உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g88 12/8 பக். 29-30
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1988
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஆக்கச்செயல் மிகுந்த விடுமுறைகள்
  • பணியாட்களில் கரிசனை
  • பன்றிப்பட்டி விளையாட்டுப்பட்டி
  • நட்சத்திர துகள் வைரங்கள்
  • நீண்டதோர் நித்திரை
  • இசைக் கொள்ளையர்களைத் தாக்குதல்
  • “கலகத்தின் வித்துக்கள்”
  • தங்கள் செவிகளுக்கு இசை
  • அபராதங்கள், அபராதங்கள், அதிகமான அபராதங்கள்!
  • கலக்கமுற்ற தண்ணீர்கள்
  • அது வானத்திலிருந்து விழுந்தது
    விழித்தெழு!—2005
விழித்தெழு!—1988
g88 12/8 பக். 29-30

உலகத்தைக் கவனித்தல்

ஆக்கச்செயல் மிகுந்த விடுமுறைகள்

பிள்ளைகளின் விடுமுறை நாட்களைப் பெற்றோர்கள் ஆக்கச்செயல் மிகுந்த காலமாக மாற்றிடவேண்டும் என்று சொல்லுகிறார் மெக்ஸிக்கோவின் உளநூலரும் பல்கலைக்கழக பேராசிரியர் ரஃபேல் மார்ட்டினெஸ். நல்ல முன் திட்டம் செய்வதன் மூலம் பெற்றோர்கள் வீட்டிலும் பள்ளியிலும் கொடுக்கப்படும் போதனைகளை ஒத்திசைவுபடுத்தலாம். மெக்ஸிக்கோவின் தினசரி எல் யுனிவர்சலில் வெளிவந்த அறிக்கையின்படி, “தங்களுடைய பிள்ளைகளுக்குப் பெற்றோர் கொடுக்கவேண்டிய கல்வியைக் கல்வி மையமாகிய பள்ளி எந்த விதத்திலும் மாற்றீடு செய்ய நினைக்கக்கூடது,” என்ற மார்ட்டினெஸ் குறிப்பிட்டுக் காண்பித்தார். வீட்டில் அனுதினமும் செய்யப்படும் வேலைகளிலும், வாழ்க்கைத் தொழில்சார்ந்த நடவடிக்கைகளிலும், ஊனமுற்றோருக்கும் உதவி தேவைப்படுவோருக்கும் உதவுவதிலும் பயிற்சியை உட்படுத்தும் வளைந்துகொடுக்கும் ஓர் அட்டவணையை அவர் சிபாரிசு செய்கிறார். “வீடுமுறைக் காலம் மொத்த அளவில் ஓய்வைக் குறிப்பதில்லை, மாறாக செய்யும் செயல்களில் மாற்றத்தைத்தான் குறிக்க வேண்டும்,” என்று மார்ட்டினெஸ் ஆலோசனை கொடுக்கிறார்.

பணியாட்களில் கரிசனை

ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் பல அம்சங்களில் தனித்திறமையும் அறிவும் பெற்றிருக்கின்றனர். என்றபோதிலும், அவசியம் ஏற்படும் சமயங்களில் தங்களுடைய பணியாட்களைக் குறைக்கத் தயங்குகின்றனர். ஒரு தொழில் நிறுவனம் தன்னுடைய பணியாட்களை வேலையில்லாமையினால் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதைத் தவிர்ப்பதற்காக வேலை நாட்களை வாரத்திற்கு மூன்று நாட்களாகக் குறைத்தது. பொதுவாக ஜப்பானிய பணியாட்கள் தங்களுடைய தொழில் நிறுவனத்தில் வாழ்நாள் முழுவதும் வேலை செய்யும் காரியத்திற்குப் பழகியவர்கள். சில நிறுவனங்கள் தங்கள் பணியாட்களின் பிள்ளைகளுக்குக் கல்வியும் கொடுத்து பின்பு தாங்களே வேலைக்கு எடுத்துக் கொள்கின்றன. ஆனால், பொருளாதார மாற்றங்களினாலும், உலக தொழில் வர்த்தகத்தில் போட்டி மிகுந்துகொண்டிருப்பதாலும், சில மட்டத்தில் தேவைக்குமதிகமான பணியாட்களின் தேக்கம் இருப்பதாலும் ஒருசில நிறுவனங்கள் தங்களுடைய பணியாட்களைக் குறைப்பதைத் தவிர வேறு வழியறியாத நிலையிலிருக்கின்றன. ஒருவருக்கொருவர் காண்பிக்கும் உண்மைத்தவறாமையால் பணியாட்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிட பலமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பன்றிப்பட்டி விளையாட்டுப்பட்டி

