புற்றுநோயை நீங்கள் முறியடிக்க முடியுமா?
“ஆகவே மனித புற்றுநோயில் பொரும்பாலானவற்றைத் தடுப்பது சாத்தியம் என்பதுபோல தோன்றுகிறது.”—புற்று நோய்க்கான காரணங்கள்.
நோயாளியின் வாழ்க்கை முறையும், குணப்படுத்துவதற்காக அளிக்கப்படும் சிகிச்சை முறையில் பங்குகொள்ள விருப்பமும், அவனுடைய அல்லது அவளுடைய உடல் ஆரோக்கியத்தின் போக்கைக் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கக்கூடும்.”—ஹோலிஸ்டிக் மெடிஸன்.
புற்றுநோய் எவ்விதமாக முறியடிக்கப்படமுடியும்? நோயை குணப்படுத்த அல்லது அதன் விளைவுகளைத் தடைசெய்ய என்ன செய்யப்பட்டு வருகிறது என்பதை நாம் ஆராயப்போகிறோம், என்றாலும் “வருமுன் காப்போம்” என்கிறது ஒரு முதுமொழி. ஆகவே உணவின் மூலமாக, இது வராமல் தடுப்பதற்கு இருக்கும் சாத்தியங்களை நாம் முதலாவதாக சிந்திப்போம்.
உணவு ஏதாவது வித்தியாசத்தை உண்டுபண்ணக்கூடுமா?
நாம் உட்கொள்ளும் உணவுகளில் சில புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கக்கூடுமா? கவனிக்கப்படாத புற்றுக்கழலை (Malignant Neglect) என்ற புத்தகம் பின்வருமாறு சொல்கிறது: “ஐக்கிய மாகாணங்களில் பெருங்குடல் மற்றும் மார்பு புற்றுநோயின் உயர் வீதத்துக்கு உணவு முக்கிய காரணமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.” ஆகவே பல வருடங்களாக நீங்கள் உட்கொள்ளும் உணவு, புற்றுநோய் ஏற்படுவதற்குரிய சாத்தியத்தைப் பாதிக்கக்கூடும். ஆகவே நல்ல ஆரோக்கியத்தில் அக்கறையுள்ள ஒரு நபர் அவனோ அல்லது அவளோ தான் என்ன சாப்பிடுகிறோம், என்ன குடிக்கிறோம் என்பதில் விவேகமாக இருக்கவேண்டும்.
உணவு என்று சொல்லும்போது, அது அருந்தும் பானங்களையும் கூட அர்த்தப்படுத்துகிறது. சாராய துர்பிரயோகம் பல்வேறு புற்றுநோய்களுக்கு வழிநடத்தக் கூடுமாதலால் குடிப்பதில் மிதமாக இருக்கவேண்டும். ஆனால் மருத்துவர்கள் எதை “மிதமானது” என்று கருதுகிறார்கள்? இதற்கான பதில், தாங்கள் மிதமாக குடிப்பவர்கள் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கு ஆச்சரியத்தைத் தரக்கூடும். “ஒரு நாளில் இரண்டு அல்லது அதற்கும் குறைவாக குடிப்பது”தானே மிதமாக இருக்கிறது, “விசேஷமாக நீங்கள் புகைப்பிடிக்கிறவராக இருந்தால்”. (உணவும் ஊட்டச்சத்தும் புற்றுநோய் தடுப்பும்) அப்படியென்றால் புற்றுநோயை தடுப்பது என்ற இந்த விஷயத்தில் ஒருநாளில் இரண்டுக்கு மேல் நீங்கள் குடித்தால், நீங்கள் இனிமேலும் மிதமாக குடிக்கிறவர் அல்ல என்று அர்த்தமாகிறது.
தனிப்பட்ட விதமாக நாம் தடுப்பு நடவடிக்கையை எடுத்தால் புற்றுநோயைக் குறித்து ஏதோ ஒன்று செய்யலாம் என்பதே முக்கிய குறிப்பாக இருக்கிறது. ஆனால் தடுப்பு நடவடிக்கைகள் பொதுமக்களின் மீது ஒரு பாதிப்பைக் கொண்டிருக்க தேவைப்படுவது என்ன? புற்றுநோய் அறுவை மருத்துவர் ப்ளேக் கேடி இவ்விதமாகச் சொல்கிறார்: “அதிக கொழுப்புச் சத்துள்ள மாம்சங்களை மறந்து குறைந்த அளவு கொழுப்புள்ள, குறைந்த அளவு கொலஸ்ட்ரால் உள்ள உணவை சாப்பிட பழகிக்கொள்ள பொதுமக்களுக்கு கல்வி புகட்டப்பட வேண்டும். புற்றுநோய் வீதத்தைக் குறைக்க, மருந்தைவிட இது அதிக உதவியாக இருக்கும்.” (டார்கெட்: காண்ஸர்) அப்படியென்றால் எந்த உணவு பொருட்கள் புற்றுநோயை தடுக்க உதவி செய்யக்கூடும்?
உங்கள் உணவில் ஒருநாளில் குறைந்தபட்சம் 25-35 கிராம் (சுமார் 1 அவுன்ஸ்) இயற்கை நார்கள் இருக்க வேண்டும் என்று அரசாங்க சுகாதார ஏஜென்ஸி ஒன்று பரிந்துரைக்கிறது இது இயற்கையாக குடல்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவி செய்கிறது. ஆனால் உங்கள் உணவில் எவ்விதமாக இந்த நார் கிடைக்கும்? நிறைய பழங்கள், காய்கறிகள், பயிறுகள், மொச்சை, முழு தானிய ரொட்டி மற்றும் தானியங்களைச் சாப்பிடுங்கள். உருளைக்கிழங்கு, ஆப்பிள், பேரிக்காய் மற்றும் பழவகைகளைத் தோலோடு சாப்பிடுங்கள். கோசுக்கீரை வகைகள், பெருங்குடல் புற்றுநோயின் அபாய நேர்வைக் குறைக்கக்கூடும்.
