உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g88 4/8 பக். 8-13
  • கருச்சிதைவு—அதற்கு என்ன விலை?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கருச்சிதைவு—அதற்கு என்ன விலை?
  • விழித்தெழு!—1988
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கருச்சிதைவு வியாபாரம்
  • கருக்கலைப்பு—யாருடைய தெரிவு?
  • பிரதிபலிப்பை மேற்கொள்ளுதல்
  • நான் தலைகுனிந்தேன்
  • “கருவில் வளரும் குழந்தையை நீங்கள் கலைத்தாக வேண்டும்”
  • அங்கவீனங்களை மேற்கொள்ளுதல்
  • சிக்கலான தெரிவு
  • கருக்கலைப்பு—அதுதான் தீர்வா?
    விழித்தெழு!—1995
  • கருக்கலைப்புத் துயருற கொள்ளைக் கொள்கிறது
    விழித்தெழு!—1993
  • கருச்சிதைவு—பிளவுபட்ட ஓர் உலகம்
    விழித்தெழு!—1988
  • கருச்சிதைவு—யார் சரி?
    விழித்தெழு!—1988
மேலும் பார்க்க
விழித்தெழு!—1988
g88 4/8 பக். 8-13

கருச்சிதைவு—அதற்கு என்ன விலை?

ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ என்ற இடத்தில் இரண்டு செவிலியர் “பயங்கரமான இராக்கனவுக்களைக்” கொண்டிருந்தனர், நிம்மதியான தூக்கமின்றி அவதியுற்றனர்” என்று தி டெய்லி டெலிகிராஃப் அறிக்கை செய்தது. ஏன்? ஏனென்றால் 24 வார ஆண் குழந்தையைச் சிதைத்திட ஒரு அறுவை சிகிச்சையில் பங்கு கொண்டனர். எதிர்பாராத விதமாக, அவன் “ஒரு சிறிய காலத்துக்கு” உயிரோடிருந்தான்.

அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலுள்ள டெட்ராய்ட்டில் 29 வார முதிர்கரு, அதன் தாயின் கர்பப்பையில் போடப்பட்ட ஊசியால் கொல்லப்பட்டுவிட்டது என்று கருதப்பட்டு ஒரு மருத்துவ மனையின் ஸ்டீல் வாளியில் போடப்பட்டது. ஆனால் அது உயிர்பிழைத்தது. இதன் அழுகைக் குரல் கேட்கப்பட்டது. உடனே இந்தப் பெண் குழந்தை மருத்துவ மனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் சரியான சமயத்தில் கொண்டு செல்லப்பட்டது.

உயிர்வாழும் சாத்தியமுள்ள முதிர்கருவை சிதைத்திடுவது வளர்ந்துவரும் ஒரு பிரச்னையாக இருக்கிறது. முழு வளர்ச்சி பெறாது பிறக்கும் குழந்தைகளுக்கு முன்னேறிய மருத்துவ சிகிச்சை முறைகள் மேலான கவனிப்பு கொடுக்கிறது. எனவேதான் 26-வது வாரத்தில் ஆரோக்கியமான ஒரு குழந்தை உயிர் பிழைப்பது இப்பொழுது கூடிய காரியம்—ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இது கடினமாக இருந்திருக்கும். இதன் பலனாக, சில நாடுகளிலுள்ள செவிலியர்கள், மனச்சாட்சியின் அடிப்படையில் கருச்சிதைவு செய்வதை மறுத்துவிடும் சட்டப்பூர்வமான உரிமையைப் பெற்றிருக்கின்றனர்.

ஆனால் மருத்துவர்களைப் பற்றியதென்ன? அவர்கள் எப்படிப் பிரதிபலிக்கின்றனர்?

