உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g87 9/8 பக். 3-5
  • அந்த மாயவித்தையின் கவர்ச்சி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அந்த மாயவித்தையின் கவர்ச்சி
  • விழித்தெழு!—1987
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கவர்ச்சிக்குக் காரணங்கள்
  • பொதுமக்களிடையே ஆர்வம் வளருகிறது
  • மாயமந்திரஞ் சார்ந்தவற்றை நான் ஏன் தவிர்க்க வேண்டும்?
    விழித்தெழு!—1992
  • மாயமந்திரத்தில் மேலோட்டமாக ஈடுபடுதல்—அதிலென்ன தவறு?
    விழித்தெழு!—2002
  • அந்த மர்மத்துக்கு விளக்கம்
    விழித்தெழு!—1987
  • மாயமந்திரம்—விளையாட்டா? வினையா?
    இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1987
g87 9/8 பக். 3-5

அந்த மாயவித்தையின் கவர்ச்சி

விசித்திரம், மர்மம், பேய்த்தனம் ஆகிய இவையே மாயவித்தை (ஆங்கிலத்தில்: அக்கல்ட்) என்பதை விளக்குவதற்குப் பயன்படுத்தும் வார்த்தைகளாக இருக்கின்றன. அந்தப் பதம் உண்மையிலேயே “ஒளித்து வைக்கப்பட்டது,” “மூடப்பட்டது,” “மறைத்து வைக்கப்பட்டது” என்ற அர்த்தமுடையது. வெப்ஸ்டரின் மூன்றாவது புதிய சர்வ தேச அகராதி (ஆங்கிலம்) இந்த மாயவித்தை, “விளங்காப் புதிர்களடங்கிய ஒரு காரியம் அல்லது மனித சக்திக்கு அப்பாற்பட்டது” என்று விவரிக்கிறது.

எனவே மாயவித்தை இயல்பான முறையில் விளக்கப்படமுடியாத நிகழ்ச்சிகளையும் அனுபவங்களையும் உட்படுத்துகிறது. இயல்புக்கு அப்பாற்பட்டது (paranormal) என்ற சொல் “விஞ்ஞான முறைப்படி அறியப்பட்டவை அல்லது அங்கீகரிக்கப்படக்கூடிய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் எல்லைக்கு அப்பாற் செல்லுதல்” என்று விளக்கப்பட்டிருக்கிறது. மாயவித்தைப் பற்றிப் பேசுகையில் இயல்புக்கு அப்பாற்பட்டது என்ற இந்தச் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

1930-ன் ஆரம்பத்தில் டாக்டர் ஜோசப் பாங்ஸ் ரினி என்பவர் மர்மங்கள் நிறைந்த இந்த மாயவித்தைக் கோட்பாடுகளை ஆராய்வதில் முன்னோடியாக இருந்து பின்பு “மிகைப்படியான புலன் உணர்வு” (ESP) என்ற பதத்தை அறிமுகப்படுத்தினார். “இன்னமும் புதிர்கள் புதைந்து கிடக்கும் இருளான திக்குகளுக்கு விஞ்ஞான ஆராய்ச்சியின் தெளிவு பரவுகையில்” இந்த மாயவித்தை ஈடுபாடுகள் மறைந்துவிடும் என்று அவர் முன்னுரைத்தார். “உதாரணமாக, சோதிடத்தின் மாயவித்தைப் பயிற்சிகள் வான் கோள்களின் விஞ்ஞானத்திற்கு வழிதிறந்தது. மாந்திரீக மாயவித்தை இரசவாதம் ஆய்வறிவு சார்ந்த வேதியலாக மாற்றப்பட்டது. மாய சக்தியின் சுகமளிப்புகள், ஆராய்ச்சி அடிப்படையிலான மருந்துகள் மூலம் அகற்றப்பட்டது. அவ்வாறே அதிக நம்பகமான அஸ்திபாரம், இன்னமும் மீதியாக உள்ள இந்த மாயவித்தை முறைமைகளையும் அகற்றிவிடும்” என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த மாயவித்தைகள் அடங்கிய கொள்கை பேரில் அதிக விரிவான ஆராய்ச்சிகள் செய்யப்பட்ட போதிலும் விளங்காப் புதிர்கள் இன்னும் புதிர்களாகவே இருக்கின்றன. அவை மறைந்துபோவதற்கு மாறாக அதன் பேரிலுள்ள கவர்ச்சி இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

