இளைஞர் கேட்கின்றனர்
அது வெறுமென மோகம் என்று யார் சொல்வது?
“நீங்கள் பருவ வயதினராக இருந்தபோது எவர்மீதாவது உங்களுக்கு மோக உணர்ச்சி ஏற்பட்டதுண்டா?” 21-70 வயதுகளிலிருந்த வயது வந்தவர்களின் ஒரு தொகுதியினிடம் விழித்தெழு! நிருபர் இந்தக் கேள்வியை கேட்டார். உடனடியாக அவர்களுடைய பிரதிபலிப்பு என்னவாக இருந்தது? சப்தமான ஒரு சிரிப்பும் கிளர்ச்சியூட்டும் பழைய நினைவுகளுமே.
“எனக்காக!” என்று ஜெரிa பதிலளிக்கிறான், “நான் பருவ வயதிலிருந்தேன். ஆறு ஆண்டுகள் என்னைவிட மூத்தவளாக இருந்த ஒரு பெண்ணிடமாக எனக்கு உண்மையில் மோகம் இருந்தது. அவள் அழகாக இருந்தாள்—அவர்களுக்கு எவ்வளவு பெரிய கண்கள்! ஆனால் இதை நான் இரகசியமாகவே வைத்திருந்தேன். அந்தப் பெண்ணை நான் விரும்பியதை என் அம்மாவால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.”
“என்னுடைய கலைத்தொழில் ஆசிரியரிடம் பயங்கரமாக நான் மோகம் கொண்டிருந்தேன்” என்பதாக இப்பொழுது விவாகமான ஒரு பெண் நினைவுபடுத்திச் சொல்லுகிறாள். “அவர் அத்தனை அழகாக இருந்தார்.” இரண்டு குழந்தைகளின் தாய் ஜேயின் சொல்லுகிறாள்: “நான் பருவ வயதிலிருந்தபோது எனக்கு மோகமிருந்தது. அவருடைய இசைநிகழ்ச்சிகளில், முதல் வரிசையில் உட்காருவதற்காக நான் விடியற்காலையில் எழுந்து விடுவேன். ஒரு சமயம் இரண்டு பெண்களும் நானும் அவருடைய உடைமாற்றும் அறைக்கும் கூட ஓடினோம். ஆனால் கடைசியாக நான் அவரை பார்த்தபோது, வாயைத் திறந்து கொண்டு அங்கு நின்றுவிட்டேன்.” ஏன், எமது தொகுதியின் மூத்த உறுப்பினருங்கூட திரைப்பட நடிகர்களிடம் மோகம் கொண்டிருந்த ஒரு காலத்தை நினைவுபடுத்திச் சொல்லுகிறார்கள்.
ஆம், வயது வந்த ஆட்களின் எந்தத் தொகுதியிலுள்ளவர்களையும் கேட்டுப் பாருங்கள். பெரும்பாலும் அனைவருமே இளைஞராக இருந்தபோது இப்படிப்பட்ட மோக உணர்ச்சிகளுக்குள்ளானதை ஒப்புக்கொள்வார்கள். அநேகமாக கிடைக்கக்கூடாத ஆட்களை மையமாக இவை கொண்டிருக்கின்றன—ஆசிரியர்கள், பாடகர்கள், வயதில் மூத்தவர்களாக இருக்கும் பழக்கமானவர்கள். மனோதத்துவ நிபுணர் கேத்தி மோரிக்கா சொல்லுகிறார்: “மோக உணர்ச்சிக்கொள்வது வளருகிற பாவத்தின் பாகமாக இருக்கிறது. பெரும்பாலும் எல்லா இளைஞர்களுக்கும் இது இருக்கிறது. ”பெரும்பாலானவர்கள் மோகத்தை சமாளித்து விடுகிறார்கள். பெருமித உணர்வும் நகைச் சுவை உணர்வும் பாதிக்கப்படாமல் இருக்கிறது. ஆம் பல வருடங்களுக்குப் பின்னர் பெரும்பாலானவர்கள் அந்த அனுபவத்தை வேடிக்கையாக நினைத்து மறந்து விடுகிறார்கள்.