கருச்சிதைவு வியாபாரம்

“கருச்சிதைவு மருத்துவர் என்று வெளிப்படையாக தெரியவருவது மரணத்தின் முத்தமாகும்,” என்று மனம்விட்டு சொன்னார் நியூஸ்வீக்-க்கு பேட்டி கொடுத்த டாக்டர் பிலிப் ஸ்டபிள்பீல்டு. உண்மை என்னவெளில், பொதுமக்களின் அழுத்தத்தால் ஐக்கிய மாகாணங்களிலுள்ள பல மருத்துவர்கள் இந்தப் பழக்கத்தை அறவே விட்டுவிட்டிருக்கிறார்கள். பல குண்டுவீச்சு சம்பவங்கள் பல கருச்சிதைவு மருத்துவமனைகளை தரைமட்டமாக்கியிருக்கிறது, மற்றும் “நாடு முழுவதும் மருத்துவ இயக்குநர்களை நமக்கு ஏற்பாடு செய்யும் மருத்துவமனைகள் உள்ளன. ஏனென்றால் சமுதாய மக்கள் தங்களுக்கு என்ன செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் மருத்துவர்கள் வாழ்கிறார்கள்,” என்று டாக்டர் ஸ்டபிள்பீல்டு விளக்கினார்.

அப்படியிருந்தும், அதிகமதிகமான கருச்சிதைவுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு ஒரு காரணம் என்ன என்பதைக் காண்பது அரிதன்று. அது ஒரு இலாபகரமான வியாபாரம்.

உதாரணமாக, பல்ஸ் என்ற மருத்துவதுறை பத்திரிகையின்படி, பிரான்ஸிலுள்ள பாரீஸ் மாநகரில் தங்களுடைய வாலிப வயது மகளுக்கு தனிப்பட்ட விதத்தில் கருச்சிதைவு செய்வதற்காகப் பெற்றோர் சுமார் 1,000 டாலர் (ரூ20,000) வரை செலவழித்திருக்கிறார்கள், சில இலண்டன் மருத்துவமனைகள் ஒவ்வொரு கருச்சிதைவுக்கும் டாலர் 2,000 (ரூ40,000) வரை வசூலிக்கின்றனர் என்று அதே அறிக்கை கூறுகிறது.

1982-ல் பிரிட்டனின் இரண்டு பெரிய கருச்சிதைவு ஏஜன்சிகள் சேர்ந்து டாலர் 45 லட்சம் (ரூபாய் 9 கோடி) வருமானத்தைக் கொண்டிருந்தது. இந்தப் புள்ளிவிவரத்தை அறிக்கை செய்யும் மனிதரின் கரிசனை என்ற பத்திரிகை பின்வருமாறு கூறுகிறது: “கருச்சிதைவு சிகிச்சை ஒரு கவர்ச்சியான வியாபாரம். ஜப்பானில் அரசு குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகளைச் சட்டப்பூர்வமாக மறுக்கிறது. “இந்தத் தடை கருச்சிதைவு சிகிச்சையில் ஏராளமான பணம் சம்பாதித்திருக்கும் மருத்துவர்களினிமித்தம் கொண்டுவரப்பட்டது,” என்று இலண்டனின் தி சண்டே டைம்ஸ் அறிக்கை செய்கிறது. கருச்சிதைவு உலகில் நீங்க எங்கு பார்த்தாலும் பணம் ஓங்குவதைக் காண்பீர்கள்.

இது ஆச்சரியமன்று. அதிர்ச்சிமிகுந்த ஒரு திடீர் சூழ்நிலை எழும்புகையில், உதாரணமாக விவாகமாகாத இளம் பெண் கர்ப்பமாகையில், அந்த நிலைமைக்குத் தீர்வு காண ஒரு பெற்றோர் என்ன விலை கொடுக்கவும் தயாராக இருப்பார்கள், விசேஷமாக ஒரு கருச்சிதைவு பாதுகாப்பான முறையில், வேகமாக மற்றும் பிறர் அறியவராதிருக்க நம்பிக்கைக்குரிய விதத்தில் செய்யப்படுவதற்கு முடிந்தால், என்ன செலவானாலும் அதை நியாயமானதாகக் கருதுவார்கள்.

