உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g88 11/8 பக். 28-29
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1988
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • புகையிலையை பயன்படுத்தும் குழந்தைகள்
  • வேலையில்லா பட்டதாரிகள்
  • மலைவாழ் கொரில்லா குரங்குவகை ஆபத்திலிருக்கிறது
  • மதுபான உபயோகம் பெருஞ் செலவை பிடிக்கிறது
  • பரிகாரம் கண்டுபிடித்தாயிற்று
  • பெயர் தெரிவு
  • அமில மழை பரவுகிறது
  • “உட்புற உடல் பயிற்சி”
  • காப்பி காரணமா?
  • பண்டைய கலவை முறை புதுப்பிக்கப்படுகிறது
  • புகைவிடாத புகையிலை—அது தீங்கற்றதா?
    விழித்தெழு!—1996
  • மலை கொரில்லாக்களை சந்தித்தல்
    விழித்தெழு!—1998
  • புகையிலையின் ஆதரவாளர்கள் வெப்பக்காற்று பலூன்களை பறக்கவிடுகின்றனர்
    விழித்தெழு!—1995
  • தரமான காபி—செடியிலிருந்து கப் வரை
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
விழித்தெழு!—1988
g88 11/8 பக். 28-29

உலகத்தைக் கவனித்தல்

புகையிலையை பயன்படுத்தும் குழந்தைகள்

ஜூனியர் மற்றும் சீனியர் உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் அநேகர், புகையில்லா புகையிலை பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பது ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிந்த விஷயமாகும். என்றபோதிலும் அண்மைக்காலம் வரையாக, புகையிலைப் பழக்கம் தொடக்க பள்ளி மாணவர்களிடமும் பள்ளிக்குச் செல்லும் வயது வராதவர்களிடமும் இருப்பது பற்றிய தகவல் இல்லை. ஐக்கிய மாகாணங்களின் நோய் கட்டுப்பாட்டு மையம் 5,000 பிள்ளைகளை வைத்து நடத்திய சுற்றாய்வு, மூன்று வயதிலுள்ள சிறு பிள்ளைகளுங்கூட புகையிலை பொருட்களுக்கு அடிமையாயிருப்பதை காண்பித்தது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஐந்து வயது பெண்களில் பதினேழு சதவிகிதத்தினரும், அதே வயதிலுள்ள பையன்களில் 10 சதவிகிதத்தினரும் மூக்கு பொடி போன்ற பொருட்களை ஓராண்டு காலமாக அல்லது அதிகமாகவும் பயன்படுத்தி வருவது தெரிய வந்தது. வாஷிங்டன் டி.சி., வெளியிட்டுள்ள ஹெல்த் லெட்டரின் பிரகாரம், “விரிவான விளம்பரமும் மாதிரி விளம்பர இலவச விநியோகமும் புகையில்லா புகையிலைப்” பொருட்களை கவர்ச்சிகரமானதாகவும் இளம் உபயோகிப்பாளர்களுக்கு கிடைக்கும்படியும் செய்திருக்கிறது. இதன் எல்லா மேலுறைகளிலும் காணப்படும் எச்சரிக்கைகளை இவர்களில் அநேகரால் வாசிக்க முடிவதில்லை. இப்படிப்பட்ட பொருட்களை சிறு பிள்ளைகளுக்கு அறிமுகஞ் செய்து வைத்திருப்பது நண்பர்களும், உடன் பிறந்தவர்களில் மூத்தவர்களும் அல்லது அவர்களுடைய பெற்றோராகவுங்கூட இருக்கின்றனர்.

வேலையில்லா பட்டதாரிகள்

“பல்கலைக்கழகப் பட்டம் ஒரு வேலைக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை.” இது கானடாவிலுள்ள அன்டோரியோவின் 15-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களிலிருந்து 1985-ல் வெளிவந்த பட்டதாரிகளை வைத்து செய்யப்பட்ட ஒரு சுற்றாய்விலிருந்து பெறப்பட்ட முடிவாகும். இந்த பட்டதாரிகள் மத்தியிலும், மாகாணத்திலுள்ள தொழிலாளர் படையின் மீதமுள்ள மற்றவர்களைப் போலவே வேலையில்லா திண்டாட்ட வீதம் 7.3-ஆக இருந்தது. வேலையில்லா திண்டாட்ட வீதம் 10.6-ஆக இருக்கும் 20-24 வயதிலுள்ள மற்ற தொழிலாள வர்க்கத்தை விட இவர்கள் மிகச் சிறிதளவே மேம்பட்டு விளங்கினார்கள். மேலுமாக, ஒரு பட்டமானது வேலைக்கு சம அளவு ஊதியத்தையும்கூட உத்தரவாதமளிப்பதில்லை என்பதை சுற்றாய்வு காண்பித்தது.