பன்றிப்பட்டிகள் விளையாட்டுப் பட்டிகளாகும்போது, பன்றிக்குட்டிகள் “அந்தளவுக்குச் சலுகை காட்டப்படாத குட்டிகளைவிட எடையில் நாள் ஒன்றுக்கு நான்கு சதவிகிதம் கூடின.” விவசாய கானடாவின் லாக்கோம்பே ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானி ஆல்ஷேஃபர்ஸ் மேற்கொண்ட ஆய்வின் இந்தப் பலன்கள் காலகரி ஹெரல்டு என்ற பத்திரிகையில் வெளிவந்தது. அது பன்றி வளர்ப்பு பண்ணையருக்கு ஒரு நற்செய்தி, தங்களுடைய நேரத்தை விளையாட்டுப் பொருட்களுடன் கழித்திடும் பன்றிக்குட்டிகள் நல்ல விதத்தில் வளர்கின்றன என்று ஷேஃபர்ஸ் ஆய்வு காண்பிக்கிறது. பன்றிப்பட்டியில் ஒரு சாதாரண கார் டயரை சங்கிலியில் தொங்கவிட்டுப் பார்த்தார். அந்தப் பன்றிகள் டயரை “முன்னும் பின்னுமாகத் தள்ளியும் அதைக் கடித்தும்” விளையாடின. இந்த விதத்தில், சண்டையிடும் பாங்குடைய அந்தப் பன்றிகளின் மூர்க்கம், பட்டியிலுள்ள சாதுவான பன்றிகளிடமாகக் காண்பிக்கப்படுவதற்கு மாறாக, அந்த “விளையாட்டுப் பொருளிடமாகத்” திருப்பப்படுகிறது. இதன் பலனாக, இரண்டாண்டு ஆய்வுக்குப் பின்பு இந்தப் பட்டியிலிருந்து கடைக்குச் சென்ற பன்றிகள் காயங்களிலும் கறியிழப்பிலும் குறைந்து காணப்பட்டன.

நட்சத்திர துகள் வைரங்கள்

ஐக்கிய மாகாண தேசிய தராதரத் துறையையும் சிக்காகோவிலுள்ள என்ரிக்கோ ஃபெர்மி நிறுவனத்தையும் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எரிநட்சத்திரத் துகள்களை ஆய்வு செய்து, ஒரு அக்கறைக்குரிய கண்டுபிடிப்பைச் செய்திருக்கின்றனர். இந்த எரிநட்சத்திரங்களில் சில, சிறுசிறு வைரங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த நட்சத்திரத் துகள்களை எக்ஸ்ரே கதிர் மற்றும் ஒளிக்கதிர்ச்சிதைவு பரிசோதனைக்கு உட்படுத்தியதில், வைரங்களுக்குரிய ஒளிக்கதிர்ச் சிதைவு அமைப்பு தொளிவாக் காணப்பட்டது என்று நியு சயன்டிஸ்ட் (New Scientist) அறிக்கையிடுகிறது. இந்த வைரங்கள் எரி நட்சத்திரம் வெளிவிடும் கார்பன் அணுக்களிலிருந்து உறைந்திருக்க வேண்டும் என்று நம்புவதுடன்கூட “இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மிகச்சிறந்த கூட்டுக்கலவை சோதனைக்கூடத்தைவிட வைரங்களை இயற்கை அதிக திறமையாக உற்பத்தி செய்கிறது,” என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