என்றபோதிலும், மருத்துவர்கள் பலர் இச்செயலைக் குறித்து கவலை தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றனர். பிரிட்டனின் கருச்சிதைவு சகாப்தத்தின் தொடக்கத்தில் பேராசிரியர் அயன் மாரிஸ் பின்வருமாறு சொன்னதை அறிக்கை செய்தது: “என்னுடைய தொழிலில் நான் கருச்சிதைவுகள் பற்றி இப்பொழுது அறிந்திருப்பதை அப்பொழுதே அறிந்தவனாய் என் வாழ்க்கைப் பணியை ஆரம்பித்திருந்தால், மகளிர்நோய் இயலைத் தெரிந்துகொண்டிருக்க மாட்டேன்.” அவர் தொடர்ந்து சொன்னதாவது: “நான் அந்த அறுவை சிகிச்சையை வெறுக்கிறேன். என்னுடைய எல்லா மருத்துவ பயிற்சிக்கும் முற்றிலும் எதிரான ஒரு செயலாக இருக்கிறது. அதன் முழு நோக்கமும் உயிரைப் பாதுகாப்பதாகும். இந்தக் குறிப்பிட்ட மனிதக் கொலையை நிறைவேற்றுவது அல்ல.” பலமான வார்த்தைகள்தான், ஆகிலும் எல்லா மருத்துவர்களும் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இந்தச் சிகிச்சையின் பேரில் சில மருத்துவர்களுக்கு இருக்கும் எதிர் உள்ளுணர்வுகளைக் குறித்து இது ஓரளவுக்கு வெளிப்படுத்துகிறது.

கருக்கலைப்பு—யாருடைய தெரிவு?

ஒரு பெண் கருச்சிதைவு பிரச்னையை எதிர்படும்போது, குழந்தையின் தகப்பனைக் குறித்து யோசிப்பவர்கள் வெகு சிலரே. ஒருவேளை அந்தப் பெண்ணுங்கூட அவனுடைய உணர்ச்சியைக் குறித்து சிந்திப்பதில்லை. கருச்சிதைவு செய்துகொள்ளலாம் என்ற தீர்மானம் அநேகமாய் அந்தப் பெண்ணால் தனிமையாக, மிக நெருங்கிய நண்பர்களின் மற்றும் உறவினரின் ஆதரவோடு செய்யப்படுகிறது. ஆனால் “ஆண்களுங்கூட விசனப்படுகிறார்கள், இழப்பின் உணர்வைக் கொள்கிறார்கள்” என்று தி நியு யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது, “மற்றும் தாயாகிவிட்டது குறித்த இருமுக உணர்ச்சிக்குட்படும் பெண்ணைப் போன்று ஆண்களும் அந்த உணர்ச்சிக்குள்ளாகக்கூடும்.”

தாய் தன் குழந்தையைக் கருவில் கலைத்திட தீர்மானிப்பதற்கு முன்பு, அதில் தங்களுடைய சொல்லுக்கும் இடம் இருக்கிறது. தங்களுடைய விருப்பமும் கவனிக்கப்பட வேண்டும் என்று சில தகப்பன்மார்கள் உணருகின்றனர். “தீர்மானத்தில் ஆண்கள் வற்புறுத்த அல்ல ஆனால் அதில் பங்குபெற விரும்புகின்றனர்,” என்கிறார் சமூகவாதி ஆர்தர் ஷோஸ்டாக். இந்தப் பிரச்னையின்பேரில் பத்து வருட ஆய்வுக்குப் பின்பு இப்படிச் சொன்னார். இப்படிப்பட்ட ஒரு எண்ணம் நிச்சயமாகவே நியாயமற்றது அல்ல.

பிரதிபலிப்பை மேற்கொள்ளுதல்

என்றாலும், தீர்மானத்தை எடுப்பதில், அந்தப் பெண் கருவுற்றிருக்கும் அந்த நிலை அல்லது காலப்பகுதி திடீரென்று முடிவுக்குக் கொண்டுவரப்படுவதால் தன்னுடைய முழு உடலுக்கும் ஏற்படும் அதிர்ச்சியை மேற்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. அதில் என்ன உட்பட்டிருக்கிறது?

