இளைஞர் கேட்கின்றனர்
மாயமந்திரஞ் சார்ந்தவற்றை நான் ஏன் தவிர்க்க வேண்டும்?
“நான் என் தாத்தாவிடம் வெகு பற்றுதலாயிருந்தேன், அவர் மரித்தபோது, அது என்னை மிகக் கடுமையாய்த் தாக்கிற்று. நான் அவருடன் மறுபடியும் தொடர்புகொள்ள முடியுமாவென அறிய விரும்பினேன்,” என்று அந்த இளம் பெண் சொன்னாள். இவ்வாறு இந்த இளம் பெண் மாயமந்திரஞ் சார்ந்தவற்றில் அக்கறைகொள்ளத் தொடங்கினாள்.
“ஜெர்மனியின் கூட்டிணைப்பு குடியரசில் குறைந்தது 2,00,000 பிள்ளைகளுக்கும் பருவவயதினருக்கும் பல்வேறு வகைகளான மாயமந்திரஞ் சார்ந்தவற்றுடன் அனுபவம் இருந்த”தென ஒரு சமீப அறிக்கை கூறினது. ஜப்பான் பள்ளிக்கூடத்தில் பொழுதுபோக்காக ஈடுபடும் ஆவியுலகத் தொடர்புகொள்வோரை பேரளவில் கொண்டுள்ளது, இவர்களில் சிலர் வசிய இயக்காட்சியில் தேர்ச்சியடைகின்றனர், மற்றவர்கள் அறிதுயிலூட்டுதலில், இன்னும் வேறுசிலர் பேயோட்டுதலில் அவ்வாறுள்ளனர். நைஜீரியாவில் தொடக்கப் பள்ளிப் பிள்ளைகள் பில்லி சூனிய நடவடிக்கையில் ஈடுபடுவதைப் பற்றிக் கேள்விப்படுவது இந்நாட்களில் அசாதாரணமல்ல. கிறிஸ்தவ பெற்றோரால் வளர்க்கப்பட்ட சில இளைஞருங்கூட, ஒருவேளை அறியாமல், இயல்நிலைக்கடந்த ஆவியுலகுக்குரியவற்றில் விளையாடியுள்ளனரென விசனத்துடன் சொல்ல வேண்டியுள்ளது.
மாயமந்திரஞ் சார்ந்தவை ஏன் இளைஞர்களுக்கு அத்தகைய கவர்ச்சியூட்டுகின்றன? அதில் உட்படுவது ஏன் அவ்வளவு ஆபத்தானது?
அவர்கள் அதில் உட்படுவதன் காரணம்
மாயமந்திரம் இயற்கைக்கு அப்பாற்பட்டதை உட்படுத்துகிறது, சோதிடம், குறிகூறுதல், பில்லி சூனியம், மந்திரம், மற்றும் இவற்றைப் போன்றவற்றைக் கொண்டு ஆவி உலகத்துக்கு ஆய்வுப்பயணம் செய்வதை உட்படுத்துகிறது. ஏன் அத்தனை பல இளைஞர்கள் அத்தகைய காரியங்களுக்குள் உற்றுநோக்க ஆவலுடனிருக்கின்றனர்? டெர்க் இறந்துவிட்ட தன் தகப்பனுடன் தொடர்புகொள்வதற்கு ஆழ்ந்த ஆவலுடனிருந்தான். அவன் தன் மன சக்திகளை முன்னேற்றுவித்தால் இதைச் செய்ய முடியுமென்று நம்பி, மாறாது ஒழுங்காய்த் தியானத்தைக் கடைப்பிடிப்பதில் முனைந்தான், அதில் பொருட்களைத் தொடமல் அவைதாமே நகரும்படி செய்ய அவன் முயன்றான். அத்தகைய தியானம், தன்னை ஆவி உலகத்தின் வாசலண்டைக் கொண்டுசென்று விட்டதென டெர்க் சொன்னான்!
