மிதமிஞ்சிய வேகத்தையும் ஆக்கிரமிப்பையும் தவிர்த்திடுங்கள்
“கார் இன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், அது தடை செய்யப்பட்டிருக்கும்.” என்பதாக பிரிட்டனின் விபத்து தடுப்பு ராயல் சொஸைட்டியின் துணை நிர்வாகி ஜியாப் லார்ஜ் ஆணித்தரமாகச் சொல்கிறார். “இந்த தேசத்தில் மட்டுமே ஆண்டுதோறும் சுமார் மூன்றரை லட்சம் ஆட்களைக் கொல்லக்கூடிய அல்லது காயப்படுத்தக்கூடிய ஏதோ ஒன்றை விற்க நீங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டீர்கள்.”
மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் அவர்களுடைய பொருளினால் ஏற்படக்கூடிய ஆபத்தை உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் பெருந்தொகை பணத்தை முதலீடு செய்து நவீன மோட்டார் வண்டிகளில் அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அம்சங்களை முன்னேறுவிக்க தேவைப்படும் அனைத்தையும் செய்கிறார்கள். ஆனால் லண்டனின் ஸண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை குறிப்பிடும் விதமாகவே: “பாதுகாப்பு உணர்வுள்ள ஓட்டுநர்கள் மோட்டார் வண்டியையும் அதன் உள்ளே இருப்பவர்களையும் பாதுகாப்பது குறைந்த விலையில் கிடைத்து விடுவதில்லை என்பதை அறிந்திருக்கிறார்கள்.” பாதுகாப்பு அம்சங்களை விளம்பரம் உயர்த்திக் காண்பித்தபோதிலும் வாங்குபவரின் கவனத்தைக் கவர்ந்திழுப்பது என்ன? அநேகமாக வாகனத்தின் சாதனை, குறைந்த நேரத்தில் அது எவ்விதமாக உச்ச அளவு வேகத்தைக் கொடுக்கிறது, அதன் ஆற்றல் மேலும் அதன் நேர்த்தியான கோடுகளும் வெளிப்புற கவர்ச்சியுமே.
மோட்டார் வாகனங்களை ஓட்டும் ஜெர்மன் நாட்டவர், “விபத்துக்கு இன்னும் பொதுவான காரணமாக இருந்து வரும் வேகத்தோடு இயற்கை மீறிய உணர்ச்சிப்பூர்வமான ஒரு உறவை கொண்டிருப்பது” போல தெரிகிறது என்கிறார் ஓய்வு பெற்ற வழக்கறிஞர் ரிச்சர்ட் ஸ்பைகல். இந்த மனநிலைத்தானே “மோட்டார் வாகன தொழிற்சாலை விளம்பரத்தால்” அதனுடைய சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ளப்படுவதாக அவர் கருதுகிறார். உங்களுடைய தேசத்திலும்கூட இது உண்மையாக இருக்கிறதா?
போக்குவரத்து வாகன நடமாட்ட நெருக்கடி, பாதை இணைப்பு அமைப்பின் தரக் குறைவு போன்ற மற்ற காரணங்களும் அநேக தேசங்களில் வாகனங்கள் ஓட்டுவதை அதிக அபாயகரமானதாக்கிவிடுகிறது. பிரேஸிலிலிருந்து வரும் அறிக்கை சாலையில் அடையாளமிடப்படாத சந்திப்புகளின் ஆபத்துகளின் மீது கவனத்தை ஊன்ற வைக்கிறது. “இப்படிப்பட்ட நிலைமைகளில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் திடீரென்று மனம் குழம்பி தடுமாற்றமடைந்துவிட, இது ஒரு விபத்துக்கு வழிநடத்தக்கூடும்” என்று பிரேஸில் ஹெரால்ட் குறிப்பிடுகிறது.
இப்படிப்பட்ட இடையூறுகளை எதிர்படுகையில், நவீன உயர்-சாதனை வாகனங்களின் ஓட்டுநர்கள் பொறுப்புள்ளவர்களாக இருப்பது தவிர்க்க முடியாததாகும். போக்குவரத்தில் பாதுகாப்பா? என்ற ஸ்வீடன் நாட்டு பிரசுரம் இந்த அபிப்பிராயத்தை தெரிவிக்கிறது: “ஓட்டு உரிமைக்கு அடுத்ததாக, சமுதாயம் உங்களை நம்பி உங்களிடம் ஒப்படைக்கக்கூடிய அதிமுக்கியமான ஒரு காரியம் ஓட்டுநர் லைசென்ஸாகும்.”