ஆரம்பத்திலேயே செய்துகொள்ளப்படும் கருச்சிதைவுக்குப் பின்புங்கூட ஒரு பெண் பலவீனமாகவும் சோர்வு மிகுந்தவளாகவும் உணருகிறாள். கை கால் பிடிப்பு நோய் மற்றும் இரத்தப்போக்கு பொதுவாக ஏற்படுகிறது. கால தாமதமாகச் செய்யப்படும் கருச்சிதைவுக்குப் பின்னர், கருவுற்ற நிலை திடீர் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதன் விளைவுகள் ஒரு வாரம் வரையாக தொடரக்கூடும், அல்லது உடலில் இயக்குநீரின் அளவு குறையும்போது அதிக நாட்களுக்கும் தொடரக்கூடும். மார்பகங்கள் புண்ணாவதும் மனச்சோர்வின் உணர்வுகளுங்கூட எதிர்ப்படவேண்டிய கூடுதலான அம்சங்கள். ஆம், கருச்சிதைவு செய்துகொள்ளுதல் ஒரு வேதனையான அனுபவமாக இருக்கக்கூடும், அது பெண்ணுக்குத்தான் தெரியும், அது சாதாரணமாகத் தெரிந்து கொள்ளப்படுவதில்லை.

அதைவிட முக்கியமான உண்மை, கருக்கலைப்பின் உணர்ச்சி மற்றும் மன பாதிப்புகள் கடுமையான சேதத்தையுண்டாக்கக்கூடும். பிரச்னை என்னவென்றால், சரீர பிரதிபலிப்பு உடனடியானதும் எதிர்பார்த்ததுமாக இருக்கக்கூடும், ஆனால் மனம் மற்றும் உணர்ச்சி சம்பந்தமான வேதனைகள் பின்னால் ஏற்படக்கூடியதும் அது ஆறக்கூடுமானால் ஆறுவதற்கு அதிக காலம் எடுக்கக்கூடியதுமாகும். “கருச்சிதைவுகளை செய்துகொண்ட ஆட்களிடம் அவ்வப்போது பேசிப்பார்க்கும்போது, அந்த மருத்துவ நடவடிக்கைக்குப் பல ஆண்டுகள் கடந்தும் அவர்கள் அதிக மன வேதனைக்குட்படுகிறார்கள்,” என்று எழுதுகிறார் இலண்டனின் தி டைம்ஸ் பத்திரிகை நிருபர். இந்தப் பிரச்னை எவ்வளவு பெரியது?

“முன்பு கருதப்பட்டதைவிட மறைந்திருக்கும் இந்தப் பிரச்னையின் அளவு அதிகமாக இருக்கிறது,” என்று தி சண்டே டைம்ஸ் குறிப்பிட்டது. மனசோர்வு மற்றும் உணர்ச்சிகளின் அமைதியின்மை போன்ற விளைவுகள் எந்தளவுக்குப் பெரியதோர் பிரச்னையாக இருக்கிறதென்றால், “மருத்துவ காரணங்களுக்காக கருச்சிதைவு செய்துகொள்ளும் விவாகமாகாத பெண்களில் பாதிபேர் மனநல சிகிச்சை தேவைப்படும் நிலைக்கு வந்துவிடுகின்றனர்.” இது இலண்டனின் கிங்ஸ் மருத்துவ கல்லூரியின் ஒர் ஆய்வின் பலனாகும். தி டைம்ஸ் பத்திரிகையின்படி, அந்த ஆய்வு காண்பிப்பதாவது “கருச்சிதைவு செய்துகொள்ளத் தீர்மானிக்கும் தம்பதிகள் பெரும்பாலும் கவலை மிகுந்த பிரதிபலிப்புகளை அனுபவிக்கின்றர்,” மற்றும் தங்களுடைய கவலையை “மேற்கொள்வது கடினமாக இருப்பதைக்” காண்கின்றனர்.

இந்த மனிதப் பிரச்னையைக் கையாளும் ஜப்பானியரின் முறை அசாதாரணமான ஒரு முறையாகும். கருச்சிதைவு செய்யப்பட்ட சிறிய குழந்தைகளின் உருவங்கள் பிளாஸ்டிக், பிளாஸ்டர் மற்றும் கல் ஆகியவற்றால் செய்யப்பட்டு கோவில் பகுதிகளில் வைக்கப்படுகின்றன. அங்கு பிள்ளைகளின் புத்தமத காப்பாளரிடம், ஜிஸோவின் கவனிப்புக்கு ஒப்படைக்கப்படுகிறது. பெற்றோர்கள், தங்கள் தெயவத்தினிடம் மன்னிப்பு கோறி ஜெபிக்கையில் தங்களுடைய வெட்கக்கேட்டையும் கவலையையும் குற்ற உணர்வையும் வெளிப்படுத்திட அல்லது ஊற்றிவிட முடிகிறது. ஆனால் இதைச் செய்வதற்கான தேவையை உணருவதில் அவர்கள் தனித்து இல்லை. தனிப்பட்ட ஒருவரின் பின்வரும் அனுபவத்தைக் கவனியுங்கள்.