கவர்ச்சிக்குக் காரணங்கள்

திருமதி ரோஸ்மேரி ப்ரெளன் என்பவளை எடுத்துக் கொள்ளுங்கள். சிறுமியாக இருக்கையில் அவள் சிறிது இசைப்பயிற்சியைப் பெற்றாள். இசையில் அவளுக்கு அவ்வளவு முக்கிய ஆர்வம் இருக்கவில்லை, பின்பு அவள் பெரியவளாக ஆனபோது அவள் பலவகை குரல்களின் இசைக் குறியீடுகளை உண்டுபண்ணினாள். இவை தனக்கு பித்தோவன், பிராம்ஸ் மற்றும் ஸ்கூபர்ட் என்பவர்களால் கற்றுத்தரப்பட்டது என்று அவள் உரிமை பாராட்டுகிறாள். அவளுடைய காரியத்தின் பேரில் நடத்தப்பட்ட விசாரணைகளை விளக்குவதாய் தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா 1977, மாக்ரோ பேடியோ அறிக்கை செய்வதாவது:

இந்த [இசைக் குறியீடுகள்] மிகப்பெரிய வல்லுநர்களிடம் காண்பிக்கப்பட்டபோது, இவை பாழடைந்த ஒரு கட்டட மாடியில் கண்டுபிடிக்கப்பட்டவையென்றால், அவற்றை மெய்யானவையாக எண்ணியிருப்பார்கள் என்று ஒத்துக்கொண்டார்கள்; அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு மூலங்களிலிருந்து எடுத்து ஆக்கப்பட்ட நியாயமான இசைப்பாடலாக இருந்தது மட்டுமல்லாமல், இசையமைப்பாளரின் நன்கு அறியப்பட்ட மன உணர்ச்சிகளையும் தனித்தன்மைகளையும் வெளிக்காட்டுவதாக இருந்ததென்றும் குறிப்பிட்டார்கள். இசை வல்லுநர்களுங்கூட (தங்களால் இயன்றாலுங்கூட) அத்தனை சிறப்புள்ள இந்த வேலைப்பாட்டை அவ்வளவு எளிதாக செய்திருக்க முடியாது; இசையின் ஆக்க அமைவுபற்றி அவளுக்குக் கற்பிக்கப்படாத, வெகு சொற்ப இசை பயிற்சியை மட்டுமே பெற்றுள்ள ஒரு சாதாரண பணிப்பெண் எப்படி, எவ்வாறு இதைச் செய்திருக்கக்கூடும் என்பது குறிப்பாக திகைக்க வைக்கிறது.”

அநேகருக்கு, இப்படிப்பட்ட அனுபவங்கள் கவர்ச்சியூட்டுவதாயிருக்கிறது. அவை எவ்வாறு நிகழ்கின்றன. தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா ஒப்புக்கொள்வதாவது: “இந்த ஜெர்மானிய இசை வல்லுநர்களுடைய ஆவிகள் தங்களுடைய சமீபகால இசையமைப்புகளை இந்தப் பெண்ணுக்கு ஆங்கிலத்தில் கற்றுக்கொடுப்பதற்காக வரிசையில் நின்றார்கள் என்ற கருத்து கவர்ச்சியாக இல்லை” என்றாலும் அந்த என்ஸைக்ளோபீடியா தொடர்ந்து கூறுவதாவது: “இந்தச் செய்திகளுக்கு எதிர்ப்பு ஏதும் இருக்கவில்லை. இதற்கு எந்த ஒரு தெளிவான விளக்கமும் வருவதாக இல்லை. காரியம் இப்படியிருக்க இந்தச் சம்பவங்கள் மற்ற அநேகருடைய அனுபவமாகவுமிருக்கிறது.”

