செரிங்கெட்டியில் குடும்ப வாழ்க்கை
ஆப்பிரிக்க சிங்கம் பலமுறை விலங்குகளின் அரசன் என்பதாக அழைக்கப்படுகிறது. அது இவ்வாறு அழைக்கப்படுவதை புரிந்துகொள்ள முடிகிறது. அதன் பெரிய பிடரி மயிர் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. அம்பர் நிற பெரிய கண்களால் அது அமைதியாக தற்பெருமையுடன் இங்குமங்குமாக உற்றுப் பார்க்கிறது. கம்பீரமான ஒரு தோற்றத்துடன் அது காணப்படுகிறது. திடீரென்று எழுந்து, பேரொலியோடு முழக்கம் செய்கையில், மயிர் கூச் செரியும் வகையில் அதை ஐந்து மைல்களுக்கு அப்பாலும் கேட்க முடிகிறது. நிச்சயமாகவே இது விலங்குகளுடைய அரசனே.
ஆனால் அது வாழ்கின்ற இடத்தில் பார்க்கும்போது அதன் ராஜரீகத் தோற்றம் கொஞ்சம் மறைந்துவிடுகிறது. அது அதிகமாக தூங்குகிறது. நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே இருக்கிறது. பெரிய சிங்கங்களின் மீது தொற்றிக்கொண்டு ஏறுவதை பெரிதும் விரும்பும் சிங்கக் குட்டிகளுக்கு விலகி சில நேரங்களில், மரக்கிளைகளின் மீது ஏறி தூங்கிக் கொண்டிருக்கிறது. வயிறு மேற்புறமாக சூரிய வெளிச்சத்தில் காய மல்லாந்து படுத்துக்கொள்வதை அது மிகவும் விரும்புகிறது. ஒரு நாளில் சுமார் 20 மணி நேரம் இதிலேயே கழித்துவிடுகிறது.
மீந்திருக்கும் நான்கு மணி நேரம் என்ன செய்கிறது? ஆம், வேட்டையாடும் பெண் சிங்கம் மேசையில் உணவை எடுத்து வைக்கும்போது இதுவே சாப்பிட முதலாவதாக நிற்கிறது. என்ன இருந்தாலும் அது அரசனாயிற்றே! குட்டிகளை பிறப்பித்து, தன் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் மற்ற சிங்கங்களோடு அது சண்டை போடுகிறது. ஆகவே அது தகப்பனாக, ஒரு போர் வீரனாக, அங்குமிங்கும் திரிந்துகொண்டு சோம்பேறியாக இருக்கிறது. கொஞ்ச காலத்துக்கு ஓர் அரசனாகவும் இருக்கிறது.
உண்மையில் இந்தப் பணிகளை இவைத் தனியாகச் செய்வதில்லை. பூனை இனத்தில் சிங்கங்கள் மாத்திரமே கூடிவாழ விரும்புகின்றன. சிங்கங்கள் குடும்பத் தொகுதிகளாக வாழ்கின்றன. பொதுவாக இந்த ஒரு தொகுதியில் இரண்டு அல்லது மூன்று பெரிய ஆண் சிங்கங்கள், இனப்பெருக்க வயதிலுள்ள ஐந்திலிருந்து பத்து பெண் சிங்கங்கள் மற்றும் பல சிங்கக் குட்டிகளும் வளர்ந்த குட்டிகளும் இருக்கின்றன. ஆனால் இந்த குடும்பங்கள் பெரியதாக 40 அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையுடையதாக இருக்கக்கூடும். ஒவ்வொரு குடும்பத் தொகுதிக்கும் பல மைல்கள் விட்டத்தையுடைய ஆட்சி நிலப் பரப்புகள் உள்ளன. பெரிய ஆண் சிங்கங்கள் எல்லை மீறி உள்ளே வர எவரையும் அனுமதியாமல் பார்த்துக்கொள்கின்றன.
பெரும்பாலும் வேட்டையாடுவதெல்லாம் பெண் சிங்கங்களே—பொதுவாக இதை இரவு நேரத்தில் செய்கின்றன. அவை அதிக எடையுள்ள ஆண் சிங்கங்களைவிட (400-500 பவுண்டுகள்) இலேசாக (250-300 பவுண்டுகள்) இருப்பதால் வேகமாக ஓடுகின்றன. ஆனாலும் பெண் சிங்கங்கள், தங்களைவிட அதிக வேகமாக ஓடக்கூடிய இரை பிராணிகளையே துரத்திச் செல்கின்றன. ஆகவே ஒன்றாகச் சேர்ந்து வேட்டையாடுவது அவைகளுக்கு அனுகூலமாயிருக்கிறது. சில சிங்கங்கள் ஒளிந்து கொள்கையில் மற்றவை இரை பிராணியைச் சுற்றி வளைத்துக்கொண்டு காத்துக் கொண்டிருப்பவைகளிடமாக அவற்றைத் துரத்திவிடுகின்றன.
