பயங்கரவாதம்—அதன் பின்னால் இருப்பது என்ன? ஏன்?
லண்டன், ஏப்ரல் 17—முவமார் எல்-காடாஃபி அரசுக்கு எதிரான புரட்சியின்போது லிபியன் தூதரகத்திலிருந்து சுடப்பட்ட இந்திர துப்பாக்கிச் சூட்டில் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டார். 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.”—தி நியுயார்க் டைம்ஸ்.
“உள்ளேயிருந்த துப்பாக்கி மனிதர் ஒரு திறந்த ஜன்னல் வழியாய் சுட்டனர், போராட்டம் நடத்துபவர்கள் தானியத்தக்கத் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். தற்காப்பில்லாத காவல் பெண் முதுகில் சுடப்பட்டாள். இந்த மிருகத்தனமான சம்பவத்திற்குப் பின்பு பிரிட்டிஷ் அரசு அந்தக் கொலைகாரரை அவர்களுடைய கொலை ஆயுதங்களுடன் பத்திரமாக நாட்டிலிருந்து வெளியேற்றியது”—பயங்கரவாதம்—மேற்கு அதை எப்படி வெற்றிகரமாக மேற்கொள்ளலாம், ஆங்கிலம்.
தூதரக ஊழியராக இருந்ததனால் அந்தத் துப்பாக்கி மனிதருக்கு அரசியல் தூதுவருக்குரிய காப்புரிமை வழங்கப்பட்டது”
மக்களும் மக்கள் தொகுதிகளும் பயங்கரவாதத்தினிடமாகச் செல்வதற்குக் கரணம் என்ன? அவர்களுடைய தாக்குதல்களுக்குரியவர்கள் யார்? பயங்கரவாதம் சாதிப்பது என்ன?
பயங்கரவாதம் பல்வேறு இனம், சமுகம் மற்றும் அரசியல் அநீதிகளைச் சுட்டிக்காட்டுவதாயிருக்கிறது என்பது ஒரு கருத்து. கத்தோலிக்க பாதிரியும் இறைமையியல் வல்லுநருமான ஜேம்ஸ் T. பர்ட்ஷேல் குறிப்பிட்டதாவது: சில பயங்கரவாத செயல்கள் இனம் மற்றும்/அல்லது மதம் (மற்றும் பொதுவாக பொருளாதாரம்) சார்ந்த சிறுபான்மையினரின் சுய ஆட்சி கோரும் காரியத்தால் ஏற்படுகிறது: ஸ்பேன் நாட்டு பாஸ்க்ஸ், உல்ஸ்டரில் கத்தோலிக்கர், பிலிப்பீன்ஸில் ஹக்ஸ். . . சிலுவை பெரும்பான்மையான கருத்து வேறுபாட்டால் ஆபத்தான நிலையிலிருக்கும் அரசாங்கங்களால் நடத்தப்படுகிறது. . . அவற்றில் சில அரசாங்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திட வேண்டும் என்ற எண்ணங்கொண்ட ஒரு தேசிய சிறுபாள்மையினரின் இயக்கமாக இருக்கின்றன.
ஆனால் பயங்கரவாதத்தை தெரிந்துகொள்கிறவர்கள் வெறுமெனே சிறுபான்மையினர் தொகுதியா? பர்ட்ஷெல் தொடர்ந்து கூறுகிறார்: “இன்னொரு அரசாங்கத்தை, ஒத்துழைப்புத் தராத தேசத்தை மட்டுப்படுத்த, நிலையற்றிருக்கச் செய்ய மற்றும் கவிழ்த்திட அரசாங்கங்களால் ஆதரிக்கப்பட்ட பயங்கரவாதமாகச் சில அமைகின்றது,“—எதிர்த்து மறுபோராட்டம் செய்தல்.