ஃபிலிக்ஸ்பரோ, தென் ஹாம்பர்ஸைட், இங்கிலாந்திலிருந்து வரும் ஒரு அறிக்கையை கவனியுங்கள்: ஒரு இரசாயண தொழிற்சாலையில் ஜூன் 1, 1974 அன்று மாலை 4:53 மணிக்கு ஒரு மாபெரும் வெடிப்பு ஏற்பட்டது. ஏறக்குறைய அதற்கு ஐந்து மணிநேரத்துக்கு முன்பு 25 மைல்கள் (40 கி.மீ.) தொலைவில் வசிக்கும் ஒரு பெண், தான் டெலிவிஷன் செய்தி சுடரில் இந்த வெடிப்பு பற்றியும் அதோடு அந்தத் தொழிற்சாலையிலுள்ள வேலையாட்களுடைய உயிரழப்புகளையும் காயங்களையும் கண்டதாக கூறினாள். அந்த நாளில் மாலை 2:00 மணிக்கு முன்பாக அவள் தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் அதைப்பற்றிப் பேசியிருக்கிறாள். அதன் பின்பு, அந்த நிகழ்ச்சியைக் குறித்து மாலையில் டிவி செய்தி அறிக்கை கொடுத்தது. மாலையில் அந்த நிகழ்ச்சி நடந்ததாக அது நேரத்தையும் குறிப்பிட்டது. அந்தப் பிராந்தியத்தில் அந்தச் செய்தியை ஒலிபரப்பிய எல்லா டிவி நிர்வாகங்களும் இப்படிப்பட்ட செய்தியை நாங்கள் இதற்கு முன்பு ஒலிபரப்பவில்லை என்று மறுத்துவிட்டன.

மற்ற அநேக ஆட்களோடுகூட நீங்களும் இப்படிப்பட்ட அனுபவங்களால் வசீகரிக்கப்பட்டிருக்கிறீர்களா?

மேலும் தீங்கற்ற பொழுதுபோக்காகத் தோன்றக்கூடிய ஒரு “விளையாட்டும்” இருக்கிறது. அது “உவிஜா பலகை” என்றழைக்கப்படக்கூடிய ஒன்றில் விளையாடப்படுகிறது. அந்தப் பலகையில் வேறுபாடுகள் இருக்கிறதென்றாலும், பொதுவில் அது நீண்ட சதுரத்தில் 24-க்கு 18 அங்குலமாகவும் (61-க்கு 46 செ.மீ) மற்றும் கால் அங்குல (0.6 செ.மீ.) பருமனாகவும் இருக்கிறது. அதன்மீது மொழியின் எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கின்றன. 1 முதல் 9 மற்றும் 0 ஆகிய எண்கள் வரிசையாக இருக்கின்றன. “ஆம்” என்ற வார்த்தையும் “இல்லை” என்ற வார்த்தையும் அதில் காணப்படுகிறது. அதிக முக்கியமான பாகமானது, சிறு இருதய வடிவான முள்காட்டி. இது செய்தியை உச்சரிப்பதற்காக ஒவ்வொரு எழுத்தாகச் சுட்டிக்காட்டுகிறது.

விளையாடுகிறவர்கள் அந்தப் பலகையை மடியில் வைத்துக்கொள்கின்றனர். இருதய வடிவிலான அந்த முள் காட்டியின் மீது தங்கள் விரல்களை இலேசாக வைக்கின்றனர். பின்பு அவர்கள் ஒரு கேள்வியைக் கேட்கின்றனர். பதிலுக்காக காத்திருக்கின்றனர். பதில் கிடைக்கிறதா? பதில் கிடைக்கிறது என்று சொல்பவர்கள் ஏராளமான ஆட்கள். “சில வேளைகளில் விடையானது வியப்பூட்டும் வண்ணம் திருத்தமானதாக இருக்கிறது,” என்று எழுதினார் எழுத்தாசிரியர் ஜார்ஜ் ஆர். ப்ளாக்கென்ஸ். “உவிஜா பலகைகளால் முன்னறிவிக்கப்பட்ட சம்பவங்கள் பிற்பாடு நிகழ்ந்திருக்கின்றனவென்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.”