பிராணிகளின் கொழுப்பை தவிர்த்துவிடுவது மற்றொரு சிபாரிசாக இருக்கிறது. இறைச்சியைவிட கோழியும் மீனும் சிபாரிசு செய்யப்படுகிறது. நீங்கள் இறைச்சியை தெரிந்துகொண்டால், அதின் மீதோ அல்லது அதினுள்ளோ கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். குறைந்த கொழுப்பு அல்லது ஆடை அகற்றப்பட்ட பால்பண்ணைப் பொருட்களைத் தெரிந்துகொள்ளுங்கள். விட்டமின்கள் ‘A’ மற்றும் ‘C’ சத்துள்ள காய்கறிகள்—பூக்கோசு, சுருண்ட இலையுள்ள கோசு, பசளைக்கீரை, நீல மலர்ச்செடி நீரில் வளரும் கீரை வகை பீட்ரூட் மற்றும் அகன்ற ஓரப்பற்களையுடைய இலைகளையும் மஞ்சள் மலரையும் உடைய செடி வகைகளையும் கூட சேர்த்துக்கொள்ளுங்கள்! விட்டமின்கள் ‘A’ மற்றும் ‘C’ சத்துள்ள உணவு பொருட்களை வெளிப்படுத்துவது மஞ்சள்-செம்மஞ்சள் நிறமாகும்: காய்கறிகள்—காரட்டுகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூசணிக்காய், சுரைக்காய்; பழங்கள்—வாதுமைப்பழம், பப்பாளிப்பழம், பீச் எனப்பட்ட பழம் அன்னாசிப்பழம், முலாம் பழம் வகை ஆகியவை ஒரு சிலவாகும்.
உணவும் ஊட்டச்சத்தும் புற்றுநோய் தடுப்பும் மேலுமாக இவ்விதமாகச் சொல்கிறது: “(செறிவு மற்றும் செறிவற்ற இரண்டுவகை) கொழுப்புச் சத்துக்களை அதிகமாக உட்கொள்வது, உங்களுக்குப் பெருங்குடலில், மார்பில், பெருங்சுரப்பியில், மற்றும் கருப்பையின் உள்வரிச் சவ்வில் புற்றுநோய் ஏற்படுவதற்குரிய சாத்தியத்தை அதிகரிக்கக்கூடும் என்பதற்கான அத்தாட்சி வளர்ந்துகொண்டே இருக்கிறது.” அப்படியென்றால், அநேக புற்றுநோய்களில் உங்கள் உணவு வித்தியாசத்தை உண்டுபண்ணக்கூடும் என்பதே ஆய்வின் முடிவாக இருக்கிறது.
புற்றுநோயின் அபாய நேர்வைக் குறைக்க நாம் விரும்பினால் வேறு என்ன பொருட்களைத் தவிர்க்க வேண்டும்? ஒருவேளை இந்தப் பரிந்துரையைச் சிலர் விரும்பாமல் இருந்தபோதிலும் புகையிலையின் பங்கை நாம் ஆராய வேண்டும்.
புற்றுநோயைப் பற்றி அவர்கள் சொல்வது உண்மை
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நிபுணர்கள் டாலும் பீட்டோவும் பின்வருமாறு எழுதினார்கள்: “புகையிலை உபயோகத்தை குறைப்பதைவிட வேறு எந்த ஒரு தனி நடவடிக்கையும் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையின் மீது அத்தனை அதிகமான பாதிப்பை கொண்டிருப்பதாக தெரியவில்லை . . . முக்கியமாக நுரையீரல் புற்றுநோயை இது பாதிக்கிறது. வாழ்நாள் முழுவதும் புகை பிடிக்காமலே இருந்துவிடுகிறவர்களைவிட, புகைப் பிடிப்பவர்களின் மத்தியில், பிற்பட்ட வருடங்களில் இது வருவதற்காக வாய்ப்பு பத்து மடங்கு அதிகமாக உள்ளது.”
புகைப்பிடிப்பதை தொலைத்துவிடுவது மற்ற புற்றுநோய்களையும் கூட குறைத்துவிடக்கூடும். “வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய் நீர்ப்பை ஒருவேளை கணையம் மற்றும் சிறுநீரகத்தில் வரக்கூடிய புற்றுநோய்களின் மீதும் கூட உண்மையான ஒரு பாதிப்பை இது கொண்டிருக்கக்கூடும்.”—புற்றுநோய்க்கான காரணங்கள்.