மற்ற கருத்துரையாளர்களின்படி, பயங்கரவாதத்திற்குப் பின்னாலிருக்கும் உள்நோக்கங்கள், பார்வையாளரின் அரசியல் நம்பிகைகளுக்கேற்ப வித்தியாசமாக விளக்கப்படலாம், அநியாயங்கள் நடக்கும்போது குறைகளுக்குச் சட்டப்பூர்வமான தீர்வு காணப்படாதபோதும் பயங்கரவாதச் செயல்களே ஒரே வழி என்று சிலர் வாதாடுகிறார்கள். இன்னும் சிலர், மேற்கத்திய குடியரசுக்கு எதிரான ஒரு செயல்முறையாகவே பயங்கரவாதத்தை நோக்குகின்றனர். இது எதிர் அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்களால் ஏவப்பட்டு செயல்படுத்தப்படுவதாகக் கருதப்படுகிறது. இந்தச் சிக்கலான பிரச்சனை குறித்து சில உண்மைகளையும் கருத்துக்களையும் ஆராய்வோமாக.
வடக்கு அயர்லாந்தில் ஏன் பயங்கரவாதம்
வடக்கு அயர்லாந்து-பிளவுபட்ட மாநிலம் என்பதன் எழுத்தாளர்கள்படி, 350 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லண்டை சேர்ந்த பலர் உட்பட்டிருந்த பிரிட்டிஷ் புராட்டஸ்டான்டினர் ஐரிஷ் கத்தோலிக்க மண்ணுக்கு மாற்றப்பட்டனர். இது கலாச்சார மோதலையும் வேலைக்கான போட்டியையும் ஏற்படுத்தியது. அந்தப் புத்தகம் பின்வருமாறு குறிப்பிடுகிறது: 1607-ல் ஆரம்பமான உல்ஸ்டர் ‘குடியேற்றம்’ என்று அழைக்கப்பட்ட இந்த 17-வது நூற்றாண்டில்தானே வடக்கு அயர்லாந்து புராட்டஸ்டான்டினர் இங்கு வந்தனர். இது கடைசியாக அயர்லாந்துத் தீவு முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சியை பலமாக ஸ்தாபித்தது” இந்த ஆங்கிலேயர் ஆட்சி, பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த வெறுப்புணர்ச்சிக்கும் வன்முறைக்கும் அடிப்படைக் காரணமாக இருந்தது.
கத்தோலிக்க ஐரிஷ் சுதந்திர மாநிலம் (அயர்) 1921-ல் ஏற்படுத்தப்பட்டது. வட கிழக்கில் முக்கியமாக புராட்டஸ்டான்ட் பிரதேசங்களாயிருந்த ஆறு பிரதேசங்கள் வடக்கு அயர்லாந்தாக ஒரு தனி பிரதேசமாக விடப்பட்டது. ஐரிஷ் தேசியவாதிகளின் கருத்துப்படி இந்தச் செயல் அயர்லாந்தைப் பிரித்தது அன்று முதல் சட்டப்பூர்வமான அங்கீகாரம் பெறாத ஐரிஷ் குடியரசு சேனை (IRA) அயர்லாந்தை ஒன்றுபடுத்துவதற்குத் தொடர்ந்து போராடி வந்திருக்கிறது- இதைப் புராட்டஸ்டான்டினர் பலமாக எதிர்க்கின்றனர். ஏன்? ஏனென்றால், டப்லினில் ‘கத்தோலிக்கபோப்பாட்சி’ என்று அவர்கள் குறிப்பிடும் ஆட்சியின் கீழ் வருவதற்கு அவர்கள் மறுக்கிறார்கள்.
அண்மையில் அயர்லாந்தில் விவாகரத்தை தடைசெய்வதற்காக எடுக்கப்பட்ட ஒரு வாக்குப் பதிவில் புராட்டஸ்டான்டினரின் கருத்து தி நியு யார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் பின்வரும் வார்த்தைகளில் கொடுக்கப்படுகிறது: “குடியரசுடன் எந்த ஒரு ஒப்பந்தத்துக்கு வருவதையும் எதிர்க்கும் வட அயர்லாந்து அரசியல்வாதிகள், ஐரிஷ் குடியரசில் ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் ‘தனி ஆதிக்கத்திற்கான“ வழிமுறை என்று அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முதல் மனிதராக இருந்தனர்.”