நீண்டதோர் நித்திரை

வடதுருவத்துக்குச் சற்று மேலிருக்கும் யக்கூட்டியாவின் கடுமையான சைபீரிய பிரதேசத்தில் தங்கம் வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அதிசய கண்டுபிடிப்பைச் செய்ததாக அந்தச் சுரங்க பணியாட்கள் உரிமை பாராட்டினர். பனிப் பிரதேசமாகிய வடதுருவப் பகுதியில் முப்பது அடிக்குக் கீழே அவர்கள் ஒரு ட்ரைட்டான் (triton) என்ற உடும்பு வகை விலங்கைக் கண்டுபிடித்தனர். இது நிலத்திலும் நீரிலும் வாழ்கிற பல்லியினத்துக்கு ஒப்பாயிருந்தது. சுரங்க பணியாட்களை வியப்பில் ஆழ்த்தும் விதமாக, சற்று நேரம் சூரிய வெளிச்சத்திலிருந்த பின்பு, “அது தன்னுடைய ஐந்துவிரல் கொண்ட கால்களால் மெதுவாக நகர்ந்தது . . . தன்னுடைய புடைத்த கண்விழிகளை அசைத்துக்கொண்டு, தலையைத் திருப்பியவாறு நகர்ந்தது,” என்று டாஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. அது ஒருசில நாட்களுக்குப் பின்பு இறந்துவிட்டது. மரித்ததுபோன்ற நிலையிலிருந்து திரும்ப உயிர்பெறுதல் (anabiosis) என்று சொல்லப்படும் குறைந்த உயிர்ப்புடைய நிலையில் அப்படிப்பட்ட விலங்கினங்கள் நூற்றுக்கணக்கான, ஏன், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் உயிர்வாழ்வது கூடிய காரியம் என்று சோவியத் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இசைக் கொள்ளையர்களைத் தாக்குதல்

இசைப்பதிவுத் தொழில்துறை சட்டத்துக்கு முரணாக டேப்புகளில் பதிவுசெய்து விற்பனை செய்யும் கொள்ளையர்களை எதிர்த்துப் போராடி வந்திருக்கிறது. ஒரு நிறுவனம், டேப் பதிவுகளில் ஒரு குறிப்பிட்ட இசையலையதிர்வை “வெட்டுகிற” ஒரு முறையைக் கண்டுபிடித்திருக்கிறது. இப்படியாக, அந்த வெட்டுக்குறிக்குப் பிரதிபலிக்க அமைக்கப்பட்டிருக்கும் சர்க்யூட்டுகள் டேப் ரிக்கார்டரைத் தானாகவே நிறுத்திவிடுகிறது. என்றபோதிலும் இந்த முறையில் இசை செவிக்கு எப்படி இருக்கிறது என்பதை ஆய்வுசெய்த நிபுணர்கள் இவ் ‘வெட்டுக்குறிகள்’ இசையை வெகுவாகப் பாதிக்கிறது என்று பலமாகக் குறிப்பிடுகின்றனர். இப்படியாக, இசைத் துறையைப் பாதிப்பவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்படுத்தப்படும் இந்த ‘வெட்டுக் குறிகள்’ இசைப்பதிவுகளை அதன் உண்மை நிலையில் கேட்கச் செய்வதற்குப் பல ஆண்டுகாலமாக மேற்கொள்ளப்பட்டுவந்த இசைநுட்ப ஆய்வுகளின் பலன்களை அழித்துப்போடும், இப்படியாக, இவை புதிய விதத்தில் பாதிக்கப்படுகின்றன என்று இசைக் கலைஞர்களும், இசைத் தொழில் நுட்ப வல்லுநர்களும், அவர்களுடைய இசைப் பதிவுகளை வாங்குபவர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

“கலகத்தின் வித்துக்கள்”