அழிக்கக்கூடிய வேதியற் பொருட்கள்
வேலை செய்யும் இடத்தில் வேதியற் பொருட்களை நீங்கள் சுவாசிக்கிறீர்களா அல்லது அவை உங்கள் தோலின்மீது படுகின்றனவா? சில வேதியற் பொருட்கள் புற்றுநோயை உண்டுபண்ணக்கூடும் என்பதை அண்மைக்கால ஆராய்ச்சி உறுதி செய்திருக்கிறது. ஐக்கிய மாகாணங்களின் தேசீய நச்சூட்டாய்வு திட்ட நிர்வாகி, டேவிட் P. ரால், “18 வேதியற் பொருட்கள் மனிதனில் புற்றுநோயை உண்டுபண்ணக்கூடியவை என்றும் மற்றொரு 18 வேதியற் பொருட்கள் இவ்விதமாக சந்தேகிக்கப்படுகிறது” என்றும் குறிப்பிடுகிறார். கண்டுபிடிப்புகளின் பத்தாண்டு என்ற அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் உடல்நலம் பற்றிய பிரசுரம் ஒன்று இவ்விதமாகச் சொல்கிறது: “தனி ஒரு வேதியற் பொருள் அதை தோற்றுவிக்கவோ அல்லது தீவிரப்படுத்தவோ செயல்படக்கூடும் அல்லது இரண்டு அல்லது அதிகமான வேதியற் பொருட்கள் ஒரு கழலையை உண்டுபண்ண ஒன்றோடொன்று செயலாற்ற முடியும்.” அப்படியென்றால் ஆபத்தான சில வேதியற் பொருட்களும் வேலைகளும் யாவை?
புற்றுநோய்க்கான காரணங்கள் புத்தகத்தின் பட்டியலில் காரப்படுத்தும் பொருட்கள், நறுமணமூட்டும் பொருட்கள், கல்நார், சாம்பிராணி, எண்ணெய், வினைல் க்ளோரைட் மற்றும் அரிதார நஞ்சு, தகரம் மற்றும் நிக்கலின் சில சேர்மானங்கள் அல்லது உயிரக இணைவு நிலைகள் இடம் பெறுகின்றன, வயிரம் பாய்ந்த தட்டுமுட்டு மரச் சாமான்கள், தோல் பொருள் உற்பத்தி மற்றும் ஐஸோ ப்ரோப்பைலின் உற்பத்தி ஆகியவை சம்பந்தப்பட்ட தொழில்கள் ஆபத்தானவை என்றும் அது குறிப்பிடுகிறது. அப்படியென்றால் உங்கள் வேலையில் இவையெல்லாம் உட்பட்டிருந்தால் நீங்கள் என்ன செய்யலாம்?
பொதுவாக பொறுப்பற்ற முதலாளிகள், தூய்மைக் கேட்டின் அபாயங்களை நீக்கிவிட நடவடிக்கை மேற்கொள்வார்கள். சில சந்தர்ப்பங்களில், கூடுதலான காற்றோட்டம், புகைகளை விரைவாக வேலை செய்யுமிடத்திலிருந்து போக்கிவிட உதவியாக இருந்திருக்கிறது. மற்ற சந்தர்ப்பங்களில் அபாயமான பகுதிகளில் தொழிலாளிகள் குறைவான நேரமே வேலை பார்க்கிறார்கள். பாதுகாப்பான உடையும் சுவாசக் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. என்றபோதிலும் இங்கு ஒரு சிறிய எச்சரிக்கை பொருத்தமாக இருக்கிறது.
“அநேக கம்பெனிகளுக்கு இந்த வேதியற் பொருட்கள் இருப்பதே தெரியாமல் இருக்கலாம். அல்லது புற்றுநோய் வளரத் தூண்டுதல் செய்யும் பொருள் ஒன்று இருப்பது பற்றியே அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.” (கண்டுபிடிப்புகளின் பத்தாண்டு) அவ்வாறு இருக்குமானால் நீங்கள் என்ன செய்யலாம்? உங்கள் முதலாளி உங்களைப் பாதுகாக்க முனமுள்ளவராக இல்லாவிட்டால், உங்கள் வேலையை மாற்றிக்கொள்வதைக் குறித்து ஒருவேளை சிந்தித்துப் பார்க்க வேண்டியதாய் இருக்கலாம். என்ன இருந்தாலும் உங்கள் உடல் ஆரோக்கியம்தானே அதிக விலைமதிப்புள்ள ஒரு சொத்தாக இருக்கிறது.
ஆகவே, புற்றுநோயை முறியடிக்க நீங்கள் எதையாவது செய்யக்கூடுமா? முதலாவதாக இந்தக் கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்: ஜீவனையும் உடல்நலத்தையும் உயிரோடிருப்பதையும் நீங்கள் நேசிக்கிறீர்களா? ஆரோக்கியமான ஒரு உடலைக் கொண்டிருக்கும் மகத்தான பரிசினால் நீங்கள் கவரப்படுகிறீர்களா? நீங்கள் புற்றுநோயை முறியடிக்க விரும்புகிறீர்களா? ஆம், என்பது உங்கள் பதிலாக இருக்குமானால், உங்களுடைய சொந்த உடலில் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்களைக் குறைக்க உதவியாக உங்களுடைய வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்துகொள்ள வேண்டும். (பக்கம் 6-லுள்ள வரைபடத்தைப் பார்க்கவும்)
ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தல்—குணமாக்க முதல்படி
தடுக்க முடியாதபடி பிந்திவிட்டால் என்ன செய்வது? “புற்றுநோய் வந்துவிடுமோ என்று பயப்படுகிறவர்களுக்கு இன்னமும் நற்செய்தி இருக்கிறது . . . ஆனால் . . . புற்றுநோய் சிகிச்சையில் பெறப்பட்டுள்ள பெரும்பாலான முன்னேற்றங்கள் சீக்கிரத்தில் கண்டுபிடிக்கப்படுகிறவைகளோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கிறது” என்பதாக விஞ்ஞான எழுத்தாளர் எட்வர்ட் J. சில்வெஸ்டர் எழுதுகிறார். ஆகவே புற்றுநோயின் சாத்தியமான எச்சரிக்கை அறிகுறிகளைக் குறித்து விழிப்புள்ளவர்களாயிருக்கும்படி எல்லா நிபுணர்களும் ஆலோசனை சொல்கிறார்கள். ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளாக நீங்கள் எதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்? இவற்றில் சில:
1. மலம் அல்லது சிறுநீர் மாதிரிகள் அல்லது பழக்கங்களில் ஒரு மாற்றம்.