ஐரிஷ் குடியரசு சேனை இப்பொழுது இரண்டு பிரிவுகளாகிவிட்டது.—அஃபிஷியல்ஸ் மற்றும் புரொவிஷனல்ஸ் (புரொவோஸ்). சரித்திரப் பேராசிரியராகிய தாமஸ் E. ஹாச்செ கருத்துபடி, ஐரிஸ் குடியரசு சேனையின் அஃபிஷயல்ஸ், முழு அயர்லாந்துக்கு, முப்பத்திரண்டு பிரதேச சோஷியலிச குடியரசை ஏற்படுத்த தன்னை அற்பணித்திருக்கிறது. . .புரோவோஸ் ஒரு கூட்டாட்சி தீர்வுக்காக வாதாடுகிறது.“ (பயங்கரவாதத்தின் நியாயவிவாதம்) இரண்டாவது பிரிவினர் தங்களுடைய கொள்கைகளை எந்தளவுக்கு வைராக்கியமாக நோக்குகின்றனர் என்பது, 1984-ல் பிரிட்டிஷ் பிரதமர் தாட்சரையும் அவருடைய பாராளுமன்ற உறுப்பினரையும் கொல்லுவதற்காக பிரைட்டன் ஹோட்டலில் புரொவோஸ் வைத்த வெடிகுண்டு சம்பவம் தெளிவாகச் காண்பிக்கிறது.
மதம், அரசியல் மற்றும் இன பிரச்னைக்குரிய அம்சங்கள் உட்பட்டிருந்தாலும், பதில் தேவைப்படும் சில கேள்விகள் இன்னும் இருக்கின்றன: பயங்கர வாதத்திற்குப் பின் ஏதாவது ஆழமான உள்நோக்கங்கள் உண்டா? வல்லரசுகள் எந்தளவுக்கு உட்பட்டிருக்கின்றனர்?
பயங்கரவாதத்திற்குப் பின்னாலிருக்கும் உள்நோக்கம்
அரபு பயங்கரவாதத் தொகுதிகளில் பல தங்களுடைய செயல்கள் நியாயமானதென்று விவாதிக்கின்றனர். 1948-ல் இஸ்ரேல் தேசம் அமைக்கப்பட்டபோது, தங்களுடைய தாயகமாகிய பலஸ்தீனாவை இழந்த பலஸ்தீன அகதிகளின் பரிதாப நிலையைச் சுட்டிக்காட்டுகின்றன. பத்தாண்டுகள் பல கடந்திருக்க, உணர்ச்சிகள் பொங்கி, இப்பொழுது அரபு பயங்கரவாதிகளின் நோக்கம் ஒரு தனிப்பட்ட தாயகம் அல்ல, ஆனால் யூதர்களுக்கு எதிராய்க் கொடிய ஒன்றாக இருக்கிறது-இஸ்ரேலை முற்றிலும் அழித்துவிட வேண்டும் என்றிருக்கிறது. இது எப்படி தெரிகிறது?
பின்வரும் இந்த மேற்கோள் ஹிஸ்பலா (கடவுளுடைய கட்சி) என்ற பிரிவின் “திறந்த கடிதத்”திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இது மத்திய கிழக்கில் இயங்கிவரும் ஒரு ஷியைய்ட் தொகுதி.
