உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g88 6/8 பக். 5-6
  • ஒரு நவீன பாபேல் கோபுரமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒரு நவீன பாபேல் கோபுரமா?
  • விழித்தெழு!—1988
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஒற்றுமை இருந்தனவா?
  • கடவுள் செவிகொடுக்கிறாரா?
  • சமாதானத்துக்கான ஜெபங்கள்—அவற்றுக்கு செவிகொடுப்பது யார்?
    விழித்தெழு!—1988
  • சமாதானத்தைத் தேடி அஸிஸியில் மதங்கள்
    விழித்தெழு!—2002
  • “உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது
    விழித்தெழு!—1988
  • உலக சமாதானம்—எப்பொழுது? எப்படி?
    விழித்தெழு!—1988
மேலும் பார்க்க
விழித்தெழு!—1988
g88 6/8 பக். 5-6

ஒரு நவீன பாபேல் கோபுரமா?

பூர்வீக பாபேல் கோபுரம் குழப்பத்துக்கும் பிரிவினைக்கும் ஒரு சின்னமாக இருக்கிறது. அந்த இடத்தில்தானே, ஏறக்குறைய 4,000 ஆண்டுகளுக்கு முன்பு, கடவுள் மக்கள் பேசிய மொழியைத் தாறுமாறாக்கினார். ஏன்? அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர், மற்றும் அபூரண மனிதரின் திட்டங்களை மையமாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்தனர்.—ஆதியாகமம் 11:1-9.

அஸிஸியில் நடந்த காரியம் இதற்கு அதிக வித்தியாசமாக இருக்கின்றனவா? மனிதர் அங்கு சரியான விதத்தில் மறுபடியும் ஒன்றுபடுத்தப்பட்டனரா? இருநூறு கோடிக்கும் அதிகமான மக்களின் மதத் தலைவர்கள் உண்மையிலேயே உலக சமாதானத்தை முன்னேற்றுவித்தனரா?

ஒற்றுமை இருந்தனவா?

ஒருசில நாட்களுக்கு முன்பு தான் ஆற்றிய சொற்பொழிவு ஒன்றில் போப் அழுத்திக் காண்பித்ததாவது: “அஸிஸியில் நிகழப்போவது நிச்சயமாகவே மத ஒன்றுமை அல்ல.” அவர் மேலும் கூறியதாவது: “நாம் ஒன்றாக சேர்ந்து ஜெபம் செய்ய முடியாது, ஒரு பொது ஜெபத்தில் சேர்ந்துகொள்ள முடியாது, ஆனால் மற்றவர்கள் ஜெபிக்கையில் நாம் அங்கு இருக்கலாம்.”

இப்படியாக சமாதானத்துக்காக ஜெபிப்பதில் கவனிக்கப்பட்ட அடிப்படை பிரச்னை ஒன்றாக சேர்ந்து ஜெபிப்பது அல்ல, ஆனால் ஜெபிப்பதற்கு ஒன்றுகூடி வருவதாகும். அவர் பொது வழிபாட்டில் பங்குகொள்வதைத் தவிர்க்க விரும்பினார் என்பதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் வித்தியாசமான மத நம்பிக்கைகளையும் கலப்பது குறித்து குற்றஞ்சாட்டப்படாதிருப்பார்.

இந்தக் காரியம் அன்று காலை மதத்தலைவர்களுக்குப் போப் ஆற்றிய வரவேற்புரையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. அவர் அழுத்தந்திருத்தமாகக் கூறியதாவது: “நாம் இங்கு ஒன்று சேர்ந்திருக்கிறோம் என்ற உண்மைதானே நம்மிடையே ஒரு மத ஒன்றுமையை ஏற்படுத்த நாடுகிறோம் அல்லது நம்முடைய விசுவாசத்தில் ஓர் உடன்பாடு ஏற்படுத்த நாடுகிறோம் என்ற எந்த வித எண்ணத்தையும் கொடுப்பதாயில்லை. அல்லது எல்லாவற்றையும் மிஞ்சும் விதத்தில் ஒரு பூமிக்குரிய செயல்திட்ட அளவில் மதங்கள் ஒன்று சேர முடியும் என்பதையும் அர்த்தப்படுத்துவதில்லை.”