2. குணமாகாத ஒரு புண்.
3. அசாதாரணமான இரத்தப்போக்கு அல்லது கசிவு.
4. மார்பிலோ வேறு இடத்திலோ தடிப்பு அல்லது கட்டி.
5. வழக்கமான அஜீரணம் அல்லது விழுங்குவதில் பிரச்னை.
6. பாலுண்ணி அல்லது மச்சத்தில் தெளிவாக காணப்படும் மாற்றம்.
7. இடைவிடாது நச்சரித்துக் கொண்டிருக்கும் இருமல் அல்லது தொண்டை கட்டிக்கொள்ளுதல்.
8. அண்மையில் காரணமில்லாமல் எடை இழப்பு.
இந்த நோய்க்குறிகள் ஏதாவது காணப்பட்டவுடனேயே ஒரு மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும். நோய்குறி ஒருவேளை புற்றுநோய்க்கு அறிகுறியாக இராது. ஆனால் சீக்கிரத்தில் நீங்கள் அதைக் கண்டுபிடித்துவிடுவதே மேலானதாகும்.
மம்மோக்ராபி (mammography) தெர்மோக்ராம்ஸ் சோனோக்ராம்ஸ், CAT ஸ்கன்ஸ், பேப் சிமயர்ஸ் மற்றும் மலப் பரிசோதனை மூலமாக கழலைகள் விரைவில் கண்டுபிடிப்பதில் முன்னேற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. Can we try to explain these methods in Tamil as far as possible? இப்பொழுது தொழில்நுட்ப வல்லுநர்கள் MRI (Magnetic resonance imaging) என்றழைக்கப்படும் இன்னும் அதிக துல்லிபமான நோய் அறுதியிடும் அமைப்பு முறையை கண்டுபிடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் ஜான் போயஸ் விளக்கும் விதமாகவே MRI ஸ்கன், “வேறு இடம் நுழையாத, மின்காந்த அலைகளின் ஆற்றல் இல்லாத மற்றும் வேதனையில்லாத செயல்முறையாகும்.” இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. “ஹன்டிங்டன் மருத்துவப் பிரிவில், CAT ஸ்கன் பரிசோதனை, மூளையில் எந்தவித கோளாறும் இல்லை என்று தெரிவித்த 93 நோயாளிகளில், மூளையில் கழலை இருப்பதை இது கண்டுபிடித்தது.”(அமெரிக்க முறை) இது அதிக பணச்செலவை உட்படுத்துவதாக இருந்தபோதிலும் 1986-ன் முடிவுக்குள் அமெரிக்காவிலுள்ள மருத்துவமனைகளில் 300 கருவிகள் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
உங்களுடைய மனநிலையும் ஒரு மருத்துவரின் ஆலோசனையும்
ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதாக சொல்லப்படும்போது, அநேகமாக அவருடைய முதல் பிரதிபலிப்பு உண்மையை ஏற்க, அதை நம்ப மறுப்பதாக இருக்கிறது. “உண்மையை ஏற்க மறுப்பது என்பது, உயிரை பயமுறுத்தும் நிலைமைகள் அல்லது தகவலுக்கு எதிரான அதிமுக்கியமான இயல்பான மற்றும் ஆரோக்கியமான பாதுகாப்பு ஏற்பாடாக இருக்கிறது” என்று புற்றுநோய் பற்றிய உண்மைகள் என்ற புத்தகத்தில் டாக்டர் மக்கான் குறிப்பிடுகிறார். அது ‘ஆன்மாவின் நோவாற்றும் மருந்தாக’ விவரிக்கப்படுகிறது. சகித்துக்கொள்ள அதிக வேதனையான எண்ணங்களை நாம் விலக்கிவிடுவதற்கு இது வழியாக இருக்கிறது. நிஜங்களை எதிர்படுவதற்கு நம்முடைய உணர்ச்சிப் பூர்வமான பெலத்தை ஒன்றுதிரட்ட நாம் உண்மையில் நேரத்தை வாங்கிக்கொண்டு, நிஜங்கள் நம்மை மேற்கொண்டுவிடாதபடி அதை தாமதமாகவே உள்ளே அனுமதிக்கிறோம்.”
என்றபோதிலும் அவர் ஒரு எச்சரிப்பைக் கொடுக்கிறார்: “தீவிரமான உண்மைகளை ஏற்க மறுத்து காலங் கடத்துவது ஆரம்பத்திலேயே மருத்துவ கவனிப்பைப் பெற்றுக்கொள்வதை அல்லது நோய் அறுதி செய்துகொள்வதை ஏற்றுக்கொள்ள தவறுவதன் மூலம் மருத்துவ ஆலோசனையையும் சிகிச்சையையும் தள்ளிவிடச் செய்துவிடலாம்.”
மற்றொரு பிரதிபலிப்பு பயமாக அல்லது கோபமாக இருக்கலாம். “கோபத்துக்குக் குறியிலக்காக . . . குடும்பம், கடவுள், விதி, மருத்துவர்கள், தாதிமார்கள், மருத்துவமனை அல்லது நோயாகவோ இருக்கக்கூடும்,” என்பதை அனைவரும் புரிந்துகொள்வது பிரயோஜனமாக இருக்கும்.