நான் தலைகுனிந்தேன்

ஈலேன் 22 வயதாவதற்குள் மூன்று முறை கருச்சிதைவு செய்துகொண்டாள். நடந்ததை ஞாபகப்படுத்திப் பார்க்கிறாள்: “கருத்தரித்து ஆறு வாரங்களில் கருச்சிதைவு செய்துகொள்வது தவறல்ல அல்லது குற்றச் செயல் அல்ல, ஏனென்றால் அதற்குள் குழந்தை உருவாவதில்லை, மூன்று மாதங்களுக்கு மேல் தான் உருவாகிறது என்றெல்லாம் என்னிடம் சொல்லப்பட்டது. அதற்குப் பின்பு, விவாகமாகாதிருந்த தாய்மார்களைக் குறித்து தவறான குறிப்புகள் சொல்லப்பட்டதை நான் கேட்டபோது, கருவுற்றிருந்ததைக் கலைத்தது குறித்து நான் மகிழ்ச்சியடைந்தேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பும் நான் இருமுறை அவ்விதம் செய்தேன். இந்த உலகத்திற்குள் பிள்ளைகளைக் கொண்டுவராதிருப்பதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தது குறித்து களிகூர்ந்தேன்.”

விரைவிலேயே ஈலேன் செவிலியர் பணியை மேற்கொண்டாள். “குழந்தை பிறப்பைப் பார்ப்பதும், அந்தப் பிறப்பு மருத்துவர்களையும் செவிலியர்களையும் பெற்றோரையும் மகிழ்வித்ததைக் கண்டு களிப்பதும் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால் களங்கமற்ற மூன்று உயிரை மாய்த்தது குறித்து நான் தலைகுனிந்தேன். அமைதியற்ற உள்ள உணர்வுகளால் எனக்குள் ஒரே போரட்டம், நான் கடந்துபோன காலத்தைத் திரும்பிப் பார்க்கலானேன். அந்தப் பிள்ளைகள் இப்பொழுது என்ன வயதில் இருப்பார்கள், அவர்கள் ஆண்பிள்ளைகளாக இருந்திருப்பார்களா அல்லது பெண்பிள்ளைகளாக இருந்திருப்பார்களா அல்லது பார்ப்பதற்கு எப்படி இருப்பார்கள் என்றெல்லாம் யோசிக்கலானேன். அந்த ஒரு நிலையில் இருப்பது ஒரு பயங்கரமான காரியம்.

இப்பொழுது 39 வயதாக இருக்கும் ஜெனட் ஒரு தாயாக கருச்சிதைவுக்குப் பின்னால் தன்னுடைய உணர்ச்சிகளை விவரிக்கிறாள்: “எனக்கு அப்படிப்பட்ட ஒரு காரியம் நிகழவில்லை என்று என்னை நான் நம்பச் செய்துகொள்வதன் மூலம் மட்டுமே என்னை ஆறுதல்படுத்திக்கொண்டேன். அதை நான் செய்திருக்க முடியாது, அது ஒரு கொடிய கனவு என்று என்னைப் பல ஆண்டுகளாக உறுதிப்படுத்திக்கொண்டேன்.”

பத்தொன்பது வயது கேரன் சொல்லுவதாவது: “நான் செய்த காரியத்தை மறந்திட என்னால் முடிந்ததையெல்லாம் செய்துபார்த்தேன், ஆனால், ஒரு குழந்தையையோ அல்லது ஒரு கர்ப்பிணியையோ பார்த்தபோதெல்லாம் நான் கண்ணீர்விட்டேன். எனக்கு அதிக சோர்வு எற்பட்டது. எனக்கு நினைவுபடுத்தும் வகையில் என் மார்பகங்களிலிருந்து பால் கசிந்தன. எனக்கு வந்த கொடிய கனவுகள் கண்ணீர் துளிகளோடு விழிக்கச் செய்தது. குழந்தைகளின் அழுகைக் குரல் கேட்க விழித்தேன். நான் காரியங்களின்பேரில் என்னையே கசந்துகொண்டேன்.”

