மேகங்கள் அவை ஒரு கதை சொல்லுகின்றன
“பர்வதங்களுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும் மேல் உயர மிதந்திடும்
ஒரு மேகத்தைப்போல் நான் தனிமையில் அலைந்துதிரிந்தேன்.”
—வில்லியம் உவர்ட்ஸ்வர்த், 1804.
கவிஞர்கள், அக்காலத்திலுஞ்சரி இக்காலத்திலுஞ்சரி, கவி பாட ஏவுதல் பெற வானத்தினிடமும் மேகத்தினிடமும் திரும்பியிருக்கிறார்கள். கிராம மக்களுங்கூட வானிலை எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க வானத்தை நோக்கிப் பார்ப்பது வழக்கம். “இராப்பொழுது செவ்வானம் மேய்ப்பனுக்குக் களிப்பு, காலைப்பொழுது செவ்வானம் மேய்ப்பனுக்கு எச்சரிப்பு,” என்ற பழமொழி விவேகமுள்ள கிராமவாசியின் நினைவிலிருக்கிறது. இது வெறும் ஒரு கற்பனைக் கதையா? இல்லை, அது வெவ்வேறு வகையான மேகங்களில் சூரிய ஒளி பிரதிபலித்திட, அது கண்டு வானிலை எப்படி அமையும் என்பதைக் கணிக்கும் முறையைச் சார்ந்ததாயிருந்தது.
மேகங்கள் வித்தியாசமான உருவிலும் அமைப்பிலும் காணப்படுகின்றன. அவை அனைத்துமே ஒரு கதை சொல்லுகின்றன. வானத்தில் உயர குவியல் குவியலாய்த் திரண்டு வரும் வகையைக் சேர்ந்த மேகங்கள் இருக்கின்றன. அவை அநேக சமயங்களில் திரள்குவிமுகில், அதாவது திரளாகக் குவிந்து வரும் மேகக்கூட்டம் என்று அழைக்கப்படுகின்றன. இது “குவியல்” என்பதற்குரிய லத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறது. அவை மழை தாங்கிய மேகங்களாக இருக்குமானால், கார்முகில் அல்லது கார்மேகங்கள் என்று அழைக்கப்படுகின்றன, ஆங்கிலத்தில் கியுமிலோநிம்பஸ் (cumulonimbus) என்று அழைக்கப்படுகிறது, “மழை” என்பதற்கு நிம்போ (nimbo) என்ற லத்தீன் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
வானத்தின் உயரத்தில் சுருள்சுருளாக மென்மையான பஞ்சுமுகிலாய்க் காணப்படும் அந்த மேகங்களைப் பற்றியதென்ன? பெரும்பாலான மேகங்களைப்போல் நீர்த்துளிகளைப் பேரளவில் தாங்கியிருப்பதற்குப் பதிலாக, உயரத்தால் இவை பனிக்கட்டிகளாலானவை, ஆங்கிலத்தில் சிரஸ் (cirrus) என்று அழைக்கப்படுகிறது, இது “சுருள்” என்பதற்குரிய லத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறது. வானம் முழுவதையும் மூடியிருக்கும் பனி அல்லது மழையைத் தாங்கியிருக்கும் மேகங்கள் தொடர் மேகப் படலம் என்று அழைக்கப்படுகிறது, ஏனென்றால் அவை ஒரு போர்வை போன்று வானில் குறுக்கே தொடர்ப்படலமாய்த் தொங்குகின்றன.
இந்த அடிப்படை வகைகொண்ட மேகங்களில் பல வித்தியாசங்கள் உண்டு, ஆனால் நாம் வாழும் பகுதியில் காணும் மேகம் எந்த வகையினதாயிருப்பினும், வானில் காணும் காட்சிகளில் இப்படிப்பட்ட வித்தியாசத்தைக் கொண்டிருப்பதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கலாம். வானத்தில் மேகங்களைக் காண்பிக்கும் ஒரு புகைப்படத்தையும் அவை இல்லாத ஒன்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அநேகமாக, எந்தப் படம் உயிர்ப்புடையதாயிருக்கிறது என்பதை நீங்கள் காணமுடியும்.
ஆனால் மேகங்கள் எப்படி உருவாகின்றன? அது வேறொரு பொருள், அதை இன்னொரு சமயம் சிந்திக்கலாம். என்றபோதிலும், அடுத்த சமயம் நீங்கள் மேகங்களைப் பார்க்கும்போது, எலிகூவின் வார்த்தைகளை நினைத்துக்கொள்ளுங்கள்: “நிமிர்ந்து வானம் நோக்கிப்பாரும், உமக்குமேல் வானுள்ள மேகம் கவனியும்.” (யோபு 35:5, தி.மொ.) அப்பொழுது அதை உருவாக்கிய யெகோவாவை நினைத்துக்கொள்ளுங்கள். (g88 2⁄8)
[பக்கம் 17-ன் படங்கள்]
வலது: சுருள் மேகங்கள்
கீழ்: சூரிய உதயத்தின்போது அடுக்கடுக்காகத் திரண்டுவரும் மேகங்கள்
மேல்: திரளாகக் குவிந்துவரும் மேகங்கள்
இடது: இடிக்கக் கூடிடும் கார்மேகங்கள்