மற்ற இளைஞர்கள் எதிர்காலத்தைக் குறித்து பயப்படுகின்றனர்—தங்கள் தேர்வு மார்க்குகள் அல்லது திருமண எதிர்கால வாய்ப்புகளைக் குறித்தத் தகவல்களை விரும்பி ஆவி உலகம் தங்களுக்கு உதவிசெய்யுமென்று கருதுகின்றனர். முக்கியமாய்ச் சாத்தானைத்தானே வணங்குவது மனக்கலக்கத்தைக் கொடுக்கிறது! இந்தக் கோரமான மதத்தின் கவர்ச்சிகரம் என்ன? “நான் வல்லமைக்காக அதற்குள் உட்படுகிறேன், ஆட்களுக்குத் தீங்குசெய்வதற்கான வல்லமையை அது எனக்குக் கொடுக்கிறது,” என்று சாத்தானிய மதத்தைக் கடைப்பிடிக்கிற கானடா தேசத்து இளைஞன் ஒருவன் விளக்கினான்.
எனினும், இளைஞர்கள் மாயமந்திரஞ் சார்ந்தவற்றில் உட்படுவதன் பெரும்படியான காரணம் வெறுமென அறிய ஆவலுள்ள இயல்பே என ஆராய்ச்சியாளர் பெரும்பான்மையர் நம்புகின்றனர். மாயமந்திரத்தில் உட்பட்டவளாகிய ஒரு பெண் “நான் அறிய அவ்வளவாய் ஆவல்கொண்டேன்,” என்று அறிக்கை செய்தாள். மற்றொரு பெண் இவ்வாறு கூறினாள்: “முதன்முதல் நான் வெகு சந்தேக உணர்ச்சியடைந்தேன், ஆனால், ‘அது உண்மையில் எவ்வாறுள்ளதென்றாவது அறியலாமென’ நான் எண்ணினேன்,” என்றுரைத்தாள். ஆகவே ஒரு மாயமந்திர கூட்டத்துக்குத் தன்னோடு வரும்படியான ஒரு நண்பரின் அழைப்பை அவள் ஏற்றாள்.
அறியவேண்டுமென்ற ஆவலால் உந்தப்பட்டு, சில இளைஞர்கள், குறிசொல்லும் எழுத்துப் பலகையில் தங்கள் கையை வைத்து முயற்சிசெய்து பார்க்கின்றனர் அல்லது அதற்குப் பதில் நிமிர்த்து வைத்துள்ள கண்ணாடிக் குவளையின் இயக்கங்களைக் கூர்ந்தாராய்கின்றனர். அங்கிருந்து, பளிங்குக் கோளங்கள், டாரட் சீட்டுகள், பதக்கங்கள், தேயிலைகள், மற்றும் ஜாதகப் புத்தகங்கள் ஆகிறவற்றைப் பயன்படுத்தி ஆவிக்கொள்கையில் மேலும் ஆழ்ந்து உட்படுவதற்கு ஒரு சிறிய தாவுதலே உள்ளது. சிலர், குறிசொல்லுதலைத் தொழிலாகக் கொண்டிருப்போரிடம் அல்லது மாய மந்திரவாதிகளிடம் தகவல் கேட்டும் தொடங்குகின்றனர். எனினும், இத்தகைய தொழில்புரியும் பலர் ஏமாற்றும் சூழ்ச்சிக்காரரைப் பார்க்கிலும் சிறிது மேம்பட்டவர்களாகவே நிரூபிக்கின்றனர். உதாரணமாக, தன் தேர்ச்சி தரநிலையை முன்னேற்றுவிக்க, அலெக்ஸாண்டர் ஒரு மாய மந்திரவாதியினிடம் தொடர்புகொண்டான். அவன் தன் தேர்ச்சி தரநிலையில் முன்னேறாதது மட்டுமல்லாமல் பணத்தையும் வெகுவாய் இழந்தான். அவனுடைய பணம் அந்தப் போலி மந்திரவாதிக்கும் அவனை சிபாரிசு செய்த அந்த நண்பன் எனப்பட்டவனுக்குமிடையில் பகிர்ந்துகொள்ளப்பட்டது.