மலைவாழ் கொரில்லா குரங்குவகை ஆபத்திலிருக்கிறது

“மலைவாழ் ஆப்பிரிக்க கொரில்லா குரங்கின் உதவிக்கு இப்பொழுது நாம் வராவிட்டால் பாதுகாப்பில்லாத இந்த உயிரினங்கள் அவை கண்டுபிடிக்கப்பட்ட அதே நூற்றாண்டுக்குள்ளேயே உண்மையில் மறைந்து விடக்கூடும்,” என்பதாக உலக வனவிலங்கு நிதி அமைப்பு எச்சரிக்கிறது. ஏன்? உலகில் மூன்றில் ஒரு பங்கு மலைவாழ் குரங்குகளின் உறைவிடமாக இருக்கும் தென்மேற்கு உகாண்டாவின் நுழையமுடியாத காடுகளை சுரங்கத் தொழிலாளிகளும் மரம் வெட்டுபவர்களும் தொடர்ந்து அழித்துக்கொண்டே வருகிறார்கள் என்று இந்த அமைப்பு அறிக்கை செய்கிறது. மேலுமாக, உரிமையின்றி அத்து மீறி நுழைபவர்கள் சிறிய குரங்குகளை கள்ளச் சந்தையில் விற்பதற்கும் “குரங்கு-கை பேப்பர்-பளு போன்ற விசித்திரமான பொருட்களைச்” செய்வதற்கும் இவைகளை கொன்று வருகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளின்போது, மொத்த மலைவாழ் கொரில்லா குரங்கு வகையில் பாதி மறைந்தே விட்டன. இன்று இந்தக் கூச்ச சுபாவமுள்ள சாதுவான கொரில்லா குரங்குகளில் சுமார் 400 மாத்திரமே காட்டுப்பகுதியில் உயிரோடிருக்கின்றன.

மதுபான உபயோகம் பெருஞ் செலவை பிடிக்கிறது

மதுபான பொருட்களின் மீது விதிக்கப்படும் விற்பனை வரி அரசின் வருவாயை அதிகரிப்பதாக சில அரசியல்வாதிகள் நினைத்தபோதிலும், தற்போது கிடைத்துள்ள தகவல் வேறு விதமாக இருக்கிறது. கானடாவில் ஒரு ஆண்டில் “மதுபானத்தினால் சுகாதார பராமரிப்பு செலவுகள் 2,900 கோடி ரூபாய் கூடுதலாக ஆவதாகவும், . . . சமுதாய நலத்துறை செலவுகள் இதனால் 2,030 கோடி ரூபாய் ஆவதாகவும் சட்டத்தை அமல் செய்வதில் 945 கோடி 40 லட்சம் ரூபாய் கூடுதலாகச் செலவாவதாகவும்” கானடாவின் டொரான்டோ அடிக்‍ஷன் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பார்பரா கோல்டஸ் தெரிவிக்கிறாள். “வேலை செய்யுமிடத்தில் ஆக்கத்திறனை இது 1,740 கோடி ரூபாய் குறைத்து விடுவதாகவும்கூட மதிப்பிடப்படுகிறது.” இது புறக்கணிக்கப்படமுடியாத ஒரு செலவாகும். இவை அனைத்துக்கும் மதுபான வரி வருவாய் போதுமானதாக இருக்கிறதா? ஒன்டோரியோவில் மாத்திரமே செலவுகள் (2,320 கோடி ரூபாய்) வருவாயை (983 கோடி 10 லட்சம்) மிஞ்சி விட்டிருக்கிறது. அதாவது சமீப ஒரு ஆண்டில் 1,450 கோடி ரூபாய் அதிகமாக செலவாகியிருக்கிறது.

பரிகாரம் கண்டுபிடித்தாயிற்று

பெத்லகேமில், இயேசு பிறந்த இடத்தின் மீது கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் சர்ச் ஆப் தி நேட்டிவிட்டியை ஆண்டுதோறும் சுத்தம் செய்யும் பணி கடைசியாக சமாதானமாக செய்து முடிக்கப்பட்டது. சுத்தம் செய்வது உடைமை உரிமையை குறிப்பதாக கருதப்பட்டதன் காரணமாக, கடந்த ஆண்டுகளில் மதகுருக்களின் இரு எதிரணிகளுக்கிடையே கைகலப்புகளும் வன்முறையான விவாதங்களும் ஏற்படுவதுண்டு. இது எவ்விதமாக தீர்த்து வைக்கப்பட்டது? உலக சர்ச்சுகளின் குழுவின் செய்தித் துறை பின்வருமாறு அறிவிக்கிறது: “இரவு வெகு நேரம் வரையாக நீடித்த இஸ்ரேல் அதிகாரிகளின் சாதுரியமான பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து சர்ச்சையில் உட்பட்டிருந்த கிரேக்கு (ஈஸ்டன் ஆத்தடாக்ஸ்) மற்றும் ஆர்மீனியன் (ஓரியன்டல் ஆத்தடாக்ஸ்) ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளும் நேட்டிவிட்டியின் கண்கவர் வனப்புடைய குகைக்கு போகும் வாயிலுக்கு உயரே மேலிருந்த சர்ச்சைக்குரிய பகுதியை இருவருமே சுத்தம் செய்யாமல் விட்டுவிட ஒப்புக் கொண்டனர்.”