புற்றுநோயாளியின் மனதை குற்றவுணர்வு அநேகமாக ஆக்ரமித்துக்கொள்கிறது. நோய்வாய்படும் கணவன், இனிமேலும் தன் குடும்பத்தைச் சரிவர கவனிக்க இயலாதவராகிவிடும் காரணத்தால் குற்றவுணர்வுக்குள்ளாகிறார். மனைவி தான் முன்பு செய்துவந்தது போல வீட்டை கவனிக்க இயலாத காரணத்தால் குற்றவுணர்வுக்குள்ளாகிறாள். டாக்டர் மக்கானின் ஆலோசனை: “ஏதோ ஒன்றை செய்ய முடியாததைக் குறித்து குற்றமுள்ளவராக உணர்வதைவிட அதற்காக மனஸ்தாபப்படும்போது கஷ்டத்தைத் தாங்குவது சுலபமாக இருக்கிறது?
புற்றுநோயாளியின் மற்றொரு பிரதிபலிப்பு சோர்வாக இருக்கிறது. இது நம்பிக்கையற்ற மற்றும் துயரமான உணர்ச்சிகளுக்கு வழிநடத்தக்கூடும். இந்தப் பிரதிபலிப்புகள் அனைத்தையும் டாக்டர் மக்கான் எவ்விதமாக கருதுகிறார்? “இவை விரும்பத்தகாதவையாக இருந்தபோதிலும் தீவிரமான இந்தப் பிரதிபலிப்புகள் முற்றிலும் இயல்பானவையாகவே இருக்கின்றன. . . . அவை நோய்க்கு பிரதிபலிப்புகளாக இருக்கிறதே ஒழிய நோயின் பாகமாக இல்லை.”
அவரின் ஆலோசனை: “புற்று நோயை நீங்கள் எதிர்படுகையில், அநேக போராட்டங்களை நீங்கள் போராடுவது அவசியமாக இருக்கலாம். சிலவற்றில் நீங்கள் வெற்றி பெறக்கூடும். ஆனால் சிலவற்றில் தோல்வியடைவதையும் நீங்கள் எதிர்பார்த்திருக்க வேண்டும் . . . தேவைப்படுவது என்ன என்பதைப் புரிந்துகொள்ள நீங்கள் எதிரியைப் பற்றி ஆராய்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். புற்றுநோய் எவ்விதமாக உங்கள் உடலைத் தாக்குகிறது என்பதையும், ஆனால் அதிக முக்கியமாக ஒரு நபராக உங்களை, உண்மையான உங்களை எவ்வாறு தாக்குகிறது என்பதையும் கற்றறிவதை இது அர்த்தப்படுத்துகிறது.”
புற்றுநோய் சிகிச்சையை எதிர்படுதல்
ஒருசில விதங்களில், புற்றுநோய்க்கு எதிரான போர் படிப்படியாக பலன்தந்து கொண்டிருக்கிறது. சமீப பத்தாண்டுகளில், பலன்கள் அதிக உற்சாகமூட்டுவதாக இருக்கின்றன. மருத்துவர்களும் விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் சுரங்கப் பாதையின் முடிவில் ஒரு சிறிய ஒளியை காண்கிறார்கள். புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இது இன்றியமையாததாக ஒரு காரணகூற்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது—நம்பிக்கை டாக்டர் மக்கான் சொல்கிறவிதமாகவே: “புற்றுநோயோடு வாழ்வதற்கு ஒருவேளை மிக முக்கியமான தனி ஒரு தேவை நம்பிக்கையாகும் . . . , இது வாழ்க்கையில் மிகவும் விளங்காததும், தளர்ந்து விடாமல் நம்மைக் கொண்டுசெல்லும் மதிப்பீடுகளில் ஒன்றாகவும் இருக்கிறது.” நம்பிக்கை குணமாதலைத் துரிதப்படுத்துகிறது. நம்பிக்கை இழந்த நிலையில் புற்றுநோய் செழிக்கிறது. ஆனால் புற்று நோயாளி ஒருவர் எங்கிருந்து நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ள முடியும்?
பல்வேறு வழிகள் இருக்கின்றன. இவற்றில் மூன்று குறிப்பிடத்தக்கவை: (1) அநுதாபமும் தளராத நம்பிக்கையுமுள்ள மருத்துவர்களும் தாதிமார்களும். (2) விசேஷமாக உடன்பாடான மனநிலையுடன் சிந்திக்கும் விவாகத் துணைவர் போன்ற உங்களுக்கு நேசமானவர்கள். (3) நல்ல ஆதாரமுள்ள மதநம்பிக்கை. இந்தத் தொடரில் எமது கடைசி கட்டுரை, விசுவாசத்தின் பண்பைப் பற்றியும் எதிர்காலத்தில் நம்பிக்கைக் கொள்வதற்கான மெய்யான ஆதாரத்தைப் பற்றியும் பேசுகிறது.
மருத்துவச் சொல்லில் புற்றுநோய்க்கான மூன்று முக்கிய ஏற்றுக்கொள்ளப்பட்ட சிகிச்சை முறைகளே நம்பிக்கைக்கு உறுதியான ஆதாரமாக இருக்கின்றன—அறுவை சிகிச்சை, வேதியல் சேர்மத்தைக்கொண்டு நோய் நுண்மங்களை அழித்தல் மற்றும் மின்காந்த ஆற்றலால் அவற்றை அழித்தல். இந்த மூன்று முறைகள் யாவை?
