில் மட்டும் ஏறக்குறைய 35,000 துப்பாக்கிகள் அல்லது வெடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டன, மற்றும் 13,000 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.—மாகாணச் செய்திப் பிரிவு அறிக்கை.

[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]

“சுரங்கத்தை வெடித்தழிக்கவும் அவர்களைச் சின்னாபின்னமாக்குவதற்கும் இணைப்பைக் கொடுப்பதற்கு முன்பு அவன் தன் கண்களை மூடினான். பின்பு அவன் ஒரு சிலுவையின் அடையாளத்தைப்போட்டு தனக்குள்ளே பக்தியோடு பின்வரும் வார்த்தைகளை மொழிந்தான்:“ ஆண்டவர் இப்பொழுது அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு இரங்குவாராக!” (g87 1/8)

[பக்கம் 14-ன் பெட்டி]

கிறிஸ்து இயேசுவின் கீழ் கடவுளுடைய ராஜ்யம் பயங்கரவாதத்தை நீக்கிப்போடும்

பயங்கரவாதம் என்பது அனுகூலமற்ற நிலையில் தாங்கள் இருப்பதாக உணரும் நிம்மதியிழந்த ஆட்களின் போர் என்பதாகச் சொல்லப்படுகிறது. கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் எவரும் தாங்கள் அனுகூலமற்ற நிலையில் இருப்பதாக உணரவேண்டிய அவசியம் இல்லை. கிறிஸ்து இயேசுவின் ஆட்சி சம்பந்தமான பின்வரும் தீர்க்கதரிசனங்களில் இதைக் காணலாம்.

“தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத் தீர்ப்புகளையும் ராஜாவின் குமாரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும். அவர் உம்முடைய ஜனங்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார். ஜனத்தின் சிறுமைப்படுகிறவர்களை நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார். கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் [ஒடுக்குதலுக்கும் வன்முறைக்கும். NW] தப்புவிப்பார். அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.”—சங்கீதம் 72:2,4 12-14.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்