என்றபோதிலும் மோகத்தின் பிடிப்பில் நீங்கள் சிக்கிக்கொண்டு விட்டீர்களேயானால், அங்கு வேடிக்கைக்கு இடமில்லை. “அதைக் குறித்து என்னால் ஒன்றும் செய்யமுடியாததால் நான் ஏமாற்றமடைந்தேன். அவள் வயதில் என்னைவிட பெரியவள் என்பது எனக்குத் தெரியும் ஆனால் நான் அவளை விரும்பினேன். இந்த முழு விவாகரத்தாலும் நான் வெகுவாக நிலைக்குலைந்து போனேன்” என்று ஜெரி நினைவுபடுத்திச் செல்கிறான். வேலரி மேலுமாக இவ்விதமாகச் சொல்கிறாள்: “என் ஆசிரியரை மணந்து கொள்வது போல் நான் கற்பனை செய்தேன். நான்கு பிள்ளைகளைப் பெற்று அழகிய ஓர் வீட்டில் நான் கற்பனையில் அவரோடு வாழ்ந்தேன். அவரை மறப்பது எனக்கு உண்மையில் மிகவும் கடினமாக இருந்தது.
ஒருபோதும் உங்களால் அடைய முடியாத ஒருவரிடம் அக்கறை காண்பிப்பது மனதுக்கு வேதனையாக இருக்கிறது. இது வெறும் குழந்தைத்தனமான ஒரு மோகம் என்பதாக உங்களுக்குச் சொல்லப்படும்போது, அதனால் நீங்கள் திருப்தியடைவதில்லை. உங்களைப் பொருத்தவரையில் உங்களுடைய உணர்ச்சிகள் நிஜங்களாக இருக்கின்றன! நான் அவரை காதலிக்கிறேன் என்று சொல்லும்போது எவரும் ஏன் நம்புவதில்லை என்பதாக நீங்கள் யோசிக்கலாம்.
மோகத்தை பகுத்து ஆராய்தல்
“அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது” என்பதாக அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறான். (1 யோவான் 4:7) ஆகவே எவராவது ஒருவரிடமாக தீவிரமான ஈடுபாடு கொண்டிருப்பது பாவமில்லை. அது ஒழுக்கயீனமானவையாக அல்லது தவறானதாக (விவாகமான ஒருவரிடமாக கொண்டிருப்பது போன்றவை) இல்லாத வரையில் பாவமில்லை என்றபோதிலும் கிறிஸ்தவ அன்பு மோகத்தை அல்ல ஆனால் நியமத்தை ஆதாரமாக கொண்டிருக்கிறது. (1 கொரிந்தியர் 13:4-7 ஒப்பிடவும்) மேலுமாக பைபிள் இப்படிப்பட்ட அன்பை இளைஞர்களோடு அல்ல ஆனால் ஆவிக்குரிய விதத்தில் முதிர்ச்சியுள்ள அல்லது “முழுமையாக வளர்ந்த” கிறிஸ்தவர்களோடு சம்பந்தப்படுத்தி பேசுகிறது. எபேசியர் 4:13-15.
நீங்கள் இளைஞர்களாக இருக்கையில், அநேகமாக “பாலியத்துக்குரிய இச்சைகளால்” உங்களுடைய சிந்தனைகளும் செயல்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. (2 தீமோத்தேயு 2:22) ஆம் பூப்புப் பருவம், புதியதும் ஆற்றலுள்ளதுமான உணர்ச்சிகளைக் கட்டவிழ்த்துவிடுகிறது. இத்தகைய ஆசைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை கற்றுக்கொள்வதற்கு நம்மில் அநேகருக்கு வருடங்கள் பல ஆகின்றன. தனிநபர், விவாகம் மற்றும் குடும்பம் புத்தகம் மேலுமாக பின்வருமாறு கூறுவது அக்கறையூட்டுவதாக இருக்கிறது: “காதல் உணர்ச்சிக்கு நமது சமுதாயத்தில் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் காரணமாக ஒரு இளைஞன் . . . அவன் காதல் உணர்ச்சிகளுக்குத் தயாராவதற்கு அல்லது அதைக் காண்பிக்க பொருத்தமான ஒரு நபரை சந்திப்பதற்கும் வெகு முன்பாகவே கூட காதல் நிறைவேறுவதாக கனவு காண்கிறான்.”