பெண் சிங்கங்கள் பொதுவாக நல்ல தாய்மார்களாக இருக்கின்றன. சிங்கக் குட்டி முதல் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தாய்ப்பாலிலேயே வாழ்கிறது. பின்பு தாய் தான் கொன்ற ஒரு பிராணியிடமாக குட்டியை அழைத்துச் சென்று மாம்சத்தை அதற்கு அறிமுகம் செய்து வைக்கிறது. ஆனால் தாய்க்கு பாலில்லாதவரை, குட்டிக்கு அது எட்டு மாதங்கள் வரையாக பாலூட்டுகிறது. வேட்டைக்குச் செல்கையில் இரண்டு அல்லது அதற்கு அதிகமான வருடங்கள், அது தன் குட்டிகளை அழைத்துச் செல்கிறது.—அவை தாயை கவனிப்பதன் மூலம் கற்றுக்கொள்கின்றன.
குடும்பத்தில் பொதுவாக அமைதியான ஒரு சூழ்நிலை நிலவுகிறது. பெண் சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து உட்கார்ந்துக் கொண்டு ஒவ்வொன்றும் மற்றவற்றின் குட்டிகளைப் பார்த்துக் கொள்கின்றன. பசியாயுள்ள குட்டிகள் எந்த பெண் சிங்கத்திடம் பாலிருந்தாலும் அதனிடம் போய் குடிக்கின்றன. குட்டிகள் ஒன்றையொன்று துரத்திக்கொண்டும் சண்டைப் போட்டுக் கொண்டும் பெரும்பாலான பொழுதை கழித்துவிடுகின்றன. சில சமயங்களில், பெண் சிங்கங்கள் விளையாட்டில் சேர்ந்து கொண்டு வாலை ஆட்ட குட்டி அதை பிடித்தும் கடித்தும் விளையாடுகின்றன. பெரிய ஆண் சிங்கங்களும்கூட, குட்டிகள் தங்கள் மீது ஏறி, மயிரை பற்றி இழுப்பதை ஓரளவு பொறுத்துக் கொள்கின்றன. குடும்பம் தன் எல்லைக்குள்ளேயே வாழ்ந்தாலும் எப்பொழுதும் ஒன்றாகச் சேர்ந்தே இருப்பதில்லை. ஆனால் மறுபடியுமாக அவை ஒன்று சேரும்போது ஒன்றோடொன்று கன்னத்தை தேய்த்து வரவேற்றுக் கொள்கின்றன.
குடும்ப உறவுகள் நீடித்து நிலைத்திருக்கின்றன. பெரும்பாலான பெண் சிங்கங்கள் ஒரே குடும்பத்தில் பிறந்து வளர்ந்தபடியால், அவை உறவினராக இருக்கின்றன. ஒருசில பத்தாண்டுகளுக்குப் பின்பு, அங்கே சகோதரிகளும், தாய்மார்களும், பாட்டிமார்களும், பாதி சகோதரிகளும், தாய் தந்தையரின் உடன் பிறந்தாரின் மகள்களும் இருப்பார்கள். ஆனால் ஆண் சிங்கக் குட்டிகளோ மூன்று வயதை அடையும்போது, பெரிய ஆண் சிங்கங்களால் துரத்திவிடப்படுகின்றன.
ஆனால் அவை ஒன்றாக ஒரே குழுவாக வசிக்கின்றன. அங்கு இரண்டு அல்லது மூன்று அல்லது ஆறு சிங்கங்கள் இருக்கக்கூடும். ஒருசில ஆண்டுகளுக்குப் பின்பு அவை முதிர்ச்சியடைந்து போதிய பலமுள்ளவையாகும்போது அவை மற்றொரு குடும்பத்தைச் சந்தித்து அங்கே வாழ்கின்ற ஆண் சிங்கங்களை வெளியேற்றிவிட்டு பெண் சிங்கங்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுகின்றன. இது சம்பவிக்கும்போது, புதிய ஆண் சிங்கங்கள், குட்டிகளை கொன்றுவிடுகின்றன. இதற்குப் பின்பு சந்ததி புதிய ஆண் சிங்கங்களிலிருந்து உருவாக வேண்டும் என்று அர்த்தமாகிறது. பெண் சிங்கங்கள் பாலுறவு எழுச்சியை அனுபவிக்கின்றன என்றும் அர்த்தமாகிறது. குடும்பத்தில் ஆண் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கையில், இன்னொரு ஆண் சிங்கங்களின் தொகுதி இவைகளை மேற்கொண்டு இவைகளை வெளியேற்றும் சாத்தியம் குறைவாக இருக்கிறது.