எனினும், பல இளைஞர்களுக்கு, ஆவிக்கொள்கையில் துணிந்து ஈடுபடுவது பணத்தை இழப்பதைப் பார்க்கிலும் மிக அதிகத் தீங்குண்டாக்கும் ஏதாவதொன்றில் முடிவடைகிறது.
‘நம்பமுடியாத வதைப்பு’
“எனக்கு மாத்திரம் தெரிந்திருந்தால்” என்ற சொற்கள் இயல்மீறியவற்றுடன் விளையாடினதைக் குறித்து வருந்த நேரிட்டோருக்குள் பொதுவாய்க் கேட்கப்படுகிறது. இவ்வாறு தனியாள்பண்பு, என்ற தென் ஆப்பிரிக்க பத்திரிகை கூறியது. இந்தப் புலம்பல் மாதிரியாயுள்ளது: “நான் மாத்திரம் அவ்வளவு அறியாமையில் இருந்திராவிடில். . . . நான் நம்பமுடியாத வாதிப்பை அனுபவித்தேன், குரல்கள், கோரக்கனாக்காட்சிகள், பயமுறுத்தல்கள், மற்றும் நான் அதிலிருந்து வெளியேற முயன்றபோது சாத்தான் வணக்கத்தாரான மற்றவர்களால் மனம் மற்றும் உடல் சம்பந்தமாய் வதைக்கப்பட்டேன்.”
ஜெர்மனியில் கண்டாராயப்பட்ட ஆசிரியர்களில் முழு 24 சதவீதம் மாணாக்கருக்குள்ள மாயமந்திர தொல்லைப்படுத்தும் பாதிப்பைக் குறிப்பிட்டனர். மாணாக்கர்கள் சிலர் பின்வாங்குவோராக இருந்தனர், கற்பதில் பிரச்னைகள் உடையோராயிருந்தனர், திகிலில் வாழ்ந்தனர், மனச்சோர்வால் வருந்தினர், தங்கள்மீதும் மற்றவர்களுக்கும் தீங்குண்டாக்கும் போக்கை வளர்த்தனர். டெர்க் அடிக்கடி இரவில் தூங்க முடியாமல் இருந்தான். அவன் நினைவுபடுத்திக் கூறுவதாவது: “பேய்களால் பீடிக்கப்படும் பயத்தால் நெருக்கப்பட்டு, நான் என் கண்களை மூடவும் பயந்தேன். ஒவ்வொரு தொனியின்பேரிலும் எனக்கு வேதனைத் துடிப்பதிர்வு ஏற்பட்டது.” மைக்கல் என்ற பெயர்கொண்ட ஓர் இளைஞனும் தனக்கு வகுத்துக் குறிக்கப்பட்ட பாகங்களை ஏற்றப்பின் இவ்வாறு “பேய் அலைக்கழிப்பால் தூக்கமற்ற இரவுகளை” அனுபவித்து வருந்தினான். மற்ற அறிக்கைகள் மாயமந்திர பழக்கங்களில் பங்குகொள்ளும் ஆட்களில் தீக்குறியான பண்பியல்பு மாற்றங்கள் ஏற்பட்டதை விவரிக்கின்றன. ஒரு பெண் தான் எதிர்காலத்தில் கருப்பு உடையை உடுத்தி (தன் அறையை வண்ணந்தீட்ட அவள் விரும்பிய நிறம்) திறந்த சவப்பெட்டியில் தூங்கப்போவதாகத் தன் தாய்க்கு அறிவித்ததன்மூலம் அவளைத் திடுக்குறச் செய்தாள்!
ஆவியுலகத்தில் உண்மையில் வாழ்பவர்கள்
“மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்,” என்று வேத எழுத்துக்கள் தெளிவாகக் கூறுகின்றன. (பிரசங்கி 9:5) ஆகையால் ஆவியுலகம் மரித்த நேசிக்கப்பட்டவர்களின் ஆத்துமாக்களால் குடியிருக்கப்பட்டில்லை. அப்படியானால், அத்தகைய அச்சுறுத்தும் அனுபவங்களின் காரணம் என்ன? பொல்லாதப் பேய்களே! பைபிளில் சொல்லியுள்ளபடி, இவர்கள் கலகஞ்செய்த தூதர்கள், பிசாசான சாத்தானைப் பின்பற்றுவோரே. (1 பேதுரு 3:19, 20; வெளிப்படுத்துதல் 12:9) மனிதருக்குள் தொல்லையையும் முடமாக்குதலையும் நீடித்திருக்கச் செய்யும் சரித்திரத்தை அவை உடையவை.