கடந்த ஆண்டு ஜூலை மாதம், சட்ட விரோதமான வேலை நிறுத்தத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக நியு ஜெர்ஸியைச் சேர்ந்த 110 ஆசிரியர்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டார்கள். நீதிபதி பால் R. ஹுட்: “வேலைக்குத் திரும்ப செல்லவேண்டும் என்ற தன்னுடைய ஆணையை எதிர்த்தச் செயல், மாணவர்களின் மனதைத் கெடுத்திருப்பதுமட்டுமின்றி சட்டத்துக்கும் நீதிமன்றங்களுக்கும் அவமரியாதையை ஏவிவிட்டிருக்கிறது,” என்று சொன்னதாக தி நியு யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. சமுதாயம் சட்டத்தை மதிப்பதிலிருந்தும் சமூக சீரொழுங்கிலிருந்தும் கட்டுப்பாட்டிலிருந்தும் வழுவிச் செல்வது குறித்து கவலைத் தெரிவிப்பவராக நீதிபதி கூறினதாவது: “காரியங்கள் இனிமேலும் கருப்பும் வெள்ளையுமாக இல்லை. எல்லாமே இரண்டுங்கெட்ட சாம்பல் நிறமாகிவிட்டது. நாம் நல்ல நடத்தைப் பழக்கங்களை இழந்துவிட்டோம், தயவாக நடந்துகொள்வதை இழந்துவிட்டோம். கண்ணியமாக நடப்பதையும் இழந்துவிட்டோம். “காரணம் என்ன?” “சரி தவறு ஆகியவற்றுக்கிடையே இருக்கும் வித்தியாசத்தை அறிந்திருப்போர் வெகுசிலர்,” என்கிறார் ஹுட். “இப்பொழுது பாவம் பிடிபடுகிறது. மீறுதல் அல்ல.” பெற்றோரைப் குற்றப்படுத்துகிறவராக அவர், சட்டத்துக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் சொல்லுகின்றனர். ஆனால் அவர்கள்தாமே வரி ஏய்ப்பு, தப்புக் கணக்குகள், வேகத்தடைகளை மீறுதல் ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள். “இந்தத் தேசத்தில் நாம் பைத்தியக்காரர்களைப் போல் கலகத்தின் வித்துக்களை விருத்தி செய்கிறோம் என்று கருதுகிறேன்.”

தங்கள் செவிகளுக்கு இசை

எலிகளைக் கூட்டிச் சேர்த்து அழிப்பதற்காக பழங்கதையின் ஹாம்லின் குழலூதி இசை இசைத்தான். அண்மையில் டோக்கியோ நகரில் நவீன இசைக் குழாய்கள் மூலம் எலிகளைக் கவர்ச்சிக்கும் ஒரு “குழலூதி” தோன்றியிருக்கிறான். இன்றைய “குழலூதி” சுற்றுப் புறச்சூழலின் ஆரோக்கிய சூழ்நிலையில் விசேஷ கவனம் செலுத்தும் ஒரு நிறுவனமாகும். தி டெய்லி யொமியுரி (The Daily Yomiuri) கூறுகிறபடி 20 ஆண்டு ஆய்வுக்குப் பின்பு மாடிக்கட்டிடங்களிலிருந்து எலிகளைப் போக்குவதற்காக ஓர் உறிஞ்சுக் குழாய் முறையைப் பூரணப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஏழு அடிக்கும் துளைகளைக் கொண்ட குழாய்கள் கட்டிடங்களின் தரையோரங்களிலும் சுவர்களிலும் பொருத்தப்படுகின்றன. இசை? எலிகள் 20 முதல் 38 கிலோ ஹர்ட்ஸ் அலையதிர்வுகளையுடைய கதழ் ஒலியலை மூலம் தொடர்பு கொள்கின்றன. கம்ப்யூட்டர் கம்பிகளுங்கூட அவற்றைக் கவர்ச்சிக்கின்றன. இந்தக் குழாய்கள் எலிகளை “அழைப்பதற்கு” கதழ் ஒலியலைகளை விடுத்திட, அதைத் தொடர்ந்து எலிகள் அந்தத் துளைகள் வழியே உள்ளே செல்லவும். அவற்றை அப்புறப்படுத்துவதற்காக உறிஞ்சுக்கொள்ளப்படுகிறது. அந்தப் பகுதியில் அவற்றிற்கு கரியமில வாயுவால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது, அப்பொழுது சுத்தமான முறையில் அப்புறப்படுத்துவதற்கு அவை ஒரு தாளில் சுற்றப்பட்டு அப்புறப்படுத்தப்படுகிறது. ஹாமலின் துவங்கி டோக்கியோ வரை முடிவு ஒன்றுதான்: குழலிசைக்கு அடிமைப்படுதல் எலிகளுக்கு ஆபத்தானவையாக இருக்கக்கூடும்.