“பின்வரும் இலட்சியங்களை அடைந்து தீர்வது மட்டும் இந்தப் பகைவர்களுக்கு [இஸ்ரேல், ஐக்கிய மாகாணங்கள், பிரான்ஸ் மற்றும் (லெபனீஸ்) ஃபாலஞ்] எதிரான எங்களுடைய குமாரர்களின் போராட்ட உணர்ச்சி உச்சக்கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கும் நிலையிலிருக்கிறது:
“இஸ்ரேல் இன்றிருப்பதிலிருந்து அழிவை அடைவதற்கு முன்னாக அதை லெபனானிலிருந்து கடைசியாக புறப்படப் பண்ணுவதும் வணக்கத்துக்குரிய எருசலேமை கொடியவர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதுமாகும்.”—Hydra of Carnage (ஹைட்ரா ஆப் கார்னஜ்)
மறுபட்சத்தில், பல பயங்கரவாதச் செயல்கள் ஈரானின் அயட்டோல கோமினி மற்றும் அவருடைய தத்துவத்தின் செல்வாக்கிலிருக்கும் “தியாகிகளின்“ செயல்களாகும். பரிசுத்த எரிச்சல் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் வார்த்தைகளில் அது விளக்கப்பட்டிருக்கிறது: “இஸ்லாம் மதம் அழிக்கப்பட முடியாதது என்பதை அனைத்து உலக அரசாங்கங்களும் அறிய வேண்டும். இஸ்லாம் உலகத்தின் அனைத்து தேசங்களிலும் வெற்றிசிறக்கும், இஸ்லாமும் குமாரனின் போதனைகளும் உலகத்தில் ஆதிக்கம் கொள்ளும்.“
இந்த நோக்குநிலை பின்வரும் முடிவுக்கு வர அவரை வழிநடத்துகிறது: “என்னே தன்னில்தானே ஊழல்மிகுந்த அரசாங்க முறைகளை அழித்து விடுவதைத் தவிர வேறு வழி இல்லை. இது எல்லா முகமதியராலும் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கடமையாகும்.”
மற்ற பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் சக்தி, புரட்சி மனங்கொண்ட சோஷியலிஸமும், முதலாளித்துவமும் கவிழ்க்கப்பட்டதுமாகும். ஜன் ஷ்ரிபர், கடைசி ஆயுதம்—பயங்கரவாதிகளும் உலக செயல்முறையும் என்ற தன்னுடைய புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: கொள்ளையடிக்கும் திறமை பொதுவாக முதலாளித்துவத்தால் ஈடு செய்யப்படுகிறது மற்றும் முதலாளித்துவம் மக்களாட்சியால் பக்குவப்படுத்தப்பட்டாலும், படாவிட்டாலும் ஃபாசிஸத்துடன் சேர்க்கப்படுகிறது.” பயங்கரவாதத்தை ஆதரிப்பவராய் ஒரு ஜப்பான் ஆதரவாளர் சொன்னார்: “மக்கள் மக்களை சுரண்டி வாழ்வது என்று முதலாளித்துவம் ஏற்படுத்தியிருக்கும் நிலைமையை அல்லது அந்த உண்மையை இந்த உலகத்தில் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. போராடுவதற்கு மனமுள்ளவர்களாக இருப்பதற்கு இதுவே எங்கள் உள்நோக்கம்.”
என்றபோதிலும் பயங்கரவாதிகளை மற்றவர்கள் வித்தியாசமான கோணத்தில் பார்க்கிறார்கள். இஸ்ரேல் அரசு தூதர் பென்ஜமின் நெட்டனியாஹூ எழுதுகிறார்: பயங்கரவாதம் ஏதோ ஒரு காரியத்தின் இயல்பான விளைவு அல்ல. அது ஒரு தெரிவு, ஒரு தீய தெரிவு.” அவர் பின்வருமாறு விவாதிக்கிறார்: பயங்கரவாதத்தின் அடிப்படை காரணங்கள் குறைகளில் அல்ல, ஆனால் கட்டுப்படுத்தப்படாத வன்முறையினிடமாக இருக்கும் ஒரு மனச்சாய்வில் காணப்படுகிறது. எல்லா ஒழுக்க தடைகளையும் நீக்கிப்போடுவதை சில தனிப்பட்ட கருத்துகளும் மத இலக்குக்களும் நியாய நிரூபணம் செய்கிறது, வற்புறுத்துகிறது.”—பயங்கரவாதம்-மேற்கு அதை எப்படி வெற்றிகரமாக மேற்கொள்ளலாம்.