அறுவை சிகிச்சை—கழலை வளர்ச்சியையும் ஒருவேளை அதைச் சுற்றியுள்ள திசுக்களையும் அப்புறப்படுத்துவதை இது உட்படுத்துகிறது.
வேதியல் சேர்மத்தினால் சிகிச்சை—(Chemical Therapy) இது உடல் முழுவதிலும் பரவி, கழலை செல்களைத் தாக்கக்கூடிய மருந்துகளின் மூலம் சிகிச்சை அளிப்பதாகும். “புற்றுநோய்க்குச் சிகிச்சையளிக்க ஐம்பதுக்கும் மேற்பட்ட வேதியற் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில கழலைகளை இதனால் குணப்படுத்த முடியும்.
மின்காந்த ஆற்றல் சிகிச்சை—புற்றுக்கழலை செல்களை அழிப்பதற்காக, ஊடுகதிர், கோபால்ட், கதிரியம் இன்னும் மற்ற ஊற்றுகளிலிருந்து உயர் சக்தி மின்காந்த ஆற்றலை உபயோகிப்பதை இது உட்படுத்துகிறது.
பக்க பாதிப்புகளை எதிர்படுதல்
புற்றுநோய் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுகையில், ஆபத்துகளை அல்லது பக்க பாதிப்புகளைப் பற்றிக் குறிப்பிடாவிட்டால் அது நியாயமாக இராது. எளிய சொற்களில் சொன்னால், “வேதியல் சேர்ம மருந்துகள் நஞ்சாக [விஷமாக] இருக்கின்றன. இவற்றில் சில அத்தனை நச்சுத்தன்மையுள்ளவையாக இருப்பதால் நோயாளிகள் அதன் பக்க பாதிப்புகளால் உயிரிழந்துவிடுகிறார்கள்.” (டார்கெட்: கான்ஸர்) ஆகவே வேதியல் சேர்ம சிகிச்சை, அமைப்பை விஷப்படுத்துவதால் இருபுறமும் கூர்மையான ஒரு பட்டயமாக இது இருக்கிறது. அது ஆரோக்கியமான செல்களைவிட அதிகமான புற்றுக்கழலை செல்களையே அழிப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் அது குமட்டல் உணர்ச்சி, வாந்தியெடுத்தல், தற்காலிகமாக மயிர் இழத்தல் போன்ற வேறு பயங்கரமான பக்க விளைவுகளுக்கு வழிநடத்தக்கூடும். ஆனால் அநேக நோயாளிகள் உயிரை அகால மரணத்தில் இழப்பதைக் காட்டிலும் தற்காலிகமாக விரும்பத்தகாத இந்தப் பக்க பதிப்புகளே மேலானவை என்று நினைத்திருக்கிறார்கள்.
மின்காந்த ஆற்றல் சிகிச்சை என்பது உண்மையில் அது தொடும் எல்லா செல்களையும் அழிக்க வல்ல சுட்டெரிக்கிற ஒரு முறையாகும். என்றாலும் கழலை இருக்கும் இடத்தில் துல்லிபமாக அதைச் செலுத்தமுடியும். என்றபோதிலும் “மின்காந்த சிகிச்சை முறை பிற்காலத்தில் புற்றுநோய்களை உருவாக்கும் என்று உறதியாக நம்பப்படுவதாக” ஒரு மேற்கோள் குறிப்பிடுகிறது. ஆகவே இந்த நிலையில் நோயாளி இதைத் தீர்மானிக்க வேண்டியவராக இருக்கிறார்.
சில மருத்துவர்கள், அவர்களுடைய கருத்துப்படி நோயாளிக்கு எந்த நம்பிக்கையுமில்லாத நிலையிலும்கூட சில சமயங்களில் இந்தச் சிகிச்சை முறைகளைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறார்கள். சில்லியிலுள்ள அறுவை மருத்துவர் வில்லர் இதை ஒப்புக்கொள்கிறார்: “சில சமயங்களில் புற்றுநோய் சிகிச்சை பெருஞ் செலவு பிடிக்கும்—பெருஞ் செலவு பிடிக்கும் ஒரு சிகிச்சையாக உள்ளது.” “அவை உண்மையில் பிரயோஜனமானவையாக இருக்கின்றனவா என்பதற்கு எந்த அத்தாட்சியும் இல்லாவிட்டாலும், அதிக விஷத்தன்மையுள்ள சிகிச்சைகள், நோயாளிகளுக்குத் தரப்படுவதைக் குறித்து வில்லரைப்போலவே அநேக புற்றுநோய் மருத்துவர்களும் கவலை தெரிவிக்கிறார்கள்,” என்று விஞ்ஞான எழுத்தாளர் சில்வெஸ்டர் குறிப்பிடுகிறார். அப்படியென்றால் ஏன் அவை சிபாரிசு செய்யப்படுகின்றன? ஏனென்றால் ஒரு மருத்துவரின் வார்த்தைகளில் சொல்லப்போனால், “பாவம், ஒரு பெண் அப்படியே மரித்துப்போவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.”—டார்கெட்: கான்ஸர்.
என்றபோதிலும் அநேக ஆட்கள் வேதனையை இன்னும் நீடிக்கச் செய்யும் ஒரு சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளாமலே காலத்தைக் கடத்திவிட விரும்புகிறார்கள். குறிப்பாக, சிகிச்சையினால் எந்தப் பிரயோஜனமும் இல்லாமலும் அல்லது அது அவர்களுடைய வேதனையைக் கூட்டுவதாக இருந்தால் அப்படி இருக்கிறது.