காதல் உணர்ச்சிகள் தூண்டிவிடப்பட்டு அவைகளை காண்பிப்பதற்கு எவரும் இல்லாதபோது அது எவ்வளவு ஏமாற்றத்தைத் தருவதாக இருக்கக்கூடும்! மேலுமாக பதினேழு (seventeen) என்ற பத்திரிக்கை குறிப்பிடும்விதமாகவே, “அநேகமாக பையன்களை விட பெண்கள் விரைவிலேயே முதிர்ச்சியடைந்து. சமுதாயத்தோடு கூடி வாழ விரும்புகிறவர்களாக இருக்கிறவர்களாக இருக்கிறார்கள்.” இதன் விளைவாக அடைய முடியாத ஆசிரியர்கள் அல்லது வயதான மற்றவர்களோடு ஒப்பிடுகையில் அவர்களுடைய சக மாணவர்கள் அவர்களுக்கு முதிர்ச்சியில்லாதவர்களாகவும் கிளர்ச்சியற்றவர்களாகவும் தெரிகிறார்கள்.” இதன் காரணமாக ஒரு பெண் தனக்குப் பிடித்த ஓர் ஆசிரியரை, பாப் இசை பாடகனை அல்லது வயதான வேறு ஒரு நண்பரை “இலட்சிய” புருஷனாக கற்பனை செய்யக்கூடும். ஆனால் ஆண்களுக்கும்கூட இதேவிதமான மோக உணர்ச்சிகள் ஏற்படக்கூடும்.
என்றபோதிலும் மனதை கவர்ந்த அந்த ஆசிரியரோடு அல்லது சிலிர்க்க வைக்கும் வகையில் பாடும் பாடகனோடு உண்மையான காதல் வளருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்படியென்றால், இப்படிப்பட்ட தூரத்திலுள்ள ஒரு நபர் மீது ஏற்படும் ஓர் அன்பு, நிஜத்திலில்லாமல் அதிகமாக கற்பனையில் தான் வேர் கொண்டதாக இருப்பது தெளிவாக இருக்கிறது. தனிநபர், விவாகம் மற்றும் குடும்பத்தின் பிரகாரம் இப்படிப்பட்ட ஒரு மோகம் “ஓரளவு குறுகிய கால வாழ்வுடையதாகவே” இருப்பது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை அல்லது பருவ வயது பத்திரிக்கை குறிப்பிடும் விதமாகவே “பெரும்பாலான பருவ வயதினருக்கு மோகம், தடுமல் பிடிப்பதைப் போல அத்தனை சாதாரணமாக இருக்கிறது.” ஆனால் சில இளைஞர்கள் தங்கள் கற்பனையிலே வாழ்ந்து கொண்டு, அது உண்மையான காதல் என்பதாக விடாப்பிடியாக சொல்கிறார்கள்.
மோகம்—தீங்கற்றதா அல்லது தீங்கு விளைவிப்பதா?
‘ஆனால் ஏறக்குறைய எல்லாருமே இந்த மோக உணர்ச்சியை அனுபவிப்பதால். அதில் என்ன தீங்கிருக்கிறது? என்பதாக நீங்கள் கேட்கலாம். ஆம் பெரும்பாலும் எல்லாருமே இதனால் பாதிக்கவும் கூட பட்டிருக்கிறார்கள். மோகம் தீங்கு விளைவிப்பதாக இருக்கக்கூடும் என்பதே உண்மையாக இருக்கிறது.