ஆனால் நம்முடைய நவீன சமுதாயம் ஏன் திடீரென பயங்கரவாதத்திற்குப் பலியாகியிருக்கிறது?
பாதிப்புக்குள்ளாகும் ஒரு சமுதாயம்
பயங்கரவாதத்தில் ஐ.மா. நிபுணராகிய நீல் லிவிங்ஸ்டன் பின்வருமாறு எழுதுகிறார்: “நம்முடைய உலகம் அதிக நாகரீக நகரங்களைக் கொண்டதாகவும் அதிக சிக்கலானதாகவும் மாறிக்கொண்டிருப்பதால், அதற்கு இணையாக, பெரும்பாலான மக்களின் வாழ்க்கையைக் கெடுப்பதற்கு அல்லது தங்களுடைய எண்ணத்தை அவர்கள் மீது வற்புறுத்துவதற்கு மனம் கொண்ட சிறிய தொகுதிகளின் அல்லது தனியாட்களுடைய திட்டங்களின் பாதிப்புகளுக்கு ஆளாகிறோம். நம்முடைய சமுதாயம் ஏன் பயங்கரவாதிகளின் செயல்களால் இந்தளவுக்குப் பாதிக்கப்பட்டு வருகிறது? “நம்முடைய உயிர் நாளங்களாகிய தண்ணீர், எரிபொருள் மற்றும் மின்சக்தி, போக்குவரத்து, செய்தித்தொடர்பு மற்றும் சுகாதாரம் ஆகிய அனைத்தும் மேல்நிலை பயங்கரவாதிகளின் தயவிலிருக்கிறது..”— Hydra of Carnage (ஹைட்ரா ஆப் கார்னேஜ்)
நம்முடைய ஜீவாதார முறைகளின் வலிமையற்ற தன்மையால் பூர்வ காலத்தில் ஒரு படை செலுத்திய வல்லமையை இன்று ஒரே பயங்கரவாதி செலுத்தமுடிகிறது. லிவிங்ஸ்டன் தொடர்ந்து கூறுகிறார்: “தொழில் நுட்பம் முன்னேறியிருப்பதால். . .முன்பு இருந்திராத வகையில் ஒரு மனிதன் அதிகப்படியான கொல்லும் தொழில் நுட்ப சகாப்தத்தில் வாழும் தனிப்பட்ட ஒருவன், பட்டயமும், Back, ஈட்டியும் முக்கிய போர்க் கருவிகளாக இருந்த சமயத்தின் ஒரு சேனைக்கு ஈடாக இருக்கிறான். இன்றைய உலகத்திற்குப் பயங்கரவாதிகள் ஏன் ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு முக்கிய கரணம்.”
நவீன சமுதாயத்தில் பாதிப்புக்கான இன்னொரு அம்சம், செய்தித்துறை சம்பவங்களைத் தெரியப்படுத்துவதன் உடனடியான பாதிப்பு, பயங்கரவாதத்தின் வல்லமையை தொலைக்காட்சி பெரிதுபடுத்துகிறது. தன்னுடைய நோக்கம் அல்லது கொள்கை உலகெங்கும் அறியப்பட வேண்டும் என்பது பயங்கரவாதியின் வாஞ்சை-செய்தித் தொடர்புக்கு நன்றி, அதை அடைந்துவிடுகிறான்!
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஒரு செய்தி உலகமுழுவதும் பரவவேண்டுமானால் பல நாட்கள் எடுத்தன. ஆனால் இப்பொழுதோ செய்தி உடனடியாகக் கிடைக்கப்பெறுகிறது. சில சம்பவங்களில் பயங்கரவாதி தான் செய்யும் காரியத்தை தான் தொலைக்காட்சியில் பார்க்க முடிகிறது. தன்னுடைய பாதத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கையில், மறுபக்கத்திலுள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவனால் காண முடிகிறது. “பொது மக்களின் கவனத்தைப் பெற்றிட வேண்டும் என்ற தூண்டுதல்தானே பயங்கரவாதிகளுடைய செயல்களின் சிறந்த வெற்றிக்குக் காரணமாக இருந்து வந்திருக்கிறது என்று ஜன் ஷ்ரீபர் கூறுகிறார்.