மார்பு புற்றுநோயை முறியடிக்கமுடியுமா?
ஒருவேளை பெண்கள், சில ஆண்களுங்கூட பயந்து நடுங்கும் புற்றுநோய், மார்பு புற்றுநோயாகும். இதன் சாவு வீதத்தினால் மாத்திரமல்லாமல், அதில் அழகும் மனோதத்துவ பாதிப்புகளும் உட்பட்டிருப்பதனால் அவர்கள் பயப்படுகிறார்கள். மாஸக்டாமி என்று அழைக்கப்படும் மார்பு அறுவை சிகிச்சையை தவிர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? ஆரம்பத்திலேயே அதைக் கண்டுபிடித்துவிடுவதே இதற்கு முக்கியமானதாக இருக்கிறது.
பெண்கள், ஏதாவது தடிப்புகள் இருக்கின்றனவா என்பதாக தங்கள் மார்புகளைச் சுய பரிசோதனை செய்துபார்க்கும்படியாக சொல்லப்பட்டாலும் கூட, பெரிய மார்புகளுடைய பெண்கள், ஆண்டுக்கு ஒரு முறை மார்பு ஊடுகதிர் நிழற்பட பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏன்? ஏனென்றால் வெறுமென தொட்டு சோதிப்பதன் மூலம், திசுக்களின் ஆழத்திலுள்ள தடிப்பை கண்டுபிடிப்பது அரிதாகும். மருத்துவர் காரி செர்வாஸின் ஆலோசனைப்படி: “நீங்கள் 35 அல்லது 40 வயதை அடைந்தவுடனே, உங்கள் மார்பு ஊடுகதிர் பரிசோதனையைச் செய்துகொண்டால், அதிர்ஷ்டசாலிகளில் ஒருவராக நீங்கள் கருதப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.” ஏன் அப்படி? மார்பு புற்றுநோய், அதன் முதல் கட்டத்திலிருக்கும்போது கண்டுபிடிக்கப்பட்டால், உயிர் வாழ்வதற்கான ஐந்தாண்டு வாய்ப்பு 85 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கிறது.”
இப்பொழுதெல்லாம், மிகக்குறைவான அளவு மின்காந்த அலையில் வேலை செய்யும் ஊடுகதிர் பொறிகள் உள்ளன. மிதமிஞ்சிய மின்காந்த ஆற்றலின் காரணமாக புற்றுநோய் ஏற்படும் சாத்தியத்தை இது குறைத்துவிடுகிறது.
ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதற்கு மற்றொரு உதவி மார்பின் வெப்பத்தை அலகிடுவதாகும். “கழலைகள் தங்கள் சொந்த இரத்த தேவைகளை உருவாக்கிக்கொள்கின்றன. இவற்றின் வளர்ச்சிக்கு அதிகமான அளவில் இரத்தத்தின் பிராண வாயு சக்தி தேவையாக இருக்கிறது. . . . இவை வெப்பமான புள்ளிகளை உருவாக்கிக்கொண்டு சாதாரண செல்களைவிட அதிகமான அளவில் சக்தியை வெளிப்படுத்துகின்றன.” (டார்கெட்: கான்ஸர்) இதன் மூலமாக “வெப்பப் புள்ளிகளை” சீக்கிரத்தில் கண்டுபிடித்துவிட முடிகிறது.
கடந்த காலத்தில், மார்பு புற்று நோய்க்கான அறுவை சிகிச்சையில், மார்பும் சுற்றியுள்ள தசைநார் திசுக்களும், நிணநீர் கணுக்களும் அகற்றப்பட்டன. இது இன்னும் அவசியமானதாக கருதப்படுகிறதா? மார்பு புற்றுநோய் நிபுணரான டாக்டர் பெர்னாட் ஃபிஷரின்படி, வேரோடு மார்பை நீக்கிவிடுவது பொதுவாக அவசியமில்லை என்பது மட்டுமல்லாமல், “மின்காந்த ஆற்றல் சிகிச்சையோ அல்லது அது இல்லாமலோ, எல்லா மார்பு திசுக்களையும் அகற்றிவிடுவது, வெறும் கழலையை மட்டும் அகற்றுவதைக் காட்டிலும் எந்தவிதத்திலும் உயிர்பிழைக்க அதிக வாய்ப்பளிப்பதாக தோன்றவில்லை.”
வேறு வகையான சிகிச்சைகள்?
இதுவரையாக புற்றுநோய் சிகிச்சைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ அணுகுமுறைகளை மாத்திரமே நாம் சிந்தித்திருக்கிறோம். சில நோயாளிகள் மற்ற முறைகளிலும்கூட சிகிச்சைப் பெற்று இதில் வெற்றியும் தோல்வியுமடைந்திருப்பதை இதில் நியாயமாகவே குறிப்பிட வேண்டும். லேட்ரைல் (விட்டமின் B17) சிகிச்சையும் மூலிகைகளையும் சில வேதியற் பொருட்களையும் உபயோகிக்கும் ஹாக்ஸி சிகிச்சையும் டாக்டர் வில்லியம் டி. கெல்லி என்ற மருத்துவர் கண்டுபிடித்த மற்றொரு முறையும் இதில் அடங்கும். இந்தப் பல் மருத்துவரின்படி, புற்றுநோய், “கணைய செரிமான பொருள் குறைபாடு இருப்பதைச் சுட்டிக் காண்பிக்கிறது.”—கான்ஸருக்கு ஒரு பதில்.
