எல்லா மனிதவர்க்கத்துக்கும் நல்ல உடல் ஆரோக்கியம்—எப்போது?
“சீனா நீங்கலான, முன்னேற்றமடைந்துவரும் ஏழ்மையிலிருக்கும் 67 தேசங்களின் பொது சுகாதார அமைப்புகள், பணக்கார தேசங்கள் நோவகற்றும் மருந்துக்காக மட்டுமே செலவழிக்கும் பணத்தைவிட குறைவாகவே தங்கள் அனைத்து உடல்நல பராமரிப்புக்காக செலவழிக்கின்றன.”—உடல்நல நெருக்கடி 2000.
“2000-வது ஆண்டுக்குள் அனைவருக்கும் நோயற்ற நிலை”—இந்த கோஷம் விசேஷமாக, 1978-ல் உலக சுகாதார அமைப்பும் (WHO) ஐக்கிய நாட்டு குழந்தைகள் நிதி நிறுவனமும் (UNICEF), தொடக்க சுகாதார பராமரிப்பு பற்றிய சர்வ தேச மாநாடு ஒன்றை நடத்திய சமயம் முதற்கொண்டு திரும்பத் திரும்ப எழுப்பப்பட்டு வந்திருக்கிறது. சுமார் 134 தேசங்களின் பிரதிநிதிகள் ஆஜராயிருந்த இந்த மாநாட்டில், உலகின் உடல்நலத் துறை உண்மையில் எவ்வளவு குறைவுபட்டிருக்கிறது என்பதற்கு அனைத்துலகின் கவனமும் திருப்பப்பட்டது.
ஐக்கிய நாட்டு குழந்தைகள் நிதி நிறுவனத்தின் அப்போதைய செயற்குழு நிர்வாகியாகிய R. லாபோஸி சொன்னதாவது: “இன்று, இங்கு நாம் கூடிவந்திருப்பதற்கு ஒரு காரணம், உலகின் பல்வேறு பாகங்களிலும், தேசங்களினுள்ளேயும்கூட, உடல்நல வாய்ப்பின் சம்பந்தமாக நிலவி வரும் கண்டிக்கத்தக்க ஏற்றத் தாழ்வு, இனிமேலும் சகித்துக்கொள்ளப்பட முடியாது என்பதாக நாம் ஆணித்தரமாக நம்புவதே ஆகும்.”
மாநாடு நடைபெறுவதற்கு முன்னால் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கை, பணக்கார தேசங்களில் இருக்கப்பட்டவர்களிடையேயும் மற்ற தேசங்களிலுள்ள இல்லாதவர்களிடையேயுமுள்ள மிகப் பெரிய உலகளாவிய ஒரு இடைவெளியைப் பற்றி பேசியது. ஐக்கிய நாட்டு குழந்தைகள் நிதி நிறுவனத்தின் அதே ஆண்டுக்குரிய அறிக்கை, ஏழ்மை நிலையிலுள்ள சில தேசங்களில், “இவர்களில் 10% மட்டுமே தரமான உடல்நல பராமரிப்பு வசதிகளைப் பயன்படுத்திக்கொள்வதாகவும் ஒருவேளை இருபது சதவிகிதத்தினர் மட்டுமே சுத்தமானத் தண்ணீரைக் குடிப்பதாகவும்” குறிப்பிட்டிருந்தது.
மாநாடு, “உணவுப் பொருட்கள் மற்றும் ஊட்டச் சத்து வழங்கீடு, குடிப்பதற்கு போதிய அளவு சுத்தமான தண்ணீர் மற்றும் அடிப்படை சுகாதாரம்; தாய் சேய் உடல்நல பராமரிப்பு, . . . இன்றியமையாத மருந்துப் பொருட்களின் வழங்கீடு” ஆகியவற்றை மேம்படுத்துமாறு” கேட்டுக்கொண்டது.
இவை அனைத்தும் விசேஷமாக ஏழ்மையான தேசங்களில் வாழும் மக்களுக்கு மிகவும் விலையுயர்ந்தவையாக இருக்கின்றன. இப்படிப்பட்டத் தேவைகளுக்கு எங்கிருந்து பணத்தைப் பெறமுடியும்? “சமாதானமும் தேசங்களிடையே மனகசப்பை நீக்கும் முடிவமைதியும், ஆயுதக் குறைப்பும்” இப்படிப்பட்ட வசதிகளைப் பெற்றுக்கொள்ளத் தேவையான பெரும் பணத்தை கிடைக்கும்படிச் செய்ய முடியும். இதன் காரணமாகவே, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கும் உலக சுகாதாரம் பத்திரிக்கை பின்வருமாறு குறிப்பிடத் தூண்டப்பட்டது: “தற்போது இராணுவக் கருவிகளுக்காகப் பயன்படுத்தப்படும் கைத்திறமை, பணம், மனித மற்றும் பொருளாதார வளங்கள் ஆகிய இவை யாவும் உலகின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணம் செய்யப்பட்ட ஒரு இலட்சிய உலகத்தைக் கற்பனைச் செய்து பாருங்கள்!”
ஆனால் 1978 முதற்கொண்டு கடந்து போயிருக்கும் ஆண்டுகளில், இப்பேர்ப்பட்ட சமாதானத்தையும், தேசங்களிடையே மனக்கசப்பை நீக்கும் முடிவமைதியும், ஆயுதக் குறைப்பையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? உடல் ஆரோக்கியப் பிரச்னை தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்க, தேசங்கள் நேர் எதிர் திசையில் போய்க்கொண்டில்லையா? (g87 5⁄8)
[பக்கம் 3-ன் படம்]
கொலம்பியாவிலுள்ள பள்ளிப் பிள்ளைகளுக்கு அம்மை தடுப்பு ஊசி குத்தப்படுகிறது