ஆனால் பயங்கரவாதம் தொடர்ந்து செழிந்தோங்குவதற்கு வேறு ஏதாவது காரணங் உண்டா?
பயங்கரவாதமும் இரண்டு எதிர் கருத்துப்போக்குகளும்
எதிர்காலத்திற்கு எந்த ஒரு நம்பிக்கையையும் அளிக்கக்கூடாதவர்களாக, பயங்கரவாதத்தின்பேரில் இரண்டு நிபுணர்கள் பின்வருமாறு எழுதுகின்றனர்: “பயங்கரவாதம் ஒழியாது. சிறிய பலவீனமான மாநிலங்கள் தங்களுடைய அரசியல் செல்வாக்கை அதிகரிக்க முடியும் என்றும் நில வளங்கள் குறைபாட்டால் வாதிக்கப்படுவதால், பயங்கரவாதத்தை ஓர் அரசியல் மற்றும் இராணுவ கருவியாக பயன்படுத்துவதை அவை கைவிடுவதாகத் தெரியவில்லை.” அநேக சமயத்தில் பெரிய வல்லரசுகள் பயங்கரவாதத்தின் மூலம் துணை போரில் ஈடுபடுவதைச் சாதகமாகக் காண்கின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். “பெரிய பலமான தேசங்கள் வேறுவிதமாக போர் முயற்சிகளில்லாமலேயே பயங்கரவாதத்தின் மூலம் தங்களுடைய தேசிய கொள்கைகளை நிலை நாட்ட அல்லது சாதிக்க உதவுகிறது என்பதைக் காண்கின்றனர்.”—எதிர்த்து மறுபோராட்டம் செய்தல்.
பயங்கரவாதம் தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்ற உதவுகிறது என்பதைப் பலமான தேசங்கள் காண்கின்றன என்பதுதானே, உலகத்தின் பயங்கரவாதத்திற்குப் பெரும் காரணமாக இருக்கவேண்டுமா? ஜன் ஷ்ரீபர் பின்வருமாறு எழுதுகிறார்: “மத்திய எழுபதுகளில் வெளியான காரியங்கள், வெகு காலமாக நிரூபிக்கப்படாதிருந்தும் ஆனால் அமைதியாக கவனிக்கப்பட்டு வந்ததுமான காரியத்தை உறுதிபடுத்தியிருக்கிறது. இந்த உலகத்தின் இரண்டு ஆதிக்கக் கருத்துப்போக்குகள் தங்களுடைய எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பதற்கும், தங்கள் பக்கமாக திருப்புவதற்கும் அல்லது தங்கள் ஆதிக்கத்தைக் காத்துக்கொள்வதற்கும் நல்லதும் கெட்டதுமான எல்லா வழிவகைகளையும் பயன்படுத்திவந்திருக்கின்றன, தொடர்ந்து பயன்படுத்தக்கூடும்.
இந்தக் கருத்துப்போக்குகளுக்கிடையே இருந்துவரும் இந்த மோதல் சோவியத் தலைவர் கோர்பச்சேவின் பேச்சில் தெளிவுபடுகிறது: “சர்வதேச உறவுகள் சகஜமான ஒத்துழைப்பினிடமாக திருப்பப்படுவது என்பது இரண்டு சமூக முறைகளுக்கிடையே இருக்கும் சரித்திர விவாதத்திற்கு இராணுவத்தின் மூலம் தீர்வு காண்பதை ஏகாதிபத்தியவாதிகள் கைவிடுவதில்தான் சார்ந்திருக்கிறது”—சமாதானத்திற்கான ஒரு காலம்.