ஆக்கிரமிப்பைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்!
வேகம் கொல்லுகிறது. குடித்துவிட்டு ஓட்டுபவர் கொல்லுகிறார். ‘ஆனால், வேக கட்டுப்பாடுகளை நான் மீறுவதில்லை. நான் வாகனம் ஓட்டும்போது எந்த வகை மதுவையும் அருந்துவதில்லை. வாகனம் ஓட்டுவது உயிரையும் மரணத்தையும் பற்றிய விஷயமாக இருப்பதை நான் அறிந்திருக்கிறேன். இதற்கு மேல் வேறு என்ன நான் செய்ய முடியும்?’ என்பதாக நீங்கள் சொல்வீர்கள்.
“மோட்டார் வாகனம் இடம் பெயர்ந்துச் செல்லும் மனித திறமையை பெருக்கி, அவனால் செல்ல முடிவதற்கும் மேலாக நீண்ட தூரங்களுக்கு வெகு விரைவாகச் செல்லுவதை கூடியகாரியமாக்குகிறது” என்பதாக மன இயல் நிபுணர் சூல்நாரா போர்ட் ப்ரேஸில் எழுதி, அவர் மேலுமாக “இதில் தானே தவறேதுமில்லை” என்று குறிப்பிடுகிறார். ஆகவே பிரச்சினை எங்கே இருக்கிறது? சூல்நாராவின்படி, “ஒவ்வொரு ஓட்டுநரும் அந்த ஆற்றலை கையாளும் முறையைத் தானே அது சார்ந்ததாக இருக்கிறது.”
பிரெஞ்சு தினசரி லி மான்டி வெளியிட்டிருந்த பின்வரும் குறிப்பை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்பதில் சந்தேகமேதுமில்லை: “வண்டிச் சக்கரத்தை சக்தியின் சின்னமாக எடுத்துக் கொள்வது . . . மிகப் பரவலாக வளர்த்துக் கொள்ளப்பட்டிருக்கும் ஒரு கருத்தாக உள்ளது. ஒருவரால் மற்றவரின் மடத்தனமானச் செயல்களை தவிர்க்க முடியாது போனாலும் . . . குறைந்தபட்சம் அவருடைய வாகனத்தையாவது கட்டுப்பாட்டுடன் ஓட்டிச் செல்லமுடியும்.”— தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.
க்ளாஸ்கோ ஹெரால்ட் குறிப்பிடும் விதமாக, “உயர்ந்து வரும் ஆக்கிரமிப்பின் அளவினாலும் வாகனம் ஓட்டுகையில் சகிப்புத்தன்மை காண்பிக்கப்படாதிருப்பதாலும்” நவீன நாட்களில் வாகனம் ஓட்டிச் செல்வது அதிக கடினமானதாயும் அபாயமானதாயும் இருக்கிறது. இதோடுகூட, “வாகனத்தை நிறுத்துவதற்கு முன்பு, ஒரு ஆபத்தான சூழ்நிலையை பாதுகாப்பு எல்லையைத் தாண்டிச்செல்லும், முந்திக் கொண்டுச் செல்வதும், வன்முறையும் கைகலப்பும் ஏற்படுமளவுக்கு அத்தனை பொதுவாக பரவலாகிவிட்டிருக்கின்றன.” பாதையிலே நாசம் ஏற்பட வழிவகை கைவசமிருக்கிறது. கனடாவிலுள்ள காவல் துறை மேலதிகாரி கொன் காக் சொல்வதாவது: “மக்கள் அனைத்து விதிகளையும் மறந்துவிட்டார்கள்—எல்லாருமே அவசரப்படுகிறார்கள். நாங்கள் அதிக கண்டிப்பாக இருக்க வேண்டிய அவசியத்தை உணருகிறோம், எல்லாரும் முந்திக் கொண்டு முன்னால் செல்கிறார்கள். எவருமே வரிசையில் காத்திருப்பதில்லை.”