பெயர் தெரிவு

1986-ம் ஆண்டு துவக்கத்தில் பின்லாந்தில், குடும்ப பெயர்களின் சம்பந்தமாக புதிய சட்டம் ஒன்று அமலுக்கு வந்தது. ஒரு மனைவி விவாகம் செய்துக் கொள்ளும் போது, விவாகமாவதற்கு முன் வழங்கிய தன் பெயரை வைத்துக் கொள்ள அனுமதி உண்டு அல்லது இருவருமே மனைவியின் குடும்பப் பெயரை வைத்துக் கொள்ளலாம். விளைவு? மக்கள் தொகை பதிவேடு மையத்தின்படி கடந்த ஆண்டில் விவாகம் செய்துக் கொண்ட 26,000 தம்பதிகளில் ஏறக்குறைய 24,000 தம்பதிகள் கணவனின் கடைசிப் பெயரை வைத்துக் கொள்ளும் சம்பிரதாயமான முறையையே தெரிந்து கொண்டனர். 1,950 விவாகங்களில், ஒவ்வொரு துணைவரும், அவருடைய அல்லது அவளுடைய சொந்த குடும்பப் பெயரையே வைத்துக் கொண்டார்கள். 116 தம்பதிகள் மாத்திரமே, விவாகமாவதற்கு முன் வழங்கிய மனைவியின் பெயரை தங்கள் பொதுப் பெயராக தெரிந்து கொண்டனர்.

அமில மழை பரவுகிறது

அமெரிக்காவின் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஏஜென்ஸியிடமிருந்து பெறப்பட்ட “புதிய செய்திக் குறிப்புகளை” மேற்கோள் காண்பித்த தி டொரான்டோ ஸ்டாரின் ஒரு அறிக்கை, கேடு விளைவிக்கும் அமில மழை ஐக்கிய மாகாணங்களில் நெடுந் தொலைவு தெற்கே பரவி வருவதாக குறிப்பிடுகிறது. இப்பொழுது இது மிஸிஸிப்பி, கரோலினாஸ், வெர்ஜீனியா, ஜார்ஜியா மற்றும் ஃப்ளாரிடாவின் சில பகுதிகளை பாதித்து வருகிறது. “தென் கரோலினாவில் பெய்த மிக மோசமான மழை, தக்காளிப் பழ ரசத்தைவிட அதிக அமிலத்தனிமையுள்ளதாக—சாதாரணமாக இருப்பதை விட 275 மடங்கு அதிக மோசமானதாக இருந்தது,” என்றது அறிக்கை. ஃப்ளாரிடாவில் இவ்வாண்டின் முற்பகுதியில் “ஜேக்சான்வில் துறைமுகத்தில் கப்பலில் வந்திறங்கிய BMW மோட்டார் வண்டிகளின் வண்ண சாயத்தை அவை அரித்துவிடும் அளவுக்கு அத்தனை மோசமாக இருந்தது” என்பதாக ஸ்டார் குறிப்பிட்டிருந்தது.

“உட்புற உடல் பயிற்சி”

“நகைப்பதும் உரக்க சிரிப்பதும் உடலின் பெரும்பாலான முக்கிய உடலமைப்புகளை பாதிக்கிறது,” என்கிறார் சிரிப்பின் இயல்பான செயல்பாடுகளின் ஆய்வில் நிபுணரான டாக்டர் வில்லியம் ஃப்ரை. சிரிப்பில் உட்பட்டிருக்கும் தசையின் செயல், உடற்பயிற்சியில் இருப்பதைப் போன்றே இருக்கிறது என்று நியு யார்க் டெய்லி நியூஸ் பத்திரிகையிடம் அவர் சொன்னார். சிரிப்பு ஒருவேளை போலியாக இருப்பினுங்கூட அதை ஃப்ரை “உட்புற உடல் பயிற்சி” என்று வகைப்படுத்தினார். இது மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்களுக்கு இருதயத் துடிப்பின் வேகத்தை இரண்டு மடங்காக்கி, நெஞ்சு, கழுத்து, முகம், தோள், அடிவயிறு மற்றும் உச்சி வட்டத்திலுள்ள தசைகளையும் இயங்கச் செய்கிறது. மனம் விட்டு சிரிப்பது, தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து, உடலில் சேர்ந்து விடும் அதிகமான கார்பன் டை ஆக்சைட்டை வெளியேற்ற உதவி செய்கிறது என்கிறார் ஃப்ரை. நரம்பு மண்டலத்தின் செயல் விரைவுப் படுத்தப்படுவதும், உடலின் இயற்கையான நோவகற்றும் மருந்துகளைச் சுரப்பதன் மூலம் வலியை போக்குவதும், மனதின் செயல் முறைகளை கூர்மையாக்குவதுமான பயனுள்ள மற்ற பக்க பாதிப்புகளை உட்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. “நீங்கள் உண்மையில் அதிலிருந்து நல்ல உடற்பயிற்சியை பெற்றுக் கொள்ளலாம்” என்கிறார் ஃப்ரை.