இது பெரிய வல்லரசுகளுக்கிடையே நடந்துவரும் இந்தச் சர்வதேச “சதுரங்க விளையாட்டை” மற்றவர்களும் காண்கிறார்கள். உதாரணமாக பரிசுத்த எரிச்சல் என்ற தன்னுடைய புத்தகத்தில் ராபின்ரைட் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “ஐக்கிய மாகாணங்கள் மத்திய கிழக்கை, சோவியத் யூனியனுடன் போட்டிப் போடுவதற்கான பிராந்தியமாகக் காண்கிறது என்று முகமதிய விடுதலை வீரர்கள் கருதுகின்றனர். இதில் அவர்கள் வல்லமைவாய்ந்த உள்சக்திகளை அசட்டை செய்துவிடுவதாகவும் கருதுகின்றனர். இருமுனைக்கோடியுலகில் தலைதூக்கும் மூன்றாம் உலகின் எதிர்க்குதல்களுக்கு ஐக்கிய மாகாணங்கள் சற்றும் உணர்வற்றிருக்கிறது.” தெளிவாகவே, சில சிறிய நாடுகள், கருத்து மோதல்களில் பந்தயப் பொருட்களாக இருப்பதைக் காண்கின்றனர்.
முதலாளித்துவ ஆதிக்கத்தை நிலைகுலைப்பதற்குப் பயங்கரவாதம் மற்றொரு கருவியாக இருப்பதாக மேற்கத்திய நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பயங்கரவாதத்தை மேற்கொள்ளும் காரியத்தில் ஐ.மா. நிபுணராகிய தூதர் ராபர்ட் பி. ஓய்வுக்கால கூறினதாவது: “பயங்கரவாதத்தின் அதிகரிப்பு, கேள்விகேட்கப்படாவிட்டால். . .ஐக்கிய மாகாணங்களும் அதன் கூட்டாளிகளும் தங்களுடைய தேசிய மற்றும் இராணுவ முறைகளை மட்டுப்படுத்திவிடும்.” வரக்கூடிய வருடங்களில் நாம் கூடுதலான அச்சுறுத்தும் சர்வதேச பயங்கரவாதத்தின் தாக்குதல்களுக்குத் தயாராக இருக்க வேண்டும். . .இந்தப் பயங்கரவாதச் செயல்களில் பெரும்பான்மையானவை ஒருசில இரக்கமற்ற அரசாங்கங்களால் ஆதரிக்கப்பட்டு அல்லது ஊக்குவிக்கப்பட்டுவருகிறது.”
ஐக்கிய மாகாணங்களின் தூதர் ராபர்ட் M. சாயிர் தன்னுடைய கருத்தை வெளிப்படையாகக் குறிப்பிட்டார்: “பயங்கரவாதம் அரசியல் தூண்டுதல் பெற்றதும் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டதுமாயிருக்கிறது. . . இதில் பெரும்பகுதி மார்க்ஸிய லெனினிய தொகுதிகள் மற்றும் மாநிலங்களால் நிறைவேற்றப்பட்டும் சோவியத் யூனியன் மற்றும் அதன் கிழக்கித்திய கூட்டாளிகளால் ஆதரிக்கப்பட்டும் வருகிறது.”—மாகாண அறிக்கை துறையின் செய்தி.