மேலுமாக டார்கெட்: கான்ஸர் என்ற புத்தகம் குறிப்பிடும் விதமாகவே: “புற்றுநோய்க்கும் மற்ற நோய்களுக்கும் காரணமும் பரிகாரமும் தடுப்பும் ‘ஒழுக்க மேம்பாட்டின்’ காரியத்தின் பேரில் சார்ந்திருப்பதாக அநேக ஆட்கள் சொல்கிறார்கள். இவ்விதமாகச் சொல்லும் சில மருத்துவர்களும் இருக்கிறார்கள். முழு மனிதன் சரியான நிலையிலிருந்து வெளியேறிவிடுவதால் புற்றுநோய் வருகிறது. மனிதனின் பங்கில் மனமார முயற்சியின் மூலம் உடல் ஆரோக்கியத்தைத் திரும்ப பெற்றிடலாம். சமுதாயத்தில் மதிப்புள்ள அநேக ஆட்களும்கூட இதை நம்புகிறார்கள். ஒரு காலத்தில் புற்று நோயாளிகளாக இருந்தவர்கள், இந்த முறையினால் தாங்கள் குணமடைந்துவிட்டதாக உறுதியாகச் சொல்கிறார்கள்.”
ஆலிஸ் என்பவள் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருத்தி. 50 வயதான அவள் கனாடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்தவள். 36 வருடங்களுக்கு முன்பாக கையில் ஒரு சிறிய புற்றுக்கழலைக்காக அறுவை மருத்துவம் செய்துகொண்டாள். ஆறு வருடங்களுக்குப் பின் அவளுடைய கருவகப் புற்றுநோய்க்காக, அறுவை மருந்துவம் செய்துகொண்டாள். பின்பு 1960-ல், கருப்பையே நீக்கப்பட்டது.
1965-ல் மீண்டும் புற்றுநோய் வந்தது. மறுபடியும் அறுவை சிகிச்சையே சிபாரிசு செய்யப்பட்டது. ஆலிஸ் சொல்கிறாள்: “அவர்கள் மீண்டும் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். நான் பலமுறை அறுவை சிகிச்சை செய்துகொண்டு விட்டேன். ஆகவே மெக்ஸிக்கோவில் ஹாக்ஸி சிகிச்சைக்காக நான் சென்றேன். 11 வருடங்களுக்கு அவர்களுடைய முறையை நான் பின்பற்றினேன். பலருக்கு அது வேலை செய்யவில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு அது வேலை செய்தது. அதற்குப் பின் எனக்குப் புற்றுநோய் மறுபடியுமாக வரவே இல்லை.”
புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில வெற்றி பெற்றிருக்கும் மற்றொரு நபர் ரோஸ்மேரி. அடுத்து அவள் தன் கதையைச் சொல்கிறாள். (g86 10/8)
[பக்கம் 13-ன் பெட்டி]
விழித்தெழு! இந்தப் பல்வேறு முறைகளைக் குறிப்பிட்டாலும் கூட, அவற்றின் குணப்படுத்தும் ஆற்றலைக் குறித்ததில் நாங்கள் ஒரு முடிவை சொல்வதற்கில்லை. டாக்டர் கெல்லி ஒப்புக்கொண்ட விதமாகவே: “[ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்தாலும், ஏற்றுக்கொள்ளப்படாததாயினும்] நீங்கள் தெரிந்துகொள்ளும் எந்த ஒரு சிகிச்சை முறையிலும் அல்லது பல முறைகளிலும் பெரும் ஆபத்து இருக்கிறது என்பது எப்பொழுதும் மனதில் கொள்ளப்பட வேண்டும். ஆகவே தற்போதைய நிலைமையைப் பற்றி தகவல் தெரிவிக்கவே நாங்கள் முயற்சி செய்கிறோம். ஆனால் ஒவ்வொரு தனி நபரும் ஆராய்ந்து, தகுதியுள்ள மருத்துவர்களின் ஆலோசனை கேட்டு அவளுடைய அல்லது அவனுடைய சொந்த தீர்மானத்தையே செய்ய வேண்டும்.
[பக்கம் 10-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
புகைபிடிக்கும் ஆண்களுக்கு வரும் புற்றுநோய் மரணத்தின் மற்றும் புகைபிடிக்காதவர்களுக்கு வரும் புற்றுநோய் மரணத்தின் ஒரு மாதிரி ஒப்பீடுa
புகை பிடிக்காதவர்கள்
231 மரணங்கள் எதிர்பார்க்கப்படுகிறது
நுரையீரல் புற்றுநோய்
ஒவ்வொரு மனிதனும் 100 மரணங்களைக் குறிக்கிறான்
புகைப்பிடிப்பவர்கள்
2,609 மரணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது
புகை பிடிக்காதவர்கள்
65 மரணங்கள் எதிர்பார்க்கப்படுகிறது
வாய் மற்றும் தொண்டை புற்றுநோய்
புகைப்பிடிப்பவர்கள்
452 மரணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது
[அடிக்குறிப்புகள்]
a ஐக்கிய மாகாணங்களில் 1950-களில் புகைப்பிடிப்பவர்களாக இருந்த ஆண்களின் மத்தியில் 1970-ல் ஏற்பட்ட மரணங்களின் அடிப்படையில்—புற்றுநோய்க்குக் காரணம், பக்கம் 1221 பார்க்கவும்.
[பக்கம் 9-ன் படங்கள்]
இந்த உணவுகள் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பளிக்கும் இயற்கை நார்களையும் விட்டமின்களையும் அளிக்கின்றன