அப்படியிருக்க, அஸிஸியில் கூடிவந்தவர்கள் பிரதிநிதித்துவம் செய்த மதங்களின் போதனைகளிலுள்ள வித்தியாசப்பட்ட போதனைகளை ஒப்புரவுபடுத்த எந்த ஒரு முயற்சியும் இருக்காது என்பது நிச்சயம். எனவே மத ஒன்றுமை என்பது கூடாத காரியமாயிருக்கும். ‘மத பாஷைகளின்’ குழப்பம் தொடரும். எனவே, பூர்வகால பாபேல் கோபுரத்துக்கும் இதற்கும் பலமான பொருத்தம் இருக்கிறது.

மத ஒற்றுமையின்மை ஒருசில மத நம்பிக்கைகளிலேயே தெளிவாகக் காணப்படுகிறது. உதாரணமாக, ஒரு தனிப்பட்ட கடவுள் இருக்கிறார் என்று புத்த மதம் ஏற்றுக்கொள்வதில்லை, மற்றும் மனிதனின் கடைசி இலக்கு நிர்வாணா அடைதல் அதாவது தான் அழிவதன் மூலம் முழுமையான ஆசீர் நிலை அடைவது என்று போதிக்கிறது. நிர்வாணாவுக்கு வழிநடத்தும் மறுபிறப்புச் சுழற்சியிலும் பலகோடி தெய்வங்களிலும் நம்புகின்றனர். கத்தோலிக்க மதம், ஆர்த்தடாக்ஸ் மற்றும் புராட்டஸ்டாண்ட் மதப்பிரிவினர்கள் ஒரு திரித்துவத்தில் நம்புகின்றனர். ஆனால் முகமதியர்கள் ஒரே கடவுள், அல்லா இருக்கிறார் என்றும் முகமதுதான் கடவுளுடைய தீர்க்கதரிசி என்றும் நம்புகின்றனர்; என்றபோதிலும், கடவுளுக்கு ஒரு குமாரன் இருக்கிறார் என்று அவர்கள் நம்புவதில்லை. யூதர்களும் ஒரே கடவுளை வணங்குகிறார்கள். ஆனால் இயேசுவை மேசியா என்று ஏற்றுக்கொள்வதில்லை. ஆப்பிரிக்க மதங்கள், தாவரங்களும் விலங்குகளும் உயிரற்ற பொருட்களும் ஓர் ஆவியைக் கொண்டிருக்கின்றன என்று நம்புகின்றன. அமெரிக்க இந்தியர் இயற்கை சக்திகளை வணங்குகின்றனர்.

என்றபோதிலும், உண்மையான சமாதானம் என்பது வித்தியாசப்பட்ட ஆட்கள் அடிப்படையாக ஒன்று சேர்வது அல்லது ஐக்கியப்படுவதைக் குறிக்கிறது. ஆனால் அஸிஸியில் கூடிய மதங்கள் ஒரு பொது ஜெபம் ஏறெடுப்பதில்கூட ஒத்துப்போகமுடியாதளவுக்குப் பிரிந்திருந்தனர், அந்தோ பரிதாபம்! கடவுள் நிச்சயமாக இந்த முரண்பட்ட கருத்துக்களெல்லாவற்றையும் அங்கீகரிப்பது கூடாத காரியம், ஏனென்றால் அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதினான்: “தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்.”—1 கொரிந்தியர் 14:33.

கடவுள் செவிகொடுக்கிறாரா?

