கடவுளுடைய வார்த்தை—மிகச்சிறந்த தற்காப்பு!
உங்களிடம் ஒருவன் திருட முயற்சி செய்யும்போது, நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுடைய உடைமைகளை உடனடியாக ஒப்படைத்துவிடுவீர்களா அல்லது உங்களுடைய பொருட்களைப் பாதுகாக்க எதிர்த்துப் போராடுவீர்களா? இன்றைய வன்முறை உலகில், ஒருவருடைய உடைமை பாதுகாப்பதற்குப் பலாத்காரத்தைப் பயன்படுத்துவதே சரியானது என்று அநேகர் நம்புகின்றனர். ஒரு துப்பாக்கியை வைத்திருப்பது அல்லது போர்க்கலை சார்ந்த ஏதாவதொரு பயிற்சியைப் பெற்றிருப்பது போன்றவை தாக்கப்படுவதற்குத் தற்காப்பாயிருக்கிறது என்று எண்ணுகின்றனர். ஆனால் அவை உண்மையிலேயே சிறந்த பலன்களைக் கெண்டுவருகின்றனவா? அநேக சமயங்களில், ஆயுதங்களைப் பயன்படுத்தினவர்கள் பின்பு அதற்காக மனஸ்தாபப்பட்டிருக்கிறார்கள். அதற்கு மாறாக, ஞானியாகிய சாலொமோன் அரசன் பின்வருமாறு கூறினான்: “தீமைக்குப் பதிற்செய்வேன் என்று சொல்லாதே, யெகோவாவுக்கே காத்திரு, அவர் உனக்கு உதவி செய்வார்.—நீதிமொழிகள் 20:22. தி.மொ.
சமீபத்தில், நியுயார்க்கில் புரூக்லினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் உலக தலைமை காரியாலயத்தின் ஒரு அங்கத்தினர், புரூக்லினிலுள்ள தன்னுடைய நண்பர்களுடைய வீட்டிற்குச் சென்றிருந்தார். “கட்டடத்தின் முகப்பை அடைந்தபோது, இராணுவ உடையை அணிந்திருந்த ஒருவன், ஒரு கத்தியைக் காட்டி என்னிடமாக நெருங்கினான். “எனக்குத் தேவை உன்னுடைய பணம்! எல்லா பணத்தையும் கொடுத்துவிடு!” என்று என்னை வற்புறுத்தினான்.
“அவனுடைய தாக்குதலைக் கண்டு நான் பயப்படாததைக் கண்டு, அவன்: ‘கட்டடத்திற்குள்ளே போ! ஒருவருக்குங் கேட்கக்கூடாது! என்று கட்டளையிட்டான். உள்ளே சென்றவுடன், என்னுடைய பணப்பையை கொடுக்கும்படி மிரட்டினான். $2 (ரூ.30) மட்டுமே இருந்ததைப் பார்த்தான். பணப்பையின் மற்ற அறைகளை அவன் சோதித்துக்கொண்டிருக்கும்போது, நான் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை அவனுக்கு விவரித்தேன்.
“அவன் அதை கேட்காதவாறு பாவனைசெய்து, அதிகம் பணம் வேண்டுமென்று வலியுறுத்தினான். பிறகு, தன்னுடைய கைகளை என்னுடைய கால்சட்டைகளின் பாக்கெட்டுகளில் நுழைத்து, நான் சொருகிவைத்திருந்த ஒரு 20 டாலர் (ரூ.300) உறுதிச்சீட்டை கண்டுபிடித்தான். என்னுடைய பாக்கெட்டுகளில் கிடைத்ததையெல்லாம் தரையில் வீசிவிட்டு. இன்னும் அதிகத்தை கண்டுபிடிப்பான் என்று எண்ணி, தேடுவதைத் தொடர்ந்தான். ‘பணத்தை எதற்காக உபயோகிக்கிறாய்?’ ‘போதை பொருட்களுக்காகவா?’ என்று கேட்டேன். ‘ஆம்’ என்றான் அவன். பிறகு நான் பின்வருமாறு விளக்கினேன்: ’நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக இல்லாவிட்டால், நீ இந்நேரம் இறந்தவனாக இருப்பாய்! நான் கராத்தே பயிற்சி பெற்றவன். நீ அந்தக் கத்தியைப் பயன்படுத்துவதில் ஓரிரண்டு முறை கவனமில்லாமலிருந்திருக்கிறாய்.’