உதாரணமாக, லூக்கா 9:42 பேய்ப் பிடித்த மனிதனைப்பற்றி நமக்குச் சொல்லுகிறது, “பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது.” எத்தகைய கொடுமை ஆவல்கொண்டவை! இவ்வாறே பேயால் பீடிக்கப்பட்ட ஒரு மனிதன் பேயோட்டிகளாகச் செயல்பட முனைந்த ஏழுபேர்களின்மீது எவ்வாறு வன்முறையான தாக்குதல் செய்தான் என்பதைப்பற்றி அப்போஸ்தலர் 19:16 விவரிக்கிறது. பேய்கள், தீங்குசெய்யும் தங்கள் கொடிய வழிகளைச் சற்றேனும் மாற்றவில்லையென தற்கால அனுபவங்கள் தெளிவாய் உறுதிசெய்கின்றன.
உலகியலுக்கு அப்பாற்பட்ட உணர்வுக்காட்சி, சோதிடம், டாரட் சீட்டுகள், அல்லது மாயமந்திரத்துக்குரிய எந்த வகையிலாவது விளையாடத் தொடங்கும் ஓர் இளைஞன் இவ்வாறு பயங்கர அனுபவங்களுக்கு வழியைத் திறப்பவனாக இருக்கலாம். தனியாள்பண்பு என்ற பத்திரிகை பின்வருமாறு சொன்னது: “நாங்கள் கண்டு பேசின [மாயமந்திரத்தில் உட்பட்டவர்களாகியிருந்த] எல்லாருடைய அனுபவங்களினூடேயும் ஊடுருவிச்செல்லும் பொதுகாரியமானது, மேலீடான மரியாதைக்குரிய நயத்தோற்றத்தில் மூடுவிக்கப்பட்ட வழிகளின் மூலம் சாத்தானிய பெருநீர்ச்சுழிக்குள் மேலும் மேலும் ஆழமாக அவர்கள் உள் இழுக்கப்பட்டவர்களாகி இருந்தனர் என்பதே.” ஆம், மாயமந்திரம் சாத்தானுடனும் பேய்களுடனும் தொடர்பு கொள்வதற்கு உதவும் தாண்டற்கல்லேயாகும்!
‘கூரிய கத்தியின்மீதுள்ள தேன்’
ஆகையால் இஸ்ரவேலருக்குக் கொடுத்த கடவுளுடைய நியாயப் பிரமாணம் பின்வருமாறு கூறி, எந்த வகையான ஆவிக்கொள்கையையும் தடுத்தாணையிட்டது: “குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்க வேண்டாம்.”—உபாகமம் 18:10, 11.
முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்கள், பேய்த்தனம் சம்பந்தப்பட்ட எல்லாப் பொருட்களையும் அழித்துப்போட்டதன்மூலம் ஆவிக்கொள்கையுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் தங்களைச் சுத்திகரித்தார்கள். (அப்போஸ்தலர் 19:19) யெகோவாவின் நட்பை விரும்பும் இன்றைய இளைஞர்கள் அவ்வாறே மாயமந்திரத்தோடு சம்பந்தப்பட்ட எதிலிருந்தும் முற்றிலும் விலகிச் செல்வார்கள். இது ஆவிக்கொள்கையை மறைமுகமாகத் தூண்டும் எல்லா திரைப்படங்கள், புத்தகங்கள், நகைப்பூட்டும் புத்தகங்கள், ஆவிக்கொள்கையை மேலீடாகக் குறிப்பிடும் விளம்பரங்கள் ஆகியவை எல்லாவற்றிலிருந்தும் விலகுவதை உட்படுத்தும். ஒருவன் தான் இன்னிசையை தெரிந்துகொள்வதையும் கூர்ந்தாராய்ந்து செய்ய வேண்டும். உதாரணமாக, கனத்த உலோக இசை, சாத்தானிய கொள்கையோடு மீண்டும் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.