உண்மையான சமாதானத்துக்காக செயல்பட எண்ணம் கொண்டிராத மதத் தலைவர்களின் ஜெபங்களுக்கு வானத்துக்கும் பூமிக்கும் சிருஷ்டிகராகிய ஒரே உண்மையான கடவுள் எப்படி செவிகொடுக்கக்கூடும்? உண்மையான வணக்கத்தை அப்பியாசிப்பவர்கள் “ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏக மனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டும்” என்று பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட கடவுளுடைய சொந்த வார்த்தை தெளிவாகத் தெரிவிக்கிறது.—1 கொரிந்தியர் 1:10.

கடவுள் பிளவுபட்டிருக்கும் இந்த மதங்களுக்குச் செவிகொடுப்பாரானால், அவர் தமக்குத்தாமே முரணாக நடந்துகொள்பவராக இருப்பார். தாம் கண்டனம் செய்யும் ஒன்றை—பிரிவினையை—தாம் அங்கீகரிப்பதாக இருக்கும். ஆனால் உண்மையான கடவுள் இரட்டை தராதரமுடையவர் என்ற பழிக்கு ஆளாக முடியாது. தம்முடைய சொந்த வார்த்தைக்கு முரணாகப் போக மாட்டார். ஏனென்றால் அவர் “பொய்யுரையாத தேவன்.” (தீத்து 1:3) எனவே அவர் பிரிவினையுடைய வணக்கத்தாரின் ஜெபங்களுக்கு செவிகொடுப்பதில்லை.

தம்முடைய சித்தத்துக்கு இசைவாக இருக்கும் வணக்கத்தை அல்லது தொழுகையை மட்டுமே கடவுள் அங்கீகரிக்கிறார் என்று பைபிள் காண்பிக்கிறது. “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதிலே பிரவேசிப்பதில்லை.” தம்மை “ஆவியோடும் உண்மையோடும்” தொழுதுகொள்ளுகிறவர்களாயிருக்கும்படி “விரும்புகிறார்,” அதாவது அப்படிப்பட்டவர்களையே அவர் அங்கீகரிக்கிறார், அவர்களுக்கே செவிகொடுக்கிறார். அவருடைய வார்த்தையைக் கடைபிடிப்பதன் மூலமும் அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலமும் அவர் “ஆவியோடும் உண்மையோடும்” தொழுதுகொள்ளப்படுகிறார். எனவே தம்முடைய சித்தத்தை செய்யாத அந்த பாபேல் கோபுர கட்டடக்காரர்களை அங்கீகரிக்காதிருந்த விதமாக அவருடைய சித்தத்தை செய்யாத மதங்களைக் கடவுள் அங்கீகரிப்பதில்லை. அப்படிப்பட்டவர்களை அவர் வெறுக்கிறார். கடவுளுடைய சித்தத்தை செய்வதற்கு மாறாக தங்களுடைய சொந்த சித்தத்தையே நிறைவேற்றுகிறவர்களைக் குறித்து இயேசு சொன்னார்: “அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்.”—மத்தேயு 7:23; யோவான் 4:23, 24.

எனவே அஸிஸியில் கூடிய மதங்களின் ஆவிக்குரிய நிலை, கடவுள் உண்மை வணக்கத்தாரிடமிருந்து எதிர்பார்ப்பவற்றிற்கு எதிராக இருக்கிறது. ஏக மனதும் ஏகயோசனையும் உடையவர்களாய் ஒன்றுபட்டிருப்பதற்கு மாறாக பாபேல் கோபுரத்திலிருந்தது போன்று அவர்கள் பிரிவினையால் சிதறுண்டிருக்கிறார்கள்.

பாபேல் போன்ற இந்த உலக மதங்களின் ஜெபங்களுக்குக் கடவுள் சாதகமாக செவிசாய்ப்பதில்லை என்ற உண்மை, சரித்திரத்தின் சாட்சியங்களை நாம் ஆராய்கையில் தெள்ளத்தெளிவாகக் காணப்படுகிறது. அந்தச் சாட்சியங்கள் நமக்கு எப்படிப்பட்ட ஒரு காட்சியைக் காண்பிக்கின்றன? (g87 6⁄8)

[பக்கம் 6-ன் படம்]

ஒரு பாபிலோனிய கோயில் கோபுரம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்