பயங்கரவாதமும் பைபிள் தீர்க்கதரிசனமும்
பயங்கரவாதத்தைக் கருவியாக பயன்படுத்தி நடைபெறும் இரண்டு வல்லரசுகளுக்கிடையே இந்த மோதல் ஏன் பைபிள் மாணாக்கருக்கு அக்கறைக்குரிய காரியமாயிருக்கிறது? பைபிளில் தானியேல் என்ற புத்தகத்தில் அதிகாரம் 11-ல் காணப்படும் ஒரு குறிப்பிடத்தக்க தீர்க்கதரிசனம்தான் இதற்குக் கரணம். இந்த அதிகாரம் இரண்டு பெரும் வல்லரசுகளாகிய “தென் திசை ராஜா”-வுக்கு “வடதிசை ராஜா”வுக்கும் இடையே தொடர்ந்து வந்திருக்கும் போராட்டத்தை விளக்குகிறது. “வடதிசை ராஜா” நாத்திகக் கொள்கையுடையவனாக “தன் பிதாக்களின் தேவர்களை” “மறுத்தவனாயிருக்கிறான். (தானியேல் 11:37) அவனவன் தன்னைத்தானே மகிமைப்படுத்துகிறான் மற்றும் ‘அரண்களின் தேவனை’ அல்லது போர்த் தளவாடங்களை கனம் பண்ணுகிறான். அரணிப்பான கோட்டைகளுக்கு எதிராகத் திறம்பட செயல்படுகிறான் மற்றும் உலகில் தன்னுடைய நிலையை நன்கு ஸ்திரப்படுத்திக்கொள்கிறான். (தானியேல் 11: 38,39) தன்னுடைய எதிராளி விஸ்தரித்துக்கொண்டு போகையில் “தென்திசை ராஜா” பார்த்துக்கொண்டு அமைதியாயிருக்கிறானா?
இந்த அச்சுறுத்தும் தீர்க்கதரிசனம் கூறுகிறது: “முடிவு காலத்திலோவென்றால், தென்திசை ராஜா அவனோடே முட்டுக்கு நிற்பான். வடதிசை ராஜாவும் ரதங்களோடும் குதிரை வீரர்களோடும் அநேக கப்பல்களோடும் சூறைக் காற்றுபோல் அவனுக்கு விரோதமாய் வருவான். அவன் தேசங்களுக்குள் பிரவேசித்து, அவைகளைப் பிரவாகித்து கடந்துபோவான்.” (தானியேல் 11:40) தர்கரீதியாகவே, வெவ்வேறு உருவில் பயங்கரவாதம் இரண்டு அரசர்களாலும் உலக ஆதிக்கம் சம்பந்தப்பட்ட தங்கள் போராட்டத்தில் உபயோகிக்கப்படுகிறது.a கடவுள் இவர்களுடைய போட்டி போராட்டத்தைத் தம்முடைய அர்மகெதோன் யுத்தத்தில் முடிவுக்குக் கொண்டுவரும்வரை, இந்த இருபெரும் வல்லரசுளுக்கிடையிலான போட்டி போராட்ட வாழ்க்கை தொடரும் என்று தானியேலின் வார்த்தைகள் காண்பிக்கின்றன.—வெளிப்படுத்துதல் 16:14-16.
எஞ்சியிருக்கும் கேள்விகள்: பயங்கரவாதம் என்ற வாதைய மனிதன் தானாக முடிவுக்குக் கொண்டுவர முடியுமா? அப்படி முடியாதென்றால், ஏன் முடியாது? இந்தக் கேள்விகளை எமது அடுத்தக் கட்டுரை சிந்திக்கும். (g871/8)
[அடிக்குறிப்புகள்]
a இந்த ராஜாக்களைப் பற்றிய கூடுதலான தகவல்களுக்கு “உம்முடைய சித்தம் பூமியில் செய்யப்படுவதாக என்ற ஆங்கில புத்தகத்தில் 11-ம் அதிகாரத்தைப் பார்க்கவும், இந்தப் புத்தகம் 1958-ல் உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டியால் வெளியிடப்பட்டது.
[பக்கம் 7-ன் படம்]
பெரும்பாலான பயங்கரவாதத்திற்குப் பின்னாலிருக்கும் உள்நோக்கம். முடிவுகாலம் குறித்த தானியேல் தீர்க்கதரிசனத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது
[படத்திற்கான நன்றி]
Pacemaker Press Int’l, Belfast
[பக்கம் 8-ன் படம்]
தற்கால பயங்கரவாதம் செய்தித் தொடர்பு முறைகளைத் திறம்பட்ட விதத்தில் பயன்படுத்தியிருக்கிறது
[படத்திற்கான நன்றி]
Reuters/Bettmann Newsphotos