இதன் காரணமாகவே, குடும்பத்தில் ஒரு ஆண் மற்ற ஆண்சிங்கங்களை தன்னோடு கொண்டிருப்பதில் அனுகூலம் இருக்கிறது. பெண் சிங்கங்கள் பொதுவாக ஒரே குடும்பத்திலேயே வாழ்நாள் முழுவதையும்—சுமார் 18 வருடங்களையும் கழித்துவிடும்போது, ஆண் சிங்கங்களை இளமையாக இருக்கும் மற்றொரு தொகுதி, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் துரத்திவிடுகின்றன. அப்படியாக வெளியேற்றப்படும் ஆண் சிங்கங்களுக்கு வாழ்க்கை கடினமாகிவிடுகிறது. இனிமேலும் இளமைப் பருவத்தில் இல்லாத இவைகளால் அநேகமாக போதிய உணவைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. அதன் காரணமாகவே பாரா 3-ன் முடிவில் அது “கொஞ்ச காலத்துக்கு அரசனாக” இருப்பதாய்ச் சொல்லப்பட்டது.
பெண் சிங்கங்களை முன்னிட்டு குடும்பத்திலுள்ள ஆண் உறவினர்களுக்கு சண்டை ஏற்படுவது அபூர்வமாக இருக்கிறது. ஒரே குடும்பத்திலுள்ள பெண் சிங்கங்கள் ஒரே சமயத்தில்தானே பாலின கிளர்ச்சியை அனுபவிக்கின்றன. சேர்த்துக்கொள்ள தயாராக இருக்கும் பெண் சிங்கத்தை நெருங்கும் முதல் ஆண் சிங்கத்துக்கு அது சொந்தமாகிவிடுகிறது. மற்ற ஆண்கள் அதனை நெருங்குவதில்லை. ஆனால் பெண் சிங்கங்கள் அனைத்தும் ஒரே சமயத்தில், சேர்த்துக்கொள்ளும் நிலைக்குள்ளாவதன் காரணமாக, மண உறவில் இணைய பொதுவாக எல்லா ஆண் சிங்கங்களுக்கும் பெண் சிங்கங்கள் கிடைத்துவிடுகின்றன.
இவை அனைத்துமே அதிகமான சிங்கக் குட்டிகளுக்கும், அவை ஒவ்வொரு தாயும் தகப்பனும் அறிந்திருக்கிறபடியே, மிகவும் களைப்படையச் செய்துவிடும் அதிகமான குடும்ப பூசல்களுக்கும் வழிநடத்துகின்றன. ஆகவே நாம் செரிங்கேட்டி சிங்கங்களின் குடும்ப வட்டாரத்திலிருந்து விடைப்பெற்றுக் கொள்கிறோம். குட்டிகளை தூங்க வைத்துவிட்டு அம்மாவும் அப்பாவும் சற்று களைப்பாற்றிக் கொள்ளட்டும். ஆனால் நிச்சயமாகவே உறங்காமல் மதிய வேளையில் உணவு கேட்கும் ஒருவர் எப்பொழுதும் இருக்கக்கூடும்.
இப்போது இந்த மகிழ்ச்சியான குறிப்போடு செரிங்கேட்டியிலிருந்து பிரியாவிடையை பெற்றுக்கொள்கிறோம்.
இன்று சிங்கம் போன்ற மிருகங்கள் உணவுக்காக மற்ற பிராணிகளை கொல்வதுபோல, ஆரம்பத்தில் இருக்கவில்லை என்பது தெரிகிறது. (ஆதியாகமம் 1:30) வரப்போகிற புதிய உலகில் “ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும், சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்.” ஆம், “ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்” என்பதாக ஏசாயா தீர்க்கதரிசி முன்னுரைத்திருக்கிறான்.—ஏசாயா 11:6-9; 65:25. (g87 7⁄22)