“ஒரு யெகோவாவின் சாட்சியாக என்னுடைய நிலைநிற்கையை பைபிளிலிருந்து எடுத்துக் காட்டியபோது, அவன் தனது முன் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய புத்தகத்தை வெளியே எடுத்து, ‘இதோ பாருங்கள், என்னிடம் பைபிள் இருக்கிறது!’ என்றான். அது ஒரு சிறிய பாக்கெட் அளவு பைபிள்.
“‘அது உனக்கு மிக நேர்த்தியான உதவியாச்சே, ஆனால், அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை நீ வாழ்க்கையில் பொருத்துவதில்லை,’ என்று சொல்லி அவனுடைய பைபிளை எடுத்து மத்தேயு 6:33 மற்றும் யோவான் 17:3-ஐ அவனுக்கு வாசித்து, பைபிள் அறிவை எடுத்துக்கொள்வது மட்டுமல்லாமல், அதைத் தன்னுடைய வாழ்க்கையில் பொருத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அழுத்திக் காண்பித்தேன்.
“இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவன் சிறையிலிருந்து வெளியே வந்தான் என்பதைத் தெறிவித்தான். வேலை இல்லாத காரணத்தாலும், பணம் தேவையாக இருந்ததாலும், அவன் திருட ஆரம்பித்தான். 1 கொரிந்தியர் 6:9, 10-லிருந்து திருடர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டார்கள் என்பதைக் காண்பித்தேன். ‘ஒரு நாள் யாராவது ஒருவர் தன்னுடைய பணத்தைக் குறித்து சண்டைபோடும் ஒருவரை சந்திக்க நேரிடலாம், ஒருவேளை நீ அவனைக் கொலை செய்துவிடலாம், அல்லது அவன் உன்னைக் கொலை செய்துவிடலாம், அல்லது நீ பிடிபட்டு முடிவாக சிறைச்சாலைக்கு மீண்டும் செல்ல நேரிடும்!’ என்பதாக நான் மேலுமாக சொன்னேன். ‘அப்படிச் சொல்லாதீர்கள்!’ என்று பயந்துகொண்டே அவன் சொன்னான். ‘பட்டயத்தை எடுத்து வாழ்பவர்கள் பட்டயத்தால் மடிவார்கள்’ என்பதை அவனுக்கு ஞாபகப்படுத்தினேன்.—மத்தேயு 26:52.
“வசனங்களால் கவர்ந்திழுக்கப்பட்டவனாக, அவன் மன்னிப்பு கேட்டான். தலைகுனிந்த நிலையில் அவன் என்னுடைய பாக்கெட்டிலிருந்து காலி செய்த பொருட்கள் தரையில் கீழே கிடப்பதைப் பார்த்தான். அதிக சாதுவாக, கீழே கிடந்த எல்லா பொருட்களையும் எடுத்து என்னிடம் கொடுத்தான். ஆனால் பணத்தை மட்டும் வைத்துக்கொண்டான். கதவினிடமாக சென்ற அவன், நான் அவனுக்காக ஜெபிப்பேனா என்று கேட்டான். ‘நீ எனக்குச் செய்த காரியம் தவறு, ஆனால் அதற்கு மேலாக, நீ யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்தாய். இது உனக்கும் அவருக்குமிடையே உள்ள காரியம்,’ என்பதாக விளக்கினேன்.
“அவன் புறப்படுகையில், நான் அவனுக்காக ஒரு தயவு செய்யமுடியுமா என்று என்னிடம் கேட்டான். கத்தியைப் பிடித்துக்கொண்டிருந்த தன்னுடைய உள்ளங் கையைத் திறந்து, ‘இதை எனக்காக தூக்கி எரிந்துவிட முடியுமா? நான் ஜனங்களிடம் திருடிக்கொண்டே இருக்கிறேன்,’ என்றான். நான் கத்தியை வாங்கிக்கொண்டு, அதற்குப் பதிலாக ஒரு விழித்தெழு! பத்திரிகையைக் கொடுத்தேன்.—ரிக்கி ஹனாகமி செய்த அறிக்கை. (g86 9/22)