திபேத்தியர்கள் பின்வரும் பழமொழியைக் கொண்டுள்ளனர்: ‘கூரிய கத்தியின்மீது அளிக்கப்படுகிற தேனை ஏற்பதற்கு முன்னால் இருமுறை யோசி.’ அந்தக் கத்தியிலிருந்து தேனை நக்குவதற்கு முயற்சி செய்வதில், நீ உன் நாக்கை இழந்துவிடக்கூடும்! அவ்வாறே, இயலுலகுக்கு அப்பாற்பட்டது நீ அறிய ஆவல்கொள்ளும் இயல்புக்கு எவ்வளவு கவர்ச்சிகரமாயிருந்தாலும், அது கொல்லும் திட்டம் உடையது. ஆகையால் ஒரு மாயமந்திர கூட்டத்தில் பங்குகொள்வதற்கு அல்லது அதை வெறுமென கவனித்துப் பார்ப்பதற்குங்கூட கொடுக்கப்படும் எந்த அழைப்பையும் மறுத்துவிடு. கண்ணாடிக் குவளையை நகர்த்தும் விளையாட்டைப்போன்ற தோற்றத்துக்குத் தீங்கற்றதாகத் தோன்றும் ஒன்றுங்கூட ஆபத்தான பேய்க்கொள்கையில் உட்படுவதற்கு வழிநடத்தலாம். உண்மைதான், நீ அறிய ஆவல்கொள்ளலாம். ஆனால் வெறுமென உணவு நச்சுத்தன்மை பாதிப்பு எவ்வாறிருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க கெட்டுப்போன இறைச்சியை நீ சாப்பிடுவாயா?
(முன்பு குறிப்பிட்ட) டெர்க் மாயமந்திரத்திலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள முடிந்தது. உவாட்ச் டவர் சங்க பிரசுரங்களின் உதவியால் பைபிளைப் படிப்பதன்மூலம், தன் மரித்தத் தகப்பனைப்பற்றிய சத்தியத்தை அவன் விளங்கிக்கொள்ளலானான், மேலும் உயிர்த்தெழுதலின் நம்பிக்கையைப்பற்றியும் கற்றறிந்தான். (சங்கீதம் 146:4; யோவன் 5:28, 29) இந்தச் சத்தியம் ஆவி உலகத்தோடு தொடர்புகொள்வதற்கு இருந்த எந்த ஆவலிலிருந்தும் அவனை விடுதலையாக்கிற்று. (யோவான் 8:32-ஐ ஒத்துப்பாருங்கள்.) டெர்க் இப்பொழுது எங்கிருக்கிறான்? அவன் யெகோவாவின் சாட்சிகளின் அணிவரிசைகளில் சேர்ந்திருக்கிறான் மற்றும் முழு நேர ஊழியனாக உவாட்ச் டவர் சங்கத்தின் அச்சடிக்கும் ஸ்தாபனங்கள் ஒன்றில் வேலைசெய்கிறான்.
ஆம், பைபிள் நம்முடைய ‘ஆவிக்குரிய தேவைகளைத்’ திருப்தி செய்கிறது. (மத்தேயு 5:3) நீடித்தக் காலப்போக்கில் இது, மரணத்தை விளைவிக்கும் ஆபத்தான மாயமந்திரத்தின்மூலம் ஒருவரின் அறிய ஆவல்கொள்ளும் ஆசையைத் திருப்திசெய்வதைப் பார்க்கிலும் வெகுவாய் நன்மைபயக்குகிறது. (g90 3/8)
[பக்கம் 21-ன் படம்]
இந்தக் குறிசொல்லும் எழுத்துப்பலகை அல்லது கவிழ்ந்தக் கண்ணாடிக் குவளையின் உபயோகம் போன்ற, தீங்கற்றதாகத் தோன்றும் விளையாட்டுடன் மாயமந்திரத்தில் உட்படுவது தொடங்கலாம்