ஒரு காரியமானது, பருவ வயதில் பாசத்துக்கு இலக்காக இருக்கும் காரியங்கள், கிறிஸ்தவ மதிப்புக்கு தகுதியுள்ளவையாக இல்லை. ஞானவான் ஒருவன் சொன்னான்: “மூடர் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள்.” (பிரசங்கி 10:6) இதன் காரணமாகவே ஒரு பாடகர் அவருடைய அழகான குரலுக்காக அல்லது கவர்ச்சியான தோற்றத்துக்காக பூஜிக்கப்பட பாத்திராத கருதப்படுகிறார். ஆனால் அவருடைய ஒழுக்கங்களைப் பற்றி என்ன? அநேகமாக இப்படிப்பட்ட ஆட்களின் வாழ்க்கை முறை முட்டாள்தனமானதாக இருக்கிறதல்லவா? பைபிளும் கூட கிறிஸ்தவர்களைப் பின்வருமாறு எச்சரிக்கிறது: “உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை.” (யாக்கோபு 4:4) கடவுள் கண்டனம் செய்யும் நடத்தையுள்ள ஒருவர் மீது நீங்கள் உங்கள் இருதயத்தை வைத்தால் அது கடவுளோடு உங்களுடைய சிநேகத்தை ஆபத்துக்குள்ளாக்கிவிடாதா? விவாகமான ஒருவரிடமாக மறைவான காதல் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுப்பதும் கூட தவறாக இருக்கிறது-நீதிமொழிகள் 5:15-18.
மேலுமாக பைபிள் சொல்கிறது: “நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக் கொள்வீர்களாக.” (யோவான் 4:21) அன்புக்கும் பாத்திரராகக் கருதப்படுகிறவர் நியாயமான அளவு ஏற்றுக்கொள்ளப்படத்தக்க ஒரு வாழ்க்கையை நடத்தி வந்தாலும் கூட, இது உண்மையாக இருக்கிறது. ஓர் இளைஞனின் அறையில் ஒவ்வொரு சுவரும் பெரிதும் நேசிக்கப்படும் பாடகரின் படங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தால் அதை என்னவென்று சொல்வீர்கள்? அது விக்கிரக ஆராதனைக்கு ஒப்பாக இல்லையா? தனக்குப் பிடித்த ஒரு பாடகரைக் குறித்து ஓர் இளம் பெண், “நான் அவரை பூஜிப்பதே இல்லை” என்று சொல்கிறாள். ஆனால் “இந்தக் குறிப்பிட்ட நபரைக் குறித்து நான் எப்பொழுதும் யோசித்துக் கொண்டே இருக்கிறேன் . . .இவரை நான் மறந்து விட வேண்டும்” என்றும் கூட அவள் ஒப்புக்கொள்கிறாள்.
ஆம், சில தங்களின் கற்பனைகள், நல்லறிவை புறக்கணித்து விடும்படியாக அனுமதிக்கிறார்கள். பிரபல பாடகர் ஒருவரிடம் கொண்டிருக்கும் மோகத்தைக் குறித்து மற்றொரு பெண் இவ்விதமாக எழுதுகிறாள்: ‘அவர் என்னுடைய காதலராக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அது கைக்கூடி வர வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். நான் அவருடைய நிழற்படங்களை அருகில் வைத்துக்கொண்டு உறங்குகிறேன், ஏனென்றால் அவரிடம் அவ்வளவுதான் என்னால் நெருங்கிச் செல்ல முடிகிறது. அவர் எனக்கு கிடைக்காவிட்டால், நான் என்னையே கொலை செய்துகொள்ளும் ஒரு நிலையில் இருக்கிறேன்.’ தம்மை “தெளிந்த எண்ணத்தோடு” சேவிக்குமாறு கட்டளையிடும் கடவுளுக்கு இப்படிப்பட்ட கட்டுக்கடங்காத காம உணர்ச்சிகள் பிரியமாயிருக்குமா?-ரோமர் 12:3.
நீதிமொழிகள் 13:12-ல் பைபிள் சொல்கிறது: “நெடுங்காலமாய்க் காத்திருத்தல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்.” சாத்தியமற்ற உறவுக்காக காதல் உணர்ச்சியோடு காத்திருத்தல் உண்மையில் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தக்கூடும். “மனச் சோர்வு, கவலை பொதுவான தளர்ச்சி. . . . உறக்கமின்மை அல்லது சோம்பேறித்தனம், மார்பு வலி அல்லது மூச்சுத்திணறல்களுக்கு” தக்கவாறு கைமாறு செய்யப்படாத அன்பு காரணமாக இருப்பதாக மருத்துவர்களால் சுட்டிக் காண்பிக்கப்படுகிறது.