கருச்சிதைவை நம் வசதிக்கான சாதாரண ஓர் அறுவை சிகிச்சையாக நோக்குவது சரியல்ல. அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கை திரும்ப சரிசெய்யப்பட முடியாத ஒன்று. உடனடியாக இருக்கும் பிரச்னை ஒருவேளை தீர்ந்துபோகக்கூடும், ஆனால், நாம் பார்த்த விதமாக, அதன் பாதிப்புகள் நீடித்திருக்கக்கூடியவை. ஆனால் மருத்துவர் ஒருவர் கருச்சிதைவு செய்துகொள்ள சிபாரிசு செய்வாரானால், அப்பொழுது என்ன?

“கருவில் வளரும் குழந்தையை நீங்கள் கலைத்தாக வேண்டும்”

சூ-வின் மருத்துவர் அவளுக்குக் கொடுத்த அறிவுரை அதுதான். ஏன்? சூவுக்கு ஏற்கெனவே இரண்டு பிள்ளைகள் இருந்தன. தான் கருவுற்றிருப்பதாக உணர்ந்த அந்தச் சமயத்தில், அந்த இரண்டு பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்கு ருபெல்லா என்ற ஜெர்மானிய மணல்வாரி நோய் ஏற்பட்டிருப்பதைக் கண்டாள். “அப்படிப்பட்ட நோய் எனக்கு ஏற்பட்டதில்லை, அதை நான் தவிர்க்க முடியாத நிலையில் இருந்தேன்,” என்று சொல்லுகிறாள். அது எனக்கும் தொற்றியது.

கர்ப்பிணிகளுக்கு ஆரம்பக் காலப் பகுதியில் இந்த நோய் ஏற்பட்டால், கருவில் வளரும் குழந்தைகளை அது வெகுவாக பாதித்து அங்கவீனங்களை ஏற்படுத்தும் என்று மருத்துவ அனுபவம் காண்பித்திருக்கிறது. இந்த உண்மையை மனதில் கொண்டுதான் மருத்துவர் என்னிடம் பேச ஆரம்பித்தார். “என்னிடம் நேரடியாகப் பேசினார்,” என்று சூ ஞாபகப்படுத்துகிறாள். “குழந்தை அங்கவீனத்துடன் பிறக்கும், அதை நீ சமாளிக்க முடியாது,” என்றார். “தன்னுடைய மருத்துவமனையில் தன்னுடைய ஆலோசனையை அசட்டை செய்தால், தன்னை எந்த விதத்திலும் சம்பந்தப்படுத்தாத ஒரு கடிதத்திற்கு தான் கையொப்பமிடவேண்டியிருக்கும்.” சூ கையொப்பமிட்டாள். “அவர் என்னைக் குறித்து அதிக கவலைப்பட்டார் என்பதை நான் நேர்மையுடன் சொல்ல வேண்டும், விசேஷமாக நான் ஒரு வலிப்பு நோயாளியாகவும் இருந்தேன்,” என்றாள்.

சூவின் கணவர், இயல்பாகவே கவலைப்பட்டபோதிலும், தீர்மானத்தை மனைவியிடம் விட்டுவிட்டார். தன் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான ஏற்பாடுகளையெல்லாம் அவள் செய்தாள். சரியான சமயத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பரிசோதிக்கப்பட்டது, சற்று பலவீனமாக இருந்ததே தவிர, அந்தக் குழந்தையில் வேறு எந்தக் குறைபாடும் காணப்படவில்லை. மருத்துவர்களுக்கு ஒரே ஆச்சரியம், குழந்தையின் இரத்ததில் நோய் எதிர்ப்பு அணுக்கள் காணப்பட்டது. இது தாயின் இரத்தத்தில் காணப்படவில்லை. இதுதானே அந்த வளரும் குழந்தை ருபெல்லா நோயால் பாதிக்கப்பட்டிருந்தது என்பதைக் காட்டுகிறது.”