இந்த விளையாட்டு அநேகருக்குக் கவர்ச்சியூட்டுவதாயிருக்கிறது. மெய்யாகவே, சில ஆண்டுகளுக்கு முன்பாக, அது “ஐ.மா.-வில் மிகப் பிரபலமான விளயாட்டாக—கலைவிருந்து களியாட்டங்களைக் காட்டிலும் அதிக பிரபலமான விளையாட்டு” என்பதாக அழைக்கப்பட்டது.

பொதுமக்களிடையே ஆர்வம் வளருகிறது

“மாயவித்தை மனித சக்திக்கு மிஞ்சிய மற்றும் இயல்புக்கு அப்பாற்பட்ட இக்காரியம் பெரும் வியாபாரமாக இருக்கிறது” என்று யு எஸ் ஆண்டு உவர்ல்ட் ரிப்போர்ட் குறிப்பிடுகிறது. “எல்லாவித வாழ்க்கை துறையிலுமிருந்து வரும் ஆட்கள், அதனை வாசிக்கக்கூடிய ஆட்களிடமும் பார்க்கக்கூடியவர்களிடமும் மேலும் தரிசனங் காண்பதாக சுய உரிமை பாராட்டிக் கொள்பவர்களிடமும் விசாரிப்பதற்காக மிகுதியான பணம் செலுத்துகிறார்கள்.”

இப்படிப்பட்ட தரிசனக்காரர்களில், சோதிடர்கள், உளநூலர்கள், ஆவி ஆற்றலுடன் தொடர்பு கொள்ளக்கூடியவர்கள், மற்றும் அதோடு ஐக்கிய மாகாணத்தில் உள்ள மற்ற 6,00,000 மாயவித்தைக் காரர்களும் அடங்கியிருக்கின்றனர். இவர்கள் தங்களிடம் விசாரணைக்காக வருவோரிடம் 300 டாலர் சுமார் 3,600 ரூபாய் வசூலிக்கிறார்கள். இந்த மாயவித்தை கோட்பாட்டை விளக்கும் பத்திரிகைகள் புத்தகங்கள் டேப்புகள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றிற்குக் கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது.

பிரிட்டனிலும் காரியம் இதற்கொப்பாகவே இருக்கிறது. மாயவித்தைகளில் பயன்படுத்தப்படக்கூடிய புத்தகங்களையும் பொருட்களையும் தபால் மூலம் வழங்கும் கடைகள் அமோக விற்பனையை அனுபவிக்கின்றன. பிரிட்டனில் முன்னிலையில் நிற்கும் புத்தக வியாபாரி “ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான புத்தகங்களை விற்பனை செய்கிறார். மேலும் அவருடைய புத்தகங்களுக்குச் சுமார் 20,000 வழக்கமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.”

“ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டனில் சுமார் 60,000 சூனியக்காரிகள் இருந்ததாக கருதப்பட்டது. இன்று அந்த எண்ணிக்கை 80,000-ஆக வளர்ந்துவிட்டதென்று சிலரால் மதிப்பிடப்படுகிறது” என்பதாக மார்ச் 6, 1985-ன் இலண்டன் கார்ட்டியன் அறிக்கை செய்கிறது.

மெய்யாகவே, மேற்கத்திய உலகமானது தி உவர்ல்ட் புக் ஆப் என்ஸைக்ளோபீடியா அழைக்கிறபடி “மாயவித்தை ஈடுபாடு பரந்ததோர் மறுமலர்ச்சியை” அனுபவிக்கிறது.

இந்த மாயவித்தை அநேகரை கவர்ந்த போதிலும் அதனைப் பற்றிய பரிசோதனை எதை வெளிப்படுத்தியிருக்கிறது. அபாயங்கள் உட்பட்டிருக்கிறதா? அப்படியானால், அவை என்ன? (g86 8/22)

[பக்கம் 4-ன் படம்]

மாயவித்தை சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்தல் வளரும் வியாபாரமாக இருக்கிறது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்