ஒரு கற்பனை உங்களுடைய வாழ்க்கையை அடக்கி ஆள அனுமதிக்கும்போது ஏற்படும் தேசத்தைக் குறித்தும் கூட சிந்தித்துப் பாருங்கள். “பள்ளிப் படிப்பில் கவனக்குறைவு” மோக உணர்ச்சியினால் ஏற்படும் உடனடியான பாதிப்புகளில் ஒன்றாக இருக்கிறது என்பதாக டாக்டர் லாரன்ஸ் பாமன் குறிப்பிடுகிறார். நண்பர்களிடமிருந்தும் குடும்பத்தினரிடமிருந்தும் ஒதுங்கிவிடுதல் மோக உணர்ச்சியில் சிக்கிக்கொள்வதால் ஏற்படும் மற்றொரு பொதுவான விளைவாக இருக்கிறது. (நீதிமொழிகள் 18:1 ஒப்பிடவும்) பிரபல பாடகர் ஒருவரை காதலித்து அனைவரையும் அசட்டை செய்த ஓர் இளம் பெண், “என்னுடைய நடத்தையைக் குறித்து என் குடும்பத்தாரும் கூட நிலை குலைந்து போனார்கள்” என்று ஒப்புக் கொள்கிறாள்.
ஆபத்தான பின்விளைவுகள் இல்லாமற்போனாலும் கூட ஒருவர் தன்னையே முட்டாளாக்கிக் கொள்ளும் அவமானம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. “இதை ஒப்புக்கொள்வது எனக்கு சங்கடமாக இருக்கிறது. ஆனால் நான் ஜூடியிடம் ஈடுபாடு கொண்டிருந்தபோது ஒரு கோமாளியைப் போல நான் நடந்து கொண்டேன்.” என்பதா எழுத்தாளர் கில் சுவார்ட்ஸ் சொல்கிறார், மோகம் மறைந்து வெகு காலம் சென்றபின்பும் கூட எவர் பின்னாவது சென்றது பற்றிய அல்லது ஒருவேளை பொது இடத்தில் முட்டாள்தனமாக நடந்துக்கொண்டதைப் பற்றிய நினைவுகள் நீங்காதிருக்கக்கூடும்.
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட வயதுவந்தவர்களைப் போல பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் மோக உணர்ச்சிகளை நாளடைவில் விட்டொழித்துவிடுகிறார்கள். அவ்விதமாகச் செய்யாதவர்களுக்கு உதவ பின்னால் ஒரு கட்டுரை வர இருக்கிறது இதற்கிடையில், கொடுக்கப்படும் புத்திமதியானது, மோகம் என்பது வெறும் ஓர் இளமை பருவ கால கற்பனையே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே.
ஒருவேளை ‘காதலித்து தோல்வியடைந்ததில்’ சில நன்மைகள் இருக்கக்கூடும். என்றபோதிலும் நம்பிக்கையற்ற மோக உணர்ச்சி உங்களுடைய வாழ்க்கையை கட்டுப்படுத்த அல்லது உங்களுடைய உணர்ச்சிகளை விரயம் செய்ய ஒருபோதும் அனுமதியாதீர்கள். இது எத்தனை வீனானது என்பதா எழுத்தாளர் கில் சுவார்ட்ஸ் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து சொல்கிறார்: “நான் ஜூடியிடமாகக் கொண்டிருந்த அத்தனை காம உணர்ச்சிகளுக்கும் அதற்காக நான் தீட்டிய திட்டங்களுக்கும் அவள் என்னை ஏறெடுத்தும் கூட பார்த்திருக்க மாட்டாள்” என்று நான் நிச்யமாயிருக்கிறேன்.” (g871/8)
[அடிக்குறிப்புகள்]
a இந்த அடிக்குறிப்புகள் தமிழில் இல்லை.
[பக்கம் 15-ன் படம்]
அடையமுடியாத-வயதில் மூத்த எதிர் பாலினத்தவரிடமாக மோக உணர்ச்சிகொள்வது வெகு சாதாரணமானது