அங்கவீனங்களை மேற்கொள்ளுதல்

இந்தக் குறிப்பிட்ட காரியத்தில் முடிவான விளைவு மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக இருந்தபோதிலும், பல பிள்ளைகள் அங்கவீனங்களுடன், விசேஷ கவனிப்பு தேவைப்படும் நிலையில் பிறக்கின்றனர் என்பது உண்மையே. ஊணமுற்ற குழந்தைகளை உலகிற்குள் கொண்டுவருவதைத் தடைசெய்வது மனிதாபிமானமாகும் என்று சொல்லுவது எளிது, ஆனால் மற்றவர்களின் வாழ்க்கை தரத்தை நிதானிக்கும் அல்லது நியாயந்தீர்க்கும் நிலையிலிருப்பது யார்? ஒவ்வொரு சமுதாயத்திலும் வித்தியாசமான அளவில் ஊனமுற்றவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் கூடுமானவரை வாழ்க்கையை அனுபவிக்கிறவர்களாகவும், மனிதவர்க்கத்தின் நன்மைக்காக செயல்படுகிறவர்களாகவும் இருக்கிறார்கள் அல்லவா?a

சூ காரியங்களை இப்படியாகத்தான் நோக்கினாள். ஆனால் பெலப்படுவதற்கு இன்னொரு ஊற்றுமூலத்தையும் கொண்டிருந்தாள். அதுதான் அவளுடைய விசுவாசம். அவளுடைய குழந்தை அங்கவீனத்துடன் பிறக்கும் என்று மருத்துவர்கள் சொன்ன சமயத்தில், காரியம் இப்படியாக இருந்தால், அந்த நிலையை சமாளிப்பதற்குத் தான் கடவுளை சார்ந்திருக்கலாம் என்று அவள் சொன்னாள். மற்றும், ஊனமுற்ற ஒரு குழந்தை கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையில் அனைத்து சரீர வியாதிகளும் குணப்படுத்தப்படும் அந்த மகத்தான நம்பிக்கையிலிருந்து குழந்தை பலன் பெறுவதைத் தடுத்திட அவளுக்கு உரிமை இல்லை. (வெளிப்படுத்துதல் 21:1-4) இப்படிப்பட்ட விசுவாசத்திற்கு பலன்கள் உண்டு.

சிக்கலான தெரிவு

பிறப்பா? அல்லது கருச்சிதைவா? இப்படிப்பட்ட தெரிவை எதிர்ப்படும்போது உங்கள் தெரிவு என்னவாக இருக்கும்?

சூ பின்வருமாறு விவாதித்தாள்: “தான் பிறக்க வேண்டும் என்று குழந்தை கேட்கவில்லை, எனவே அந்தச் சிறிய உயிரைப் பார்ப்பதற்கு முன்பு அதை முடிவுக்குக் கொண்டுவர எனக்கு என்ன உரிமை இருக்கிறது?”

அவளுடைய கேள்வி சாதாரணமான ஒன்று. அதற்கு நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்? (g87 4/8)

[பக்கம் 9-ன் பெட்டி]

பற்றுறுதிகளில் ஒரு முரண்பாடா?

செப்டம்பர் 1948-ல் சுவிட்ஸர்லாந்திலுள்ள ஜெனீவாவில் உலக மருத்துவ கழகத்தின் பொதுக்குழு மாநாட்டில் ஜெனீவா அறிக்கை நிறைவேற்றப்பட்டது. இது பூர்வ ஹைப்போக்ரட்டிக் உறுதிமொழியைச் சார்ந்தது. பின்வரும் இந்தப் பகுதி அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது:

“மருத்துவ துறையின் ஒரு உறுப்பினனாக ஏற்றுக்கொள்ளப்படும் இந்தச் சமயத்தில்: என்னுடைய வாழ்க்கையை மானிட வர்க்கத்தின் சேவைக்காக அற்பணிக்க உறுதி கோருகிறேன். . . . என்னுடைய தொழிலை மனச்சாட்சியுடனும் மதிப்புடனும் நிறைவேற்றுவேன். . . . கருவுறும் சமயம் முதல், மனித உயிருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் காத்துக்கொள்வேன்; அச்சுறுத்தப்படும் வேளையிலும் என்னுடைய மருத்துவ அறிவை மானிடப் பிரமாணங்களுக்கு எதிராகப் பயன்படுத்த மாட்டான்.”