காப்பி காரணமா?

காப்பி குடிப்பது இருதய நோய் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளை அதிகரிப்பதாகச் சொல்லப்படுவதற்கு ஹானலூலு இருதய அமைப்புத் திட்ட மருத்துவர் கட்சூகிக்கோ யானோ மறுப்புத் தெரிவித்துள்ளார். 15 ஆண்டு காலமாக 7,194 ஜப்பானிய ஆண்களை உட்படுத்திய ஆராய்ச்சியாக இது இருந்தது. இதில் 6,055 பேர் காப்பி அருந்தும் பழக்கமுள்ளவர்கள். யானோவின் பிரகாரம், அதிகமாக காப்பி அருந்துவது இருதய கோளற்றின் அபாய நேர்வை அதிகரிக்க வேண்டும். என்றபோதிலும், புகைபிடிப்பது போன்ற மற்ற அபாய நேர்வு காரணிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது இருதய கேளாறுகளுக்கும் காப்பி அருந்துவதற்குமிடையேயுள்ள தொடர்பு மறைந்தது என்பதை அமைப்பிலிருந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர். காப்பி பிரியர்களின் மத்தியில் இருதய கேளாறுக்குக் காரணம், அவர்கள் காப்பி அருந்துவது அல்ல, ஆனால் அவர்கள் புகைபிடிப்பதன் விளைவாக இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கிறார்கள்.

பண்டைய கலவை முறை புதுப்பிக்கப்படுகிறது

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்திருக்கும் பண்டைய எகிப்தியர்கள் உபயோகித்த சிமென்ட் கலவையின் முக்கிய ஆக்கக் கூறுகளை தான் அடையாளம் கண்டுபிடித்துவிட்டதாக பிரெஞ்சு இரசாயன வல்லுநர் ஜோசப் டேவிடாவிட்ஸ் உரிமை பாராட்டுகிறார் என்று தி வால் ஸ்டீரிட் ஜர்னல் குறிப்பிட்டுள்ளது. இந்தப் பண்டைய சிமென்டின் இணைக்கும் பண்புகள் எகிப்தின் பிரமிடுகளை ஒன்றாக இணைத்தன என்று புதைப் பொருள் ஆய்வாளர் மார்ஜி மாரீஸ் குறிப்பிட்டிருக்கிறார். இதோடு ஒப்பிடுகையில், தற்கால போர்ட் லான்ட் சிமென்ட் 200 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது. சோடியம் கார்பனேட், நேட்ரான் மற்றும் சுண்ணாம்பு கலவையை பயன்படுத்தி எகிப்தியர்கள் காஸ்டிக் சோடாவை தயாரித்தனர் என்றும் இதை சீனாய் வனாந்தரத்தில் தோண்டி எடுத்த சிலிக்கேட் தாது பொருளோடு கலந்து நைல் நதியிலிருந்த எடுத்த அலுமினியம் மிகுந்த சேற்றோடு கலந்து உபயோகித்தார்கள் என்றும் மார்ஜி மாரீஸ் விளக்கியிருந்தார். மேலுமாக ஆர்செனிக் தாது பொருட்கள் போன்ற மற்ற பொருட்களையும் கலந்து சிமென்டை தயாரித்தனர். இயற்கையானது கற்களை தயாரிக்கும் முறையைப் போன்ற விதத்தில் இந்த சிமென்ட் அணுத்திரண்மங்களின் இணைப்புக்களால் இது மிக விரைவில் ஒட்டக்கூடியதும் இறுகக்கூடியதுமாய் உள்ளது. இந்த பண்டைய சிமென்டின் தற்கால வடிவம் ஒரு கம்பெனியால் அபிவிருத்தி செய்யப்படுகிறது. நீண்ட நாளைக்கு நிலைக்கும் பண்புகளும் சீக்கிரத்தில் இறுகக்கூடியத் தன்மையும் நவீன நாளைய நடைமுறை தேவைகளில் பிரயோஜனமாயிருக்கும் என்று இந்தக் கம்பெனி நம்பிக்கை தெரிவிக்கிறது. (g87 11⁄8)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்