அபராதங்கள், அபராதங்கள், அதிகமான அபராதங்கள்!

பிரேஸிலில், சவோ பாலோவின் தலைநகர்ப்பகுதி 1.2 கோடி மக்களைக் கொண்டிருக்க, அதற்கு வாகனப் போக்குவரத்துப் பிரச்னைகள் இருக்கின்றன. ஒரே மாதத்தில் 12,18,491 வாகனப் போக்குவரத்து அபராதங்கள் விதிக்கப்பட்டன. ஆண்டின் முடிவுக்குள் நகரிலுள்ள நாற்பது இலட்சம் வாகனங்களில் முப்பது இலட்சம் வாகனங்களுக்கு அபராதம் விதித்திருப்பார்கள். வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்படுவதற்கு மாதந்தோறும் Cz $,1,290 (ஏறக்குறைய ரூ,18,000/-) அபராதம் விதிக்கப்படுகிறது என்று ஓ எஸ்டேடோ டெ சாவோ பாலோ அறிக்கை செய்தது. சட்டப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள, ஆகிலும் அமல்படுத்தப்படாத அபராதங்களும் உண்டு. தெருக்களில் மாட்டு வண்டி ஓட்டுவது, (Cz $,1,149) சாலையோரங்களில் குதிரைவண்டி நிறுத்திவைப்பது (Cz $,384) ஆகியவையும் அபராதப் பட்டியலில் உட்படுகிறது. வழிப்போக்கன் மேல் விழக்கூடிய நிலையில் சன்னல் ஓரங்களில் சாமான்கள் வைத்திருப்பதற்கு Cz $.99 அபராதம். பலர் நினைவில் பசுமையாக இருக்கும் ஒரு சம்பவம், ஒரு ரொட்டிக் கடைக்கு மேல் மாடியில் வளர்க்கப்பட்ட ஒரு பன்றி பயந்து கைப்பிடிச் சுவரைத் தாண்டி கீழே குதித்தபோது, ஒரு பாதசாரி அடிப்பட்டு தன் கையை முறித்துக்கொண்டார். இதற்கான அபராதமும் வசூலிக்கப்பட்டது.

கலக்கமுற்ற தண்ணீர்கள்

இஸ்ரேயல் செய்திமூலங்களின்படி, அதற்கு வடக்கே அமைந்த அயல்நாடாகிய சீரியா மேற்கொண்டுள்ள முக்கியமான பணிகளால் இஸ்ரேயல், யோர்தான் ஆகிய பகுதிகளுக்குக் கிடைக்கும் நீர் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும். மேற்கொள்ளப்பட்டிருக்கும் அந்தப் பணி யோர்தான் நதியின் மிகப் பெரிய கிளையாற்றின் தண்ணீரை, அதாவது நேஹ்ட் ஆல் யார்முக் ஆற்றின் தண்ணீரை வடக்கேயுள்ள தேசத்தில் “24,700 ஏக்கர் நிலப்பரப்பின்” விவசாயத் தேவைகளுக்காகத் திருப்புவதாகும். இதற்காக பெரிய பெரிய ஏரிகள் வெட்டப்பட்டிருக்கின்றன. இவை “160 மைல்களுக்கும் நீளமான வாய்க்கால்களால்” இணைக்கப்பட்டிருக்கின்றன. சீரியா தன் 5,00,000 குடிமக்களை தெற்கே அமைந்த கோலன் ஹைட்ஸ் பகுதிக்கு குடியேற்றுகிறது. (g87 11⁄22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்