இப்படிப்பட்ட ஓர் உறுதிமொழியை மருத்துவர்கள் எப்படி விளக்குகிறார்கள். இங்கு இரண்டு முரண்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன. நீங்கள் எந்த கருத்தை உடையவர்களாய் இருக்கிறீர்கள்?

டாக்டர் I.M.

“ஒரு கருவைக் கலைக்கும்போது நான் நீக்கிய அந்தத் திசுக்களை எதிருறுத்தலின்றி என்னால் பார்க்கமுடிவதில்லை. அது ஒரு குழம்புபோன்ற ஒன்றாக இருப்பினும், அது நான் அழிக்கும் மனித உயிராக இருக்கிறது.”

டாக்டர் V.A.

“கருச்சிதைவு செய்வது தவறு என்று நான் கருதுவதில்லை. ஒரு தனி நபர் தன் தாயை முழுவதுமாகச் சார்ந்திருக்கும் வரையில் அது ஒரு ஆளாக இருப்பதில்லை.”

[அடிக்குறிப்புகள்]

a மங்கோலியர் தோற்றமுடைய மூளைக் கோளாறுள்ள குழந்தைகளை எப்படி கவனிப்பது என்பது இந்தப் பத்திரிகையின் பிப்ரவரி 8, 1986 ஆங்கில விழித்தெழு! பத்திரிகையில் சிந்திக்கப்பட்டது.

[பக்கம் 11-ன் பெட்டி]

கருக்கலைப்பு முறைகள்

கருச்சிதைவினால் தாய்க்கு ஏற்படும் ஆபத்துக்கள் கருவின் வயதுடன் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறது. அவை குறைவாக மதிப்பிடப்படக்கூடாது.

கருவுற்று முதல் பருவத்திலிருப்பவர்களுக்குப் பொதுவாகக் காற்றொழிப் பம்ப் மூலமாகக் கரு உறிஞ்செடுக்கப்படுகிறது.b இது சாதாரணமாக மருத்துவமனையில் சிறிது நேரத்தில் செய்துமுடிக்கப்படுகிறது. இரண்டாவது பருவத்திலிருப்பவர்களுக்கு கருவை தாயிடமிருந்து பிரித்திட அதைத் துண்டித்தெடுப்பது அல்லது ஊசிமூலம் கருகலைப்பு செய்வது பொதுவாக பயன்படுத்தப்படும் முறைகளாகும். இதற்கு ஒரு குறுகிய காலம் மருத்துவமனையில் இருக்க வேண்டியதாயிருக்கும். மூன்றாவது பருவத்திலிருப்பவர்களுக்கு ஹிஸ்டராட்டமி போன்ற ஒரு பெரிய அறுவை சிகிச்சைதான் ஒரே வழியாக இருக்கக்கூடும்.c

[அடிக்குறிப்புகள்]

b ஒன்பது-மாத கர்ப்பக் காலம் சில சமயங்களில் மருத்துவ ரீதியாக மூன்று மாதங்கள் கொண்ட மூன்று பருவமாகப் பிரிக்கப்படுகிறது.

c ஹிஸ்டராட்டமி என்பது கருவில் வளரும் குழந்தையை அகற்றிட கருப்பையை அறுத்து செய்யப்படும் சிகிச்சை. இதை கருப்பையையே எடுத்துவிடும் ஹிஸ்டரெக்டமி என்ற முறையுடன் குழப்பிவிடக்கூடாது.

[பக்கம் 8-ன் படம்]

முன்னேறிய மருத்துவ சிகிச்சை முறைகளின் காரணமாக முழு வளர்ச்சி பெறாது பிறக்கும் குழந்தைகள் உயிர் பிழைப்பது இப்பொழுது கூடிய காரியம்

[படத்திற்கான நன்றி]

Justitz/Zefa/H. Armstrong Roberts

[பக்கம் 10-ன் படம்]

குழந்தையின் தகப்பனுடைய உணர்ச்சிகளுக்கு வெகு சிலரே அதிக கவனம் செலுத்துகின்றனர்

[பக்கம் 12-ன் படம்]

கருச்சிதைவின் பாதிப்புகள் உணர்ச்சி சம்பந்தமாகவும் மனசம்பந்தமாகவும் பெருஞ் சேதத்தை ஏற்படுத்தக்கூடும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்