இன்றைய ஓட்டுநரின் தனித்தன்மையான ஆக்கிரமிப்புச் செய்யும் இந்த போக்கு நிச்சயமாகவே தொந்தரவுக்கு காரணமாகிவிடுகிறது. “மிக மோசமான தவறு பின்னால் வெகு அண்மையில் வாகனத்தை ஓட்டுவதாகும் . . . மற்றவர்கள் எவ்விதமாக உணருகிறார்கள் என்பதை பாதையை உபயோகிக்கும் ஒரு சிலரே மதித்துணருகிறார்கள். உதாரணமாக, வேகமாக ஓடும் வாகனங்களின் ஓட்டுநர்கள் அநேகமாக மோட்டார் சைக்கிள்கள் ஒரு தொல்லையாக இருப்பதாக நினைக்கிறார்கள். அவர்கள் வலிய சண்டைக்கு இழுக்கப்படுகிறவர்களாக, பொறாமைப்படுகிறவர்களாக உணருகிறார்கள். பொறாமை எளிதில் சண்டையை உண்டுப்பண்ணக்கூடும்” என்கிறது ரீனிஷர் மெர்கரின் அறிக்கை இந்தப் பழக்கம் அத்தனை சாதாரணமாக இருப்பதால், “விசாரிக்கப்பட்ட மூவரில் ஒருவர், வாகனங்கள் தங்களுடையதை தாண்டிக் கொண்டு முன்னால் செல்கையில் அமைதி இழந்து அவமானப்படுத்தப்பட்டதாக உணருவதாக ஒப்புக் கொண்டார்கள்.”
முதல் முக்கியத்துவம்— கவனமாக ஓட்டிச் செல்!
ஐக்கியமாகாணங்களில் நெடுஞ்சாலைகளில் அதிகரித்து வரும் வன்முறை இந்த ஆக்கிரமிப்பை பிரதிபலிப்பது போல் தெரிகிறது. “ஓட்டுநர்கள் அதிகமதிகமாக கொடூரமானவர்களாக மாறிவருகிறார்கள்” என்ற தலைப்பின் கீழ் 1987, ஆகஸ்ட் 3, வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் ஒரு குறிப்பு பின்வருமாறு சொன்னது: “தேசத்தின் குறுக்கேயுள்ள நகரங்களில், நெடுஞ்சாலை துப்பாக்கி சூடுகளும் குத்துச் சண்டைகளும் பிறரை முடமாக்குவதும் அதிகரித்து வருவதை காவல் துறையினர் கவனித்து வருகிறார்கள். இவைகளில் பெரும்பாலானவை, சிறிய மோதலினால் ஓட்டுநர்களிடையே ஆரம்பமாகின்றனது. ஒருவருடைய விஷயத்தில் ஓட்டுநர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.” 1987 ஆகஸ்ட் 6, தி நியு யார்க் டைம்ஸ் அறிவித்ததாவது: “ஜூன் மாத நடுவிலிருந்து, தென் கலிபோர்னியாவின் நெடுஞ்சாலையில் சம்பவித்த வன்முறையினால் நான்கு பேர் உயிரிழந்தனர் . . . 15 பேர் காயமுற்றனர்.
பாதுகாப்பாக ஓட்டிச் செல்வது நம்முடைய சொந்த நன்மைக்காகவும் மற்றவர்களின் நன்மைக்காகவும் இன்றியமையாததாகும். பிரிட்டனின் சாலைகளில் ஆண்டுதோறும் இழக்கப்படும் உயிர்களைக் குறித்து புலம்பியப் பின்னர் முன்னாள் போக்குவரத்துச் செயலர் ஜான் மூர், “சாலை பாதுகாப்பு . . . சாலையை பயன்படுத்தும் அனைவரின் முதல் முக்கியத்துவம் இருக்க வேண்டும்” என்று துரிதப்படுத்துகிறார்.
அப்படியென்றால் நடைமுறையில் நீங்கள் எவ்விதமாக பாதுகாப்பாக ஓட்டிச் செல்ல முடியும்? நீங்கள் எதைப் பார்க்க விழிப்புள்ளவர்களாயிருக்க வேண்டும்? பாதுகாப்பாக ஓட்டும் அனுபவமுள்ள ஓட்டுநர்கள் அளிக்கும் ஆலோசனை என்ன? “பாதுகாப்பாக ஓட்டும் பக்கங்களை வளர்த்துக் கொள்ளவும் என்ற எமது அடுத்த கட்டுரை இந்தக் கேள்விகளை ஆராயவிருக்கிறது. (g88 1/8)